• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 11

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 11

Writer : Hafa


"மே ஐ கம் இன் சார்.." என கேட்டுக் கொண்டு செழியனது கேபினுக்குள் நுழைந்த மதியை பார்த்து அதிர்ச்சி அடைந்தான் சிவா..

"ஐயோ கடவுளே, இது அந்த பொண்ணுல!! இவ எப்படி நம்ம ஆபீஸ்ல?? கடவுளே இன்னைக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்க விடாமல் நீ தான் காப்பாத்தணும்." என்று மனதுக்குள் புலம்பியபடி செழியனை பார்க்க அவனோ மதியிற்கு முதுகுப் புறம் தெரியும் வகையில் நின்று கொண்டிருந்தான். மதியும் அங்கு சிவாவை எதிர்பார்க்கவில்லை..

"இவரு.. இவரு.. அந்த இடியட்டோட பிரண்ட்ல?? இவரு இங்க பண்ணுறாரு??" என சிந்தித்தவளுக்கு சந்திரன் எம்டி தன்னை அழைத்ததாக கூறியது நினைவு வர., "அப்படினா இவரு தான் எம்டியா??" என சிவாவை முதலாளியாக நினைத்து, "குட் மார்னிங் சார், ஐ அம் மதி.." என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

சிவா ஒன்றும் புரியாது நிற்க, "வெல்கம் மிஸ். மதிமொழி.. வெல்கம் டு மை ஆபீஸ்.." என்று தலையை ஒரு கையால் நீவி விட்டபடி ஸ்டைலாக திரும்பினான் செழியன்.

சிவாவை எம்டியாக நினைத்த மதி, அங்கு செழியனை காணவும் அதிர்ச்சியில் அப்படியே சிலையென நின்றாள்..

"என்னது இது இவனோட ஆபீஸா??" என்று தனக்குள் நினைத்தவளுக்கு
இது நாள் வரை அவள் கேள்விப் பட்ட எம்டியை பற்றிய அனைத்து நல்ல விஷயங்களும் அவள் கண் முன்னால் வந்து போனது. ஏனெனில் அந்த ஆபீஸே, செழியனின் பெயரை சொன்னாலே புகழ்ச்சி மழையை பொழியும்..

ஆனால், மதி சந்தித்த செழியனின் முகமோ முற்றிலும் மாறு பட்டது.. அவனை கடுகடு, சிடுசிடுவென பார்த்திருந்த மதிக்கு அவனின் இந்த பரிமானம் புதிது. இத்தனை நாட்களில் இருவரும் சந்தித்த தருணங்கள் எல்லாம் அவள் கண் முன் நிழலாடியது. இதில் எந்த முகம் செழியனின் உண்மையான முகம் குழம்பித் தவித்தாள் மதி..

"ஹலோ, மிஸ். மதிமொழி.."என்று அவள் கண் முன் சொடக்கு போட, அப்போது தான் தன்னிலைக்கு வந்தாள் மதி..

"என்ன அப்படியே நிற்குரிங்க. சிட் அவுன்.." என்கவும் "இவன் என்ன நம்மள முன்ன பின்ன தெரியாதவன் மாதிரி பிஹேவ் பண்ணுறான். எல்லாம் திமிரு, உடம்பு முழுக்க திமிரு.. மதி, உனக்கு வந்த சோதனைய பார்த்தியா?? நம்மள பத்தி ஒன்னும் தெரியாதப்போவே தய்யா தக்கான்னு குத்திப்பான். இப்போ இவனோ ஆபீஸ்லயே ஒர்க் பண்ணுற, உன் நிலைமை ரொம்ப மோசம் தான்." என்று தன்னை தானே நொந்தபடி இருக்கையில் அமர்ந்தாள்.

செழியனோ மதியை தெரிந்தவன் போல காட்டிக் கொள்ளவேயில்லை. அவளது பைலையும் டிசைன்ஸயும் பற்றி டிஸ்கஸ் செய்தவன், அவளுக்கு அவளது பணி தொடர்பான சில தெளிவுகளையும் கொடுத்துக் கொண்டிருக்க, மதியின் உள்ளமோ, "ஆபீஸ் ஸ்டாப்ஸ் இவன புகழ்றது தப்பே இல்ல." என்று அவனை மெச்சிக்கொண்டது..

"ஓகே, மதி நான் சொன்னது மாதிரி ஒர்க்க கம்ப்ளீட் பண்ணிட்டு சந்திரன் அங்கிள் கிட்ட சப்மிட் பண்ணிடுங்க. இப்போ நீங்க போகலாம்." என்கவும், "அப்பாடா, தப்பிச்சோம்." என்று மதியும் எழுந்தாள்.

சிவாவுக்கு இங்கு நடப்பது என்னவென்று ஒன்றுமே புரியவில்லை..

மதி கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல முற்பட, "ஒன் மினிட்." என்றான் செழியன் அதிகாரமாய்..

வெளியே செல்ல அடி எடுத்து வைத்தவள் அப்படியே சடனாக பிரேக் போட்டது போல் நின்றாள்..

மதியை பரிதாபமாய் பார்த்த சிவாவோ, "போச்சு.. எல்லாம் போச்சு.. மறுபடியும் இவன் என்ன பேசப் போறானோ??" என்று கவலைப் பட்டான் செழியனின் மனதை அறிந்தவனாய்..

தன் இருக்கையில் இருந்து எழுந்து மதியின் முன்னால் வந்த செழியன், அவள் முகத்துக்கு நேராய் சொடக்கு போட்டு, "அட, பரவாயில்லையே உனக்கு கூட சைலன்ட்டா இருக்க தெரியுமா?? எப்போதுமே வாயத் திறந்தாலே மூட மாட்ட. இன்னைக்கு என்னடான்னா அதுக்கு உல்ட்டாவால இருக்கு.." என்றான் நக்கலாய் சிரித்தபடி..

"என்னடா நம்மள பார்த்து இன்னும் வம்பு இழுக்கலையென்னு நினைச்சேன். இவனுக்கு என் கிட்ட வாங்கிக் கட்டலன்னா தூக்கமே வராது போலயே.." என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவள்..,

"இங்க பாருங்க, மிஸ்டர் செழியன் உங்களோட ஆபீஸ்ல ஒர்க் பண்ணுறேன்னு நீங்க என்ன வேணாலும் பேசலாம் எப்படி வேணாலும் நடந்துக்கலாம்ன்னு தப்பு கணக்கு போடாதீங்க.. அது எப்போதுமே இந்த மதி கிட்ட நடக்காது. நீங்க தர்ற சாலேரிக்கு உங்களோட ஒர்க் சரியா நடக்கும். அத விட்டுட்டு சொடக்கு போடுற வேலையெல்லாம் என் கிட்ட வச்சிக்காதிங்க.."

"ஹா.. ஹா.." என்று வாய் விட்டு சிரித்த செழியன், " நீங்க இங்க எப்படி நிம்மதியா வேலை பார்க்குறேன்னு நானும் பார்க்குறேன்.." என்க, இவ்விருவருக்குள்ளும் மாட்டிய சிவாவின் நிலைமை தான் பரிதாபமாய் இருந்தது.

"எத்தனை நாள் ஆனாலும் இவங்க சண்டையை நிறுத்த மாட்டாங்க." என்று நினைத்தவன்., "டேய் செழியா, நமக்கு நிறைய வேலை இருக்கு.. ப்ரோடக்ஷன் எல்லாம் செக் பண்ணனும்." என்று அவனுக்கு நியாபகப் படுத்தினான்.

அதை கேட்டதுமே, "மிஸ்.மதி இங்க நின்னு வெட்டியா வாய் பேசிட்டு இருக்காமல், கோ அண்ட் டூ யுவர் ஒர்க்.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா அந்த டிசைன்ஸ் என்னோட டேபிள்ள இருக்கணும்." என்று அதிகாரமாய் உத்தரவு பிறப்பித்தவன் சிவாவையும் அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

தன் இடத்துக்கு வந்த மதிக்கு தலை சுற்றியது.. "ச்சேய், இவனோட ஆபீஸ்ன்னு தெரியாம வந்து மாட்டிட்டேனே." என்று தலையில் கை வைத்து அமர்ந்திருக்க..,

"மதிமா என்னடா ஆச்சு, ஒரு மாதிரி இருக்க??" என்றபடி வந்தார் சந்திரன்.

அவரது கேள்வியில் தெளிந்த மதி, "அதெல்லாம் ஒன்னும் இல்லைப்பா, லேசான தலை வலி தான்.." என்றால் சமாளிப்பாய்..

அவளது பதிலை அவர் நம்பவில்லை என்பது அவர் முகத்திலேயே தெரிய, மேற்கொண்டு அவரை பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்டாள். அவரும் அவளை அதற்கு மேல் தொந்தரவு செய்யாது, "பார்த்து இருந்துக்கோடா, ஏதாவது வேணும்னா என்ன கூப்பிடுமா."என்று கூறிவிட்டு சென்றார் சந்திரன்.

∞∞∞∞∞∞∞∞∞∞

"சக்தி.. சக்தி.." என்று ஹாலில் நின்று சக்தியை அழைத்தார் கங்கா.

"இதோ இருக்கேன்மா, என்னமா, எதுக்கு கூப்பிட்டிங்க??"

"சக்தி, நீ செழியனுக்கு கால் பண்ணி அவனை வீட்டுக்கு கூப்பிடு.."

"எதுக்குமா, சகோ ஆபீஸ் ஒர்க்ல இருப்பனே.. அதுவும் இந்த நேரத்துல??"

"நான் செழியன் கூட பேசியே ஆகணும் சக்தி, நீ என்ன பண்ணுறியோ ஏது பண்ணுறியோ தெரியாது, செழியன் இன்னும் ஒன் அவர்ல வீட்டுக்கு வரணும்." என்று காரறாக கூறி விட்டு உள்ளே சென்று விட.,

"ஆமா எதுக்கு இந்த அம்மா, இப்போ இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா பேசிட்டு போறாங்க.. இன்னைக்கு ஏதோ சம்பவம் இருக்குன்னு மட்டும் கன்பார்மா தெரியுது சக்தி."என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள், செழியனுக்கு அழைப்பை ஏற்படுத்த அது துண்டிக்கப் பட்டது.

"என்ன இது சகோக்கு கால் போக மாட்டேங்குதே, என்ன பண்ணலாம்??" என சிந்தித்தவள் சரி நம்ம ஆளு சகோ கூட தானே இருப்பாரு, அவருக்கே கால் பண்ணி பார்க்கலாம்." என்று சிவாவுக்கு அழைப்பை ஏற்படுத்தினாள்.

"ஹலோ, சொல்லுங்க மேடம்.. என்ன இந்த நேரத்துல கால் பண்ணி இருக்கீங்க??"

"சிவா, நீங்க எங்க இருக்கீங்க??"

"நானும் செழியனும் மெடிரியல்ஸ் செக் பண்ணலாம்னு பேக்டரிக்கு வந்து இருக்கோம். ஏன்டா?? ஏதாவது ப்ரோப்லமா??"

"ப்ரோப்லம் எதுவுமே இல்ல சிவா, அம்மா தான் சகோவ இப்போவே மீட் பண்ணி ஆகணும்ன்னு சொல்லிட்டு இருக்காங்க."

"ஆண்ட்டியா?? அவங்க ஓகே தானே?? இல்லனா உடம்புக்கு ஏதாவது பண்ணுதாமா??"

"அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா, அவங்க ஓகே தான்.. பட் சகோவ தான் உடனே மீட் பண்ணனும்னு சொல்லுறாங்க. நான் சகோக்கு கால் பண்ணினேன், அவனுக்கு கால் போகல. அதனால தான் உங்களுக்கு டயல் பண்ணேன்."

"அவன் க்ளைன்ட் ஒருத்தரோட பேசிட்டு இருக்கான் அம்மு, போன் பார்த்திருக்க மாட்டான்."

"ஓகே சிவா, நீங்க தான் சகோ கிட்ட பேசி எப்படியாச்சும் வீட்டுக்கு கூட்டி வரணும்."

"ஓகேடா, நான் ஏதாவது பேசி, கூட்டி வர்றதுக்கு ட்ரை பண்றேன்.. இப்போ கொஞ்சம் ஒர்க் இருக்குடா அத பினிஷ் பண்ணிட்டு நான் செழியன் கூட பேசுறேன் ஓகேயா??"

"ஓகேப்பா, நீங்க ஒர்க் பாருங்க.. சீ யூ.." என்று காலை கட் செய்து விட்டு, "கடவுளே நீ தான் பிரச்சனை எதுவும் நடக்காம பாதுகாக்கணும்." என்று கடவுளிடம் கோரிக்கை ஒன்றை வைத்தாள்.



தொடரும்...
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Chezlian paravailla mathi ya theiryatha mari katikittu last ya epadi pesuran ayoo Siva tha pavom
Enna va irukum amma enn kupiduraga
 
Top