Member
- Messages
- 30
- Reaction score
- 40
- Points
- 18
Episode : 16
Writer : Hafa
செழியன் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூற, கங்காவும் சக்தியும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்..
"சகோ நீ இப்போ என்ன சொன்ன??" என்றாள் சக்தி நம்பாமல்..
"நிஜமா தான் சொல்றேன் சக்தி.. நான் ஒருத்திய ரொம்ப நாளா காதலிச்சிட்டு இருக்கேன்.. எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது அவள் கூட தான்.." என்றவனை, "என்னமா உருட்டுறான்.." என்று காரித் துப்பியது மனசாட்சி..
கங்காவுக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை, "செழியா நிஜமாவா சொல்லுற?? நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டியா??" என்று மகனை கட்டிக் கொண்டார்..
"ஆமாம்மா, எனக்கு அந்த பொண்ண புடிச்சிருக்கு, அவளோட சம்மதத்துக்காகத் தான் இத்தனை நாளா வெயிட் பண்ண வேண்டியாதா போச்சு.. சாரிமா.." என்றான்..
"என்னடா சாரி எல்லாம் கேட்டுட்டு இருக்க, நீ அப்போவே இந்த விஷயத்தை பத்தி சொல்லியிருக்க, நானே போய் பேசி சம்மதம் வாங்கி இருப்பேன்." என்கவும்.,
"என்னது நீங்க சம்மதம் வாங்கி இருப்பிங்களா?? எனக்கே இந்த ஐடியா இன்னைக்கு தானேம்மா தோணிச்சி.." என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவன், "சொல்ல கூடாதுன்னு இல்லம்மா, அந்த பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கணும்ல அதுக்கு தான் கொஞ்சம் டைம் எடுக்க வேண்டியதா போச்சு." என்று நம்ப முடியாத பிட்டுக்களை போட்டுக் கொண்டிருந்தான் செழியன்..
சக்தியோ அவன் சொல்வதை நம்பாதது போல பார்க்க, "இப்போ இவ எதுக்கு நம்மள குறுகுறுன்னு பார்க்குறா??" என்று மனதுக்குள் நினைத்தவன், "சக்தி, என்னடா அப்படி பார்க்குற.??" என்றான்..
"அது ஒன்னும் இல்ல சகோ, அந்த தர்ஷனாக்கு பிறகு நீ எந்த பொண்ணுகளையுமே நெருங்க விடல.. பட் இப்போ என்னடான்னா ஒரு பொண்ண புடிச்சிருக்குன்னு சொல்ற, காதலிக்கிறேன்னு சொல்ற!! எதுவும் நம்புற மாதிரி இல்லையே??" என்றாள் சக்தி சரியான கணிப்பில்.
தர்ஷனாவின் பெயரை கேட்டதும், செழியனின் முகத்தில் மாற்றம் வந்தாலும் அதை நொடிப் பொழுதில் மாற்றிக் கொண்டவன், "அது தான் சக்தி காதலோட மாஜிக். எப்போ எப்படி நம்மள சேன்ஜ் பண்ணும்னு யாருக்கும் தெரியாது.."
"என்ன சகோ பிலோஸபி எல்லாம் பேசுற." என்று சக்தி கேட்க,
"ஏய் சக்தி நீ சும்மா இரு, அது தான் செழியனே புடிச்சிருக்குன்னு சொல்றானே.. நாளைக்கே நாம பொண்ண பார்க்க போறோம்.. இல்ல இல்ல என்னோட மருமகளை பார்க்கப் போறோம்.. என்ன செழியா நான் சொல்லுறது??"
செழியன் எதிர்பார்க்கவில்லை கங்கா அவசரமாக திருமண நடவடிக்கைகளை ஆரம்பிப்பார் என்று.. "அவளுக்கும் கொஞ்சம் டைம் கொடுக்கணுமே.." என்று யோசித்தவன்..
"நாளைக்கே வேணாம்மா, நான் சொன்னேன்ல எனக்கு தெரிஞ்சவங்க ஹாஸ்பிடல்ல இருக்காங்கன்னு., அது அவளோட அப்பா தான்மா.. அவரு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வரட்டும்.. அப்போ போய்க்கலாம்." என்றவனை நக்கலாக பார்த்த சக்தி.,
"அம்மா, இங்க பொண்ணுங்கன்னாலே பிடிக்காதுன்னு சொல்லி ஒருத்தன் சுத்திட்டு இருந்தானே, அவனை நீ பார்த்த??" என்றவளை, "அடிங்கு.. உனக்கு ரொம்ப தான் வாய் கூடிப் போச்சு." என்று கூறியவன்.,
"அம்மா நைட் புல்லா சரியான தூக்கம் இல்ல, ஸோ நான் பிரெஷ் ஆகிட்டு வர்றேன். எனக்கு சூடா டிபன் ரெடி பண்ணி வைங்க." என்று கூறி தப்பினேன் பிழைத்தேன் என்று அறைக்குள் சென்று கதவை தாளிட்டவன்,
"ஸப்பா, ஒரு கொஞ்ச நேரம் இவங்கள சமாளிக்கிறதே பெரிய விஷயமா இருக்கே.. இன்னும் ஒன் இயர்க்கு நீ இத தானே செழியா பண்ணியாகணும்.." என்று தன்னை தானே நொந்து கொண்டபடி குளிக்கச் சென்றான்..
∞∞∞∞∞∞∞∞∞∞
மதியின் நடவடிக்கைகள் எல்லாம் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருந்தது. எப்போதுமே சுறுசுறுப்பாக சுற்றி திரிபவள், மனதளவிலும் உடலளவிலும் மிகவும் சோர்ந்து போயிருந்தாள். இதனை ஹாஸ்பிடலில் இருந்தபடியே ரவியும் சீதாவும் கவனித்து வந்தனர்.
மதியின் இந்த நிலையை காண இயலாத சீதா, "மதி!!" என்க, திட்டுகிட்டபடியே, "என்னம்மா கூப்பிட்டீங்களா??" என்றாள்.
ரவி, "மதிமா, என்னடா ஆச்சு உனக்கு ஏன் ஒரு மாதிரி இருக்குற??"
"ஆஹ், அப்பா.. அதெல்லாம் எதுவும் இல்லப்பா.. நான் நல்லா தான் இருக்கேன்.."
"இல்லையே மதி, அப்படி ஏதும் தெரியலையே!! எப்பவுமே நீ தான் எங்கள கலகலப்பா வச்சி இருப்ப, ஆனா இன்னைக்கு ரொம்ப வித்தியாசமா இருக்குற மாதிரி இருக்கே?? என்னங்க நான் சொல்றது கரெக்ட் தானே??"
"சொல்லு மதிமா, ஏதாவது பிரச்சனையா??" என்ற ரவி எழுந்து உட்கார முயற்சிக்க, பதறிய மதி ஓடி வந்து தந்தையை தாங்கிக் கொண்டாள்.
"அப்பா நீங்க ஏன் இப்போ ஸ்ட்ரைன் பண்ணிக்கிறிங்க.. பேசாம படுத்து இருங்க.." என்றவள் கைகளை பிடித்துக் கொண்ட ரவி.,
"அப்பா உங்க ரெண்டு பேரையும் ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்ல.." என்க, அவர் வாயில் கையை வைத்த மதி, "அப்பா அதெல்லாம் எதுவும் இல்ல, நீங்க ஸ்ட்ரோங்கா இருந்தால் தான் நானும் அம்மாவும் ஹாப்பியா இருக்கலாம்.."
"ஆமா மதி, சரியா சொன்ன.. நீங்க சீக்கிரம் குணமாகிடுவீங்க, பாருங்க. மதி, உன் கிட்ட கேட்கணும்னு நினைச்சேன், அந்த தம்பிக்கு சொல்லிட்டியா அப்பா கண் முழிட்டாருன்னு.." என்கவும் மீண்டும் அவன் நினைவுகள் அவளை ஆட்கொண்டது.
"யாரை பத்தி சீதா சொல்ற??"
"அது தாங்க யாரோ ஒரு தம்பி தான் வந்து உங்க ஆபரேஷனுக்கு பணம் எல்லாம் கட்டி கூட இருந்து பார்த்துகிட்டாரு." என்று சொல்லவும், ரவி மதியிடம், "யாரு மதிமா அது??" என்க மதி அமைதியாக இருந்தாள்.
"மதி, மதி.. உன் கிட்ட தான்டா கேட்குறேன், யாரு இவ்வளவு பெரிய உதவி பண்ணியிருக்காங்க??"
"ஹா.. அப்பா.. அது.. நான் ஒர்க் பண்ணுற ஆபீஸ் எம்டி தான்ப்பா.. அவரு தான் எல்லாம் பார்த்துகிட்டாரு." என்றதோடு நிறுத்திக் கொண்டாள்.
"ரொம்ப நல்ல பையனுங்க, எனக்கு கூட ஆறுதலா பேசினான்.. ரொம்ப நல்லா வளர்த்து இருக்காங்க.." என்று சீதா கூறவும் அதை ஆமோதிக்கும் விதமாக,
"ஆமா சீதா, மதிமா, நீ ஒருநாளைக்கு அந்த தம்பிய நம்ம வீட்டுக்கு வர சொல்லுமா.. அவருக்கு மனசார நன்றி சொல்லணும்." என்று ரவியும் சீதாவும் மாறி மாறி செழியனை பற்றிப் பேசிக்கொண்டிருக்க, மதிக்கோ அது சங்கடத்தை கொடுத்தது.
ஏதோ ஒரு முடிவு எடுத்த மதி, "அம்மா, நான் வீட்டுக்கு கொஞ்சம் போயிட்டு வந்துடுறேன்.. அப்பாவுக்கான கொஞ்ச திங்ஸ் எடுக்க வேண்டி இருக்கு, நான் அதெல்லாம் எடுத்துட்டு வந்துடுறேன். நீங்க அப்பா கூட இருங்க. அப்பா நீங்களும் பார்த்து இருந்துகோங்க.." என்றவள் தான் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்தாள்.
வீட்டிற்கு வந்ததும் நேராக தன் அறைக்கு சென்று முடங்கி கொண்ட மதி, "ஏன்?? எதற்கு??" என்று தெரியாமல் கண்கள் கண்ணீரை சுரக்க அப்படியே தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள். தலையணையை கட்டிக் கொண்டிருந்தவளின் கைகளில் ஏதோ நெருட, அதை எடுத்துப் பார்க்கவும் கண்களில் பட்டது அவளது நாட்குறிப்பு..
அதை எடுத்து தன் மனதை எழுதலாம் என நினைத்தவளின் பார்வையில் ஒரு குறிப்பிட்ட பக்கம் தென்பட கண்ணீர் மேலும் பெருக்கெடுத்தது.. அன்று தான் அவள் அவனை சந்தித்த முதல் நாள்..
மறக்க முயற்சிக்கு அந்நாளின் நினைவுகள் அவள் கண் முன் நிழலடியது..
மதி அந்த கல்லூரிக்கு இரண்டாம் வருடத்தில் சேர்ந்த முதல் நாள்..
அன்றைய நாளுக்கான வகுப்புகள் மதிய வேளையோடு முடிந்து விட, தன் தோழிகளுடன் சேர்ந்து காலேஜ் கேன்டீனுக்கு வந்திருந்தாள் மதி. இரண்டு டேபிளை ஒன்றாக இணைத்து போட்டு நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர அவர்களின் ஆரவாரத்தால் அந்த இடமே கலை கட்டியது..
"ஹேய் இன்னைக்கு சீக்கிரமா சாப்பிட்டு வெளியில எங்கயாச்சும் போகலாம்.. அப்போ தான் இந்த பிரேக் டைம் புல்பில் ஆனா மாதிரி இருக்கும்." என்று தோழிகளில் ஒருத்தி சொல்ல, மற்றவர்களும் அதை ஏற்றுக் கொண்டவர்களாய், "ஓகே அப்போ எல்லாரும் அவங்களுக்கு பிடிச்சதை ஆர்டர் பண்ணுங்க சீக்கிரமா சாப்பிட்டு கிளம்பலாம்.. என்று அவரவருக்கு தேவையானதை ஆர்டர் செய்துவிட்டு காத்துக் கொண்டிருந்த நேரத்தில் வாயிலை பார்த்த மதியின் கண்கள், அவனை பார்த்ததும் பளிச்சென்று மிளரத் தொடங்கியது..
பால் நிற புல் கை ஷர்ட்டும், அதை ஸ்டைலாக முழங்கை வரை மடித்து விட்டு அதற்கு ஏற்றால் போல் நீல நிற ஜீன்ஸும் அணிந்து ஆறடியில் ஆணாழகனாய் உள்ளே வந்தவனை இமை கொட்டாது ரசித்துக் கொண்டிருந்தாள் மதி..
தனக்கு வந்த உணவை வாயில் திணித்துக் கொண்டே அவனின் ஒவ்வொரு அசைவையும் ஏதோ அதிசயம் போல பார்த்துக் கொண்டிருந்தவளின் மனதுக்குள் சத்தம் இல்லாமல் நுழைந்து கொண்டிருந்தான் அவன்.. அவன் செல்லும் வரை தானும் தாமதித்து உணவருந்தியவள், வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாய் தன் நாட்குறிப்பை எடுத்தவள்....
கண்டதும் காதலா???
என்ன இது முட்டாள்தனம் என முனங்கினேன்...
ஆனால்...
உன்னை கண்ட பின் தான்...
நானும் முட்டாளாகும் முயற்சியில் இறங்கினேன்...
..என்று எழுதி வைத்தாள்..
அதை பார்க்கும் போது வழிந்தோடிய கண்ணீர் துளிகள் கன்னத்தில் தடம் பதிக்க அதை துடைக்கும் நினைவற்றவளாய் தன் மனதில் உள்ள குமுறல்களை எழுதத் தொடங்கினாள் மதி..
∞∞∞∞∞∞∞∞∞∞
ரவி, ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்து இன்றுடன் ஒரு வாரமாகி இருந்தது.. மதியும் ஆரம்பத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆபீஸ் சென்றவள் இப்போது தொடர்ச்சியாக செல்ல ஆரம்பித்து இருந்தாள்.. என்ன தான் மதி, ஆபீஸ்க்கு சென்றாலும் தன்னால் இயன்ற அளவுக்கு செழியனுடான சந்திப்புக்களை தவிர்த்து வந்தாள். செழியனும் அவ்வாறே மதியை பார்ப்பதை தவிர்த்து, இருவரும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தனர்..
வீட்டு வாசலில் நிழலாட நிமிர்ந்து பார்த்தார் ஹாலில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த ரவி. அங்கு நின்றிருந்தவரை அடையாளம் தெரியாததால், "சீதா!! சீதா!! எங்கமா இருக்க, இங்க கொஞ்சம் வா.." என்று அழைக்கவும் வந்த சீதாவுக்கும் வந்திருப்பவர் யார் என்று அறியவில்லை..
"உள்ளே வரலாமா??" என்றார் கங்கா.
சீதா, "வாங்க, வாங்க.. நீங்க....." என்று இழுக்கவும்.,
"என்ன பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்காது, ஆனா உங்க எல்லாரையும் பத்தி என்னோட பையன் நிறைய சொல்லி இருக்கான்." என்க ரவியும் சீதாவும் ஒரு முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
ரவி, "நீங்க யாரை பத்தி சொல்லுறீங்கன்னு புரியலையே??" என்க,
"நான் சுத்தி வளைத்து பேசாமல் நேரா விஷயத்துக்கு வந்துடுறேன்.. என்னோட ஹஸ்பண்ட் பிஸ்னஸ் பண்ணிட்டு இருந்தாரு, எங்களோட போதாத காலம் ஒரு அச்சிடேன்ட்ல அவரு எங்கள விட்டு போய்ட்டாரு.. எங்களுக்கு மூத்தவன் பையன் ரெண்டாவதா ஒரு பொண்ணு.. உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் செழியன பத்தி, அவனோட ஆபீஸ்ல தான் உங்க பொண்ணு வேலை பார்க்குறாள்." என்று கூறவும் ரவியினதும் சீதாவினதும் கண்கள் வியப்பில் விரிந்தது..
"நீங்க செழியன் தம்பியோடா அம்மாவா!! ரொம்ப நல்லா பிள்ளை வளர்த்து இருக்கீங்கம்மா.. யாருன்னு தெரியாத எங்களுக்கே ஓடி வந்து உதவி சேய்யுற தங்கமான பையன்.." என்று சீதா செழியனை புகழ்ந்து தள்ளவும், ஒரு சிறு புன்னகையை உதிர்த்தார்.
ரவி, "சீதா, பேசிட்டு இருந்தது போதும் அவங்களுக்கு காபி எடுத்துட்டு வாமா.." என்கவும், "ஐயோ மறந்தே போச்சுங்க, நீங்க பேசிட்டு இருங்க. நான் போய் காபி எடுத்துட்டு வர்றேன்.." என்று போகவும், "இல்லங்க அதெல்லாம் வேண்டாம், ஒரு நிமிஷம்.. நான் வந்த விஷயத்தை பேசிடுறேன்." என்றார் கங்கா..
சீதாவும் ரவியும் அவரை கேள்வியாய் பார்க்க, "என்னோட பையன் செழியனுக்கு உங்க பொண்ணு மதிய கல்யாணம் பண்ணி கொடுக்குறீங்களா??" என்கவும் மற்ற இருவரும் அதிர்ந்து போயினர்..
"என்னங்க நான் தப்பா ஏதும் கேட்டுட்டேனா??"
ரவி, "அதெல்லாம் இல்லைங்க, நாங்க எந்த முடிவா இருந்தாலும் எங்க பொண்ண கேட்டு தான் முடிவு பண்ணுவோம், நீங்க சடன்னா இப்படி கேட்கவும் எங்களுக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியலைங்க.." என்றவர், "ஒரு நிமிஷம்.." என்று கூறிக்கொண்டு செல்லை எடுத்து வெளியே வந்து மதிக்கு அழைத்தார்..
"அப்பா, சொல்லுங்கப்பா.. இந்த நேரத்துல போன் பண்ணி இருக்கீங்க??"
"மதி, நீ பெர்மிஷன் போட்டு கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமாமா??"
"ஏன்பா உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?? ஹாஸ்பிடல் போகலாமா??" என்று பதற,
"மதி, அப்பாவுக்கு எதுவும் இல்லடா, இங்க நம்ம செழியன் தம்பியோட அம்மா வந்து இருக்காங்கடா, ஏதோ கல்யாணம் அது இதுன்னு பேசுறாங்க, நாங்க என்னடா சொல்லட்டும்?? உனக்கு இதுல சம்மதமா??" என்றார்..
மதிக்கோ பக்கென்று இருந்தது.. "என்னடா இது?? அதுக்குள்ள இவன் வீட்டுல சொல்லி கல்யாணப் பேச்ச ஸ்டார்ட் பண்ணிட்டானா?? பிராடு பயல்.." என்று மனதுக்குள் செழியனை திட்டித் தீர்த்த மதி, "கொடுத்த வாக்கு முக்கியம் மதி.." என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள்.,
"அப்பா, உங்களுக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம்ப்பா.."
"இப்படி சொன்னா நான் என்னமா முடிவு பண்ணுறது, உனக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லுடா.."
"அப்பா.." என்று இழுத்தவள், "எனக்கு சம்மதம்ப்பா.. நீங்க என்ன முடிவு பண்ணணுமோ பண்ணிக்கோங்க.. எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்குப்பா நான் அப்பறம் பேசுறேன்.." என்று கூறி, போனை மேசை மீது போட்டவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.. ஆனால் மனம் பாரமாகிப் போனது. அந்த நிலையை என்னவென்று அவளால் வரையறுக்க முடியவில்லை.. நடப்பவை எல்லாம் நன்மைக்கே என எண்ணியவள் தன் வேலைகள் மீது கவனம் செலுத்தினாள்..
மதியுடன் பேசிவிட்டு உள்ளே வந்த ரவி, சீதாவை பார்த்து கண்களாலேயே தன் முடிவை கூறியவர், "எங்களுக்கு இந்த கல்யாணத்துல பரிபூரண சம்மதம்மா.." என்று கங்காவிடம் கூற, அவருக்கோ மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் கன்னத்தை தொட்டது..
"அண்ணா, ரொம்ப சந்தோஷமாயிருக்கு.." என்ற கங்கா சீதாவிடம், "அண்ணி இப்போ நீங்க தாராளமா காபி போட்டு தாங்க.." என்ற கங்காவை பார்க்க மற்ற இருவருக்குமே பூரித்துப் போனது..
"அண்ணா நீங்க எதுக்குமே இனி கவலை படாதீங்க, நாங்க எல்லாரும் இனி ஒரே குடும்பம்.. நான் முன்னாடியே சொல்லியிருந்தேனே செழியனுக்கு தங்கச்சி ஒருத்தி இருக்காள்னு, அவளுக்கு மாப்பிளை ரெடியா இருக்கான். ஆனா என்ன அண்ணன் கல்யாணத்தை பார்த்துட்டு தான் தங்கச்சி கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒரே அடம்.. அதனால நல்ல நாள் பார்த்து ரெண்டு கல்யாணத்தையும் ஒரேடியா பண்ணிடலாம் அண்ணே.. நீங்க என்ன சொல்லுறீங்க.."
அவரது பேச்சில் கணவன், மனைவி இருவருமே மனம் நெகிழ்ந்து போயினர்.
"எங்களுக்கு சம்மதம் தான்மா, நாளைக்கே ஐயர் கூப்பிட்டு நல்ல நாள் பார்த்துடுவோம்.." என்று பெற்றவர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்ய ஆயத்தமானர்கள்..
நம்ம டாம் அண்ட் ஜெர்ரியோட கல்யாணம் வரப் போகுது.. எல்லாரும் சீக்கிரம் அதுக்கு தயாராகுங்க...
தொடரும்...