• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 14

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 14

Writer : Hafa


ஆபீஸில் இருந்து பதறியபடி வெளியேறிய மதி, தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வேகமாக போக.. அவள் பின்னாலேயே தன் காரை எடுத்துக் கொண்டு சென்றான் செழியன்..

சில நிமிட பயணத்திற்கு பின் ஹாஸ்பிடலில் வண்டியை பார்க் செய்த மதி, எதை பற்றியும் சிந்திக்காது உள்ளே ஓடி, அங்கு அழுதபடி நின்ற தன் அன்னையை அணைத்துக் கொண்டாள்..

"அம்மா.. அம்மா.. அப்பாக்கு என்னாச்சுமா.." என்றாள் அழுது கொண்டே.

"மதிமா, எனக்கு ரொம்ப பயமா இருக்குடா.. நல்லா தான்.. இருந்தாரு. ஆனா திடீர்னு ரொம்ப.. ரொம்ப படபடப்பா இருக்குன்னு சொல்லி.. அப்படியே நெஞ்ச பிடிச்சிட்டு விழுந்துட்டாரு." என்று சீதாவும் அதிகமாய் அழுதார்.

என்ன தான் தன் மனதில் பயம் இருந்தாலும் தாயை தேற்றும் விதமாக, "அம்மா நீங்க ஒன்னும் பயப்படாதீங்க. அப்பாவுக்கு ஒன்னும் இருக்காது." எனக் கூறி உட்கார வைத்தவள், அவரை விட்டு சிறிது தூரம் விலகி வந்தவளுக்கு அணையை உடைத்துக் கொண்டு நீர் பாய்வது போல கண்ணீர் துளிகள் கொட்டியது.

நடப்பதையெல்லாம் மறைவாக நின்று பார்த்துக் கொண்டிருந்த செழியனுக்கு அவனை அறியாமலே அவள் கண்ணீரை துடைக்க கைகள் துடித்தன. இருந்தாலும் அதை கட்டுப் படுத்திக் கொண்டான்..

அந்த நேரம் பார்த்து டாக்டர் பரிசோதித்து விட்டு வெளியே வரவும் மதி அவரிடம் சென்று கேட்கும் முன்பே செழியன் அவரை நெருங்கி, "டாக்டர் இப்போ எப்படி இருக்காரு.." என்க குரல் வந்த திசையை பார்த்தவள் அவனை அங்கே கண்டதும் அதிர்ச்சி அடைந்தாள்.

டாக்டர், "நீங்க??"

"எனக்கு தெரிஞ்சவங்க தான் டாக்டர் சொல்லுங்க.."

"பேஷன்டோட கண்டிஷன் கொஞ்சம் க்ரிட்டிகல் தான் மிஸ்டர்...."

"செழியன்.."

"எஸ் மிஸ்டர் செழியன், ஹார்ட்ல செவன்ட்டி பர்ஸன்ட்டேஜூக்கு மேல பிளாக் இருக்கு. அத இமீடியட்டா ரிமூவ் பண்ணியாகணும்." என்று டாக்டர் கூற சீதா இன்னும் அதிகமாக அழத் தொடங்கினார்.

மதியோ செய்வது அறியாது கலங்கி நிற்க, "ஆன்ட்டி ப்ளீஸ் அழாதீங்க, அங்கிள சரி பண்ணிடலாம்." என்று சீதாவிடம் கூறியவன், டாக்டரிடம் திரும்பி, "டாக்டர் நீங்க டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணுங்க. நான் பார்மாலிட்டீஸ் எல்லாம் பார்த்துக்கறேன்." என்கவும்.,

"ஓகே மிஸ்டர். செழியன் நீங்க பணத்தை கவுண்டர்ல பேய் பண்ணுங்க. நாங்க டிரீட்மென்ட்ட இப்போவே ஸ்டார்ட் பண்றோம்." என்று டாக்டர் கூறிச் செல்லவும்.,

சீதாவின் அருகில் வந்தவன், "நீங்க எதுக்கும் கவலை படாதீங்க ஆன்ட்டி அங்கிள் பத்திரமா திரும்பி வருவாரு." என்று ஆறுதல் வார்த்தை கூறியவன், மறந்தும் கூடாது மதியின் பக்கம் திரும்பாது, கவுண்டரை நோக்கி சென்றான்.

மதிக்கு நடப்பவை எதுவுமே புரியவில்லை. அசையாமல் நின்ற மதியை பார்த்த சீதா, "மதிமா.. தம்பி யாரு உனக்கு தெரிஞ்சவரா??" என்றதில் நிஜ உலகிற்கு வந்தவள், "அம்மா ஒரு நிமிஷம்."என்று செழியனின் பின்னால் சென்றாள்.

அவன் பில் கட்ட தயாராகும் போது, தன் பக்கம் யாரோ நிழலாடுவதை கண்டவன் நிமிர்ந்து பார்க்க அங்கு மதி நின்று கொண்டிருந்தாள். அவளை அசட்டை செய்யாது அவன் வேலையை பார்க்க, "சார் ஒன் மினிட், உங்க கூட கொஞ்சம் பேசனும்." என்கவும் அவளிடம் ஒன்றும் பேசாது சற்று ஒதுக்குப் புறமாய் போய் நின்றான்.

"மதி, என்ன சார் பண்ணுறீங்க நீங்க?? என்னோட அப்பாவுக்கு டிரீட்மென்ட் பார்க்க நீங்க யாரு??"

"ஹேய், உன்னோட அப்பான்னு இல்ல, இந்த இடத்துல யாரு இருந்தாலும் நான் இப்படி தான் பண்ணி இருப்பேன்." என்று அவள் ஆபீஸில் கூறியதை போல் சொல்லவும் அவளுக்கு நெஞ்சில் ஏதோ முள் தைத்தது போல தோன்றியது.

"வேணாம் சார், என்னோட அப்பாவுக்கு எப்படி டிரீட்மென்ட் பண்ணனும்னு எனக்கு தெரியும்.. நீங்க உங்க வேலை எதுவோ அத மட்டும் பாருங்க!! வீணா அடுத்தவங்க வாழ்க்கையில மூக்கை நுழை.." என்றவளை அறைய கைகளை ஓங்க, அது அந்தரத்தில் நின்றது.

"இங்க பாரு, நான் என்ன பண்ணனும் பண்ணா கூடாதுன்னு சொல்லுறதுக்கு உனக்கு ரைட்ஸ் இல்ல. மைண்ட் இட்." என்று கூறியவன் கவுண்டருக்கு சென்று பில்லை கட்டிவிட்டு சீதாவின் அருகில் சென்று, "ஆன்ட்டி, அங்கிளுக்கு எதுவும் ஆகாது.. இப்போ டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க." என்றவன் தன் விசிட்டிங் கார்டை அவரிடம் கொடுத்து, "நான் வெளியில தான் ஆன்ட்டி நிற்பேன். எதுவா இருந்தாலும் எனக்கு போன் பண்ணுங்க." என்று கூறிச் சென்றான்.

மதிக்கு என்ன செய்வது என்று கூட தெரியவில்லை.. பிறந்ததில் இருந்து மார்பில் போட்டு வளர்த்தவர், இன்று ஹாஸ்பிடலில் படுத்திருக்கும் போது மனதளவில் உடைந்து தான் போய் இருந்தாள்..

அவளுக்கு புரிந்தது செழியன் செய்த உதவி மிகவும் பெரியதென்று, ஆனால் அவள் மனம் அதை ஏற்க மறுத்தது. அவன் அவ்வாறு செய்யும் போது தடுக்கும் திராணி இல்லாததால் இதை பற்றி அவனிடம் பிறகு பேசிக் கொள்ளலாம் என அமைதி காத்தாள்.

∞∞∞∞∞∞∞∞∞∞

"ஹலோ, அம்மு நீ எங்க இருக்க??"

"நான் வீட்ல தான் இருக்கேன். ஏன் சிவா??"

"இல்லடா, செழியன் மார்னிங்கே ஆபீஸ்ல இருந்து வெளிய போனான். இப்போ ஆபீஸ் க்லோஸ் பண்ணுற டைமும் வந்துட்டுது, அவனை இன்னும் காணுமே."

"என்ன சிவா சொல்றிங்க, சகோ வீட்டுக்கும் வரலையே. நீங்க போன் பண்ணி பார்த்தீங்களா??"

"ஆமாடா நானும் நிறைய வாட்டி ட்ரை பண்ணி பார்த்தேன்.. நோட் ரீச்சப்ல்ன்னு வருதுன்னு. ஆபீஸ்ல இருக்கும் போது ஆன்ட்டி பேசினதையே நினைச்சி பீல் பண்ணிட்டு இருந்தான், அது தான் வீட்டுக்கு வந்து இருப்பான்னு பார்த்தேன். அங்கையும் வரலைனா எங்க போய் இருப்பான்."

"ஐயோ எனக்கு ரொம்ப பயமா இருக்கு சிவா.."என்று போனிலேயே சக்தி அழத் தொடங்கவும்.,

"ஹேய் அம்மு, நீ எதுக்கு இப்போ அழுற.. செழியன் அவ்வளவு வீக் ஆனவன் இல்ல. நீ எதுக்கும் பீல் பண்ணாத, நான் பாத்துக்குறேன்."

"ஓகே சிவா, எதுவா இருந்தாலும் எனக்கு போன் பண்ணுங்க."

"ஓகேடா, அம்மு இன்னோரு விஷயம், நீ இது பத்தி ஆன்ட்டி கிட்ட சொல்லிட்டு இருந்துடாத. அப்பறம் அவங்க பீல் பண்ணுவாங்க."

"சரிங்க, நீங்க என்னனு பார்த்து எனக்கு சொல்லுங்க. நானும் சகோக்கு ட்ரை பண்ணறேன்." என்று காலை கட் செய்தவள் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

கிட்சேனில் வேலையை முடித்து விட்டு வந்த கங்கா, ஹாலில் அமைதியாக உட்கார்ந்து இருந்த சக்தியை பார்த்து., "சக்தி என்னடா ஏதோ யோசனைல இருக்க??"

"ஆஹ்.. அம்மா.. அதெல்லாம் ஒன்னும் இல்லமா சும்மா தான்." என்க சக்தியை நம்பாமல் பார்க்க, அவளோ தலையை குனிந்து கொண்டாள்.

"சக்தி அம்மா கேட்குறேன்ல, என்ன ஏதாவது பிரச்சனையா??"

"ஐயோ அம்மா அதெல்லாம் ஒன்னும் இல்ல, சிவாக்கு கால் பண்ணினேன், பட் அவன் ரெஸ்பான்ஸ் பண்ணயில்லை.. அத பத்தி தான் திங்க் பண்ணிட்டு இருந்தேன்." என்று மென்று விழுங்கியபடி கூறினாள் சக்தி.

"என்னடா இதுக்கு போய் பீல் பண்ணிட்டு இருப்பியா?? ஆபீஸ்ல வேலையில போன் பார்த்திருக்க வாய்ப்பு இல்லையேடா. ஒர்க் எல்லாம் முடிச்சிட்டு வந்து சிவாவே உனக்கு கால் பண்ணுவாரு. இப்போ வா வந்து சாப்பிடு."

"இல்லமா எனக்கு இப்போ பசிக்கல, நான் அப்பறமா சாப்பிட்டுகுறேன்."

"அந்த பேச்சுக்கு எல்லாம் இடமே இல்ல, இன்னைக்கு உனக்கு பிடிச்ச சப்பாத்தி பண்ணி இருக்கேன். நீ வா வந்து சாப்பிடு." என்று சக்தியை அழைத்து சென்று டைனிங் டேபிளில் உட்கார வைத்து கங்காவே அவர் கைகளால் ஊட்டி விட்டார்.

"என்னமா, இன்னைக்கு உன்னோட நடவடிக்கை எல்லாம் ரொம்ப வித்தியாமா இருக்கே. என்ன விஷயம்??" என்று சக்தி கேட்க அதற்கு மெலிதான புன்னகை ஒன்றை மட்டும் உதிர்த்தார் கங்கா.

"என்னம்மா நான் கேட்டுட்டு இருக்கேன், நீ சிரிக்கிற?? என்னனு சொல்லுமா??"

"அது ஒன்னும் இல்ல சக்தி, செழியன் நல்ல முடிவு சொல்லுவான்ற நம்பிக்கைல இருக்கேன். அவ்வளவு தான்.." என்கவும் சக்திக்கு இதயம் பலமாக துடித்தது.

"அய்யய்யோ, அம்மா வேற சகோ நல்லதா சொல்லுவான்னு நினைச்சிட்டு இருக்காங்க ஆனா அவனை தான் காணுமே.." என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.

"என்ன சக்தி, எதுவுமே பேசாமல் இருக்க??"

"ஆஹ்.. அம்மா.. அது வந்து.. நீங்க சகோவோட விஷயத்துல அவசரப்படுறீங்களோன்னு தோணுது."

சக்தியை அமைதியாக பார்த்தவர், "என்ன சக்தி ரெண்டு வருஷமா நான் பொறுமையா இருந்தது போதாதா?? இன்னும் எத்தனை வருஷத்துக்கு பொறுமையா இருக்க சொல்லுற என்ன??"

"அம்மா நான் அப்படி சொல்ல வரலமா, நேத்து நீங்க சகோ கூட பேசினதுல ஹர்ட் ஆகி இருப்பானோன்னு தோணுது."

"இங்க பாருமா, நான் உங்களை பெத்தவ, அவன் தினம் தினம் கஷ்ட படுறத என்னால பார்க்க முடியாது. என் மகனை பத்தி எனக்கு நல்லா தெரியும். அவன் எந்த விஷயத்துலயும் தப்பான முடிவு எடுக்க மாட்டான்." என்று சில நொடிகள் தாமதித்தவர், "இன்னோர் விஷயம் சக்தி, செழியனை காரணமா வச்சி தான் நீயும் சிவாவும் கல்யாணத்தை தள்ளி போட்டுட்டு வர்றிங்க. நான் எடுத்து இருக்குற இந்த முடிவால என்னோட மூணு பசங்க வாழ்க்கையும் நல்லா அமையும்னு நம்பிக்கை இருக்கு. நீ எத பத்தியும் யோசிக்காத." என்றவர் சக்தியின் தலையை ஆறுதலாக தடவி விட்டார்.

∞∞∞∞∞∞∞∞∞∞

"டேய், பிக்கப் மச்சான் பிக்கப்.." என்று காதில் போனை வைத்து புலம்பிக் கொண்டிருந்தான் சிவா. திடீரென்று அழைப்பு ஏற்கப் பட.,

"டேய் செழியா!! எங்கடா போய் இருந்த இவ்வளவு நேரம்.. எத்தனை வாட்டி ஒரு மனுஷன் போன் பண்ணுறது, எங்க போறேன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போக தெரியாதா?? ஆபீஸ்ல இருந்து அப்படியே கிளம்பிட்ட, என்னனு தெரியாம எவ்வளவு டென்ஷன்.. சக்திக்கு போன் பண்ணினா அங்கையும் வரலைன்றாள், எங்க போய் இருப்பன்னு மண்டைய பிச்சிட்டு இருக்கேன்." என்று விடாமல் பேசியவன்., அந்தப் பக்கம் ஒரு பதிலும் இல்லாதிருக்க, "டேய் இங்க ஒருத்தன் கத்திட்டு இருக்கான். நீ லைன்ல இருக்கியா?? செழியா!! டேய்ய்ய் செழியா!!" என்று கத்திக் கொண்டிருந்தான் சிவா.

"மச்சான் நீயே சொல்லிட்ட நீ கத்திட்டு இருக்கேன்னு அப்பறம் எதுக்கு நான் உன்ன டிஸ்டர்ப் பண்ணனும்."

"என்னடா நக்கலா?? உன்ன காணும்னு எவ்வளவு பதறி போய் இருக்கோம். நீ என்னடான்னா கூலா பேசிட்டு இருக்க??"

"ஹேய் நீங்க பதறி போறதுக்கு நான் என்ன சின்ன குழந்தையா?? இங்க தெரிஞ்சவங்களுக்கு உடம்பு சரியில்லைடா. அவங்க கூட தான் ஹாஸ்பிடல்ல இருக்கேன்."

"என்னது ஹாஸ்பிடல்லையா?? யாருக்குடா என்னாச்சு??" என்று பதற.,

"ஹேய் அது தான் சொல்றேன்ல தெரிஞ்சவங்கன்னு, நான் நாளைக்கு வந்து எல்லாம் டீடெயிலா சொல்றேன். என்னால நைட் வீட்டுக்கு போக முடியுமோ தெரியல, ஸோ நீ சக்திக்கு கால் பண்ணி இன்போர்ம் பண்ணிடு ஓகே." என்ற செழியன் காலை கட் செய்தான்.

அந்தப் பக்கம் சிவாவோ, " இவன் என்ன சொல்லுறானோ அத தான் நாங்க கேட்கணும், திருப்பி நாங்க என்ன பேசுறோம்னு கேட்க மாட்டான்." என்று தலையில் அடித்துக் கொண்டான்.

செழியன் காலை கட் செய்து விட்டு திரும்ப, அவன் முன்னால் நின்றிருந்தாள் மதி. அருகில் அவளை கண்டு திட்டுகிட்டவன், "ஹேய் என்ன இவ்ளோ கிளோஸப்ல வந்து நிற்குற, அறிவில்லை." என்க, அவளும் அவனுக்கு சளைத்தவள் இல்லை என்று.,

"ஹலோ மிஸ்டர் நாங்க ஒன்னும் வேலை வெட்டி இல்லாம உங்க முன்னாடி வந்து நிற்கல.. டாக்டர் இப்போ தான் ஆபரேஷன் தியேட்டர் உள்ள இருந்து வெளிய வந்தாரு, அப்பாக்கு நல்ல படியா ஆபரேஷன் முடிஞ்சிதாம். அத சொல்லலாம்னு வந்தால் ரொம்ப தான் குதிக்கிறீங்க."

"ஹோ.. தேங்க் கோட்.. இப்போ அங்கிள் எப்படி இருக்காரு?? ஓகே தானே??"

"தெரியல, டாக்டர் இன்னும் ஓன் ஓர் டூ அவர்ஸ்ல நார்மல் வார்டுக்கு சேன்ஜ் பண்ணதும் பார்க்க சொன்னாரு."

"ஓகே.." என்று ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டவன், போனை நோண்ட, அவனை பார்த்த படியே நின்றாள் மதி.

அவளை ஏறிட்டு பார்த்த செழியன், "என்ன?? என்னையே பார்த்துட்டு இருக்க??"

"உங்க கூட கொஞ்சம் பேசனும்."

"என்கிட்ட என்ன பேச இருக்கு?? சரி சொல்லு என்ன விஷயம்??" என்க, கைகளை பிசைந்த படி நின்றாள் அவள்.

"இப்போ நீ சொல்ல போறியா இல்லையா??" என்று செழியன் கடினமாய் கேட்க..

"அது.. வந்து.. ரொம்ப தேங்க்ஸ், சரியான நேரத்துல வந்து ஹெல்ப் பண்ணினத்துக்கு." என்கவும் அவளை ஏற இறங்கப் பார்த்தான்.

அவள் அவனை கேள்வியாய் பார்க்க, "மேடம்க்கு தேங்க்ஸ் சொல்லுறதுக்கு எல்லாம் தெரியுமா??" என்றவனை முறைத்தாள் மதி.

"ஹேய்!! சில்.. நான் இந்த தேங்க்ஸ எதிர்பார்த்து ஒன்னும் பண்ணல. இந்த இடத்துல யாரா இருந்தாலும் நான் இத தான் பண்ணி இருப்பேன். அது இல்லாம நீ என்னோட ஆபீஸ் ஸ்டாப் வேற ஆயிட்ட ஸோ இது என்னோட கடமை." என்று கூறியவனை என்ன சொல்றவதென்று மதிக்கு ஒன்றும் புரியவில்லை.

அவன் தன்னை ஒதுக்கி பேசும் போது மனதில் ஏதோ வலியை உணர்ந்தாலும் அவன் செய்த உதவி மேலுயர்த்தி வைத்திருந்தது. இருந்தாலும் தன் தன்மானத்தை கை விடக்கூடாது என்று.,

"சார் நீங்க என்ன தான் சரியான டைம்ல ஹெல்ப் பண்ணியிருந்தாலும் உங்க பணத்தை நான் எப்படியாச்சும் திருப்பி குடுத்துடுவேன். நீங்க வேணா என்னோட சாலரில இருந்து ஒவ்வொரு மந்த்தும் மனி கட் பண்ணிக்கோங்க." என்று தன் சுயகெளரவதிற்காக பேசினாள் மதி.

"ஹேய் உனக்கு நான் என்ன சொல்லுறேன்னு புரிய மாட்டேங்குதா?? நான் எதையும் எதிர்பார்த்து இத பண்ணல. ஓகே.. இந்த சிட்டுவேஷன்ல யாரா இருந்தாலும் நான் பண்ணி இருப்பேன்"

"இப்படி சொல்லுறது உங்க பெருந்தன்மையா இருக்கலாம். ஆனா என்னோட செல்ப் ரெஸ்பெக்ட்டுன்னு ஒன்னு இருக்கு. ஸோ உங்க பணத்தை நான் எப்படியாவது திருப்பி கொடுத்துடுவேன்."

"நீ கொடுத்தாலும் நான் வாங்கிக்கணுமே, நான் வாங்கிக்க மாட்டேன். என்ன பண்ணுவ??" என்று அவனும் விடாமல் கேட்க, மதியும் சோர்ந்து தான் போனாள். காலையில் இருந்து சொட்டு தண்ணீர் கூட வாயில் படாது தந்தைக்காக காத்திருப்பவளாயிற்றே..

"ஏன் சார் இப்படி சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறிங்க, சொல்லுங்க நான் உங்க கடனை தர்றதுக்கு என்ன பண்ணனும்??"

"உனக்கு என்ன நான் சொல்லுறது புரிய மாட்டேங்குதா?? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா??"

"எனக்கு ஒன்னும் புரியாமல் இல்ல, நான் யார் கிட்டயும் கடனாளியா இருக்க விரும்பல.. ப்ளீஸ் நான் என்ன பண்ணனும்." என்று விடாமல் அவனை நச்சரிக்க, சில நிமிடங்கள், மனதுக்குள் ஏதோ யோசித்தவன், அதை தயங்கியபடி அவளிடம் கூறவும் அதிர்ந்து போய் கண்களில் நீர் வடிய செழியனை பார்த்தாள் மதி..


செழியன் அப்படி என்ன கேட்டு இருப்பான்?? கமெண்ட்ல சொல்லுங்க..!!



தொடரும்...
 
Top