தவம் 3
உன்னை சரணடைந்தேன்
உன்னுள்ளே நான் பிறந்தேன்…
என்று அலைபேசியின் கானா இசைக்க சேலையின் மடிப்பை சரி செய்து கொண்டிருந்தவள் எடுத்து பார்த்தாள்.
திரையில் தீபாவின் பெயரும் புகைப்படமும் திரையில் மின்னியது.
அழைப்பை ஏற்றவள், “சொல்லுங்க அண்ணி” என்க,
“என்ன சொல்றது கிளம்பிட்டியா? இல்லையா?” என்று தீபா வினவ,
“ஹான் டூ மினிட்ஸ்ல வீட்ல இருந்து கிளம்பிடுவேன்” என்க,
“சீக்கிரம் கிளம்பி வந்து சேரு. கல்யாணத்துக்கு வந்த மாதிரி எல்லோரும் கிளம்புற நேரம் வராத” என்று அதட்டினாள்.
“பிப்டீன் மினிட்ஸ்ல அங்க இருப்பேன் ண்ணி” என்று பதில் மொழிய,
“சரி சரி சீக்கிரம் வரணும்னு வேகமா வராத. பாத்து வா” என்று சிறு அதட்டல் குரலில் கூற,
அன்பை கூட அதட்டலாக தான் கூறுவார் இவர் என்று எண்ணி புன்னகைத்தவள்,
“சரிங்கண்ணி”என்று அழைப்பை துண்டித்து விட்டு கண்ணாடியில் ஒரு முறை தோற்றத்தை சரி பார்த்துவிட்டு வெளியேறியவள் சௌம்யாவுடன் புறப்பட்டாள்.
கூறியது போலவே பதினைந்து நிமிடத்தில் மண்டபத்தை அடைய இரவு நேரத்தில் வண்ண விளக்குகளால் ஜொலித்து கொண்டிருந்தது அவ்விடம்.
வாசலில் யாருடனோ நின்று பேசி கொண்டு இருந்த தீபா ஜானவியை கவனித்துவிட்டாள்.
இளம்பச்சை நிறத்தில் காட்டன் புடவையில் எளிமையாக இருந்தாலும் அழகாய் இருந்தாள்.
‘இவள ஒன்பது வயசு பிள்ளைக்கு அம்மான்னா யாருமே நம்ப மாட்டாங்க’ என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள்.
வாசலில் நின்று வரவேற்று கொண்டிருந்த லாவண்யாவும் ஜீவாவும் இவர்களை பார்த்துவிட்டனர்.
“வாங்க” என்று ஜீவா புன்னகையுடன் கூற,
“ஜானவி” என்று கையை இமை நீண்ட புன்னகையுடன் பிடித்து கொண்டாள் லாவண்யா.
“வரமாட்டிங்களோன்னு நினைச்சேன். நரேன் அண்ணா சொன்னதும் தான் வந்து இருக்கிங்க” என்று கூற,
ஜானவி மெலிதான புன்னகையை பதிலாக அளித்தாள்.
“வாங்க சௌம்யா” என்று அவளையும் புன்னகையுடன் வரவேற்றாள்.
“உள்ளே போய் உட்காருங்க. எல்லாரும் வந்துட்டாங்க. நீங்க தான் லேட்” என்க,
தலையசைத்து இருவரும் அகன்றனர்.
“ஜானு லாவண்யா மேம் செம்மல்ல. அவங்களை பாக்கும் போதெல்லாம் ஆச்சரியமா இருக்கும். வொர்க்கர்ஸ் கூட எவ்ளோ சகஜமா பழகுறாங்க” என்று சிலாகிக்க,
‘ஆமாம்’ என்று தலையசைத்து ஒப்பு கொண்டாள்.
“ஜீவா சாரும் மேமும் சூப்பர் பேர்ல. ஒருத்தருக்காக ஒருத்தர் பிறந்த மாதிரி. எவ்ளோ அழகா இருக்காங்க. அதுவும் அவங்க கண்ணால பேசி புரிஞ்சுக்கிறாங்கல்ல” என்று வினவ,
ஜானவியின் பார்வை ஒரு முறை அவர்கள் மீது படிந்து மீள,
“ஆமா ரொம்ப அழகான ஜோடி. தே ஆர் மீன்ட் பார் ஈச் அதர்” என்றாள்.
இவர்கள் அருகில் வந்த தீபா, “என்ன ரெண்டு பேருக்கும் டீப் டிஸ்கஷன்?” என்க,
“அது ஜீவா சாரும் மேமும் பார்க்க அழகான ஜோடின்னு பேசிட்டு இருந்தோம்” என்று லாவண்யா கூற,
“ஓ…” என்றவள்,
“ஆமா ரொம்ப க்யூட் பேர்” என்று ஆமோதித்தாள்.
பிறகு, “சரி வாங்க உள்ள போகலாம்” என்று அழைத்து செல்ல,
அங்கு ஓரளவு இருக்கைகள் நிரம்பி இருந்தது. திருமணத்திற்கு சொந்தங்கள் அனைவரையும் அழைத்து இருந்தவர்கள் வரவேற்பை தொழிலாளர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தனர்.
லாவண்யா தோழிகள் சிலரை பார்த்து அவர்களிடம் பேசியபடி அமர்ந்திட, ஜானவி அவளிடம் கூறிவிட்டு நரேனை பார்க்க சென்றாள்.
நரேன் மகனை கையில் வைத்தபடி தெரிந்த ஒருவரிடம் பேசி கொண்டு இருந்தான்.
ஜானவியை கண்டதும் எதிரில் இருந்தவரிடம் கூறிவிட்டு வந்து,
“இப்போதான் வர்றீயா ஜானு” என்றபடி அருகில் வர,
“ஆமண்ணா” என்றவள் விதுரனை பெற்று கொண்டவள்,
“செல்லத்துக்கு இந்த ஷெர்வானி அழகா இருக்கே” என்க,
“நல்லா இருக்காத்தை” என்று விதுரனும் புன்னகையுடன் கேட்க,
“ஹ்ம்ம் ஹீரோ மாதிரி இருக்க” என்றாள் சிரிப்புடன்.
“ஹீரோ மாதிரியா?” என்றவன் பிறகு சிந்தித்துவிட்டு,
“அப்போ பீம் மாதிரி இருக்கேனா?” என்றிட,
ஜானவியின் சிரிப்பு இமை நீண்டது.
“பீம் இல்லை. அதைவிட க்யூட்டான ஹீரோ டா நீ” என்று கன்னத்தில் முத்தமிட,
மகனுடன் ஒன்றிவிட்டவளை கண்டவனுக்கு புன்னகை எழுந்தது.
கூடவே தாங்கள் இப்போது செய்ய போகும் காரியத்தால் இவளது புன்னகை இப்படியே இருக்குமா? என்ன எதிர்வினை ஆற்ற போகிறாளோ? என்று மனதிற்குள் சிறிது பதட்டம் உண்டானது.
கணவனது முகத்தை தூரத்தில் இருந்தே கண்டு கொண்டவள் அருகில் சென்று அவனது கையை ஆதரவாக பிடித்தாள்.
தன்னை மனைவி கண்டுகொண்டாள் என்று உணர்ந்து மென்னகையை உதிர்த்தான்.
“சிவா மாமா உங்களை கூப்பிட்றாரு” என்று சற்று தள்ளி அழைத்து சென்றவள்,
“என்ன யோசனை பலமா இருக்கு?” என்று வினவ,
“இல்லை நாம செய்ய போற விஷயத்துக்கு ஜானுவோட ரியாக்ஷன நினைச்சா தான் யோசனையா இருக்கு” என்றான்.
“யோசனையா இருக்குன்னா என்ன அர்த்தம்? பிளானை கேன்சல் பண்ணிடலாமா? உங்க தங்கச்சி கடைசி வரைக்கும் தனியா இருக்கட்டுமா?” என்று முறைக்க,
நரேனிடம் பதில் இல்லை.
“இப்படியே அமைதியா இருந்தா என்ன அர்த்தம் சொல்லுங்க?” என்று அதட்ட,
“அதெப்படி விட முடியும்” என்றான்.
“விட முடியாதுல அப்போ அமைதியா இருங்க. இதுவே ரொம்ப லேட். அவளுக்கு ஸ்பேஸ் கொடுக்கணும்னு பல வருஷத்தை வீணாக்கிட்டிங்க” என்க,
அவள் கூறுவதில் இருந்த உண்மை புரிந்தது.
“சரி என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்” என்றுவிட,
“சரி அவர் வந்துட்டாரான்னு கால் பண்ணி கேளுங்க”என்றாள்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பேசுனேன். ஒன் ஹவர்ல வந்துடுவேன்னு சொன்னான்” என்று நரேன் கூற,
“ஹ்ம்ம் வந்ததும் என்கிட்ட சொல்லுங்க. நான் பாத்து பேசுறேன்” என்றாள் தீபா.
“நீ பாத்து பேசுவீயா?” என்று நரேன் பார்க்க,
“ஆமா. பின்ன உங்களை மாதிரி தங்கச்சிக்கிட்ட கொஞ்சிட்டு இருக்க முடியுமா? அவ கொஞ்சம் முகத்தை மாத்துனா அப்படியே எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணிடுவீங்க. நீங்க அமைதியா நடக்குறதை மட்டும் பாருங்க” என்று கணவனை முறைத்தாள்.
“சரி நல்லது நடந்தா ஓகே. அப்புறம் மத்தவங்களுக்கு எந்த டிஸ்டர்ப்பும் இருக்க வேணாம்” என்று கூற,
“ஹ்ம்ம் நான் அதை பாத்துக்கிறேன். உங்க தங்கச்சி அவர் வர்றதுக்குள்ள கிளம்பிட போறா. போய் புடிச்சு வைங்க” என்று அனுப்பியவளுக்கு ஆயாசமாக இருந்தது.
இவளது முகத்தை கவனித்த லாவண்யா,
“அண்ணி என்னாச்சு ஏன் ரொம்ப டயர்டா தெரியிரிங்க?” என்று அருகில் வர,
“அப்பிடியா தெரியிறேன்” என்றவள்,
“எல்லாம் இந்த ஜானு லைஃப் மேட்டர் தான்” என்று அனைத்தையும் கூற,
“வாவ் ரொம்ப நல்ல விஷயம் அண்ணி. நான் கூட அவங்களை பாக்கும் போதெல்லாம் நினைப்பேன் தனியாவே இருக்காங்களே. இன்னொரு வாழ்க்கை அமைச்சிக்க கூடாதான்னு” என்று தானும் மகிழ,
“எல்லாம் நல்லபடியா நடக்கணும்” என்று தீபா கூற,
“நல்லா நடக்கும்ண்ணி. அவங்க தனியா பேச இங்க பின்னாடி கார்டன் இருக்கே அங்க நான் அரேன்ஜ் பண்ணவா?” என்று வினவ,
“அங்க ப்ளேஸ் நல்லா இருக்கா? யாரும் வருவாங்களா?” என்று சிந்தித்தாள்.
“அதெல்லாம் லைட் செட்டப்ல ப்ரொபோசல் சீனே வைக்கலாம் அவ்ளோ சூப்பரா இருக்கு” என்க,
“அப்போ ஓகே” என்று இருவரும் ஆட்களை வைத்து அங்கே அமர்ந்து பேச ஏற்பாடு செய்தனர்.
அனைத்தையும் குலைக்கும் விதமாக,
“அண்ணி லாவண்யா கிளம்பலாம்னு கூப்பிட்றா” என்று வந்து நின்றாள் ஜானவி.
“என்னது கிளம்புறியா? அதுக்குள்ளயா?” என்று தீபா முறைக்க,
“அவ என்கூட தான் வந்தா. அவ மாமியார் லேட்டா போனா திட்டுவாங்க” என்று தயக்கமாய் கூற,
“நீ ஸ்கூட்டில தான வந்த? அவக்கிட்ட ஸ்கூட்டிய கொடுத்து போக சொல்லு. நாங்க உன்னை ட்ராப் பண்றோம்” என்க,
“ஜீவி” என்றவள் தயங்கி நிற்க,
“கொஞ்ச நேரத்தில கிளம்பிடலாம்” என்று கூற வேறுவழியின்றி தலை அசைத்தவள் தீபா கூறியது போலவே செய்துவிட்டு விதுரனோடு ஒன்றிவிட்டாள்.
நேரம் ஆக ஆக சிலர் கிளம்ப துவங்கி இருந்தனர்.
“நரேன் அவர் எப்போதான் வருவாரு? உன் தங்கச்சி வீட்டுக்கு கிளம்புறேன்னு சொல்லிட்டு இருக்கா” என்று கணவனிடம் தீபா பாய,
“வந்துட்டாரு டி. கார் பார்க் பண்ண போய் இருக்காரு”என்று நரேன் கூற,
“சீக்கிரம் போய் அழைச்சிட்டு வாங்க. நான் கார்டன்ல அவங்க பேச ப்ளேஸ் செட் பண்ணி வச்சிருக்கேன்”என்றாள்.
“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவன் வாசலுக்கு செல்ல,
நரேன் எதிர்ப்பார்த்த நபர் வந்து கொண்டிருந்தான். அவன் சந்தோஷ் முப்பத்திரண்டு வயது ஆண்மகன்.
சந்தோஷ் ஜீவா மற்றும் நரேன் இருவருக்கும் பொதுவான நபர் என்பதால் வாசலருகே நின்று இருந்த ஜீவா,
“வா சந்தோஷ்” என்று வரவேற்று பேச,
அவனிடம் பேசிவிட்டு சந்தோஷ் உள்ளே வர,
“ஏன்டா இவ்ளோ லேட்?” என்று நண்பனை கடிந்து கொண்டான் நரேன்.
“சென்னை ட்ராபிக் பத்தி உனக்கு தெரியாதா? கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்று கூற,
“இன்னும் கொஞ்சம் நேரம் லேட்டா வந்திருந்தாலும் என் தங்கச்சி கிளம்பி இருப்பா” என்று முறைக்க,
“அதான் கிளம்பலையே…” என்று வசீகரமாய் சிரித்தான் சந்தோஷ்.
அவன் சிரிப்பிற்கே நிச்சயம் நிறைய விசிறிகள் உண்டு. பழகுவதற்கும் இனிமையானவன்.
ஜானவி மட்டும் இவனை திருமணம் செய்ய சம்மதித்துவிட்டாள் நிச்சயமாக அவள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
சந்தோஷ் ஜீவியையும் ஜானுவையும் நன்றாக பார்த்து கொள்வான்.
கடவுள் தான் மனம் வைக்க வேண்டும் என்று மனதிற்குள் வேண்டி கொண்டவன்,
“சந்தோஷ் நான் இன்னும் அவக்கிட்ட எதுவும் சொல்லலை” என்று மொழிய,
“என்ன இன்னும் சொல்லலையா?” என்று திகைக்க,
“ஆமா இந்த விஷயம் தெரிஞ்சா சொல்லாம கொள்ளாம கிளம்பி போய்டுவா அதான்” என்றவன்,
“நான் நீங்க ரெண்டு பேரும் பேசிக்க கார்டன்ல ப்ளேஸ் செட் பண்ணி இருக்கேன். தீபாட்ட சொல்லி அவளை அழைச்சிட்டு வர சொல்றேன் நாம அங்க போகலாம்” என்றான்.
“ஹ்ம்ம் ஓகே நானே பேசிக்கிறேன் அவங்ககிட்ட” என்று கூற,
இருவரும் தோட்டத்திற்கு சென்றனர். திருமண தம்பதிகள் அழகாய் புகைப்படம் எடுப்பதற்காக அவ்விடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
“வாவ் நைஸ் ப்ளேஸ். நல்லா சூஸ் பண்ணியிருக்கிங்க டா” என்று சந்தோஷ் பாராட்ட,
நரேன் தங்கையையும் மனைவியையும் எதிர்பார்த்தவாறு பதட்டமாக நின்றிருந்தான்.
“ஜானு”என்று தீபா வர,
“அண்ணி கிளம்பலாமா ஜீவி தனியா இருப்பா” என்று எழுந்தாள்.
“ஹ்ம்ம் போகலாம் அதுக்கு முன்னாடி நீ ஒருத்தரை மீட் பண்ணனும் வா”என்று மகனை கையில் பெற்று கொண்டவள் கைபிடித்து அழைக்க,
“யாருண்ணி?” என்றவாறு எழுந்து கொண்டாள்.
“வா சொல்றேன்” என்றவள்,
“ஜானு நானும் உன் அண்ணனும் எது செஞ்சாலும் உன் நல்லதுக்கு தான் இருக்கும்னு உனக்கு புரியும் தான?” என்று வினவ,
“ஆமாண்ணி. நீங்க எப்பவும் எனக்கு நல்லது தான் நினைப்பீங்க” என்று எதற்கு கேட்கிறாள் என புரியவில்லை என்றாலும் பதில் கூறினாள்.
“இப்பவும் உன் நல்லதுக்கும் எதிர்காலத்தையும் யோசிச்சு ஒரு விஷயம் பண்ணி இருக்கோம். கோபப்படாம யோசிச்சு முடிவெடுக்கணும்” என்றவள் அவர்களை நெருங்கி இருந்தாள்.
‘எதற்காக இந்த பேச்சு?’ என்று புரியாது தீபாவை காண,
நரேன், “ஜானு இது என் ப்ரெண்ட் சந்தோஷ்” என்று அறிமுகம் செய்ய,
அவர்களது எண்ணத்தை அறியாதவள்,
“ஹாய்” என்று மெலிதாய் புன்னகைத்தாள்.
“சந்தோஷ் என்னோட பி.ஜி மேட். காலேஜ்ல பாத்து இருப்ப” என்று கூற,
“அப்படியா? பாத்திருப்பேன். ரொம்ப வருஷம் ஆச்சுல ஞாபகம் இல்லை” என்று மொழிந்தாள்.
“சந்தோஷ் ஐ.டில ஒர்க் பண்றான். நல்ல சேலரி நல்ல பேமிலி பேக் ரவுண்ட்” என்று கூற,
அப்போதும் அவளுக்கு புரியவில்லை. ஏனெனில் இப்படி ஒரு விடயத்தை அவள் கனவிலும் கற்பனை பண்ணியிருக்கவில்லை.
“ஓ…” என்றவளுக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை.
அவளது முக பாவனையை வைத்தே அவளுக்கு எதுவும் புரியவில்லை என்று உணர்ந்த தீபா,
“ஜானு. இங்க பாரு நாங்க சொல்றதை பொறுமையா கேளு. கோபப்பட கூடாது” என்றவள்,
“இவரு நாங்க உனக்கு பாத்திருக்க மாப்பிள்ளை” என்றதும்,
“என்ன?” என்றவளது தலையில் அதிர்ச்சி இடியாய் இறங்கியது.
‘தனக்கு மாப்பிள்ளையா?’ என்று எண்ணியவளுக்கு அதற்கு மேல் எண்ணி கூட பார்க்கவில்லை.
அவளது அதிர்ச்சியை மூவரும் உள்வாங்கினர்.
தீபா, “ஜானு நாங்க உன் எதிர்காலத்தை மனசுல வச்சிக்கிட்டு தான் இந்த முடிவை எடுத்து இருக்கோம். தாம் தூம்னு குதிக்காம இவரை கல்யாணம் பண்ணா உன் லைஃப் ரொம்ப நல்லா இருக்கும். அவர்கிட்ட பேசிட்டு முடிவை சொல்லு” என்க,
“அண்ணி” என்றவள் மறுத்து கூற வர,
“நீ என்னையும் அவரையும் சொந்தமா நினைச்சா எங்க முடிவை மறுக்காம அவர்கிட்ட பேசு. இல்லைன்னா இனிமே உன் விஷயத்துல நாங்க எப்பவுமே இன்வால்வ் ஆக மாட்டோம். நாங்க உனக்கு யாருமே இல்லைன்னு விலகி போய்ட்றோம்” என்று கோபமாய் முடித்திட,
ஜானவியிடம் வார்த்தை இல்லை.
இதையே சாதமாக பயன்படுத்தி கொண்ட தீபா,
“வாங்க நாம போகலாம். அவங்க பேசட்டும்” என்று கணவனை இழுத்து கொண்டு நகர்ந்திட,
சந்தோஷ் ஜானவியை பார்த்து புன்னகைக்க,
இதற்கு முன்பு புன்னகைத்து போல செய்ய முடியவில்லை. உள்ளுக்குள் பெரும் அலையடித்து கொண்டிருந்தது.
அவளது நிலையை உணர்ந்தவன்,
“உட்கார்ந்து பேசலாமா?” என்று சந்தோஷ் வினவ,
“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தவள் அவனிடம் தெளிவாக பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
“எனக்கு புரிஞ்சுக்க முடியிது நீங்க ஷாக்ல இருக்கிங்கன்னு. நான் உங்ககிட்ட முன்னாடியே சொல்லி இருப்பாங்கன்னு எக்ஸ்பெக்ட் பண்ணி இருந்தேன்” என்று சந்தோஷ் கூற,
ஒரு முறை விழி மூடி திறந்தவள்,
“தாங்க்ஸ் பார் அன்டர்ஸ்டாண்டிங்” என்று மெலிதாக புன்னகைத்துவிட்டு,
“நான் கொஞ்சம் பேசணும் பேசலாமா?” என்று அவன் முகம் காண,
“ஓ… தாரளமா அதுக்கு தான வந்து இருக்கோம்” என்று கூற,
இறுக்கத்தை குறைத்து சிறிதளது தளர்ந்து அமர்ந்தவள்,
“சந்தோஷ் உங்க பேர் ரொம்ப நல்லாயிருக்கு. நீங்களும் கூட லுக் வைஸ் ரொம்பவே அழகா இருக்கிங்க. குட் லுக்கிங் நல்ல ஜாப் பேமிலி பேக் ரவுண்ட். ஏன் இந்த ப்ளேஸ் கூட ப்ரபோசல்க்கு சூட்டான ப்ளேஸ் தான். பட் நீங்க சூஸ் பண்ணியிருக்க ஆள் தான் ரொம்ப தப்பு” என்று அவன் முகம் காண,
“வாட் டூ யு மீன்?” என்று சந்தோஷ் கேட்க,
“நீங்க இருக்க பெர்சானலிட்டிக்கு உங்களுக்கு கண்டிப்பா நல்ல பொண்ணு முக்கியமா கல்யாணம் ஆகாத பொண்ணு கிடைப்பாங்க. யாருமே உங்களை வேணாம்னு சொல்ல மாட்டாங்க” என்க,
“அப்போ நீ ஓகே சொல்ல மாட்டேன்னு சொல்றீங்க?” என்று சிறு புன்னகையுடன் கேட்க,
இவளும் மௌனமாய் தலை அசைத்தாள்.
“இந்த குட் பர்சாலிட்டி பெர்சனை ஆனால் வேணாம்னு சொல்றீங்களே?” என்று கேட்க,
அவன் கூறிய தோரணையில் இவளுக்கு புன்னகை ஜனித்தது.
“இதுவரைக்கும் யாராவது லவ் பண்ணி இருக்கிங்களா?” என்று மாறாத புன்னகையுடன் வினவ,
“ம்ஹூம் அதெல்லாம் வந்து இருந்தா இவ்ளோ நாளா ஏன் சிங்கிளா சுத்த போறேன்” என்று கூற,
“காதலிச்சு பாருங்க புரியும். ஒரு உண்மையான காதல் என்னன்னு உணர்ந்தா தான் புரியும்” என்க,
“இந்த வயசுக்கு மேல காதலா?”
“காதல் எந்த வயசுலயும் வரும். அதுக்கு வயசு நிறம் பணம் எதுவும் தெரியாது”
“ஓ… காதலிக்கத்தான் நீங்க விடமாட்றீங்களே. நீங்க ஓகே சொன்னா இப்போவே லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணலாம்” என்றவனை மெதுவாய் முறைத்தவள்,
“சிங்கிளா இருக்கவங்களை காதலிக்க சொன்னேன் என்னை இல்லை” என்றாள்.
“ஏன் நீங்க இப்போ சிங்கிளா தான இருக்கிங்க?”
“யாரு சொன்னா? என் கணவர் எப்பவும் என்னோட தான் இருக்கார் உணர்வா உயிரா. நான் என்ன செஞ்சாலும் அவரோட வாய்ஸ் எனக்கு கேட்டுக்கிட்டே தான் இருக்கும்” என்று அழகாய் புன்னகைக்க,
அந்த புன்னகை நிச்சயமாக சந்தோஷை ஈர்த்தது.
“எவ்ளோ நாள் இப்படி தனியாவே இருக்க போறீங்க. டிபிகல் இந்தியன் வுமன்ஸ் போல ஒரு லைஃப் பெயிலிரை ஆகிடுச்சுனா அடுத்த லைஃபை பத்தி திங்க் பண்ணாம?”
“யாரு சொன்னது என் லைஃப் பெயிலியர் ஆகிடுச்சுனு? அவர் என் கூட இருந்தா தான் சக்ஸஸ்ஸா. நான் இல்லை அவர் ரெண்டு பேருமே இல்லாம போனாலும் எங்க காதல் வாழும். நீங்க சொல்றது கரெக்ட் தான் ஒரு லைஃப் பெயிலியர் ஆகிட்டா நெக்ஸ்ட் மூவ் பண்றதுல தப்பு இல்லை. பட் மை லவ் இஸ் நாட் பெயிலியர்”
“இப்போ இப்படி பேச நல்லாயிருக்கும். ஆனால் வயசான காலத்துல அன்புக்கும் மனசு ஏங்கும் அப்போ பீல் பண்ணி எந்த பயனும் இல்லை”
“நெவர் எந்த காலத்துலயும் பண்ண மாட்டேன். காரணம் என்னோட கணவர் தான். இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் தீராத காதலை என்கிட்ட கொட்டி கொடுத்துட்டு போயிருக்கார். அது இருக்கும் போது நான் வேற யார்கிட்டேயும் அன்பை தேடணும். இந்த ஜென்மத்துக்கும் அவர் ஒருத்தர் போதும் எனக்கு. மே பீ அடுத்த ஜென்மத்தில வேணா பாக்கலாம் பட் அதுக்கும் சான்ஸ் கம்மி” என்று புன்னகைக்க அதில் அவளது நேசம் மிளிர்ந்தது.
“ஓகே ஐ அக்சப்ட் யுவர் ரிஜெக்ஷன்” என்றவனது குரலில் அவளை தவறவிட்ட வருத்தம் நிச்சயமாக தெரிந்தது.
ஜானவியின் முகத்தில் ஒருவித நிம்மதி படர்ந்தது.
“தாங்க்ஸ் பார் அன்டர்ஸ்டாண்டிங் மீ” என்று நிம்மதியாய் புன்னகைக்க,
“உங்க ஹெஸ்பண்ட் ரொம்ப கொடுத்து வச்சவரு. நீங்க பேசுனதை கேட்கும் போது எனக்கே காதலிக்கணும் போல இருக்கு” என்க,
“நான் தான் அவரு என் வாழ்க்கையில வந்ததுக்கு கொடுத்து வச்சிருக்கணும். அவர் மட்டும் வரலைன்னா வாழ்க்கையில உண்மையான காதல் எப்படி இருக்கும்னு உணராமலே போயிருப்பேன்” என்றவள்,
“கண்டிப்பா உங்களுக்கான காதல் உங்களை தேடி வரும். அப்போ நீங்களும் காதலோட உன்னதத்தை உணருவிங்க” என்று கீற்றாய் புன்னகைத்தாள்.
“பார்ப்போம் எனக்கு இந்த ஜென்மத்தில அந்த சான்ஸ் இருக்கான்னு” என்றவன் எழுந்து
கொண்டான்.
ஜானவியும் எழுந்து கொள்ள,
“உங்களது பார்த்ததுல எனக்கு சந்தோஷம்” என்று சந்தோஷ் கைக்கொடுக்க,
“எனக்கும்” என்று கை நீட்டியவள்,
“ஆல் தி பெஸ்ட் பார் யுவர் பியூச்சர்” என்று முடித்திட்டாள்.
சந்தோஷ் அவளது காதல் தந்த புன்னகையுடன் நகர,
இங்கு மரத்திற்கு பின்னால் நின்று இவர்களது உரையாடலை கேட்டவனும் ஜானவியின் காதலை கண்டு வியந்து தான் நின்றான்.