• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 19

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 19

Writer : Hafa


"செழியா, டின்னர் ரெடி ஆகிடிச்சி, வாங்க சாப்பிடலாம்." என்றபடி மாடிக்கு வந்த கங்கா, கையால் தலையை தாங்கியவாறு அமர்ந்து இருந்த செழியனை பார்த்தார்.

"செழியா, என்னப்பா இங்க வந்து உட்கார்ந்து இருக்க??"

அன்னையை நிமிர்ந்து பார்த்தவன், அவரிடம் சற்று முன் நடந்ததை கூற விரும்பாமல், "லைட்டா தலை வலிக்குதுமா, வேற எதுவும் இல்ல.."

"மார்னிங்ல இருந்து ரெஸ்ட் இல்லாம ஓடிட்டே இருந்தியேப்பா அதனால தான் தலைவலியா இருக்கும்.."

"மே பீ இருக்கலாம்மா.." என்றவன், "அது சரிமா, நீங்க ஏன் இவ்வளவு கஷ்டபட்டு மாடிக்கு வர்றிங்க, ஒரு வார்த்தை கூப்பிட்டு இருந்தால் நானே வந்து இருப்பேன்ல.."

"இதுல என்னப்பா இருக்கு, நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா, அதுவே எனக்கு எனர்ஜிய கொடுக்குது.. டின்னர் ரெடி ஆகிடிச்சி செழியா, நீங்க வந்து சாப்பிடுங்க.. சாப்பிட்டு டேப்லெட் போட்டால் தலைவலி சரி ஆகிடும்.."

"சாப்பிடலாம்மா.. சிவா, சக்தி ரெண்டு பேரும் சாப்பிட்டாங்களா??"

"இல்லப்பா, அவங்களும் நீங்க வர்ற வரைக்கும் தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. எல்லாரும் ஒன்னாவே சாப்பிடலாம்னு.."

"ஐயோ, அப்போ வாங்கம்மா போய் சாப்பிடலாம்.." என்று கங்காவின் கையை பிடித்து நடந்தவனை விசித்திரமாக பார்த்தார் அவர்.."

"என்னம்மா, பார்த்துட்டு இருக்கீங்க, வாங்க சாப்பிடலாம்.."

"செழியா, நீ என் கூட வந்துட்டேன்னா உன்னோட பொண்டாட்டிய யாருப்பா கூப்பிட்டு வர்றது.." என்க பல்லை கடித்துக் கொண்டான் செழியன்..

"சாரிமா, சடன்னா ஒரு சேன்ஜ்னால மறந்து போச்சு.. நான் இப்போவே போய் அவளை கூப்பிட்டு வர்றேன்.." என்று போகப் போனவனை கையை பிடித்து நிறுத்திய கங்கா,

"செழியா, நீ உண்மையிலேயே மதிய காதலிச்சி தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட.." என்க அவரிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பாரதவன், தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு.,

"ஏன்மா சடன்னா இப்படி கேட்குறீங்க?? நாங்க காதலிச்சி தான் கல்யாணம் பண்ணிகிட்டோம்.."

"இல்லப்பா, சும்மா தான் கேட்டேன்.. நீ மனசு மாறி கல்யாணம் பண்ணிட்டதே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா, அந்த பொண்ணு ஏமாற்றிட்டு போன அப்பறம் நீ கஷ்ட பட்டத கண்ணால பார்த்தவ நான்.. ஆனா அது கூட நல்லதுக்குன்னு நினைக்கிற மாதிரி தான் செழியா, மதி உன்னோட வாழ்க்கையில வந்து இருக்காள்.. நீ தான் அந்த பொண்ண, வாழ்க்கை முழுக்க சந்தோசமா வச்சி பாத்துக்கணும்.." என்ற தாயை பார்த்து மேலும் கீழும் தலையை ஆட்டிக் கொண்டிருந்தான் செழியன்..

"சரிப்பா, நான் கீழ போறேன்.. நீ மதிய அழைச்சிட்டு வா." என்று அவர் போக, செழியனோ, "அத்தாடி ஒரு நாளையிலேயே இவ்வளவு சமாளிக்க வேண்டியதா இருக்கு.. இன்னும் ஒரு வருஷத்துல நம்ம நிலைமை என்ன ஆகும்.." என்று புலம்பியபடி அறைக்குள் சென்று பார்க்க, மதியோ அவள் கடந்த கால நிகழ்வுகளில் மூழ்கி இருந்தாள்..

உள்ளே வந்த செழியன், தான் போகும் போது இருந்த நிலையிலேயே மதி அமர்ந்திருப்பதைப் பார்த்து, "என்ன மதி, இன்னும் பிரெஷ் ஆகாமல் இருக்கியா?? இது சரி பட்டு வராது.. எழுந்திரு, இந்த டவலை பிடி.." என்று அவன் அலுமாரிகுள் இருந்து டவல் ஒன்றை எடுத்துக் கொடுத்தவன், "சீக்கிரம் ரெப்ரெஷ் பண்ணிட்டு வா, அங்க அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க.." என்று எதுவும் நடக்காதது போல அவன் யதார்த்தமாய் பேச, மதியோ பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தாள்..

அப்பொழுதும் மதி அப்படியே இருக்க.."இவ இப்படி சொன்னால்லாம் சரி பட்டு வர மாட்டாள்.." என்றவன் அவளை தள்ளிக் கொண்டு போய் வாஷ்ரூம் வாசலில் விட்டவன், "நீயா உள்ள போறியா?? இல்லனா நான் ஏதும் தூக்கிட்டு வந்து விடணுமா??" என்றான் சிடுசிடுத்தபடி..

"ஆஹ்.. என்ன.. என்ன கேட்டிங்க??" என்று அதிர்ந்த மதி, அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள்..

"இவள உருட்டி மிரட்டி தான் எல்லாம் பண்ண வைக்க வேண்டியதா இருக்கு?? என்னடா செழியா உனக்கு வந்த நிலைமை இது??" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன், தன் நிலையை நினைத்து நொந்தபடி கதவை மூடி விட்டு வெளியே சென்றான்..

மாடிப் படிகளில் இறங்கி வந்தவன், அந்த அழைப்பை பற்றியும் அவன் பேசியதை பற்றியும் மனதுக்குள் அசை போட்டபடி இருந்தான்..

செழியன் கீழே வர, "என்ன மச்சான் எதையோ திங்க் பண்ணிட்டே வர்ற??" என்றான் சிவா..

சிவாவின் குரலில் இயல்புக்கு வந்த செழியன், "ஒன்னும் இல்லடா, மார்னிங் கொஞ்சம் ஒர்க் இருக்கு, ஸோ சீக்கிரமா சாப்பிட்டு தூங்கலாம்னு பாக்குறேன்.. ஆபீஸ்க்கு வேற போகணும்.."

"என்னடா சொல்ற?? தூங்கப் போறேன்ற, ஆபீஸ் போகணும்ன்ற.. நீ எல்லாம் யோசிச்சு தான் பேசுறீயா??"

"ஏன்டா இதுல என்ன யோசிச்சு பேச இருக்கு, நாம டெய்லி பண்றது தானே.!!"

"டேய், மச்சான் கொஞ்சமாச்சும் புது மாப்பிளை மாதிரி பேசுடா, அதும் நைட்டு தூங்க போறேன்னு வேற சொல்லுற??" என்று சிவா தன் பாட்டுக்கு புலம்பிக் கொண்டிருக்க, செழியனோ அவனை அசட்டை செய்யாது சக்தியின் அருகில் சென்றவன், "ஏய் குட்டி, அங்க பாரு உன் புருஷன!! ஏதோ தனியா நின்னு புலம்பிட்டு இருக்கான், என்னனு கேளு.." என்க,

சிவாவின் பக்கம் வந்த சக்தி, "என்னங்க ஏதோ லூசு மாதிரி தனியா நின்னு பேசிட்டு இருக்கீங்க??" என்றாள்..

"என்னது நான் லூசு மாதிரி பேசுறேனா.. எல்லாம் உன் அண்ணன் தான்டி.. சாருக்கு நாளைக்கு ஆபீஸ்ல ஏதோ வேலை இருக்காம், அதனால ஏர்லியா சாப்பிட்டு தூங்க போறாராம்.." என்றான் சிவா தலையில் அடித்தபடி..

"யோவ்.. நீ தான்யா லூசு, தூக்கம் வந்தால் தூங்காமல் என்ன பண்ணுவாங்க, எனக்கும் கூட நல்ல தூக்கம் வருது, நானும் சாப்பிட்டிட்டு தூங்க போறேன்.."

"அடியேய் அண்ணனும் தங்கச்சியும் எல்லாம் தெரிஞ்சி தான் பேசுறிங்களா?? எதுவுமே தெரியாத மாதிரி பிஹேவ் பண்ணுறீங்க.. இன்னைக்கு நைட்டு உன்னோட நிலைமை மோசம் தான்டா சிவா." என்று பெருமூச்சு விட்டான்..

குளித்து தயாராகி வந்த மதியின் காதுகளில் இம்மூவரின் உரையாடலும் கேட்க, கடைசியில் சிவாவின் புலம்பலை கேட்டவள் வாய் விட்டே சிரித்து விட.. மதியின் சிரிப்பு சத்தத்தை கேட்டு எல்லோரும் அவளை திரும்பிப் பார்க்க, அவள் வாயை மூடிக் கொண்டாள்..

கங்கா, "வாமா மதி, வா.." என்று அவளை அழைத்து தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவர், "என்னடா குளிச்சிட்டியா??" என்க, "ஆஆஆ.. ஆமா அத்தை.." என்றாள்..

"சரி வாங்க எல்லாரும் சாப்பிடலாம்.." என்று அழைத்த கங்கா, அனைவருக்கும் உணவு பரிமாறி தானும் உண்டு விட்டு மேற்படி சம்பிரதாயங்களை கவனிக்கத் தொடங்கினார்..

∞∞∞∞∞∞∞∞∞∞

அறைக்குள் வந்த சிவா, பால்கனியில் இருந்து வானத்தை பார்த்துக் கொண்டிருந்த சக்தியை காண, அவளோ ஏதோ பலமாக சிந்தித்தபடியிருந்தாள். அவளது முகத்தில் சிந்தனையின் ரேகைகளை பார்த்தவன், "என்ன மேடம் எத்தனை ஸ்டார்ஸ் இருக்குது??" என்க,

சக்தி அவன் கேட்டதை புரியாமல் முழிந்து கொண்டிருப்பதை பார்த்தவன், "இல்ல, நீ தான் வானத்தையே பார்த்து ஸ்டார்ஸ கவுண்ட் பண்ணிட்டு இருந்தியே, அதை தான் கேட்டேன்.." என்றதும் அவனை பார்த்து முறைத்தவள், "எல்லாம் என்னோட நேரம்?? இந்த மாதிரி மொக்க ஜோக்கை எல்லாம் கேட்கனும்னு.." என்று அவன் தலையில் கொட்டினாள்..

"ஆஆஆவ்வ்வ்.. வலிக்குதுடி.."

"நல்லா வலிக்கட்டும்.." என்று கூறிய சக்தி அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்தாள்.. சிவாவும் அவள் பக்கத்தில் போய் அமர்ந்தவன், தன் கைகளுக்குள் அவளது கையை பிடித்தபடி, "சொல்லு அம்மு, என்ன பிரச்சனை உனக்கு?? எத பத்தி நீ திங்க் பண்ணிட்டு இருக்குற??"

"சிவா, நீங்க சாப்பிடும் போது சகோவையும் அண்ணியையும் நோட் பண்ணிங்களா??"

"இல்லையே அம்மு, ஏன்டா?? எதுக்கு இப்படி கேட்குற??"

"இல்லப்பா, அவங்களை பார்க்கும் போது லவ் பண்ணி மேரேஜ் பண்ணினவங்க மாதிரியே தெரியல, ரெண்டு பேருமே யாரோ மாதிரி பிஹேவ் பண்ணுறாங்க.."

"ஹேய் அதெல்லாம் இருக்காதுடாமா, உனக்கு தான் செழியனை பத்தி தெரியும்ல, அவனே இப்போ தான் நடந்ததை மறந்துட்டு நியூ லைப ஸ்டார்ட் பண்ணி இருக்குறான்.. என்ன தான் காதலிச்சி இருந்தாலும் எல்லாத்தையும் அக்ஸப்ட் பண்ணிக்க அவனுக்குன்னு டைம் தேவை தானே. நடந்து முடிந்ததை நினைச்சிட்டு இருக்குறதுல எதுவுமே ஆக போறது இல்ல.. இனி நடக்க போறதை நல்லதா அமைச்சிகிறது நம்ம கையில தான் இருக்கு.. செழியன் என்னைக்குமே அவனோட கடமைகள்ல இருந்து தவறுகிறவன் கிடையாது.. இனி என்ன ஆனாலும் அவனுக்கு துணையாய் மதி இருப்பாள்.." என்று ஆறுதலாய் கூறியவன்.. ஒரு நொடி நிறுத்தி, இப்போ நான் சொல்ல வர்றது என்னன்னா செழியனை கவனிச்சிக்க மதி இருக்காங்க, இப்போ உன் புருஷனை நீ தானே கவனிக்கணும்.." என்றான் விளையாட்டாய்..

இது வரை நேரமும் அவன் சொன்னதை கேட்டு தலையை ஆட்டிக் கொண்டிருந்த சக்தி, அவன் கடைசியாக கூறியதை கேட்டு, "டேய் இப்போ நீ எதுக்கு அடித்தளம் போடற.. அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல.."

"ஏய் என்னோட செல்ல பொண்டாட்டி, நான் என்ன புதுசா கேட்டுட்டேன்.. எல்லாமே தலைமுறை தலைமுறையா நடந்துட்டு வர்றது தானே.." என்று குறும்புத் தனமாய் கூறியவன், சட்டென்று அமைதியானான்..

அவனது திடீர் அமைதியை கவனித்த சக்தி, "சிவா, என்னாச்சு?? ஏன் சைலன்ட் ஆகிட்டீங்க??"

"எனக்கு தான் என்னோட தலைமுறை என்ன?? என்ன பெத்தவங்க யாருன்னே தெரியாதே அம்மு.." என்று வேதனையோடு சொல்ல, அவன் கைகளை அழுத்திப் பிடித்ததும், "உனக்காக நான் இருக்கேன்டா.." என்று அவள் கண்களே அவனுக்கு ஆறுதல் கூறியது..

"நான் ஒன்னு சொல்லவா சக்தி, நான் எப்பவுமே கவலை படுறது எனக்குன்னு யாரும் இல்லைன்னு தான்.. அந்த நேரத்துல எனக்கு ஆறுதல் தர்ற ஒன்னுனா அது செழியன் மட்டும் தான்.. அவன் எப்பவுமே என்ன தனியா விட்டது இல்ல.. அவனால தான் நீ எனக்கு கிடைச்சிருக்க.. இப்போ உன்னால தான் நானும் குடும்பஸ்தன் ஆகிட்டேன்.. எனக்கும் குடும்பம் இருக்கு.. மனைவின்னு சொல்லிக்க நீ இருக்க, அப்பறம் நம்ம பசங்க வந்து என்ன அப்பான்னு சொல்லுவாங்கள்ல, அப்போ நான் அனாதை இல்ல தானே.. எனக்குன்னு உறவுகள் வந்துடும்.. நான் பாசத்துக்காக ரொம்ப ஆசை பட்டவன், எனக்கு கிடைக்காத அன்பு பாசம் எல்லாமே நம்ம பசங்களுக்கு கிடைக்கணும் சக்தி, அவங்களுக்கு நான் ஒரு குறையும் வைக்க மாட்டேன்.." என்று தன் மனதில் வரைந்து வைத்திருக்கும் கனவுக் கோட்டையை சக்தியிடம் ஒப்புவித்துக் கொண்டிருந்தான்.

சிவாவின் பேச்சைக் கேட்ட சக்திக்கு, அவனின் உறவுகளுக்கான ஏக்கமும் ஆசையும் நன்றாக புரிந்தது.. இருந்தாலும் அவனை வழமைக்கு கொண்டு வருவதற்காக, "கண்டிப்பா நீங்க ஆசை படுறது எல்லாமே நடக்கும்ங்க, ஆனா இப்போ உங்க கதையை கேட்டதுல தூக்கம் கண்ணை கட்டுது.. ஸோ வாங்க தூங்கலாம்.." என்றாள் சக்தி அவனை ஓரக் கண்ணால் பார்த்தபடி..

"என்னடி சொல்ற!! தூக்கம் வருதா?? இதெல்லாம் ரொம்ப ஓவரு, பார்த்துக்க.. இவளை வச்சிட்டு நான் என்ன தான் பண்ண போறேனோ, உனக்கு இன்னைக்கு விதிச்சது அவ்வளவு தான்டா.." என்று தனக்கு தானே புலம்ப, அதை பார்த்த சக்தி தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, "ஏங்க, உங்களுக்கு தூக்கம் வரலையா??" என்றாள் நக்கலாய்..

"ஐயோ!! தூக்கம் தானே, அது வரும் போது வரட்டும்மா?? நீ போய் தூங்குமா தாயே.!! நல்லா தூங்கு.." என்றவன் பால்கனிப் பக்கம் செல்லப் போக.,

அவனை கையை பிடித்து நிறுத்திய சக்தி, "நான் என்ன, நான் மட்டும் தூங்க போறேன்னா கேட்டேன்.. உங்களையும் சேர்த்து தானே தூக்கலாமான்னு கேட்டேன்.." என்று வெட்கத்தில் தலையை குனிந்து கொண்டாள்..

அவள் சொன்னதன் அர்த்தத்தை புரிந்து கொண்டவன், "ஆஆஆஆஹூஹூ.. நிஜமாவா சொல்ற??" என்று சத்தமாக கத்த,

"யோவ் இன்னும் என்னய்யா அங்க கத்திட்டு இருக்குற..." என்ற சக்தி, சிவாவை இழுத்துக்கொண்டு மஞ்சத்தில் சரிந்தாள். அதன் பின் அங்கு பேச்சு வார்த்தைகள் அர்த்தமற்று போக, அவர்களின் இல்லறப் பயணம் இனிதே துவங்கியது.

∞∞∞∞∞∞∞∞∞∞

இங்கு மதியின் நிலையோ அதற்கு மாற்றமாக இருந்தது.. செழியனின் அறை வாசலில் நின்று கையை பிசைந்து கொண்டிருந்தாள் அவள்..

"இப்போ உள்ள போகலாமா?? வேணாமா?? போனால் தய்ய தக்கான்னு குதிப்பானே.." என்று யோசித்துக் கொண்டிருந்தவள் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பூட்டியிருந்த கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்க்க, அங்கு செழியனோ, தன் பாட்டுக்கு இருந்து லேப்டாப்பில் எதையோ தட்டிக் கொண்டிருந்தான்..

கதவு திறந்த சத்தத்தை கேட்டு நிமிர்ந்தவன் கதவின் அருகில் மதி நிற்பதை பார்த்து, "வா மதி, எதுக்கு அங்கையே நின்னுட்டு இருக்க, உள்ள வா.." என்று அழைத்து விட்டு தன் வேலையில் மூழ்கினான்..

அறைக்குள் வந்த மதி, என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்க, "உட்காரு.." என்று கட்டிலுக்கு கையை காட்டிய செழியன், "டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு ஒர்க்க பினிஷ் பண்ணிட்டு வந்துடுறேன்.."என்று மீண்டும் லேப்டாப்பில் மூழ்கிப் போக,

"என்ன இவன் இவ்வளவு கூலா இருக்குறான்.. கோபத்துல கத்துவான்னு பார்த்தால் சைலன்ட்டா இருக்கானே.. ஒருவேளை வைப்னு ஏதாவது அட்வான்டேஜ் எடுக்க ட்ரை பண்ணுறானோ.. அய்யய்யோ அப்படி ஏதும் பண்ணினால் என்ன பண்ணுறது?? எதையாவது தூக்கி போட்டு அடிச்சிடலாம்.." என்று தனக்குள்ளேயே முனங்கி கொண்டிருந்தாள்.

லேப்டாப்பை மூடியவன், அவள் சிந்தனையை கலைக்கும் விதமாக, "நான் உன் கிட்ட ஒன்னு கேட்கலாமா??" என்றான்.

அவனை கேள்வியாய் பார்க்க, அவள் பார்வையை புரிந்து கொண்டவன், "நீ என்ன எதுக்காக கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச??" என்று கேட்கவும், இப்படி ஒரு கேள்வியை அவனிடமிருந்து எதிர்பாரதவள் சற்று தடுமாறிப் போனாள்..

"அது.. அது.. வந்து.. ஆஹ்.. நீங்க எனக்கு கஷ்டமான சிட்டுவேஷன்ல உதவி பண்ணினீங்கல்ல, அதுக்கு பதிலா உங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்ன்ற எண்ணத்துல தான் இதுக்கு சம்மதிச்சேன்.."

"அந்த ஒரே எண்ணத்துல மட்டும் தான் நீ என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சியா??"

"ஆமா, வேற என்ன இருக்கு.. இத தவிர உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்கென்ன தலையெழுத்தா??" என்றதும் அவனுக்கு சிறிது கோபம் எட்டிப் பார்க்க அதை அடக்கிக் கொண்டவன்,

"அப்படினா நீ இதுக்கு முன்னாடி என்ன பார்த்து இருக்கியா?? ஐ மீன் இதுக்கு முன்னாடி நாம மீட் பண்ணி இருக்கோமா??" என்கவும் மதிக்கு பக்கென்று ஆனது..

"என்ன மதி, இவன் ஏதோ சிபிஐ ஆபீஸர் மாதிரி துருவி துருவி கேள்வி கேட்குறான்?? ஒருவேளை நம்ம லவ் மேட்டரை கண்டுபிடிச்சிரிப்பானோ??" என்று மனதுக்குள் கேள்வி எழுப்ப,

"ஹேய் என்ன சைலன்ட்டா இருக்க??" என்றான்..

"ஆஹ்.. ஒன்னும் இல்ல, இதுக்கு முன்னாடி நாம எங்க மீட் பண்ணி இருக்கோம்.. அந்த அச்சிடேன்ட் டைம்ல தான் உங்கள நான் முதன் முதலாய் பார்த்தேன்.." என்றவள் இதற்கு மேல் அவனிடம் பேச்சை தொடர்ந்தால் தன் வாயில் இருந்தே அனைத்தையும் கறந்து விடுவான். " என நினைத்தவள், "எனக்கு தூக்கம் வருது.. நான் எங்க தூங்கணும்.."

"இது என்ன கேள்வி இதோ இருக்கே பெட் இதுல தூங்கிக்க வேண்டியது தானே.." என்று அவளை பார்த்து கண்ணடிக்க,

"என்னது இதுல தூங்கணுமா?? அப்போ நீங்க எங்க தூங்கிப்பிங்க??" என்றாள் மதி ஒருவித பயத்துடன்..

"ஏய் என்ன இது கேள்வி, இது என்னோட பெட் நானும் இதுல தான் தூங்கணும்.." என்றவன் ஒரு நொடி தாமதித்து, "ஹேய் இன்னைக்கு நாம எதுக்கு தூங்கணும்?? இன்னைக்கு தானே நமக்கு பர்ஸ்ட் நைட்.." என்கவும் மதியின் விழிகள் சுழன்று வருவதை பார்க்க, செழியனுக்கு சிரிப்பு வர அதை அடக்கியபடி, "என்ன நான் சொல்றது சரி தானே.. நீ அக்ரீமெண்ட்ல அதெல்லாம் படிச்சு பார்த்து தானே சைன் பண்ணின.." என்றதில் அதிர்ந்தாள் மதி..

"யோவ்.. எனக்கு பெட்டும் வேணாம் எதுவும் வேணாம்.. நான் வெளிய போயே தூங்கிக்கிறேன்." என்று பயத்தில் பேசியவள், வெளியே செல்லப் போக,

"ஏய் மதி, நில்லு.. நான் சும்மா ஜோக் பண்ணினேன்.. நீ பயப்படுற அளவுக்கு நான் ஒன்னும் மோசமானவன் கிடையாது.. அப்படி நான் இத எதிர்பார்த்து தான் கல்யாணம் பண்ணணும்னா நான் எப்பவோ கல்யாணம் பண்ணி இருக்கணும்.. நான் என்னோட அம்மாவையும் சக்தியையும் தவிர வேற யாரையுமே நம்பினது கிடையாது, அவங்களுக்கு அப்பறமா கொஞ்சமாச்சும் நம்பிக்கை வந்திருக்குறது உன் மேல தான்.." என்கவும் அவனை ஓடிச் சென்று அணைக்க எண்ணிய கைகளை கட்டுப்படுத்திக் கொண்டாள் மதி..

"ஒன்ஸ் அகைன் நான் உன்கிட்ட சாரி கேட்டுகிறேன், இந்த ஒன் இயர்க்கு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, அப்பறம் நம்ம ரெண்டு பேருக்கும் செட் ஆகலன்னு சொல்லி பிரிஞ்சிடலாம்.. அதுக்கு அப்பறம் நீ ஆசை பட்டது போல உனக்கு பிடிச்ச வாழ்க்கையை நானே உனக்கு அமைச்சு தர்றேன்.." என்றவன், "எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு.. உள்ள ஒரு ரூம் இருக்கு, நீ அங்க தூங்கிக்கோ, அங்க உனக்கு எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்காது.." எனக் கூறியவன் செல்போனை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு செல்ல, மதியோ செழியன் சொன்ன அந்த உள் அறைக்குள் புகுந்து கொண்டாள்..

அறைக்குள் புகுந்து கதவை பூட்டியவளுக்கு கண்ணீர் கரை புரண்டு ஓடியது..

"ஏன்டா என்ன இப்படி கஷ்ட படுத்துற, சில நேரம் நீ பேசுறத வச்சி பார்க்கும் போது நெருங்கி வர்றது போல தோண வைக்கிற, அதுவே சில நேரம் ரொம்ப தூரமா தள்ளி வைக்கிற?? எதுக்குடா நான் உன்ன காதலிச்சேன்.. உன்ன பார்க்கலாமலே இருந்து இருக்கலாம்.. இல்ல இப்படி தினம் தினம் கஷ்டபடுறதுக்கு ஒரேடியா நான் செத்து போயிடலாம்.." என்று கலங்கியவளுக்கு, தன் மீது தனக்கே கழிவிரக்கம் தோன்ற, "இனி உன் கண்ணீர் என்றும் ஓயப் போவதில்லை.." என்று யாரோ சொல்வது போல தோன்றவும், மனதில் துயரம் சூழ தலையணையை நனைத்தாள்..




தொடரும்...
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Mathi pakka kastama tha iruku
 
Top