• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தவம் 22

Administrator
Staff member
Messages
548
Reaction score
800
Points
93
தவம் 22:

நெஞ்சை பூப்போல்

கொய்துவிட்டாள்
எனை ஏதோ செய்துவிட்டாள்…


“எனக்கு ப்ரான் பிரியாணி”

“எனக்கு பெப்பர் சிக்கன்”

“எனக்கு பிஷ் பிங்கர்” என்று வரிசையாக ஒவ்வொரும் தனக்கு வேண்டியதை சொல்ல,

எதிரில் இருந்த சிப்பந்தி குறிப்பெடுத்து கொண்டிருந்தார்.

“போதும் சாப்பிட்டு வாங்கிக்கலாம்” என்று ஜானு கூற,

“அதெல்லாம் நாங்க சாப்பிட்ருவோம்” என்று கனி மொழிந்தாள்.

“சாப்பிட முடியலைன்னா வேஸ்ட் ஆகிடும்”

“ஓஹோ… உன் ஆளு காசை நாங்க திண்ணு தீர்த்திடுவோம்னு பயப்பட்றீயா?”

“அப்படிலாம் இல்லை” என்று ஜானவி பதற,

“நீ சொல்றதை பாத்தா அப்படித்தான் இருக்கு” என்று கீர்த்தி முறைத்தாள்.

“அதெல்லாம் இல்லை புட் வேஸ்ட் ஆக வேணாம்னு சொன்னேன்” என்றவள் அவர்களது நமட்டு சிரிப்பை கண்டு,

“பாரு ஜீவா இவங்களை” என்று சிணுங்கினாள்.

இவ்வளவு நேரம் சிரிப்புடன் வேடிக்கை பார்த்திருந்த ஜீவா, “ஹேய் கலாய்க்காம சாப்பிட்ற வேலையை பாருங்க” என்று போலியாக அதட்ட,

“ஆஹான் ஆளுக்கு சப்போர்ட்டா”என்று கீர்த்தி இழுத்தாள்.

“ப்ச் போங்கடி” என்றவள் முகத்தை திருப்பி கொள்ள,

“பார்றா வெட்கத்தை” என்று அனிகா சிரிக்க,

இவள் முகத்தை ஜீவாவின் தோளில் மறைத்தாள்.

“பப்ளிக் பப்ளிக்” என்று கீர்த்தி எச்சரிக்க,

“நாங்க எதுவுமே பண்ணலை” என்று ஜானவி முறைக்க,

“பண்ண கூடாதுனுதான் எச்சரிக்கை பண்றேன்” என்று சிரித்தவள்,

“ண்ணா ஒரு தந்தூரி ஒரு க்ரில்” என்று அடுக்க,

“ஹேய் ஒரு ஊருக்கே சாப்பாடு சொல்றடி” என்று ஜானவி அதிர்ந்து விழிகளை விரிக்க,

“ஏன் நாட்டுக்கே கூட சொல்லுவோம். உன் ஆளு தான் என்ன வேணா சாப்டுக்கோங்கன்னு ட்ரீட் கொடுக்குறாரு” என்றவள் ஜீவாவிடம் திரும்பி,

“அப்படிதான ஜீவா?” என்று வினவினாள்.

“ஹ்ம்ம்…” என்று சிரிப்புடன் ஜீவா தலையசைக்க,

“இன்னைக்கு உன் வாலட் காலி ஜீவா” என்று கண் சிமிட்டிய கீர்த்தி,

“இப்போதைக்கு இது போதும்ணா வேற எதுவும் வேணும்னா சொல்றோம்” என்று சிப்பந்தியை அனுப்பி வைத்தாள்.

கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்த ஜானவி, “என்ன இன்னும் அண்ணனை காணோம்” என்று கேட்க,

“பக்கத்தில வந்துட்டேன்னு சொன்னான் டென் மினிட்ஸ்ல வந்துடுவான்” என்று ஜீவா கூற,

“அண்ணா அண்ணியை பார்த்ததும் தனியா அவுட்டிங் கிளம்பிடுச்சு போல” என்று கனி சிரிக்க,

“வாய்ப்பிருக்கு வாய்ப்பிருக்கு” என்று சிரித்தாள் கீர்த்தி.

அப்போது உள்ளே நுழைந்த நரேன், “என்ன ஒரே சிரிப்பா இருக்கு?” என்றபடி தீபாவுடன் அமர,

“உன்னை பத்தி தான் பேசிட்டு இருந்தோம்ணா” என்றாள் கீர்த்தி.

“என்னை பத்தியா?”

“ஆமா ஆமா. உங்க லவ் மேட்டர் தெரிஞ்சா அண்ணியோட அப்பா துப்பாக்கியால சுடுவாரா இல்லை காரை விட்டு ஏத்துவாறான்னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்” என்று சிரிக்காமல் அனிகா கூற,

“அடிப்பாவிகளா?” என்று நரேன் அதிர,

“சொல்லுங்கண்ணி உங்கப்பா எந்த சாய்ஸ சூஸ் பண்ணுவாரு?” என தீபாவிடம் கேட்க,

“என்னடி என் லைஃப் உங்களுக்கு விளையாட்டா இருக்கா?” என்று போலியாக முறைக்க,

“சும்மா ஃபன்கு” என்று கீர்த்தி சிரிக்க,

“எதுல விளையாட்றதுனு வெவஸ்தை இல்லை. ஹியூமன்ஸாடா நீங்க” என்று நரேன் கேட்க,

அங்கே சிரிப்பொலி பரவியது.

“ஹேய் என்னை முதல்ல நானு இப்போ என் அண்ணனா?” என்று ஜானவி சிரிப்புடன் சண்டைக்கு வர,

“இவ்ளோ நேரம் தூங்கிட்டியா நீ அசிங்கப்படுத்துன பின்னாடி வர” என்று தங்கையை முறைக்க,

“ஹான் அவளுக்கு காதல் மயக்கம்…” என்று இழுத்தாள் அனிகா.

“பாத்தியா பாத்தியா லவ் வந்ததும் அண்ணனை கழட்டி விட்டுட்ட” என்று நரேன் கூற,

“ண்ணா என்ன இப்படிலாம் பேசுற. எனக்கு ஜீவா ஒரு கண்ணுன்னா நீ ஒரு கண்ணு”

“ஓ… அப்போ நாங்களாம் வாய் மூக்கு காதா?” என்று கனி வார மீண்டும் சிரிப்பலை பொங்கியது.

உணவு வந்துவிட, “சரி சரி போதும் பேசுனது சாப்பாடு வந்திடுச்சு வந்த வேலையை பாருங்க” என்றிட, அனைவரும் உண்ண துவங்கினர்.

பேச்சும் சிரிப்புமாக நேரம் அழகாக சென்றது.

அன்று ஜானவியிடம் பேசிய பிறகு ஜீவா நரேனை அழைத்து திட்டியிருந்தான்.

நரேன் எதார்த்தத்தை அவனுக்கு எடுத்து கூற என்ன நடந்தாலும் ஜானவியை தவிற வேறு ஒருத்திக்கு வாழ்வில் இடம் இல்லை என்று ஜீவா உறுதியளித்தான்.

அதன் பிறகே நரேனிற்கு நிம்மதி ஆனது. ஜானு ஜீவா காதல் விடயம் அறிந்த தோழிகள் தங்களுக்கு பிரியாணி வேண்டுமென கேட்டிட ஜீவா தான் உணவகத்துக்கு அழைத்து செல்வதாக கூறினான்.

கூறியது போலவே வார இறுதியில் ஒரு பெரிய உணவகத்திற்கு அழைத்து வந்திருந்தான்.

ஒருவரையொருவர் வாரி கலாய்த்து உண்டு முடித்து வீட்டிற்கு கிளம்ப,

நரேன் தீபாவை விட்டு வர சென்றான்.

குடியிருப்பை அடைந்ததும்,

“தாங்க்ஸ் பார் தி வொன்டர்புல் லஞ்ச் ஜீவா” என்று கீர்த்தி விடைபெற,

“நான்லாம் என் ஆளை காலேஜ் போனா தான் பாக்க முடியும் நீ பக்கத்து வீட்டுலயே வச்சிருக்க என்ஜாய்” என்று சிரிப்புடன் கண்சிமிட்டிவிட்டு அனிகா செல்ல,

“போடி…” என்று லேசான புன்னகையுடன் தோழியின் தோளில் தட்டியவள் சிரிப்புடன் வீட்டிற்கு செல்ல,

அவளது புன்னகையை கவனித்தவன், “என்னவாம் உன் ப்ரெண்ட்க்கு?” என்று வினவிட,

“அவங்களுக்கு வேற வேலை இல்லை ஜீவா. சும்மா கலாய்ச்சிட்டே இருப்பாங்க” என்றவள் கதவை திறக்க,

ஜீவாவும் பின்னோடு நுழைந்தான்.

“தூங்க போகலை?” என ஜானு வினவ

“ஹ்ம்ம் போகலாம்.‌ என்ன அவசரம்” என்று அவளது வீட்டிற்குள் நுழைய,

“இப்பவோ மணி டென் ஆகிடுச்சு ஜீவா” என்றவள் நேரத்தை பார்த்து கூற,

“டென்க்கெல்லாம் தூங்குற ஆளா நீ?”

“நான் இல்லை நீ தூங்க போய்டுவ தான?”

“இன்னைக்கு எனக்கு தூக்கம் வரலை”

“அதெல்லாம் படுத்தா வரும் போய் தூங்கு” என்றவள் பதட்டத்தை மறைத்து கூற,

“ஏன் என்னை துரத்துலயே குறியா இருக்க? என்ன விஷயம்?” என்றவன் புருவம் தூக்க,

“அதெல்லாம் ஒன்னுமில்லையே” என்றவள் உடனடியாக பதில் அளிக்க,

இவனது விழிகள் கூர்மையாகியது.

“என்னவோ இருக்கு”

“நத்திங் எனக்கு தூக்கம் வருது ஜீவா” என்றவள் கொட்டாவி விடுவது போல செய்ய,

இவனுக்கு சடுதியில் புன்னகை அரும்பியது.

“ஹேய் கேடி உனக்கு நடிக்க தெரியலை டி” என்றவன் அடக்கப்பட்ட சிரிப்புடன் கூற,

ஒரு கணம் திகைத்து விழித்தவள் நொடியில் சமாளித்து, “அதெல்லாம் ஒன்னுமில்லை நீ கிளம்பு நான் தூங்கணும்” என்று அவனது தோள்பிடித்து எழுப்பி விட,

“ஹ்ம்ம் போறேன்” என்று எழுந்தவன் அவளது விழியோடு விழிகளை கலக்கவிட,

அரை நிமிடத்திற்கு மேல் அந்த பார்வையின் வீச்சை தாங்க இயலாதவள் முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டாள்.

அதில் அடக்கமாட்டாது சிரித்துவிட்டவன், “ஜானு” என்று அழைத்திட,

“ப்ச் போ ஜீவா” என்றவள் இதழ் கோணி சிணுங்க,

“போன்னா எங்கடி போறது?” என்றவன் மாறாத சிரிப்புடன் கேட்க,

“ஜீவா” என்றவள் அழாத குறையாக அழைக்க,

“என்னடி” என்றவன் அமரிக்கையாய் கேட்டு அவளை இழுத்து அணைக்க,

“விடு ஜீவா. அண்ணன் வந்திட போகுது” என்றவள் பதறி விலக,

“ஓஹோ இதான் விஷயமா? உங்க நொண்ணன் பாத்தா என்ன பண்ணிடுவானாம்” என்று லேசான முறைப்புடன் அவளை இடையோடு சேர்த்து தூக்க,

“ஜீவா…” என்றவள் மெலிதாக அலறி அவனது தோளை பிடித்தாள்.

“ஹ்ம்ம் பாக்கட்டும் உன் அண்ணன்” என்றவன் கன்னத்தோடு கன்னம் உரச,

அதில் கூசி சிலிர்த்தவள், “ஜீவா ப்ளீஸ்…” என்று தாடியின் உராய்வில் சிவந்துவிட்ட முகத்துடன் கூற,

“ம்ஹூம்” என்று தலையசைத்தவன் சிவந்த கன்னத்தில் இதழ் பதிக்க, விழிகளை மூடி கொண்டாள்.

“உன் கன்னம் என்னடி இவ்ளோ சாஃடா இருக்கு” என்றவன் மற்றொரு கன்னத்தில் புதைந்து போக,

இவளுக்கு உடலெங்கும் பூகம்பம் பரவியது.

அப்படியே அவளது கழுத்தில் முகத்தை புதைத்து, “ஹ்ம்ம்…” என்று ஆழ்ந்து அவள் வாசத்தை உள்ளிழுத்தவன்,

“என்னடி வாசம் இது அப்படியே இழுக்குது” என்று மயக்கத்தில் மொழிய,

இவளுக்கு இதயத்தின் ஓரம் மெலிதான நடுக்கம் பரவியது.

“ஜீவா…” என்று ஈனஸ்வரத்தில் முனக,

“ஹ்ம்ம் உன்னோட ஜீவா” என்று கிறங்கியவன் அவளது தொண்டை குழியில் இதழ்பதிக்க,

மின்சாரம் தாக்கிய உணர்வில், “ஜீவா…” என்று மெலிதாய் அலறி அவனது தலையை அணைத்து கொள்ள,

அவளது நிலையை உணர்ந்தவன் மோன நிலையில் இருந்து வெளியே வந்தவன் அவளை இறக்கி இறுக்கி அணைத்து கொண்டான்.

அவனது மார்பில் புதைந்து அவன் தந்த உணர்வுகளை கடக்க முயன்றாள்.

அவளது தோளை தட்டியவன், ‘படிக்கிற பொண்ணுக்கிட்ட என்ன பண்ணிட்டு இருக்கடா’ என்று தன்னைத்தானே நிந்தித்து கொண்டான்.

நிமிடங்கள் கடந்து அவள் இருவரும் சமநிலையை அடைய,
“இதுக்கு மேல நான் இங்க இருந்தா சரியா வராது. நான் ரூம் போறேன்” என்று விலக,

“ஹ்ம்ம்” என்று மெதுவாய் முணங்கியவளது கன்னத்தில் சிவப்பின் மிச்சமிருந்தது.

வாசல் வரை சென்றவன், “ஜானு” என்றழைக்க,

“ஹான்…” என்றவள் திரும்ப,

“என்ன சர்ப்ரைஸ்?” என்று வினவ,

இன்னும் முழுதாக தெளியாதவள் புரியாது விழித்தாள்.

“என் பர்த்டேக்கு என்ன சர்ப்ரைஸ்?” என்று வினவிட

அதில் திகைத்து பிறகு அதிர்ந்தவள், “ஜீவா” என்று பார்க்க,

“சொல்லுடி” என்று இதழ் மடித்த புன்னகையுடன் கேட்க,

மொத்தமாய் தெளிந்தவள், “இவ்ளோ நேரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு தான் என்னை போட்டு படுத்துனியா ஜீவா” என்று வினவி கோபமாக முறைக்க,

“எஸ்” என்றவனது முகத்தில் விஷம புன்னகை.

“ப்ச் போச்சு என் பிளான் மொத்தமும் போச்சு. எப்படி கண்டுபிடிச்ச?” என்றவள் வாடிய முகத்துடன் கேட்க,

“ஆமா நீ நூறு கிலோமீட்டர் தூரம் தள்ளியிருக்க. பக்கத்து ரூம்ல இருந்துட்டு நீ பண்றதெல்லாம் தெரியாம போய்டுமா?” என்று கேட்க,

“தெரிஞ்சாலும் தெரியாத மாதிரி நடிச்சு இருக்கலாம்ல” என்றவள் சிணுங்க,

“இவ்ளோ நேரம் அப்படித்தான நடிச்சிட்டு இருந்தேன்”

“ம்ஹூம் நான் சர்ப்ரைஸ் பண்ற வரைக்கும் நடிச்சு இருக்கணும்” என்றவள்,

“எனக்கு தெரியாது நான் என் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி சர்ப்ரைஸ் பண்ணும்போது சர்ப்ரைஸ் ஆகுற மாதிரி நடிக்கணும் நீ” என்று கூறிவிட,

“ஹேய் அதெப்படி முடியும்?”

“ஹான் இவ்வளோ நேரம் நடிச்சேல அது மாதிரி”

“இவ்ளோ நேரம் நடிச்சதுக்கு ஒரு செம்ம கிஃப்ட் கிடைச்சது. நடிச்சா அதுமாதிரி அகெய்ன் கிடைக்குமா?” என்று விஷமமாய் புன்னகைக்க,

அதில் முகம் சிவந்து போனவள், “ஜீவா நீ ரூம்க்கு போ. நான் சர்ப்ரைஸ் பண்ணும் போது கரெக்டா நடிக்கிற” என்று அவனை வெளியே தள்ளி கதவை தாளிட்டவளது முகமெங்கும் வெட்க புன்னகை.

ஜீவாவும் சிரிப்புடன் அறைக்கு செல்ல சிறிது நேரத்தில் நரேனும் வந்துவிட்டான்.

இருவரும் பேசிவிட்டு உறங்க செல்ல ஜீவா அறைக்குள் நுழைந்ததும் நரேன் ஜானவிக்கு உதவி செய்ய போய்விட்டான்.

ஜானு தானே பார்த்து பார்த்து அவனுக்காக கேக்கை தயார் செய்திருந்தாள்.

நண்பர்கள் உதவியுடன் எல்லாவற்றையும் முடித்தாள்.

“ஜானு கேக் சூப்பர் டி. ஜீவாக்கு கண்டிப்பா பிடிக்கும்” என்று கீர்த்தி கூற,

“ஆமா இதெல்லாம் பாத்து நல்ல சர்ப்ரைஸ் ஆக போறான்” என்று அனிகா கூற,

‘ஆமா ஆகிட்டாலும்’ என்று மனதிற்குள் திட்டியவள் சிரித்து வைத்தாள்.

“லவ் பண்ண பின்னாடி வர்ற பர்ஸ்ட் பர்த்டே ஜீவா மறக்க மாட்டான்” என்று கனி கூற,

பனிரெண்டு மணியாக ஒரு நிமிடம் இருக்கும் சமயம் அனைவரும் ஜீவாவின் அறை கதவை தட்ட,

‘ஐயையோ இவன் ஒழுங்கா நடிப்பானா?’ என்று ஜானு தான் மனதிற்குள் அலறி கொண்டிருந்தாள்.

உறக்க கலகத்தில் இருந்தவன் கதவை திறக்க, “சர்ப்ரைஸ்…” என்று அனைவரும் கத்த,

“ஹேய் இதெல்லாம் எப்போ பிளான் பண்ணிங்க?” என்றவன் ஆனந்த அதிர்ச்சி ஆவது போல கேட்க,

அவனது நடிப்பை பார்த்து அதிர்ந்த ஜானு, ‘என்னம்மா நடிக்கிறான்’ என்று பார்க்க,

யாருமறியாது அவளை பார்த்து சிரித்தவன், “நான் இப்படி ஒரு சர்ப்ரைஸா எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை” என்று மகிழ்ச்சியுடன் கூற,

“எக்ஸ்பெக்ட் பண்ணாதத செய்யிறது தான் ஜானுவோட ஸ்பெஷல் அப்படிதானடி” என்று கீர்த்தி கேட்க,

ஜீவா நக்கல் புன்னகையுடன் அவளை காண,

அவனை முறைத்தவள், “ஆமாடி” என்று சிரித்து வைத்தாள்.

“ஹ்ம்ம் வாங்க வாங்க கேக் கட் பண்ணலாம்” என்று அனிகா அழைக்க,

ஜீவா சிரிப்புடன் கேக்கை வெட்ட,

“ஹாப்பி பர்த்டே டூ யூ ஜீவா” என்று எல்லொரும் பாட்டு பாடினார்கள்.

“சின்ன குழந்தைக்கு மாதிரி பண்றீங்கடா” என்று சிரிப்புடன் வெட்டியவன் நரேனுக்கு கொடுக்கவா ஜானுவிற்கு கொடுக்கவா என்று பார்க்க,

நரேன், “என் தங்கச்சிக்கு கொடுத்தா எனக்கு கொடுத்த மாதிரி ஊட்டுடா” என்று கூற,

புன்னகையுடன் ஜானவிக்கு ஊட்ட, தானும் கேக்கை எடுத்து, “ஹாப்பி பர்த்டே ஜீவா” என்று ஊட்டினாள்.

பிறகு எல்லோருக்கும் ஜீவா கேக்கை கொடுக்க,

“அப்புறம் ஜீவா எப்போ ட்ரீட் கொடுக்க போற” என்று கீர்த்தி துவங்க,

“ஹேய் இன்னைக்கு தானடி கொடுத்தான்” என்று ஜானு அதிர,

“அது கமிட் ஆனதுக்கு இது பர்த்டேக்கு” என்று கனி சிரிக்க,

“உங்களுக்கு ட்ரீட் வச்சே அவன் பர்ஸ் காலியாகிடும் போல” என்று ஜானு அங்கலாய்க்க,

“சொத்தே காலியானாலும் எங்களுக்கு ட்ரீட் கொடுத்தே ஆகணும்” என்று அனிகா சிரிக்க,

“இப்பவோ கொஸ்டீன் கேக்குற இதெல்லாம் மேரேஜ்க்கு அப்பறம் வச்சிக்கோ” என்று கீர்த்தி கூற,

“ஏன் இப்பவே கேட்பேன் எல்லா ரைட்ஸும் எனக்கு இருக்கு. அப்படி தான ஜீவா” என்றவள் அவனது கரத்தினுள் கையை நுழைக்க,

“ஜானு…” என்று அலறியபடி விழிகளை திறந்தான் ஜீவா.

தானிருக்கும் இடம் எதுவென தெரியவில்லை. தன் வாழ்வில் என்ன நடந்ததென தெரியவில்லை.

செவிக்குள் மட்டும், ‘எனக்குனு இருக்கது நீ மட்டும் தான்.‌ எனக்கு அம்மா அப்பா தாத்தா பாட்டினு எல்லா உறவும் நீ தான் ஜீவா. என்னோட மொத்தமும் நீ தான்னு பாக்குறேன்
நான். எந்த சூழ்நிலையிலும் என்னைவிட்டு போயிடாத ஜீவா. நான் இதுக்கு மேல முடியாதுன்ற அளவுக்கு உடைஞ்சு போய்டுவேன். என் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாம போய்டும்’ ஜானவியின் தளுதளுத்த குரல் எதிரொலிக்க,

பத்து வருடங்களாக தன் கண்முன்னே நடமாடிய ஜானவி மனக்கண்ணில் வந்து போக, “ஜானு…” என்று மீண்டும் அலறி தலையை பிடித்து கொண்டான்.


 
Well-known member
Messages
993
Reaction score
735
Points
93
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr

Jeeva ku ennachu, epdi maranthaan jaanu va, seekirama sollunga ma😟😟😟😟😟😟
 
Active member
Messages
192
Reaction score
159
Points
43
Nice update sis. Eagerly waiting for the next epi.
 
Top