Member
- Messages
- 30
- Reaction score
- 40
- Points
- 18
Episode : 18
Writer : Hafa
இரண்டு ஜோடிகளுக்கும் சிறப்பாக திருமணம் நடந்து முடிந்திருக்க, பெரியோர்களிடமும் ஆசிகளை பெற்றவர்கள், மற்ற சம்பிரதாயங்களுக்காக செழியனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்..
செழியனின் உறவுக்கார பெண் ஒருத்தி இரண்டு ஜோடிகளுக்கும் ஆரத்தி எடுக்க, முதலில் மதி தன் வலது காலை எடுத்து வைத்து வீட்டிற்குள் நுழைய, அவளை தொடர்ந்து சக்தியும் வலது காலை வைத்து உள்ளே சென்றாள்.. என்ன தான் இருந்தாலும் மதியின் முகமே அவள் சந்தோஷமாக இல்லாதது போல காட்டியது. அதை கவனித்த சீதா, " மதி, எதுக்கு அமைதியா இருக்கிறாள், அது மட்டும் இல்ல, தாலி கட்டுற நேரத்தில கூட இந்த பொண்ணோட முகத்துல பொலிவு இல்லையே.. நாங்க தான் அவசரப் பட்டுட்டோமோ.." என்று யோசித்தவருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது..
மதியின் அருகில் சென்றவர், அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக, "மதி என்னாச்சுடா?? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு??" என்க.,
அப்போது தான் ரவியும் மதியின் முகத்தை பார்த்தவர், "மதிமா ஏன் முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு.. உடம்புக்கு ஏதாவது பண்ணுதாமா??" என்றார் அவரும் தன் பங்கிற்கு..
மதி, "அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. புகைக்கு முன்னாடி இருந்தது, கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு, அவ்வளவுதான்." என்று ஒருவாறு சமாளித்தாள்..
மதியின் பக்கத்தே வந்த கங்கா, அவளது தலையை அன்பாக தடவியவர், "என்னடாமா, ரொம்ப தலை வலிக்குதா?? நான் வேணா தைலம் தேச்சு விடட்டுமா.." என்று கேட்கவும் அதை பார்த்த ரவிக்கும் சீதாவுக்கும் மனம் குளிர்ந்து போனது..
சக்தி, "ஐயோ இந்த அம்மா வைக்குற ஐஸ்ல அண்ணிக்கு ஜுரமே வந்துடும் போல.. அங்க பாருமா சகோவோட பேஸ நீ அண்ணி பக்கத்துல நிற்கும் போது, நமக்கு அந்த சான்ஸ் கிடைக்கலையென்னு தொங்கி போச்சுது.." என்க, செழியனோ தங்கையை சமாளிப்பாக சிரித்து வைக்க, அதை பார்த்த மதிக்கு அவளை அறியாமலே சிரிப்பு வந்து விட்டது.. அதனை ஓரக் கண்ணால் பார்த்தவன், அவளை முறைக்க, மதி சட்டென்று சிரிப்பதை நிறுத்திக் கொண்டாள்..
"ஏங்க, இங்க மாப்பிளைன்னு நான் ஒருத்தன் இருக்கேறன்றதையே நீங்க எல்லாரும் மறந்துட்டீங்கள்ள.." என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்ட சிவாவின் இடுப்பில் நறுக்கென்று கிள்ளினாள் சக்தி..
"ஸ்ஸ்ஸ்.. ஆஆஆஆ.." என்று சிவா கத்த, உறவுக்காரர் ஒருவர், "என்ன மாப்ள அங்க சத்தம்.." என்கவும், "அது ஒன்னும் இல்ல மாமா கொசு கடிச்சிடிச்சி.." என்றான் சமாளிப்பாய், ஆனால் சக்தியோ ஒன்றும் அறியாத அப்பாவியாய் அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்.. இதை கண்டும் காணாமல் சிரித்துக் கொண்டிருந்தனர் அவர்களின் பெற்றோர்.. அங்கு நடக்கும் சில்மிஷ விளையாட்டுக்களை பார்த்தவர்கள் உள்ளமோ குளிர்ந்து போனது.. தம் மக்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்து விட்டதை எண்ணி..
மாலை நேரம் ஆக, ரவியும் சீதாவும் கிளம்ப தயாராகிக் கொண்டிருக்க, செழியனை தனியாக அழைத்து சென்ற ரவி, "தம்பி, மதி ரொம்ப சின்ன பொண்ணு.. ஒரே பொண்ணுங்குறதால செல்லமா வளர்ந்துட்டாள்.. ஆனா பொறுப்பான பொண்ணு.. அவ தப்பு ஏதும் பண்ணிடா கூட எடுத்து சொன்னா புரிஞ்சிப்பாள்.. உங்க கிட்ட இப்படி வந்து சொல்றது தப்பு தான்.. ஆனா பொண்ண பெத்த அப்பாவா இது என்னோட கடமை.." என்று கூற, அவர் கைகளை பற்றியவன், "நீங்க எதுக்கும் கவலை படாதீங்க அங்கிள், இப்போ அவள் உங்க பொண்ணுன்றத தாண்டி என்னோட மனைவி.. நான் கண்டிப்பா அவளை நல்லா பாத்துப்பேன்.." என்றதும் இதை விட வேறு என்ன வேண்டும் என்றாகியது பெண்ணை பெற்ற தந்தைக்கு..
"அப்போ நாங்க கிளம்புறோம்.." என்று ரவியும் சீதாவும் விடை பெற,
கங்கா, "ஏன் அண்ணா இப்போவே கிளம்புறீங்க, ரெண்டு நாளைக்காச்சும் நின்னுட்டு போகலாம்ல."
"ஐயோ அதெல்லாம் சரியா வராது அண்ணி, அங்க எல்லாமே போட்டது போட்ட படி இருக்குது.. நாங்க போனால் தான் எல்லாம் ஒழுங்கு பண்ண முடியும்.." என்றார் சீதா..
"அதுவும் சரி தான் அண்ணி, ஆனா கண்டிப்பா இன்னொரு நாள் வந்து நிற்கணும்.." என்றார் கங்கா கண்டிப்பாய்..
"சரிமா, நாங்க என்ன ரொம்ப தூரத்துலயா இருக்கோம்.. பக்கத்துல தானே இருக்கோம், நினைச்சதும் வந்து பார்த்துடப் போறோம்.." என்ற ரவி, மதியை அணைத்து நெற்றியில் அன்பாய் முத்தம் ஒன்றை பதித்தார்..
ரவியும் சீதாவும் நிறைவாய், "மதிக்கு ஏற்றால் போல கணவன் கிடைத்து விட்டான்." என்ற திருப்தியுடன் விடை பெற, மதியின் கண்களிலோ அருவி போல கண்ணீர் துளிகள் நனைக்க, ஆறுதல் சொல்ல வேண்டியவனோ, தனக்கென்ன என்ற ரீதியில் நின்று கொண்டிருந்தான்..
"சரி, எல்லாரும் போய் பிரெஷ் ஆகிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.. அதுக்குள்ள டின்னர் ரெடி ஆகிடும்." என்றார் கங்கா..
சக்தி, சிவாவை தன் அறைக்கு அழைத்து செல்லவும், கங்காவும் கிட்சேனுக்குள் புகுந்து கொள்ள, அங்கு செழியனும் மதியுமே தனித்து விடப் பட்டனர்.
மதி, செழியனை, "இப்போ நான் என்ன செய்யட்டும்.." என்ற ரீதியில் பார்க்க, அவனோ மதியின் லக்கேஜை தூக்கி கொண்டு மாடிப் படியில் ஏறினான்.. அவளும் வேறு வழியின்றி அவனை பின் தொடர்ந்து சென்றவள், செழியன் அவன் அறைக்குள்ளே செல்ல, மதியோ தயங்கியபடி வெளியே நின்றாள். உள்ளே சென்றவன் அவள் இன்னும் வராததை கண்டு வெளியே பார்க்க, அவளோ கைகளை பிசைந்த படி நின்றாள்..
"எதுக்கு இவ இப்போ இப்படி தயங்கி நிற்குறாள், இதுக்கு முன்னாடி எல்லாம் நம்மள கண்டாலே பட்டாசாய் வெடிப்பாள்.. இப்போ என்னடான்னா அதுக்கு உல்ட்டாவால இருக்கா, இது சரி பட்டு வராது.." என்று நினைத்தவன், மதியின் கைகளை பிடித்து வேகமாய் இழுத்தவன் கதவை தாளிட்டான்.
மதி எதிர்பாரா விதமாக நடந்ததால் அவள் அவன் மீது தட்டு தடுமாறி விழ, அவனது பிடியில் அவள் கை வலிக்கவும் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள்..
"யோவ், என்ன நெனச்சிட்டு இப்போ என் கைய பிடிச்சி இழுத்த, அதும் இப்படி சிவந்து போற அளவுக்கா பிடிப்ப.. பாரு, நல்லா பாரு.. ஸ்ஸ்ஸ்.. ஆஆஆஆ.. என்னமா வலிக்குது.." என்று தன் போக்கில் பேசிக் கொண்டிருந்த மதியை பார்க்க செழியனுக்கே சிரிப்பு வந்தது. அவன் அவ்வாறு செய்ததும் அவளை தூண்டி விடத் தானே..
செழியன் தானாக சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்த மதி, "இந்த சிரிப்ப கண்டு எத்தனை வருஷம் ஆச்சு.." என்று தனக்குள் பழைய நினைவுகளை மீட்டினாள்.
மதியின் பக்கத்தில் சென்ற செழியன், "இங்க பாரு, இந்த கல்யாணம் என்ன மாதிரி கல்யாணம்ன்னு உனக்கும் எனக்கும் நல்லா தெரியும்.. ஆனா நீ அதை நினைச்சி பீல் பண்ண வேணாம்.. உனக்கு தேவையான எல்லாத்தையும் ஒரு கணவனா நான் கூட இருந்தது செய்யலனாலும் ஒரு பிரண்ட்டா, வெல்விஷரா கரெக்ட்டா பண்ணுவேன்.. நீ எதையும் போட்டு குழப்பிக்காத." என்று அவள் கன்னத்தை லேசாக தட்டியவன் கால் ஏதோ வர செல்லை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்..
மதிக்கோ, அவன் ஸ்பரிசம் பட்ட இடம் குறுகுறுக்க, அவள் உணர்வுகளை கட்டுப் படுத்தியவள், "மதி, ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கோ.. அவன் உன்ன இங்க மனைவியா கூட்டிட்டு வரல, ஏஸ் அ காண்ட்ராக்டரா தான் கூட்டிட்டு வந்து இருக்கான்.. இங்க உன்னோட காதலுக்கு எந்த வால்யூவுமே இல்ல.." என்று தன்னை தானே கட்டுப் படுத்தியவளுக்கு அவளை மீறி எழும் கண்ணீரை கட்டுப் படுத்த தெரியாமல் சிலையென அமர்ந்திருந்தாள்..
∞∞∞∞∞∞∞∞∞∞
போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்த செழியன், அதில் தெரிந்த நம்பர் புதியதாக இருக்க, "யாரா இருக்கும்??" என்று குழம்பியவன் அட்டன் செய்து, "ஹலோ.." என்றான்..
"ஹலோ, யாருங்க பேசுறது, தி கிரேட் பிசினஸ்மென் மிஸ்டர் இளஞ்செழியன்ங்களா??" என்று நக்கலாக கேட்டது ஒரு குரல்..
"ஹேய் யார்டா நீ??"
"என்ன செழியன் சார் என்ன போய் அவ்வளவு சீக்கிரம் மறக்கலாமா?? நான் தான் கிளோஸ் பிரண்டாச்சே.."
"டேய், எவன்டா நீ?? நீ யார் கிட்ட பேசுறேன்னு தெரியுமா?? என்றான இறுகிய முகத்துடன்..
"என்ன சார் நீங்க, நான் பேசும் போதே தி கிரேட் பிசினஸ்மென் உங்க பேரை சொல்லி தானே பேசவே ஸ்டார்ட் பண்ணினேன்.. அதுக்குள்ள மறந்து போச்சோ, ஓஹோ அப்படியா கதை.. புது பொண்டாட்டி சும்மா கும்முன்னு பக்கத்துல இருக்கும் போது நாங்க பேசுறதெல்லாம் உங்களுக்கு கேட்குமா என்ன?? என்றான் அதே நக்கல் தொனியில்..
இதை கேட்டதும் ருத்ரமூர்த்தியாய் மாறினான் செழியன். " என்னடா நினைச்சி பேசிட்டு இருக்க பொறுக்கி, என்னோட பொண்டாட்டி கூட நான் எப்படி வேணா இருந்துக்குறேன். அத கேட்க நீ யார்டா??"
"உங்க பிரண்டடு செழியன் சார், அவ்வளவு சீக்கிரமா நீங்க மறந்து போற அளவுக்கா நான் பண்ணி இருக்கேன்.. ஸோ சேட்.."
"டேய் இப்போ நீ என்ன சொல்ல வர்ற, அத சொல்லு.."
"சும்மா சொல்ல கூடாது மிஸ்டர் செழியன், இத்தனை வருஷம் காத்திருந்து கல்யாணம் பண்ணாலும் சூப்பர் பிகரா பார்த்து தான் உஷார் பண்ணி இருக்கீங்க.." என்று எதிர்புறம் இருந்தவன் சொன்னதை கேட்ட செழியனுக்கோ ஆத்திரம் வர கைகளை முறுக்கினான்..
"டேய்,. என்ன பத்தி முழுசா தெரியாமல் வந்து பேசிட்டு இருக்க, தைரியமான ஆம்பளையா இருந்தா என் முன்னால வந்து பேசுடா பொறுக்கி." என்க,
"ரொம்ப கோபப் படாதீங்க சார், அப்பறம் பர்ஸ்ட் நைட் முன்னாடி பிபி எகிறிர போகுது.. கூடிய சீக்கிரம் உங்களை வந்து மீட் பண்றேன் மிஸ்டர் இளஞ்செழியன்.." என்று போனை வைக்க,
"வாடா, வா.. அந்த நாளுக்காக தான் நானும் காத்துட்டு இருக்கேன்." என்று ஆத்திரம் குறையாமல் போனை வைத்தவனுக்கு கோபம் தலைக்கேறியது..
"யாரு இவன்?? இத்தனை நாளா இல்லாதவன், இன்னைக்கு ஏன் என்னோட வழியில புதுசா குறுக்கிடுறான்.." என சிந்தித்தவனுக்கு தலைவலி வர அங்கிருந்த சோபாவில் தொப்பேன்று விழுந்தான்..
தொடரும்...