தவம் 21
என்றும் ஓய்வதில்லை
இந்த காதல் மழை…
விழிகளை மூடி அவனது அணைப்பில் இருந்தவளுக்கு நடப்பவற்றை நம்ப முடியவில்லை.
அவனது சூடான இதழ் முத்தம் கன்னத்தை தாங்கியிருந்த கரத்தின் வெம்மை இதெல்லாம் சேர்ந்து நடப்பது உண்மையென உணர்த்த உள்ளத்தோடு சேர்த்து உடலும் நடுங்கியது.
நடுங்கிய கரங்களை மறைத்து அவனது தோளை பிடித்து கொள்ள அதில் அவளது நடுக்கத்தை உணர்ந்து குனிந்தவன், “என்னடா” என்று குரலில் நேசத்தை தேக்கி வினவிட,
விழி நீர் பொல பொலவென இறங்கியது.
“இனிமேல் நீ அழக்கூடாதுனு சொன்னேன்ல” என்று நேசத்தோடு கண்டிப்பை சேர்த்தான் குரலில்.
கட்டுபடுத்த முயன்றும் கண்ணீர் வற்றாத நதியாகி போக அவனது கரங்கள் விழிநீரை துடைத்தது.
“இதெல்லாம் கனவா போய்டுமோன்னு பயமா இருக்கு” என்றவள் இதழ் நடுங்க கூற,
“நிஜத்தில உன் முன்னாடி தான் இருக்கேன். என்னை நீ உணரலையா?” என்றவன் தோளோடு அணைத்து கொள்ள,
“ஹ்ம்ம்…ம்ஹூம்…” என்று எல்லா பக்கமும் தலை அசைத்தவள் அவனது தோளில் முகத்தை பதிக்க,
“ப்ச் நம்புடி. நீ நான் இந்த காதல் இந்த நிமிஷம் எல்லாமே நிஜம்” என்று அவளது கன்னத்தை வருட,
“எனக்கு பயமா இருக்கு” என்று மீண்டும் கூற,
“இன்னும் என்ன பயம்?”
“நீ நான் இந்த காதல் எல்லாம் கடைசி வரை இருக்குமா? இது கல்யாணத்துல முடியுமான்னு” என்றவளது குரல் முழுவதும் கலக்கம்.
“நான் இவ்வளோ தூரம் சொல்லியும் உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?” என்று ஆதங்கமாக குரல் வர,
“நான் உன்னை நம்பலைன்னா இந்த உலகத்தில யாரையும் நம்ப மாட்டேன் ஜீவா” என்று கண்ணீரை அவனது சட்டையில் தேய்க்க,
அவளது வார்த்தையில் இவனுக்கு புன்னகை முகிழ்ந்தது.
“அப்புறம் என்ன பயம்?” என்று சிரிப்புடன் அதட்ட,
“எனக்கு சின்ன வயசுல இருந்தே நான் நேசிச்ச எல்லாரும் என்னை தனியா தவிக்க விட்டு போய்டுவாங்க. அதுனால நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். வெளியில நான் ஜோவியலா இருந்தாலும் உள்ளுக்குள்ள யாருமில்லாத தனிமை கொஞ்சம் கொஞ்சமாக கொன்னுட்டு இருக்கு. நீயும் என்னைவிட்டு போனா நான் என்னாவேன்னு தெரியலை” என்றவள் அவனை இறுக்கி கொள்ள,
அவளது வார்த்தையில் இருந்த வலிகளை வேதனையை உணர்ந்து தானும் அதனை அனுபவித்தவன் வார்த்தைகளின்றி அவளை அரவணைத்து கொண்டான்.
அந்த ஒற்றை அணைப்பே உனக்கு நான் யாவுமாக இருப்பேன் என்று கூறியது.
“எனக்குனு இருக்கது நீ மட்டும் தான். எனக்கு அம்மா அப்பா தாத்தா பாட்டினு எல்லா உறவும் நீ தான் ஜீவா. என்னோட மொத்தமும் நீ தான்னு பாக்குறேன் நான். எந்த சூழ்நிலையிலும் என்னைவிட்டு போயிடாத ஜீவா. நான் இதுக்கு மேல முடியாதுன்ற அளவுக்கு உடைஞ்சு போய்டுவேன். என் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாம போய்டும்” என்று அவனுக்குள் புதைந்து போக முயற்சிக்க,
ஜீவா தான் பேச்சற்று போயிருந்தான். இத்தனை நேசமும் நம்பிக்கையும் கொள்ளுமளவிற்கு தான் என்ன செய்துவிட்டோம் என்று.
அவளது நேசம் தந்த பிரம்பிப்பில் மூழ்கி எழுந்தவன், “இந்த ஜென்மத்தில நான் உலகத்தில இல்லாம போனாதான் உன்னை பிரிவேன்” என்று ஒற்றை வரியில் உரைத்திட,
“ம்ஹூம். இந்த மாதிரி பேசாத ஏற்கனவே என்னைவிட்டு போனவங்க இழப்பையே தாங்க முடியாம இருக்கேன். இனியொரு இழப்பு வேணாம் எனக்கு” என்று அச்சத்துடன் உரைக்க,
அவளது பயம் உணர்ந்தவன், “நாம கல்யாணம் பண்ணி நாலு பிள்ளைங்க பெத்து அவங்களுக்கு பிள்ளைங்க பொறந்து வளர்ற வரை சேர்ந்து வாழ்வோம்” என்று கூற,
“நடக்குமா ஜீவா?” என்றவளது விழிகளில் ஆசை மின்னியது.
“கண்டிப்பா நடக்கும்” என்ற விழிகளின் மீது மீண்டும் இதழ் பதித்தான்.
இத்தனை நேரம் இருந்த அலைப்புறுதல் வருத்தம் எல்லாம் நீங்கி மகிழ்ச்சியாக முத்தத்தை உள்வாங்கினாள்.
நொடிகள் நிமிடங்களாக கடந்தது.
“உனக்கு என்னை கல்சுரல்ஸ் அப்பவே பிடிச்சிருச்சா ஜீவா?” என்று அமைதியை கலைத்தாள்.
“ஹ்ம்ம்…” என்று புன்னகையுடன் தலையசைத்தவனது விழிகளில் ரசனை மின்னியது.
“ஏன் அப்போவே சொல்லலை?” என்றவள் முறைப்புடன் கேட்க,
“எல்லாம் பயம் தான்”
“என்ன பயம்?”
“நீ என்னை ரிஜெக்ட் பண்ணிட்டா. நீ என்னை நல்ல ப்ரெண்டா பாத்திட்டு இருந்த. நான் லவ்வ சொல்லி இருந்த ப்ரெண்ட்ஷிப்பும் கட் ஆகிடுச்சுனா?” என்றவன் கேள்வியாக நிறுத்த,
“அதான? நான் ஏன் இதெல்லாம் திங்க் பண்ணலை. இது காதல் தான் ரியலைஸ் பண்ண உடனே உன்கிட்ட சொல்லணும்னு உள்ள ஒன்னு சொல்லிட்டே இருந்துச்சு. நான் உன்கிட்ட லவ்வ கன்வே பண்ணிட்டேன்” என்று சிந்திக்கும் பாவனையில் கேட்க,
இவனுக்கு புன்னகை பிறந்தது.
“ஹ்ம்ம் அது உன் நேச்சர்”
“அவசர குடுக்கைன்னு சொல்றீயா”
“லைட்டா” என்றவன் சிரிப்பை அடக்க,
“ஜீவா…” என்று முறைத்தாள்.
“நீ கேட்ட நான் ஆமானு சொன்னேன்” என்று சிரித்தவாறு மொழிய,
“ஆமானு சொல்ல கூடாது” என்று அவனது தோளில் ஒரு அடி போட்டாள்.
அதையும் புன்னகையுடன் ஏற்று கொண்டான்.
“இருந்தாலும் நீ முன்னாடியே என்கிட்ட சொல்லியிருக்கலாம் ஜீவா. இந்த மூனு நாள் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்” என்றவள் குரலில் வருத்ததின் சாயல்.
“ரொம்ப கஷ்டப்பட்டியா?” என்று கரிசனமாக கேட்க,
“ஆமா. நைட் எல்லாம் தூங்காம அழுதுட்டேன் இருந்தேன். ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கூட என்ன என்னன்னு கேட்டாங்க யார்க்கிட்டயும் எதையும் சொல்ல முடியாம நரக வேதனையா இருந்துச்சு” என்று அவன் தோள் சாய,
“எல்லாம் நரேனால வந்துச்சு. அவன் சும்மா இருந்திருந்தா இதெல்லாம் தேவையா?”
“அண்ணனை திட்டாதீங்க. அது எப்பவும் என் நல்லதுக்கு தான் பேசும்”
“ஆமா பெரிய அண்ணன். அவனுக்கு இருக்கு” என்றவன் கூற,
“அண்ணன்கிட்ட சண்டை போட்றாதீங்க. அது எப்பவும் பிராக்டிகலா இருக்கும்”
“ஆமா பொல்லாத பிராக்டிகல். அவன் உனக்கு மாப்பிள்ளை பாத்து வச்சிருக்கேன்னு ஊருக்கு போகுறதுக்கு முன்னாடியே சொன்னான்”
“என்ன? எனக்கா?”
“ஆமா உனக்கு தான்”
“யாரு அது”
“உனக்கு எதுக்கு அது?” என்றவனது குரலில் காரமிருக்க,
இவளுக்கு சடுதியில் புன்னகை வந்துவிட்டது.
‘பார்றா பொஸஸீவ்னெஸ்ஸா?’ என்று மனதிற்குள் குதூகலித்தவள்,
“சொல்லு ஜீவா. யார் அந்த பையன். அழகா இருப்பானா? என்ன பண்றான்?” என்று பழைய குறும்பு தலை தூக்கியது.
“ஏன் அழகா இருந்தா என்ன பண்ண போற?” என்று முறைக்க,
“சும்மா ஒரு க்யூரியாசிட்டிக்கு தான்”
“இதுல என்ன க்யூரியாசிட்டி உனக்கு”
“இல்லை அண்ணன் பாத்து வச்சிருந்தா நல்லா தேடி பெஸ்டா தான் பாத்து இருக்கும் அதான்”
“பெஸ்டா இருந்தா என்ன பண்றதா ஐடியா? என்னை கழட்டிவிட போறீயா?” என்று காரம் தூக்கலாக வர,
“ஹையோடா பொஸஸீவ்னெஸ்ஸா. ரொம்ப க்யூட்டா இருக்க ஜீவா” என்று அவனது கன்னம் பிடித்து கொஞ்ச,
“போடி” என்று கையை தட்டிவிட்டனது முகத்திலும் புன்னகை.
“ப்பா பசங்க வெட்கப்பட்டா இவ்ளோ க்யூட்டா இருப்பாங்களா? இப்போதான் பாக்குறேன்” என்று கன்னத்தில் கையை தாங்கி பார்க்க,
இவன் சிரிப்பும் முறைப்புமாக அவளை பார்த்துவிட்டு முகத்தை திருப்பி கொள்ள,
“நான் உன் அளவுக்கு அழகா இல்லையே ஜீவா. பாரு மூனு நாளா அழுது தூங்காம டார்க் சர்க்கில் வந்திடுச்சு” என்று எழுந்து சென்று கண்ணாடியில் முகம் பார்த்து வருத்தப்பட,
“அது நீயா தேடிக்கிட்டது” என்றவன் சிரிப்புடன் தோளை குலுக்க,
“ப்ச் உனக்கு லவ் பண்ணவே தெரியலை ஜீவா” என்று முறைத்தாள்.
“ஓஹோ…”
“ஆமா இந்நேரம் உன் இடத்தில வேற யாராவது இருந்தா நீ எப்படி இருந்தாலும் எனக்கு அழகுதான்னு லவ் டைலாக் சொல்லி இருப்பாங்க” என்று இதழை சுழிக்க,
நகைப்புடன் எழுந்து வந்தவன் அவளருகே சென்று, “இந்த கண்ணு எப்படி இருந்தாலும் அழுதாலும் சிரிச்சாலும் முறைச்சாலும் எனக்கு ரொம்ப அழகா தெரியிது. என்னை அப்படியே இழுக்குது” என்று விழிகளை பார்த்து கூற,
“ரியலி?” என்று கண்ணை விரித்தாள்.
“இப்போ கூட இழுக்குது” என்று விழிகளை விரலால் வருட, இவள் கூசி சிலிர்த்தாள்.
சில நொடிகள் அமைதியாக நகர கண்ணாடியில் தெரிந்த இருவரது பிம்பத்தை கண்டவன் தனது அலைபேசியை எடுத்து புகைப்படம் எடுக்க விழைய,
“ஹையோ ஜீவா. வேணாம் நான் அழுது வடிஞ்சு நல்லாவே இல்லை” என்றவள் நகர பார்க்க,
“எல்லாமே மெமரீஸ்தான். சும்மா நில்லு” என்று இடையோடு சேர்த்து பிடிக்க,
“நோ ஜீவா” என்று அவனை திரும்பி சிரிப்புடன் முறைக்க, அதனை அழகாக புகைப்படம் எடுத்து இருந்தான்.
“சீ திஸ்” என்று அவளிடம் காண்பிக்க,
“உவ்வே நான் நல்லாவே இல்லை” என்று முகத்தை சுழிக்க,
“நல்லாதான் இருக்கு. நான் வால்பேப்பரா வைக்க போறேன்”
“நோ…” என்று அலறினாள்.
“யெஸ்” என்றவன் சிரிக்க,
“நோ ஜீவா. நாம நாளைக்கு வேற பிக் எடுத்து வைக்கலாம்” என்று கேட்க,
“ம்ஹூம் நம்மோட பர்ஸ்ட் பிக் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்” என்றவன் கூறிட,
“யாருக்கும் தெரியாமல் வசசிக்கோ”
“அறிவுஜீவி. யாருக்கும் தெரியாம எப்படி வைக்கிறது?”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. என் ஃப்ரெண்ட்ஸ் பாத்தா கலாய்ப்பாங்க” என்றவள் சிணுங்க,
“ஓகே” என்று நகைத்தவாறு தலையசைத்தான்.
“க்யூட் ஜீவா” என்று கன்னம் கிள்ளி கொஞ்சியவள்,
“வா அம்மா அப்பாக்கிட்ட என்னோட செலெக்ஷன் எப்படி இருக்குனு கேக்கணும்” என்று அவனது கைப்பிடித்து அழைத்து புகைப்படத்தின் புறம் திரும்பியவள், “அப்பா அம்மா பாத்திங்களா உங்களை மாதிரியே எனக்கும் ஒரு ஆத்மார்த்தமான காதல் கிடைச்சு இருக்கு. நானும் உங்களை மாதிரியே காதலோட சந்தோஷமா வாழ போறோம்” என்று சிரித்தவள்,
“எப்படி என் செலெக்ஷன்?” என்று அவர்களிடம் பேச இவன் மென்னகையுடன் பார்த்திருந்தான்.
“மாமனார் மாமியார்க்கு வணக்கம் சொல்லு ஜீவா” என்று அவனை அழைக்க,
அவனும் சிரிப்புடன் வணக்கம் வைத்து, “என்ன சொல்றாங்க உன் செலெக்ஷன் பத்தி?” என கேட்டிட,
“ஹ்ம்ம் ரொம்ப நல்லாயிருக்கு. நல்ல பையன் மாதிரி தெரியிறான். உன்னை நல்லா பாத்துப்பான். நாங்களே பாத்து வச்சிருந்தா கூட இப்படி ஒரு தங்கமான புள்ளைய பாத்திருக்க முடியாதுனு சொல்றாங்க” என்று பாவனையாய் விழிவிரிக்க,
வழக்கம் போல அவளது விழிகளுக்குள் விழுந்தவன் இடையோடு சேர்த்து அணைத்து, “அவங்க சொல்றாங்களா? இல்லை நீயே சொல்றீயா?” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க,
“நான் பொய் சொல்வேனா ஜீவா? பிலீவ் மீ?” என்று விழிகளை சிமிட்ட,
“இந்த கண்ணுல விழுந்து இந்த வாழ்க்கையை தொலைச்சிட தோணுது ஜானு…” என்று அவளது பெயரை சுருக்கி அழைத்தான்.
அதில் சிலிர்த்தவள், “ஜீவா ஒரே ஒரு டைம் ஜானு சொல்லு” என்று கேட்க,
“என்னடி?” என்று சிரிப்புடன் புருவம் உயர்த்தினான்.
“சொல்லு ஜீவா” என்று சிணுங்க,
“ஜானு” என்றவன் அழைக்க,
“இன்னொரு டைம் ஜீவா” என்று விழி சுருக்கினாள்.
“ப்ச் போடி” என்றவன் சிரிப்புடன் நகர விழைய,
“ப்ளீஸ் ஜீவா” என்று அவனது மார்பில் முட்டினாள்.
இறுக்கமாக அணைத்து கொண்டவன் அவளுயரத்திற்கு குனிந்து செவியில் இதழ் உரச,
“இந்த ஜென்மம் முழுக்க உன் பேரை தான் ஜெபிக்க போறேன். பொறுமையா கேளு ஜானு” என்று நேசத்தை உரைக்க,
“ஹ்ம்ம் கேக்கலாமே” என்று தலையை சரித்தவள் சிரிக்க, இவனும் புன்னகைத்தான்.
இருவரது புன்னகையிலும் நேசம் தளும்பி நின்றது…