• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 22

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 22

Writer : Hafa



அன்று வெகு சீக்கிரமாகவே செழியன் வீட்டிற்கு வந்து விட, அவனை பார்த்து ஆச்சர்யம் கொண்டார் கங்கா..

"என்னப்பா செழியா, இன்னைக்கு மழை வரும் போலயே.." என்று அவனை கிண்டல் அடிக்க, அவனிருக்கும் மனநிலையில் அவரது கிண்டலைக் கூட புரிந்து கொள்ளாதவன், "ஹாங் என்னம்மா?? என்ன சொன்னீங்க??" என்று கேட்டான்..

"அட என்னாச்சு செழியா, உடம்புக்கு ஏதும் பண்ணுதா?? என்று கேட்டவர் தாயிற்கே உரித்தான பரிதவிப்பில் அவனது நெற்றியில் கை வைத்து பார்க்கவும், "ஐயோ அம்மா உடம்புக்கு எல்லாம் எதுவும் இல்லமா.. லைட்டா தலைவலி வலிக்கிற மாதிரி இருக்குது, எனக்கு ஒரு கப் காபி கொடுக்க முடியுமா??” என்றான்..

"இதோ டூ மினிட்ஸ்ப்பா இப்போவே கொண்டு வர்றேன்.." என்றபடி கிட்சேனுக்குள் நுழைய, அவர் பின்னாலேயே சென்றவன், அங்கும் மதி இல்லாதிருக்க, சுற்றி பார்வையை சுழல விட்டான்..

“என்ன செழியா, ரொம்ப தலை வலிக்குதா?? நீ போய் உட்காருப்பா நான் இதோ கொண்டு வர்றேன்.." என்றார் செழியன் காபிக்காக வந்ததாக நினைத்துக் கொண்டு..

"இல்லமா நீங்க பொறுமையாவே போடுங்க.."என்றவன் அங்கிருந்த டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டவன், கங்கா கொடுத்த காபியை ஒரே மூச்சில் குடித்து முடித்து விட்டு, "என்னம்மா இன்னைக்கு வீடு ரொம்ப அமைதியா இருக்குற மாதிரி இருக்குது.. எல்லாரும் எங்க போய்ட்டாங்க??" என்ற செழியனை சந்தேகமாக பார்க்க, அவரின் பார்வையை புரிந்து கொண்டவன் தலையை கவிழ்த்துக் கொண்டான்..

"உனக்கு இன்னைக்கு என்னடா செழியா ஆச்சு?? புதுசு புதுசா என்னலாமோ கேட்குற?? ஆர் யூ ஓகே??" என்றவரை பார்த்து, "ஐ அம் ஓகேமா, ஜஸ்ட் கேட்கணும்னு தோணிச்சு அதுனால தான் கேட்டேன்.." என்று கூறி விட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்..

அறைக்குள் சென்று பார்த்தவன், அங்கும் மதி இல்லாதிருக்க, "ச்சை, எப்படி இருந்தவன்டா நீ உன்ன போய் இப்படி புலம்ப விட்டுட்டாளே??" என்று தன்னை நொந்து கொண்டவன், எங்க தான் போய் இருப்பாள்?? என யோசித்தபடி அவளது அறையை திறந்து பார்க்க, அவளோ காதில் இயர் போனை மாட்டிக் கொண்டு, கண் மூடிப்படுத்து இருந்தாள்..

"ஓஹோ மேடம் இங்க தான் இருக்கீங்களா?? இரு பிரெஷ் ஆகிட்டு வந்து உன்ன வச்சிக்கிடுறேன்.." என நினைத்தவன், குளித்து உடை மாற்றி விட்டு வந்து பார்த்த போதும் மதி, அதே நிலையிலே படுத்திருந்தாள்..

அவளை விட்டு சிறிது தள்ளி அமர்ந்த செழியன் மதியையே பார்த்துக் கொண்டிருக்க, தன் முன் ஏதோ ஒரு உருவம் நிழலாடுவது போல தெரிய, சட்டென்று கண்களை திறந்த மதி அங்கு நின்றிருந்த செழியனை கண்டு அதிர்ந்தாள்..

உடனே காதில் மாட்டியிருந்த இயர் போனை உருவிய மதி, அங்கிருந்து வெளியே செல்லப் போவதை பார்த்தவனுக்கு கோபம் வர, அவளுக்கு முன் சென்று கதவை லாக் செய்தவன், "உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றான்..

மதியோ அவன் சொல்ல வருவதை கேட்காது, "இல்லை நான் போகணும்.." என்று லாக் செய்த கதவை திறக்கப் போக அவள் கைகளை பிடித்து இழுத்தவன், " என்னடி நானும் பார்த்துட்டே இருக்கேன், ரொம்ப ஓவரா தான் போற?? உனக்கு என்ன என்ன பார்த்தா பொறுக்கி மாதிரி இருக்கா??" என்று பற்களை கடிக்க, மதியோ நடுங்கியபடி, "இ.. இல்ல.. நான் அப்படி ஒன்னும் சொல்லயில்ல.." என்றவளின் கைகளை இறுக்கி பிடித்தவன்,

"வாயை திறந்து சொல்லயில்ல அது மட்டும் தான், ஆனா நடந்துகிறது எல்லாமே அப்படி தான் இருக்குது.." என்றவன் அவள் முகத்தில் வலியின் ரேகைகள் தெரிய தான் பிடித்திருந்த பிடியை தளர்த்தியவன், "ஐ அம் சாரி.." என்றான்..

"எதுக்கு இந்த சாரி.." என்ற ரீதியில் மதி அவனை கேள்வியாய் பார்க்க, அதை புரிந்து கொண்ட செழியன், "எல்லாத்துக்காகவும் தான் இந்த சாரி.. அது.. நேத்து போதையில.." என்று தடுமாற.,

"ப்ளீஸ் விடுங்க.. நடந்து முடிஞ்சத பத்தி பேசி எதுவும் ஆக போறதில்ல.. அதை பத்தி பேசவும் எனக்கு விருப்பம் இல்ல.." என்று கூறிய மதியை கோபமாய் பார்த்த செழியன், "என்னடி நான் ஏதோ பிளான் பண்ணி செஞ்ச மாதிரி சீன் க்றியேட் பண்ற?? நான் தான் சுயநினைவுல இல்லன்னு தெரியுதுல நீ நினைச்சி இருந்தால் என்ன தடுத்து இருக்கலாமே, ஏன் அது எதுவுமே பண்ணல??" என்றான்..

"கடவுளே ஏன் இப்படி என்ன வார்த்தையாலேயே கொல்லுற, எனக்கு மட்டும் இப்படி ஒரு நிலைமை.. தொட்டு தாலி கட்டினவனே இப்படி கேட்கும் போது இதுக்கு நான் என்ன பதில் சொல்றது.." என்று மனதுக்குள் புழுங்கியவள் வெளியே மௌனமாய் இருக்க, அவள் மௌனத்தில் கோபம் வரப் பெற்றவன்,

"இதுக்கு மேல என் கண் முன்னால வந்து நீ நின்னனா நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது போ" என்று கத்த, "இப்போ நான் உங்க முன்னாடி இருக்குறது கூட உங்களுக்கு பிடிக்கலையில.. ஒரு நாள் நீங்களே தேடினாலும் கிடைக்காத இடத்துக்கு போயிடுறேன்.." என்று மனதுக்குள் நினைத்தவள் வெளியில் ஒன்றும் பேசாது தன்னை மீறி வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள் மதி..

∞∞∞∞∞∞∞∞∞∞

காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காமல் அதன் போக்கில் ஓடிக்கொண்டிருந்தது..

சக்தியும் மதியும், "கோயிலுக்கு செல்லலாம்.." என முடிவெடுத்தவர்கள், அருகில் இருந்த கோயிலுக்கு நடந்தே சென்றனர்..

சாமி தரிசனம் முடித்து விட்டு வெளியே வர, "ஐயோ அண்ணி, ஒரு நிமிஷம் நில்லுங்க, அர்ச்சனை தட்டை சாமி பாதத்துலயே வச்சிட்டு வந்துட்டேன்.. இப்படி ஒரமா நில்லுங்க.. நான் போய் எடுத்துட்டு வர்றேன்.." என்று கோயிலுக்கு உள்ளே சென்றாள் சக்தி..

உள்ளே சென்ற சக்தி அர்ச்சனை தட்டை எடுத்துக் கொண்டு வெளியே வர அங்கு நின்றிருந்த மதியை காணாது, அங்கிருந்த பூக்காரப் பெண்மணியிடம் கேட்க, "அவரோ இப்போ கொஞ்சம் முன்னாடி தான்மா அந்த பக்கம் போனாள்.." என்று கையை காட்ட அங்கு போய் பார்த்த சக்திக்கோ ஏமாற்றமே மிஞ்சியது..

"ஐயோ கடவுளே அண்ணி எங்க போயிருப்பாங்க?? ஒருவேளை பக்கத்தில பிரண்ட் யாரையும் மீட் பண்ண போய் இருப்பாங்களோ??" என்று நினைத்தவள் மதியின் நம்பருக்கு தொடர்பு கொள்ள, அதுவோ செயல் இழந்து இருப்பதாக தகவல் சொன்னது..

சில நிமிடங்கள் அங்கும் இங்கும் சுற்றி தேடிய சக்திக்கு பதட்டம் அதிகரிக்க, "என்ன செய்வது என்று தெரியாமல் செழியனை தொடர்பு கொண்டாள்.

“ஹலோ சகோ.." என்று அழைத்தவள் அழத் தொடங்க, தங்கையின் அழுகையிலும் குரலில் தெரிந்த பதட்டத்திலும், டென்ஷனான செழியன், "சக்தி.. என்னடா?? ஏன் இப்போ அழுகுற??" என்றான்..

"சகோ, அது.. அது.. வந்து.. நானும் அண்..ணியும் கோயிலுக்கு வந்து இருந்தோம்.. வந்த இடத்துல அண்ணிய அண்ணிய காணும் சகோ.." என ஒரு வழியாக சொல்லி விட்டு அழத் தொடங்கினாள்..

"ஹேய் என்ன சக்தி சொல்ற?? மதிய காணுமா?? நல்லா தேடி பார்த்தியா?? அங்க தான் எங்கேயாவது போயிருப்பா, நீ அவ போனுக்கு கால் பண்ணி பாரு.." என்க,

"ஐயோ சகோ நான் அதெல்லாம் பண்ணிட்டேன், கால் பண்ணினால் போன் சுவிட்ச் ஆப்னு வருது.. என்று கூறியவள், "சகோ எனக்கு ரொம்ப பயமா இருக்குது.." என்று அழுதாள்..


"சக்திமா சரி சரி நீ அழாத, நான் இப்போவே அங்க வர்றேன்.." என்று போனை கட் பண்ணியவன் அடுத்த நொடியே காரை எடுத்துக் கொண்டு சக்தி கூறிய கோயிலுக்கு வண்டியை செலுத்தினான்..

சில நிமிடங்களுக்கு முன்..

சக்தி அர்ச்சனை தட்டு எடுக்க கோயிலுக்கு உள்ளே போக அவள் வரும் வரை வெளியில் காத்துக் கொண்டு நின்றாள் மதி.. அப்படி நின்று கொண்டிருந்தவளுக்கு யாரோ தன்னை பார்ப்பது போலத் தோன்ற, சுற்றும் முற்றும் பார்த்தபடி சில அடிகள் தள்ளி நடந்தவளை, யாரோ பின்னால் இருந்து மூக்கில் மயக்க மருந்து தடவப்பட்ட கைக்குட்டையை வைக்க, அங்கேயே மயங்கி விழுந்தாள் மதி..

அவ்வாறு மயங்கி விழுந்தவளை தூக்கிச் சென்று, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஓர் இருட்டறையில் அடைத்து வைத்தான் அவன்..

∞∞∞∞∞∞∞∞∞∞

மதி காணாமல் போய் முழுதாய் இரண்டு மணி நேரம் கடந்திருந்தது., சக்தி சொன்ன இடத்திற்கு செழியன் கிளம்பியிருக்க, செய்தி அறிந்த சிவாவும் அவ்விடத்திற்கு விரைந்தான்.. மூவரும் தங்களால் முடிந்த அளவு பக்கத்தில் இருந்த இடங்களில் விசாரிக்க பலன் என்னவோ பூச்சியமாகவே இருந்தது..

சுற்றி இருந்த இடங்களில் தேடிக் கலைத்தவர்களுக்கு, அப்போது தான் நியாபகம் வந்தது கங்காவுக்கு இன்னும் சொல்லவில்லை என்று.. சிவாவுடன் சக்தியை அனுப்பிய செழியன், அவர்களை கங்காவிடம் அனுப்பி விட்டு, தனக்கு ஒரு வேலை இருப்பதாக கூறியவன் காரை எடுத்துக் கொண்டு சென்றான்..

சக்தியும் சிவாவும் மட்டும் வருவதை கண்ட கங்கா, "சக்தி, நீ மதி கூட தானே கோயிலுக்கு போன?? நீங்க மட்டும் வர்றிங்க மதி எங்க?? செழியன் கூட வெளியில எங்கையாச்சும் போய் இருக்காளா?? என்க, சிவாவும் சக்தியும், என்ன சொல்வது?? எனத் தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கையை பிசைந்தபடி நின்றனர்..

அவர்களின் அமைதியை கண்டு சந்தேகம் கொண்ட கங்கா, "சக்தி, உங்ககிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்.. நீங்க எதுவும் சொல்லாம இப்படி அமைதியா இருந்தால் என்ன அர்த்தம்?? மதி எங்க??" என்று கேட்டதற்கும் இருவரும் அமைதியையே பதிலாய் அளிக்க, ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து கொண்டவர், " இப்போ நீங்க சொல்லுறிங்களா?? இல்ல நான் செழியனுக்கு போன் பண்ணட்டுமா??" என்றதும், "அத்தை டென்ஷன் ஆகாதிங்க, நானே சொல்றேன்.." என்று முன்வந்தான் சிவா..

"அத்தை மதியை காணயில்ல.. எல்லா இடத்திலேயும் தேடிட்டோம், எங்கையுமே அவளை பார்க்கலன்னு சொல்லுறாங்க, போன் பண்ணினால் அதுவும் சுவிட்ச் ஆப்னு வருது.. என்ன பண்றதுனு தெரியல??" என்று கூறி முடிக்க தலையில் கையை வைத்தபடி சோபாவில் பொத்தென்று அமர்ந்தார்..

"ஐயோ அம்மா.. நீங்க ஒன்னும் யோசிக்காதிங்க.. சகோ அண்ணிய தேடி தான் போய் இருக்கான்.. எப்படியும் அண்ணியோட தான் வருவான்.." என்று கங்காவை சமாதானம் செய்யும் வேளையில், "வணக்கம் சம்மந்தி.." என்று குரல் கேட்டத்தில் மூவருமே திகைத்துப் போயினர்..

∞∞∞∞∞∞∞∞∞∞

மயங்கி கிடந்த மதி, கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிந்த வேளையில் அந்த இருட்டறையின் கதவு திறக்கப் பட, அந்த சத்தத்தில் கண் விழித்தவளின் கண்களுக்கு ஓர் உருவம் மங்கலாய் தெரிய, "டேய் யார்டா நீ?? எதுக்காடா என்ன இப்படி கடத்தி வச்சி இருக்க?? என்று சோர்வான குரலில் கத்தினாள்.. ஆனால் அந்த உருவாமோ மௌனமாக இருக்க, அதில் கோபம் வரப்பெற்ற மதி,"டேய், சொல்லுடா.. எதுக்கு என்ன கடத்தி வச்சிருக்க?? உனக்கு என்ன தான் வேணும்?? தைரியமானவனா இருந்தால் உன் முகத்தை காட்டுடா.." என்று கத்தியபடி அப்படியே மயங்கி சரிந்தாள்..

∞∞∞∞∞∞∞∞∞∞

வெளியே சென்ற செழியன், நேராக வினய் மற்றும் தர்ஷனா தங்கி இருந்த அபார்ட்மென்ட்டுக்கு சென்று காலிங் பெல்லை அழுத்திய படி நின்றான்..

"யாரு இது இப்படி பெல் அடிக்கிறது.." என்றாபடி வந்த தர்ஷனா அங்கு நின்றிருந்த செழியனை பார்த்து, "செழியன்.. நீங்க.. இங்க.." என்றுபடி அதிர்ச்சியில் நின்றாள்..

அவள் கேட்டதை எதுவும் காதில் வாங்கிக் கொள்ளாதவன், உள்ளே புகுந்து, "எங்க அவன்?? எங்க ஒளிஞ்சிட்டு இருக்கான்.. கூப்பிடு அவனை வெளிய, நானா கண்டு பிடுச்சேன் அப்பறம் நடக்குறதே வேற.." என்று ஒவ்வொரு அறையாக பார்த்தான் செழியன்..

"செழியன்.. ப்ளீஸ் நில்லுங்க, வினய் வீட்டுல இல்ல, ஏன் இவ்வளவு அவசரமா தேடுறீங்க?? ஏதாவது பிரச்சனையா??" என்றவள் கழுத்தை நெறிக்க முன்னேறியவன், தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு, "நீ தானே அன்னைக்கு சொன்ன உன் புருஷனால மதிக்கு ஆபத்து வரப்போகுதுன்னு.. கோயிலுக்கு போன மதிய காணும்.. போன் பண்ணினாலும் ஸ்விட்ச் ஆப்னு வருது.. கண்டிப்பா அவன் தான் ஏதாவது பண்ணி இருப்பான், சொல்லு அவன் எங்க??"

"ஐயோ செழியன், நான் அன்னைக்கு சொன்னது உண்மை தான்.. ஆனா அதுக்கு அப்பறம் அவரு எனக்கு ப்ரோமிஸ் பண்ணிட்டாரு இனி எந்த பிரச்சனையும் பண்ண மாட்டேன்னு.. இப்போ கூட மீட்டிங்காக தான் வெளிய போய் இருக்காரு.." என்றவளை பார்த்து பல்லை கடித்தவன், "நீ வேணா உன் புருஷன் நல்லவன்னு நம்பலாம் ஆனா நம்ப மாட்டேன்.." என்று வாசலுக்கு சென்றவன், தர்ஷனாவை திரும்பி பார்த்து, "அவனால மதிக்கு ஏதாவது ஆச்சுது, அப்பறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.." என்று உருமி விட்டு சென்றான்..

"கடவுளே, என்ன இது?? இப்போ நான் யாரை நம்புறது?? வினய் நம்ம கிட்ட உண்மைய தான் சொல்லி இருப்பாரா??" என்று சந்தேகம் எழ வீட்டை பூட்டி சாவியை எடுத்தவள் ஆட்டோ ஒன்றை பிடித்து, அருகில் இருக்கும் வினயின் மற்றும் ஒரு வீட்டுக்கு சென்றாள்..

∞∞∞∞∞∞∞∞∞∞

"வணக்கம் சம்மந்தி.." என்ற குரலில் கங்கா, சக்தி, சிவா என்ன மூவருமே திகைத்து நிற்க, உள்ளே வந்தனர் ரவியும் சீதாவும்..

அவர்கள் உள்ளே வர, தன்னை நிலைபடுத்திக்கொண்டவர், "ஆஹ்.. வாங்க அண்ணா.. வாங்க அண்ணி.. வந்து உட்காருங்க.." என்றார்..

உள்ளே வந்த மதியின் பெற்றோர் வழமையான சுகநல விசாரிப்புக்களை முடித்துக் கொண்டு, "எங்க சம்மந்தி நாங்களும் வந்ததுல இருந்து பார்க்குறோம் மதிய காணவே இல்ல.. மாப்ள கூட எங்கையாவது வெளியே போய் இருக்காளா??" என்க மூவரும் முழித்துக் கொண்டு நிற்க,

"என்ன எல்லாரும் அமைதியா இருக்கீங்க?? மதி வீட்ல இல்லையோ, நாங்க தான் தப்பான நேரத்துல வந்துட்டோமோ.." என்றார் ரவி..

"ஐயோ அதெல்லாம் இல்ல அண்ணா.. அது.. மதி.. மதி.." என்று என்று கங்கா தடுமாற.,

"மாமா, அண்ணி சகோ கூட வெளியில போய் இருக்காங்க.." என்றாள் சக்தி..

"அட, வெளிய போய் இருக்காளா?? இந்த பொண்ணு எப்பவும் இப்படி தான் அண்ணி, வீட்டுல இருக்கவே மாட்டாள்.. அங்க போறேன் இங்க போறேன்னு எங்கையாச்சும் கிளம்பிடுவா.. நான் தான் வீட்ல இருந்து அவள் வர்ற வரைக்கும் வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்கணும்.." என்று சீதா மதியை பற்றி பேசிக் கொண்டிருக்க, மற்ற மூவரும் நடந்ததை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல், செழியனிடம் இருந்து மதி கிடைத்து விட்டாள் என்கிற அழைப்பு வந்து விடாதா என ஏங்கிக் கொண்டிருந்தனர்..

∞∞∞∞∞∞∞∞∞∞

செழியன் வந்து கத்தி விட்டு போனதன் பின்னர், வினயிற்கு கால் செய்ய, அதுவோ பயனற்ற அழைப்பாக அமைந்து விட, மனதுக்குள் ஏதோ முடிவெடுத்த தர்ஷனா அருகில் இருக்கும் வினயின் மற்றொரு வீட்டை வந்தடைந்தாள்..

தன்னிடம் இருந்த ஒரு சாவியை கொண்டு வீட்டை திறக்க, ஆள் இல்லா அமைதியான வீடே அவளை வரவேற்றது..

உள்ளே சென்றவள், பெருமூச்சு ஒன்றுடன், "அப்பாடா, நான் கூட வினய் தான் மதிய ஏதாவது பண்ணி இருப்பருன்னு நினைச்சேன்.. நல்ல வேல அப்படி எதுவும் நடக்கல.." என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, மாடியில் இருந்த அறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்க, திடுகிட்ட தர்ஷனா அவசர அவசரமாக ஓடிச் சென்று பூட்டியிருந்த கதவை உடைத்து திறந்து பார்க்க, அங்கு கண்ட காட்சி அவளை அதிர்ச்சி அடைய செய்தது.. அங்கு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்தால் மதி..

ஓடிச் சென்று மதியை தன் மடி மீது கிடத்திய தர்ஷனா, "மதி.. மதி.. கண்ண திறந்து பாரு.." என்று அருகில் இருந்த தண்ணீர் போத்தலில் இருந்து நீர் எடுத்து மதியின் முகத்தில் தெளிக்க, கொஞ்சம் கொஞ்சமாக விழி விரித்தாள் மதி..

பாதி மயக்கத்தில் கிடந்த மதி, "இளா இளா.." என்க தர்ஷனாவோ மதியை புரியாது பார்த்து, அவள் கன்னத்தை தட்ட சுயநினைவிற்கு வந்தாள்..

"மதி.. ஆர் யூ ஓகே?? இந்தா இந்த தண்ணிய குடி.." என்று தர்ஷனா கொடுக்க அதை வாங்கி குடித்த மதி, "நான் இங்க எப்படி??" என்க,

"எனக்கும் தெரியல மதி, உன்ன காணும்னு செழியன் எங்க வீட்ல வந்து சத்தம் போட்டாரு.. என்ன தான் வினய் பண்ணி இருக்க மாட்டாருன்னு செழியன் கிட்ட சொன்னாலும் சின்ன ஒரு டவுட்ல தான் இங்க வந்து பார்த்தேன்.. நான் வந்தது கூட நல்லதுக்கு தான்னு தோணுது.."

"இளா.. இளா.. என்ன காணும்னு உங்க வீட்ல வந்து சத்தம் போட்டாரா??" என்றாள் நம்பாமல்..

"ஆமா மதி, செழியன் ரொம்ப தவிச்சு போய்ட்டாரு உன்ன காணும்னு.. இரு நான் இப்போவே செழியனுக்கு போன் பண்ணி சொல்றேன்.." என்ற தர்ஷனா செழியனுக்கு கால் செய்ய அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அங்கு இருந்தான் செழியன்..

செழியனை பார்த்ததும் அத்தனை நேரமும் தனக்குள் இருந்த பயம், இயலாமை, படபடப்பு, ஒரு வித இறுக்கம் ஆகிய அனைத்தும் காணாமல் போய்விட, ஓடிச் சென்று அவனை இறுகக் கட்டிக் கொண்டாள் மதி.. ஆயிரம் வார்த்தைகள் உணர்த்தாத அந்த காதல் மொழியை அந்த ஒற்றை அணைப்பு அவனுக்கு உணர்த்தியது.. செழியனின் கைகளும் அவனை மீறி மதியை சுற்றி வளைத்தது..

தன் நெஞ்சில் ஈரத்தை உணர்ந்தவன், அவள் முகத்தை தூக்கிப் பார்க்க, அவள் கண்களோ பயத்தில் நீரை சுரந்து கொண்டிருந்தது.. அதை கண்டவனுக்கு வினயின் மீது கோபம் வர, அங்கு மாட்டியிருந்த கண்ணாடியில் கையை முறுக்கி குத்த, கையில் இருந்து இரத்தம் வடிந்தது.. அதை பார்த்து திகைத்த மதி, "ஐயோ.. கை.." என்று தன் ஷாலை கிழித்து அவனுக்கு கட்டி விட பெருமூச்சு வாங்கியபடி கோபத்தில் ருத்திரமூர்த்தியாய் நின்றான் செழியன்..

வீட்டின் முன் கார் நிற்க, யோசித்தபடி உள்ளே நுழைந்த வினய், அங்கு நின்றவர்களை கண்டு பேரதிர்ச்சி அடைந்தான்..

வினயை கண்ட செழியன், அவனை அடிக்கப் போக அதற்கு முன் அவன் கன்னத்தில் சரமாரியாக அறைந்தாள் தர்ஷனா.. அவளது செய்கையை பார்த்து அதிர்ந்து போய் நின்றனர் செழியனும் மதியும்..

தர்ஷனா அடித்தத்தை நம்ப முடியாமல், கன்னத்தில் கை வைத்தபடியே, "தர்ஷு.." என்று அழைக்க..,

"ச்சீ.. இதுக்கு மேல என்னோட பேர் சொல்லி கூப்பிடாதீங்க.. நீங்க இப்படி ஒரு காரியம் பண்ணுவிங்கனு நான் கனவுல கூட நினைக்கயில்ல வினய்.. உங்க மேல எவ்வளவு நம்பிக்கை வச்சி இருந்தேன் தெரியுமா?? எல்லாத்தையும் சுக்கு நூறா உடைச்சிட்டீங்க.." என்றவள் கீழே விழுந்து அழ, அவளை தொடப் போனவன் சட்டையை பிடித்து இருந்தான் செழியன்..

"உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி பண்ணியிருப்ப.." என்று அவனை ஓங்கி அறைந்தவன், "நான் என்னைக்குமே உன்ன எதிரியா பார்த்தது இல்லடா.. சின்ன வயசுல இருந்து எனக்கு சிவா எப்படியோ அப்படி தான் உன்னையும் நினச்சேன்.. ஆனா நீ என்ன எதிரியா நினைச்சி தான் பழகி இருக்கேன்னு தெரிஞ்ச அந்த நேரத்துல ரொம்ப வலிச்சுதுடா.. உங்க ரெண்டு பேருக்கும் தான் பிடிச்சிருக்குன்னு சொல்லி இருந்திங்கனா அப்போவே நானே உங்கள சேர்த்து வச்சிருப்பேன்.. வீணா என்னோட ஆசைகளை தூண்டி விட்டு ஏன்டா அப்படி ஒரு துரோகத்தை பண்ணனும்.. நண்பனா நினைச்சி பழகினத்துக்கு என் முதுகுல குத்திட்டியே.." என்று சொல்லியபடி, வினயை பிடித்து இருந்த சட்டையை தள்ளி விட்டான்..

வினயோ, இதுவரை செழியனை தவறாக எண்ணியதை நினைத்து கூனிக் குறுகி நின்றவன், "டேய் செழியா.. என்ன மன்னி.." என்று சொல்லப்போகும் வேளையில் பொத்தென்று ஒரு சத்தம் கேட்க, சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்க்க, அங்கு மதியோ கீழே விழுந்து மயங்கிக் கிடந்தாள்..

அவளருகே ஓடிச் சென்ற, செழியன் அவள் கன்னத்தை தட்ட, அவள் கண்களோ திறக்கப் படவில்லை.. மதியை அப்படியே தன் இரு கைகளாலும் தூக்கியவன், "இங்க பாரு, என்னோட மதிக்கு மட்டும் ஏதாவது ஆச்சுது.. அதுக்கு அப்பறம் உன்ன உயிரோடவே விட மாட்டேன்.." என்று வினயிடம் கத்தி விட்டு மதியை தூக்கிக் கொண்டு ஓடினான்..

செழியன் போனதும், கண்களை மூடிக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதான் வினய்.. அவன் அழுவதை பார்த்த தர்ஷனா அருகே சென்று அவன் தோளை தோட, அவளைப் பிடித்து இறுக்கி அணைத்துக் கொண்டவன், "தர்ஷு.. என்ன மன்னிச்சிரு.. நான் எவ்வளவு தப்பு பண்ணி இருக்கேன்னு இப்போ தான் புரியுது.. அவனோட வாழ்க்கையை கெடுக்கணும்னு உன்ன அவன் கிட்ட இருந்து பிரிச்சி துரோகத்தை பண்ணினேன்.. இப்போ ஒரு பொண்ண கடத்துற அளவுக்கு கீழ்தரமானவன் ஆகிட்டேன்ல.. நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன்.. எல்லா தப்பும் என்னால தான்.. என்ன நினைக்க எனக்கே அருவுருப்பா இருக்குது.." என்று அழுதவனை ஆதரவாய் அணைத்துக் கொண்டாள் தர்ஷனா ஒரு மனைவியாய்..



தொடரும்...
 
Member
Messages
30
Reaction score
40
Points
18
சாரி தோழமைகளே.. உங்களுக்கு எல்லாரையும் ரொம்ப நாள் காத்திருக்க வைத்ததுக்கு சாரி.. சில பல சொந்த பிரச்சனைகளால தொடர்ந்து அப்டேட் தர முடியாமல் போயிட்டுது.. இனி கன்டினியூவா யூடி போடுறேன்..
 
Top