• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தவம் 20

Administrator
Staff member
Messages
548
Reaction score
800
Points
93
தவம் 20:

ஆண்டாண்டுகள் கடந்து
மாறாமலே காதல் ஒன்றை
கொண்டேனடா…

“ஜானு வா சாப்பிடலாம்” என்று கீர்த்தி அழைக்க,

“இல்லை எனக்கு பசிக்கலைடி” என்று மறுத்தவள் கையில் இருந்த புத்தகத்தில் மூழ்க,

“பெரிய படிப்பாளி தான் நீ. நடிக்காத வாடி” என்று புத்தகத்தை பிடிங்கி வைத்த கீர்த்தி கையை பிடித்து அழைக்க,

வேறு வழியின்றி எழுந்து சென்றாள்.

“ரெண்டு பேரையும் எவ்ளோ நேரம் சாப்பிட கூப்பிட்றது. ஓரேடியா படிப்புல மூழ்கிட்டிங்களா?” என்றபடி கீர்த்தியின் தாய் பரிமளா உணவினை எடுத்து வைக்க,

“இவ தான் மா வரவே மாட்டேன்னுட்டா” என்று தோழியை போட்டு கொடுத்தவள் உணவுண்ண அமர,

இருவருக்கும் உணவை பரிமாறிய பரிமளம், “என்ன ஜானு நானும் உன்னை ரெண்டு நாளா பாத்திட்டு தான் இருக்கேன். ஒரு மாதிரி அமைதியா இருக்க? எதுவும் பிரச்சினையா?” என்று வினவிட,

ஒரு நொடி திகைத்து விழித்தவள், “அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா. நான் எப்பவும் போல தான் இருக்கேன்” என்று முயன்று புன்னகைத்தவள் சாப்பிட குனிந்து கொள்ள,

“நானும் வித விதமா கேட்டு பாத்துட்டேன். பதிலே வரலைம்மா. சரி எப்படியும் நம்மக்கிட்ட தான வருவான்னு விட்டுட்டேன்” என்ற கீர்த்தி ஜானுவின் தட்டில் மேலும் இரண்டு இட்லிகளை வைக்க,

அவளை நிமிர்ந்து முறைக்க முடியாதவள் அமைதியாக உண்டுவிட்டு எழுந்து செல்ல,

“கீர்த்தி அவ அம்மா அப்பா இல்லாத பொண்ணு ஏதோ கஷ்டத்தை மனசுல வச்சுக்கிட்டு இருக்கா போல என்ன்னு கேட்டு சரி பண்ண பாரு” என்று பரிமளம் கூற,

“நான் பாத்துக்கிறேன் மா” என்றவள் தோழியுடன் படிக்க சென்றாள்.

மூன்று நாட்களாக ஜானவி இப்படித்தான் இருக்கிறாள். கேட்டால் ஏதுமில்லை என்று சமாளிக்கிறாள்.

அவளால் கூற முடியும் போது அவளே சொல்வாள் என்று தோழிகள் அமைதி காக்கின்றனர்.

வழக்கம் போல பதினொரு மணி வரை படித்தவள் எழுந்து வீட்டிற்கு செல்ல ஆயத்தமாக,

“இங்கேயே படுக்க வேண்டியது தான?” என்று கீர்த்தி கூறிட,

“இல்லை எனக்கு என் பெட்ல படுத்தாதான் தூக்கம் வரும்” என்றவள் தனது வீட்டிற்கு சென்றாள்.

நரேன் பேசி சென்ற பிறகு தனது ஆசையின் அபத்தம் உணர்ந்து அழுது தீர்த்தவள் மறுநாள் தெளிந்துவிட்டாள்.

தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு அது கிடைக்கவில்லை என்று ஏங்குவது மிகவும் தவறு. தன்னுடைய நிலைக்கு ஏற்றது போல தான் ஆசை இருக்க வேண்டும்.

எந்த காலத்திலும் அவன் உனக்கு கிடைக்க மாட்டான். கிடைக்க வாய்ப்பும் இல்லை. ஆக நீ தான் உனது ஆசையை விருப்பத்தை நேசத்தை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்று எண்ணியவள் அவன் நினைப்பை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க முயற்சித்தாள்.

ஆனால் அதன் பிறகு தான் அதிகமாய் அவனது நினைவு வாட்டியது.

இதில் அவசரப்பட்டு அவனிடத்தில் மனதை தெரிவித்துவிட்டேன். இனி அவனை எப்படி எதிர்கொள்ள போகிறேன் என்று அஞ்சியே மூன்று நாட்களாக அவன் கண்ணில் சிக்காமல் சுற்றி கொண்டிருக்கிறாள்.

ஊரிலிருந்து வந்ததும் அவதி அவதியாய் அவனிடத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்காக நொடிக்கு நொடி வருந்தி கொண்டிருக்கிறாள்.

வாழ்வில் முதன் முதலாக வந்த நேசத்தை புதைத்தவிட எண்ணியதில் இருந்து மனம் ஊமையாய் அழுது கொண்டிருக்கிறது யாரிடமும் பேச பிடிக்கவில்லை.

என்னவோ ஓர் வெறுமை அமைதியாய் தன்னை சூழ்ந்து கொண்டது போல ஒரு உணர்வு.

காதல் விருப்பம் ஆசையெல்லாம் கொள்ளும் அளவிற்கு தனக்கு தகுதியில்லை இறுதிவரை யாருமின்றி வாழ்ந்துவிட்டு போவது தான் தனது விதி என்று நொந்து கொண்டவள் அமைதியாகி போனாள்.

பார்க்கும் அனைவரும் ஏன் அமைதியாக இருக்கிறாய்? ஏதேனும் பிரச்சனையா? என்று விதவிதமாக கேள்விகளை அடுக்க அனைவரிடமும் எதையோ கூறி சமாளித்து வருகிறாள்.

இங்கு அந்த தளத்தின் கோடியில் நின்று இருந்த ஜீவாவிற்கும் நினைவெல்லாம் ஜானுவிடத்தில் தான்.

நான்கு நாட்கள் சுற்றுலா சென்றவள் வந்து தனக்கு இன்ப அதிர்ச்சியை வாரி கொடுப்பாள் என்று கனவிலும் எண்ணியிருக்கவில்லை.

அதுவும் அவள் தனது ஜீவன் ஜீவாவிடத்தில் தான் உள்ளது என்று கூறியதும் ஒரு நொடி புரியாது விழித்தவனுக்கு மறு கணம் மனமெங்கும் இன்பமாய் அதிர்வு பரவியது.

உறக்கெல்லாம் மொத்தமாய் கலைந்து காத தூரம் போய் இருந்தது.

அவளது வார்த்தைகளை உள்வாங்கி எதிர்வினை ஆற்றுதவற்குள் மாயமாய் மறைந்திருந்தாள்.

அந்த கணம் ஜானுவிடத்தில் நிச்சயமாக இதனை எதிர்ப்பார்த்திருக்கவில்லை.

அதுவும் அவள் கூறிய விதம் சடுதியில் இதழ்களை புன்னகையை வரவைத்தது.

உலகத்தில் யாருமே இது போல காதலை கூறியிருக்க மாட்டார்கள்.

“படபட பட்டாசு” என்று இதழ்கள் மெதுவாய் முணுமுணுத்தது.

இவ்ளோ தைரியமாக சொல்லிட்டு முகத்தை பாக்காம ஓடி போறா பாரு வாயாடி என்று எண்ணி கொண்டவனுக்கு நடந்ததை நிஜமென்று நம்ப முடியவில்லை.

என்னவோ தான் கனவுதான் காண்கின்றோமோ? நான்கு நாட்களாக அவளை காணாது இருப்பதால் தன்னுடைய கற்பனைகள் கனவாக உருமாறிவிட்டதா? என்றெல்லாம் எண்ணம் பிறந்தது.

தனக்கு தானே கிள்ளி பார்த்து கொண்டான். வலித்து நிஜமென்று உணர்த்தியது.

தன்னை போல அவளுக்கும் இந்த நேசம் பிறக்குமென்று அவன் துளியும் எண்ணியிருக்கவில்லை.

தன்னை போல அவளும் உணர்ந்தாளா? எந்த நொடியில் என் மீது நேசம் பூத்தது எப்போதும் அதனை உணர்ந்து கொண்டாள் என்று பல்வேறு கேள்விள் வரிசையாக வந்து விழுந்தது.

இப்போதே போய் அவளை இறுக்கமாக அணைத்து தன்னுடைய நேசத்தை தெரிவிக்க வேண்டும் உள்ளம் உந்தி தள்ளியது.

இந்த புதுவித நேசம் அவனை தவிக்க வைத்த போதும் அவளுக்கான நேரத்தை கொடுத்தவன் அமைதியாய் சென்று கட்டிலில் விழுந்தான்.

நடக்கவே வாய்ப்பில்லை என்று எண்ணி கொண்டிருந்த ஒன்று நடந்துவிட்டதை எண்ணி இதயம் மீண்டும் மீண்டும் மீட்டி பார்த்தது.

அவளை பார்க்கும் போது என்ன பேசலாம் எவ்வாறு பேசலாம் நேசத்தை தெரிவிக்கலாம் என்று இவன் பல்லாயிரம் முறை மனதிற்குள் ஒத்திகை பார்த்து வைத்திருக்க இவளோ மூன்று நாட்களாக ஜீவாவின் கண்ணில் சிக்காமல் விளையாட்டு காட்டி கொண்டிருக்கிறாள்‌.

முதல் நாள் தன்னை பார்க்க கூச்சப்படுகிறாள் என்று எண்ணி கொண்டிருக்க அடுத்த இரண்டு நாட்களும் அதுவே தொடர்ந்தது.

அப்படி அடிதடியாக காதல் சொன்னவளுக்கு இப்போதான் என்னவாயிருக்கும் என்று குழம்பி போனான்.

நரேனிடம் கேட்டால் அவளுக்கு பரிட்சை என்று கூறுகிறான்.

அப்படி விழுந்து விழுந்து படிக்கும் ரகம் இவளில்லை என்று ஜீவாவிற்கு தெரியுமே.

மூன்று நாட்களாக பொறுமையை இழுத்து பிடித்து கொண்டிருந்தவன் இப்போது வந்து வெளியே நிற்கிறான்.

எப்படியும் அறைக்கு வந்து தானே ஆக வேண்டும் அப்போது அவளை பிடித்துவிடலாம் என்று.

தனக்குள்ளே சிந்தனையுடன் உழன்று கொண்டு வந்தவள் எதிரில் இருந்த ஜீவாவை எதிர்பாராது திகைத்து பிறகு சமாளித்து ஒரு புன்னகையை உதிர்த்தாள்.

விழிகளோடு அல்லாது இதழ்களால் மட்டும் புன்னகைத்தவளை கண்டவன் பதிலுக்கு புன்னகையை உதிர்க்காது, “என்ன மேடம் இங்க தான் இருக்கிங்களா? சொல்லாம கொள்ளாம ஊரைவிட்டு போய்ட்டிங்களோன்னு நினைச்சேன” என்று கூற,

“இன்டர்னெல்க்கு படிச்சிட்டு இருக்கேன்” என்று சங்கடமாக புன்னகையை கொடுக்க,

“ஓ…” என்றவனது குரலே அவன் நம்பவில்லை என்று கூற,

என்ன கூறுவதென்று தெரியவில்லை. அமைதியாக நிற்க,

ஜீவா தானே கதவை திறந்து அவள் வீட்டினுள் நுழைந்தான்.

என்றாவது ஒரு நாள் இதனை எதிர்கொண்டு தானே ஆக வேண்டும்.

இப்போதே அதனை செய்துவிடு. எல்லாவற்றிக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடு என்று மூளையின் கட்டளைக்கு அடிபணிந்தவள் உள்ளே செல்ல,

நீள்விருக்கையில் கால் நீட்டி அமர்ந்து இருந்தவன், “எப்போ இன்டர்னெல் முடியிது?” என்று வினவிட,

“நாளைக்கு” என்று பதில் அளித்தவள் அமைதியாக எதிரே அமர,

“ஓ…” என்று இழுத்தவன் சில நொடிகள் கடந்து,

“நீ அன்னைக்கு சொன்னதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன்” என்று நேரடியாக கேட்டுவிட,

இதனை மட்டும் கேட்டுவிட கூடாது என்று ஜெபித்து கொண்டு இருந்தவள் விழிகளை மூடி ஒரு நொடி நிதானித்து பிறகு, “அது… அது வந்து சாரி நான் ஏதோ தூக்க கலக்கத்தில அதை சொல்லிட்டேன்” என்று தயங்கி தயங்கி கூற,

“தூக்க கலக்கமா?” என்று ஜீவா விழி உயர்த்தினான்.

“ஆமா தெரியாம பேசிட்டேன். நீ எதுவும் தப்பா எடுத்துக்காத. அதை அப்படியே விட்றலாம்”

“விட்டுட்டு” என்றவன் அவளை ஆழ்ந்து நோக்க,

அந்த பார்வையை எதிர்கொள்ள முடியாதவள் தலையை திருப்பி கொண்டாள்.

“பதில் சொல்லு” என்றவன் மீண்டும் அழுத்தி கேட்க,

இவளிடத்தில் மௌனம். நொடிக்கு நொடி இதயத்தின் அழுத்தம் அதிகரிக்க விழிகள் கலங்கியது.

இமை சிமிட்டி கண்ணீரை உள்ளிழுத்தவள், “நான் அன்னைக்கு தெரியாம பேசிட்டேன் ஜீவா. என்னை மன்னிச்சிடு. நாம ஃப்ரெண்ட்ஸாவே இருக்கலாம்” என்று கலங்கிய குரலை மறைத்து கூற,

“எதுனால இந்த திடீர் ஞானோதயம்?”

“அது எனக்கு புரிஞ்சிடுச்சு”

“என்ன புரிஞ்சது?”

“நமக்கு ஐ மீன் நான் உனக்கு செட் ஆக மாட்டேன்னு”

“யார் என்ன சொன்னது உன்கிட்ட?”

“யாரும் எதுவும் சொல்லலை. எனக்கே என்னோட தகுதி தெரிஞ்சிடுச்சு”

“தகுதி?” என்றவன் புருவம் சுருக்கி பார்க்க,

“ஆமா தகுதி தான் உன்னோட ஸ்டேட்டஸ்க்கு நான் எந்தவிதத்திலயும் சரிபட்டு வரமாட்டேன்”

“ஓ…”

“நீங்க பார்ன் வித் சில்வர் ஸ்பூன். ஆனால் நான் அப்படியில்லை மிடில் கிளாஸ் அதுவும் இப்போ யாருமில்லாத அநாதை” என்றதும்,

“போதும்” என்றவன் அதட்டி முறைக்க,

“நீங்க முறைச்சாலும் அதான் உண்மை. உங்களோட ஒன் மந்த் எக்ஸ்பென்ஸ் தான் என்னோட போர் மந்த் சாலரியா இருக்கும். உங்க வீட்டுல உங்க அந்தஸ்து அழகு தகுதிக்கு ஏத்த மாதிரி பொண்ணு தான் மருமகளா வரணும்னு எதிர்ப்பார்ப்பாங்க”

“நான் என்னைக்காவது ஸ்டேட்டஸ் பாத்து பழகியிருக்கேனா?”

“பழகுறது வேற லைஃப் லாங் ட்ராவல் பண்றது வேற. நான் என்னோட லெவெலுக்கு தான் ஆசைப்பட்டு இருக்கணும். தகுதிக்கு மீறி ஆசைப்பட்டுட்டேன்” என்றவளுக்கு தன்னையும் மீறி குரல் கலங்கிவிட்டது.

“ஹேய் ஜானு…” என்றவன் நெருங்கி அவளது தோளோடு அணைக்க,

முதன் முதலாக அவளது பெயரை அவன் உச்சரிக்கிறான். இதுவரை அவன் தனது பெயரை கூறியது இல்லை. இப்படி ஒரு சூழ்நிலையிலா இவன் எனது பெயரை கூற வேண்டும் என்று அதற்கும் அழுகை பொங்கியது‌.


“நான் கொஞ்ச நாள்ல சரியாகிடுவேன். பர்ஸ்ட் டைம்னால கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன். லீவ் மீ” என்று விலகி அமர்ந்தவள்,

“சாரி உங்களுக்கு வேற ஒருத்தங்களை பிடிச்சு இருக்குனு தெரியாம தொந்திரவு பண்ணிட்டேன்” என்று அழுகையே அடக்கிய குரலில் கூற,

“வேற ஒருத்தியா?”

“ஆமா லாவண்யா. உங்க மாமா பொண்ணு உங்களுக்கு அவங்களை தானே பிடிச்சு இருக்கு. அவங்க போட்டோ பாத்தேன் ரொம்ப அழகா இருக்காங்க. உங்களுக்கு பொருத்தமா இருப்பாங்க” என்று அழுகையுடன் புன்னகைக்க முயல,

“லாவண்யா” என்று நிறுத்தியவன்,

“இதெல்லாத்துக்கு நரேன் தான் காரணமா?” என்றவன் பல்லை கடித்து கேட்க,

“அண்ணனை எதுவும் சொல்லாதீங்க”

“ஆமா பாசமலர் இதுக்கு மட்டும் வந்திடுவாங்க”

“அவங்க அப்பா க்ரானைட் பிஸ்னஸ் பண்றாங்களாமே. உங்க வீட்ல கூட அவங்களுக்கு மேரேஜ் பண்ணி வைக்கத்தான் விருப்பமாமே. என்னை மாதிரி அநாதை பொண்ணை எந்த வீட்லயும் அக்சப்ட் பண்ணிக்க மாட்டாங்க”

“ஷட் அப்”

“என்ன சொன்னாலும் அதான் உண்மை. இதை விட்ருங்க. நான் கொஞ்ச நாள்ல சரியாகிடுவேன்”

“ஆனால் நான் ஆக மாட்டேனே” என்று பட்டென்று கூறியவனது பதிலில் இவள் திகைத்து விழிவிரிக்க,

“ஆமா இப்படியே போச்சுன்னா நான் ஜானவி பைத்தியம் ஆகிடுவேன். ஆல்ரெடி பாதி அப்படித்தான் சுத்திட்டு இருக்கேன்” என்றவன் சன்னமான முணுமுணுப்புடன் தலையைக் கோத,
இவளுக்கு அதிர்ச்சியில் விழிகள் தாமரையாய் விரிந்தன.

“இதோ இந்த கண்ணை வச்சு இப்படி விரிச்சு விரிச்சு பாத்து தான் என்னை பாதி பைத்தியம் ஆக்கி வச்சிருக்க. ஒவ்வொரு தடவையும் நீ ஆர்வமாய் ஆசையாய் அதிர்ச்சியாய் சிரிப்பான்னு கண்ணை விரிக்கும் போது விழுந்து விழுந்து எழுறேன். என்னால முடியலை” என்றவனது குரலில் அவளுக்கான தவிப்பு கொட்டிகிடக்க,

இங்கு நடப்பவற்றை நம்ப முடியாதவளாக ஜானுவின் விழிகள் நிறைந்தது.

“இதோ இப்போ அழுகும் போது கூட இந்த கண்ணு என்னை டிஸ்டர்ப் பண்ணுது. தூங்க விடாம பண்ணுது. உன்கிட்ட என்னென்னவோ பேசணும்னு நினைச்சு வச்சிருந்தேன். ஆனால் எதுவுமே ஞாபகம் வரலை. எங்க பாத்தாலும் நீ தான் வந்து நிக்கிற. என்னால சுத்தமா முடியலை” என்றவன் அவளது கரத்தை அழுத்தமாக பிடித்து கொள்ள,

இவளுக்கு எதையும் நம்ப முடியவில்லை.

“இதெல்லாம் நிஜமா?” என்று வினவியவளது குரல் நடுங்கியது.

“சத்தியமான உண்மை. அன்னைக்கு அந்த டான்ஸ்க்கு முகத்துல நவரசத்தையும் கொண்டு வந்தியே அப்பவே அந்த கண்ணுக்குள்ள நான் விழுந்துட்டேன். உன்னை பாத்த நாள்ல இருந்து என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருந்த இந்த கண்ணு அன்னைக்கு மொத்தமா முழுங்கிடுச்சு. அந்த செகெண்ட்ல இருந்து உன் கண்ணு மட்டும் தான் என்னோட பார்வையில விழுகுது”

“...”

“நீ சொல்லலைன்னா நானே கண்டிப்பா சொல்லியிருப்பேன். இந்த ஜென்மத்தில என்னால உன்னைவிட முடியும்னு தோணலை.
அந்தஸ்து அழகு பணம்னு எதை காரணம் சொல்லியும் என்னைவிட்டு போக நினைக்காத. நம்மோட உணர்வுகள் இது எல்லாத்துக்கும் அப்பாற்பட்டது” என்றவன் அவளை இடையோடு அணைத்து மூடிய இமைகளில் சூடான முத்தத்தை பதிக்க, விழிநீர் கோடாக இறங்கியது…




 
Well-known member
Messages
993
Reaction score
735
Points
93
Semmmmmmmaaaaa superrrrrrrrr maa♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
 
Top