• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 10

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 10

Writer : Hafa



"அம்மா..... சீக்கிரம் வாம்மா.. ஆபீஸுக்கு லேட் ஆயிடிச்சு." என்று டைனிங் டேபிளில் தட்டை அடித்து கத்திக் கொண்டிருந்தாள் மதி.

"அடியேய் லேட்டா எந்திரிச்சது நீ, இப்போ என்னடான்னா நான் ஏதோ லேட் ஆனா மாதிரி கத்திட்டு இருக்க."

"நான் தான் லேட்டா எந்திரிச்சேன்னு தெரியுதுல, அப்படினா நீயாச்சும் சீக்கிரமா டிபன ரெடி பண்ணலாம் தானே.!!"

"அடிங்கு, ஏழு கழுதை வயசாச்சு, டைமுக்கு எந்திரிக்க தெரியாது, வாய் கிழிய பேச்சை பாரு."

"அம்மா.. போதும் போதும்.. நீ திட்டுற திட்டுல தோசை அடைச்சிக்கிட போகுது. என்னென்ன திட்டணும்னு லிஸ்ட் போட்டு வச்சிக்கோ, நான் ஆபீஸ் போய்ட்டு வந்து பேலன்ஸ கேட்டுக்குறேன்." என்ற மதி கையை கழுவிட்டு பையை தூக்கவும்.,

"ஏய் மதி, இந்த இந்த லஞ்ச் பாக்ஸ பேக்குள்ள வை, இப்போ நீ சரியாவே சாப்பிடல, இத வச்சி பிரேக் டைம்ல சாப்பிட்டுக்கோ." என்று பாக்ஸை மதியிடம் கொடுத்தார் சீதா.

"சீதா, என்ன தான் இருந்தாலும் உனக்கும் தாய்ப் பாசம் இருக்குன்னு காட்டியே.!!" என்று சிவாஜி பாணியில் சொன்ன மதி, "அம்மா, அப்பா நான் போயிட்டு வர்றேன். நீங்க ரெண்டு பேரும் பார்த்து இருந்துக்கோங்க."

ரவி, "மதிமா.. வண்டி வண்டி.." என்று அவர் சொல்வதையும் கேட்காது அவசரத்தில் வெளியே வந்து பார்க்க அங்கு வண்டியை காணவில்லை.

"ஐயோ எங்க போய்டிச்சி, என்னோட புல்லட்டு."என சிந்தித்தவளுக்கு ஓரிரு நொடிகள் கழித்தே மூளைக்கு உரைத்தது நேற்று மழையின் காரணமாக வண்டியை சாலையோரம் ஓரம் கட்டியது.

ரவி, "மதி, இப்போ என்னடா பண்ண போற??"

"அது தான்ப்பா நானும் யோசிக்கிறேன், பேசாம பஸ் இல்லனா ஆட்டோ புடிச்சி போய்டலாமா??ஆபீஸுக்கு வேற டைம் ஆச்சு.." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, நடுத்தர வயதுடைய ஒருவன் வந்து மதியின் வண்டியை தள்ளிக் கொண்டு வந்து பார்க் செய்தான்.

ரவியும் மதியும் அவனை கேள்வியாய் பார்க்க.,

"எங்க சார் தான் வண்டிய ரெடி பண்ணி இங்க கொடுக்க சொன்னாரு. எல்லாம் கரெக்ட்டா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மேடம்."என்று கூறி விட்டு வந்த வழியே திரும்பினான் அவன்.

"மதி நீ யார்ட்டயாவது வண்டிய ரெடி பண்ண சொல்லி இருந்தியாடா??"

"இல்லப்பா, எனக்கே இப்போ தான் வண்டி இல்லைங்குற நியாபகமே வந்துது."

"அப்படினா யாரு அனுப்பியிருப்பா?? அந்த பையன் வேற எங்க சார் தான் அனுப்பினாருன்னு சொல்லிட்டு போறானே.!!"

"அது தான்ப்பா எனக்கு புரிய மாட்டேங்குது. யாரு அனுப்பியிருப்பாங்க??"

"இத பத்தி அப்பறம் பார்த்துக்கலாம்டா, நீ தான் ஆபீசுக்கு லேட் ஆச்சுன்னு சொல்லிட்டு இருந்தியே மதி, நீ கிளம்புடா. என்று ரவி கூறவும் ஸ்கூட்டியை கிளப்பிக் கொண்டு ஆபீஸ் நோக்கி பறந்தாள் மதி .

∞∞∞∞∞∞∞∞∞∞

காலை நேரத்தில் ட்ராபிக் அதிகமாக இருக்க, ஒரு வழியாக அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு ஆபீஸுக்கு வந்து சேர்ந்தாள் மதி.

ஆபீஸ் பார்க்கிங்கில் தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு., "யாரு வண்டிய ரிப்பேர் பண்ணி வீட்டுக்கு அனுப்பி விட்டு இருப்பாங்க.." யோசனையுடன் நடந்து சென்றாள்.

திடிரென்று யார் மீதோ மோதவும் அப்போது கூட அவள் தன்னிலைக்கு வராமல், "சாரி.." என்று சொல்லி மட்டும் உதிர்த்துவிட்டு தன் போக்கில் நடந்தாள். ஆனால் அவளிடம் இடி வாங்கிய செழியனோ கடுப்புடன் நின்றிருந்தான்.

"இது அந்த இடியட் தானே.!! இவ எப்படி நம்ம ஆபீஸ்ல." என்று செழியன் யோசித்துக் கொண்டிருக்க... முன்னால் சென்று கொண்டிருந்த மதி, மனதுக்குள் ஏதோ மணி அடிக்க சட்டென்று திரும்பிப் பார்த்தாள். ஆனால் செழியனோ அதற்குள் மறுபுறம் திரும்பியிருந்தான். ச்ச.. பிரம்மையா இருக்கும். அவன் எப்படி இங்க வரப் போறான்." என்று மனதுக்குள் நினைத்த மதி தோள்களைக் குலுக்கியவாறு ஆபீஸுக்குள் நுழைந்தாள்.

செழியனுக்கோ மதி அவன் மீது மோதியது பெரும் அவஸ்தையைக் கொடுத்தது. இத்தனை நாட்கள் பெண்களையே தன் பக்கம் நெருங்க விடாதவன், இந்த சில நாட்களில் அவளுடனான நெருக்கமான தருணங்களில் அவன் தனக்குத் தானே போட்ட கட்டுப்பாடுகள் எல்லாம் சிதறி தூள் தூள் ஆவதை போல உணர்ந்தான். அவன் மனம் அமைதியில்லாமல் தவித்தது.

"ச்சை பொண்ணுங்கன்னாலே இப்படி தான், எப்போடா ஒரு பையன் கிடைப்பான் அவனை தன்னோட வலையில் விழ வைக்கலாம்னே திரியுவாங்க போல.." என்று பல்லைக் கடித்து தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன்.,

"சந்திரன் அங்கிள் சொன்ன நியூ ஜாயினி இவ தான் போல.. இதுக்கு மேல இந்த இடியட்ட நம்ம ஆபீஸ்ல வைக்க கூடாது.." என்று முடிவெடுத்து அடுத்து செய்ய வேண்டிய செயலில் இறங்கினான்.

"ஹாய் மச்சான் குட் மார்னிங்." என்று சிவா செழியனது கேபினுக்குள் நுழைய அங்கு அவனோ அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தான்.

"இவனுக்கு இதே வேலையா போச்சு, எப்போ பார்த்தாலும் டெலிவரி வார்டுல பொண்டாட்டிய சேர்த்த புருஷன் மாதிரி அங்கையும் இங்கையும் நடந்துட்டு இருக்குறது. சரி என்னனு தான் கேட்போமே." என்று மனதினுள் நினைத்துக் கொண்டு., "டேய் செழியா, என்னடா எதுக்கு இப்போ டென்ஷனா இருக்குற?? எனி ப்ரோப்லம்??"

சிவாவின் குரலில் நிஜத்துக்கு வந்தவன், "சிவா நீ கால் பண்ணி சந்திரன் அங்கிள இங்க வர சொல்லேன்." என்க, சிவாவும் செழியனின் கட்டளைப்படி சந்திரனுக்கு அழைத்து அவரை அங்கு வரச் சொன்னான்.

ஓரிரு நிமிடங்கள் கழித்து கேபினுக்கு வந்த சந்திரன், "என்ன தம்பி ஏதாவது வேலையா கூப்பிட்டு இருந்திங்க??" என்கவும்,

"அங்கிள் நீங்க அன்னைக்கு சொல்லிட்டு இருந்திங்களே நியூ ஜாயினி, அவங்களோட பர்சனல் அண்ட் அவங்களோட குவாலிஃபிகேஷன் டீடெயில்ஸ் எல்லாம் எனக்கும் வேணும்."

சந்திரனுக்கு செழியன் திடீரென இவ்வாறு கேட்கவும் ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் அவன் கேட்டால் செய்ய வேண்டியது அவர் கடமையாயிற்றே. அதனால் அவரும் அவன் கேட்டதெல்லாம் எடுத்து அவன் முன் வைத்தார்.

சிவாவோ, "இங்க என்னடா நடக்குது." என்ற சிந்தனையுடன் நடப்பவைகளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளது பைலை புரட்டியவன், அப்போது தான் அவள் பெயரை பார்த்தான், அவனை அறியாமல் அவன் உதடுகள், "மதிமொழி.. மதிமொழி.." என்று இரு தடவைகள் உச்சரித்துக் கொண்டது.

சிறிது நேரம் பைலை புரட்டிய செழியன், சந்திரனிடம், "அங்கிள் இன்னும் பிப்டீன் மினிட்ஸ்ல அந்த பொண்ணோட டிசைன்ஸ் எல்லாம் எடுத்துட்டு என்ன வந்து மீட் பண்ண சொல்லுங்க."

"சரிங்க தம்பி, நான் சொல்லிடுறேன்." என்று ஒன்றும் புரியாதவராய் அங்கிருந்து வெளியேறினார் சந்திரன்.

சிவா, "செழியா என்னடா நடக்குது இங்க, எனக்கு ஒன்னுமே புரிய மாட்டேங்குது.!!"

"கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு மச்சான், நீயே பார்ப்ப.." என்று நக்கல் சிரிப்போடு கூறினான் செழியன்.

∞∞∞∞∞∞∞∞∞∞

சந்திரன் வந்து சொன்னதும், என்றும் இல்லாத படபடப்பு மதியை தொற்றிக் கொண்டது. ஏனென்றால் இன்று தான் அவள் முதல் முறையாக எம்டியை பார்க்க போகிறாள். பல தடவைகள் சந்திரன் எம்டியை புகழ்ந்து சொல்லிக் கேட்டிருக்கிறாள் ஆனால் இன்று தான் முதல் முறையாக சந்திக்க போகிறாள் என்ற ஆவலில் பதற்றம் அதிகமானது.

"கடவுளே என்னோட டிசைன்ஸ் எல்லாம் எம்டிக்கு பிடிக்கணும். நீ தான் எனக்கு துணையா இருக்கணும்." என்று கடவுளிடம் ஒரு வேண்டுதலை வைத்தாள்.


மதி, செழியன் தான் தனது எம்டி என அறியும் போது அவளது மனநிலை என்ன?? அந்த சூழ்நிலையை அவள் கையாள போவது எப்படி??


தொடரும்...
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Mathi unnoda hero sir tha scooty repair panni kuduthathu mathi ne mind voice la pesala avanuku keturuchu 😸😸😸
Chezlian ku mani adithu vitathu ini mathi ya enna panna poran Ava evana pathathum epadi react pannuva😬😬😆
 
Top