• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தவம் 2

Administrator
Staff member
Messages
536
Reaction score
800
Points
93
தவம்‌ 2:

ஊரெங்கும் மழையும் இல்லை

வேரெங்கும் புயலும் இல்லை
என்றாலும் நெஞ்சில் இடி இடிக்குதே…


தவம்‌ 2:

ஊரெங்கும் மழையும் இல்லை
வேரெங்கும் புயலும் இல்லை
என்றாலும் நெஞ்சில் இடி இடிக்குதே…

ஜீவா வீட்டு திருமணத்தை முடித்துவிட்டு உடன் பணிபுரியும் தோழி ஒருத்தியின் வளைகாப்பையும் முடித்து வந்த ஜானவி வீட்டிற்குள் நுழைந்ததும் நீள்விருக்கையில் சாய்ந்தாள்.

அவளது தோளில் தலை சாய்த்து விழி மூடிய ஜீவிதா,

“வெயில் ரொம்ப இருக்குல்லம்மா?” என்று வினவ,

“ஆமடா. சென்னையில எப்பவுமே வெயில் அதிகம் தான்” என்று மகளின் தலையை கோதினாள்.

“ஸ்கூட்டில போய்ட்டு வரதால தான் நமக்கு வெயில் தெரியிது. நீ ஒரு கார் வாங்குறீயா?” என்றுவிட்டு ஆர்வமாய் தாயின் முகம் காண,

“ஹ்ம்ம் வாங்கலாமே?” என்று ஜானவி புன்னகைக்க,

“எப்போ?” என்று வினா தொடுத்தாள் மகள்.

“இப்போ இல்லை. நீ ஸ்கூல் முடிச்சதும்” என்றதும் முகம் சுருக்கிய ஜீவி,

“அவ்ளோ நாள் ஆகுமா? ஏன் இப்போ வாங்குனா?” என்று வினவ,

“கார் கொஞ்சம் எக்ஸ்பென்ஸீவ் டா. உடனே வாங்க முடியாது. கொஞ்சம் சேவிங்க்ஸ் போட்டு தான் வாங்கணும்” என்க,

“ஓ… உங்கிட்ட அவ்ளோ மணி இல்லையா?” என்க,

“ம்ஹூம்” என்று தலையை இடம் வலமாக அசைத்தாள்.

“ஓ…” என்றவள்,

“நான் சீக்கிரம் படிச்சு முடிச்சிட்டு பெரிய ஜாப் போய் உனக்கு பெரிய கார் வாங்கி தர்றேன்” என்று தாயின் கன்னத்தை பிடிக்க,

மகளது செய்கையில் கணவனது நினைவு ஜனித்தது. சடுதியில் விழி கலங்கிவிட இமை சிமிட்டி நொடியில் தன்னை சரி செய்தவள்,

“சரிடா தங்கம்” என்று கன்னத்தில் இதழ் பதித்தவள்,

“நீ போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு ரெஸ்ட் எடு. அம்மாக்கு கிச்சன்ல வேலை இருக்கு” என்க,

“சரிம்மா” என்றவள் அறைக்கு எழுந்து செல்ல,

இவள் விழி மூடி சாய்ந்து விட்டாள். இமையோரம் நீர் துளிர்த்தது.

மூடிய இமைக்குள் ஜானவியை வீழ்த்திவிடும் புன்னகையுடன் வந்து நின்றான் அவளது கண்ணாளன்.

அவனும் இப்படித்தான் ஜானவிக்கு சிறு குறையும் வைத்திடாது யாவையும் பார்த்து பார்த்து செய்வான்.

என்னவோ சிறு சிறு செய்கைகளிலும் கணவனை நினைவு படுத்தும் மகளது பாவனை தான் இப்போது வரை ஜானவியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

மிகவும் உடைந்து வாழ்வை வெறுத்து நின்ற தருணத்தில் தனக்காக இவ்வுலகில் வந்த ஜீவன். தன்னை வாழ வைத்த இன்று வரை தான் இவ்வுலகில் வாழ்வதற்கு காரணமான உயிர் ஜீவி மட்டும் தான்.

அவள் மட்டும் இல்லை என்றால் தான் என்றோ மரித்து மண்ணாய் போயிருப்போம் என்று எண்ணம் பிறக்க விழி நீர் பெருகியது.

இன்றேனோ அவனது நினைவு அதிகமாய் தாக்குவதாய் உணர்ந்தவளது கரம் கழுத்தில் இருந்த மெல்லிய சங்கிலியை வருடியது.

அவனது நினைவாய் அவளிடம் இருக்கும் முக்கியமானவற்றுள் இவையும் ஒன்று.

எவ்வளவு நேரம் விழி மூடி சாய்ந்திருத்தாளோ மகள் வந்தால் அவளிடத்தில் பதில் கூற முடியாது என்று தோன்ற முகத்தை அழுந்த தேய்த்து கொண்டு எழுந்து அறைக்கு சென்றாள்.

ஜீவி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். இப்போதெல்லாம் மகள் கேட்கும் கேள்வியில் அவள் வளர்ந்துவிட்டதாக ஜானவிக்கு எண்ணம் ஜனித்தது.

சிறு சிறு விடயங்களையும் கவனித்து நிறைய கேள்வி கேட்கிறாள். ஜானவி அழுததை அறிந்தால் ஏன் எதற்கு என்று பலவாறாக வினா எழுப்பி அவளை படுத்தி எடுத்திடுவாள்‌.

ஏதேதோ யோசனையுடன் உடை மாற்றியவள் காலையில் போட்டு வைத்த பாத்திரத்தை விளக்க சென்றாள்.

சற்று முன் மகள் கேட்ட கேள்வி நினைவிற்கு வந்தது.

கார் வாங்கும் அளவிற்கு அவளுக்கு அவசியம் இல்லை தான். ஆனால் மகள் கேட்டதற்காக வாங்கலாம் என்று முடிவெடுத்தாள்.

பணத்தை விருப்பத்திற்கு செலவழிக்கும் செலவாளி ஜானவி அல்ல.

என்ன தான் நன்றாக சம்பாதித்தாலும் ஒவ்வொரு செலவையும் பார்த்து பார்த்து தான் செய்வாள். அப்படி செய்ததால் தான் இப்போது இருக்கும் இந்த வீட்டை ஐந்தாறு வருடங்களில் அவளால் சொந்தமாக வாங்கியிருக்க முடிந்தது.

மேலும் வங்கி கணக்கில் சிறு தொகை சேமிப்பாகவும் போட்டு வைத்திருந்தாள்.

அது போக மகளை சற்று பெரிய பள்ளியில் படிக்க வைத்தாள். காரணம் அவளவன் தான்.

அவன் இருந்தால் நிச்சயமாக இந்தளவிற்கு பெரிய பள்ளியில் தான் மகளை படிக்க வைத்திருப்பான்‌.

தன்னால் இயன்றவரை அவனளவு மகளை பார்த்து கொள்ள முயற்சித்தாள்.

சிந்தனையுடன் பாத்திரத்தை விளக்கிவிட்டு சமையலறையை ஒதுங்க வைக்கும் வேலையில் ஈடுபட அழைப்பு மணி ஓசை கேட்டது.

சௌம்யா தான் பணி முடிந்து வந்துவிட்டாள் போலும் என்று எண்ணியவாறே கைகளை துடைத்து கொண்டு கதவை திறந்தவள் வெளியே நின்றிருந்தவர்களை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள்.

“அண்ணா எப்போ வந்தீங்க?” என்றவள் முகம் முழுவதும் புன்னகையுடன் வினவ,

“இப்போ தான் கொஞ்சம் நேரம் முன்னாடி” என்று நரேன் பதில் கூற,

“இப்பிடிதான் வாசல்லயே நிக்க வச்சு பேசுவியா?” என்று அருகில் இருந்தவள் போலியாய் அதட்ட,

“அச்சச்சோ இல்லை அண்ணி மறந்துட்டேன்” என்றவள்,

“வாங்க வாங்க” என்று இருவரையும் வரவேற்றவள் நரேனின் கையில் இருந்த விதுரனை தூக்கி கொண்டாள்.

இளையவனும் ஜானவியை கண்டதும், “அத்தை” என்று சிரிப்புடன் அழைக்க,

“தங்கக் குட்டி எப்படி இருக்கிங்க?” என்று வினவியவள் அவனது கன்னத்தில் ஆசையாய் முத்தம் பதிக்க,

“நல்லா இருக்கேன்” என்று அழகாய் புன்னைகத்தான்.

“அண்ணா இங்க வர்றேன்னு சொல்லவே இல்லை” என்று வினவ,

“ஏன் சொல்லிட்டு தான் வரணுமா?” என்று மீண்டும் வம்பிழுத்தாள் நரேன் மனைவி தீபா.

அதில் பதறியவள்,

“அச்சச்சோ அப்படிலாம் இல்லண்ணி. நீங்க நேரா உங்க ப்ரெண்ட் வீட்டுக்கு தான் போவீங்கன்னு தான் நினைச்சேன்” என்று தயக்கத்துடன் கூற,

“ப்ச் சும்மா அவளை வம்பிழுத்துக்கிட்டே இருக்காதடி” என்று பொய்யாய் மனைவியை அதட்டியவன்,

“நாளைக்கு தான ரிசப்ஷன். அதான் உன்னை பாத்திட்டு போகலாம்னு வந்தோம் டா” என்றவன்,

“ஜீவி எங்க?” என்று வினவ,

“அவ தூங்கிட்டு இருக்காண்ணா” என்று பதில் அளித்தாள்.

“ஓ… கல்யாணத்துக்கு போனீயா?” என்று வினவ,

“ஹ்ம்ம் நானும் ஜீவியும் போய்ட்டு வந்தோம்ணா” என்றவள்,

“என்ன குடிக்கிறீங்க டீயா காஃபியா?” என்று கேள்வி எழுப்பினாள்.

“இப்போ தான் வர்ற வழியில ஜூஸ் குடிச்சிட்டு வந்தோம்” என்று நரேன் கூற,

“தம்பிக்கு பால் ஆத்தி தர்றேன்” என்றாள்.

“அவனும் இப்போ தான் பால் குடிச்சான் ஜானு” என்று தீபா கூற,

“ஓ…” என்றவளது முகம் இத்தனை நேரத்தில் இருந்த உற்சாகம் வடிந்துவிட்டது‌.

“ஏய் ஜானு. நிஜமா இப்போ தான் குடிச்சிட்டு வந்தோம் அதான்மா” என்று அவளது முகத்தை கண்ட நரேன் விளக்க,

“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தவளது முகம் அப்படியே தான் இருந்தது.

“பார்றா பாசமலர்களை” என்று கிண்டலடித்த தீபா,

“டீ காஃபியை கொடுத்து விரட்டிடலாம்னு பாத்தியா? டின்னர் இங்க தான்” என்க,

சடுதியில் ஜானவியின் முகம் மிளிர,

“நிஜமாவா?” என்க,

அதில் தீபாவின் முகத்தில் மென்னகை தோன்றியது.

“நிஜம்மா சாப்பிட்டு இங்கேயே நைட் செட்டில் ஆக போறோம்” என்றதும்,

“இங்கேயா?” என்று திகைப்புடன் வினவினாள்.

“ஏன் தங்கவிட மாட்டியா?” என்று முறைக்க,

“இல்லண்ணி. நீங்க எப்படி இங்க தங்குவீங்க? உங்களுக்கு இங்க வசதிபடுமா?” என்று தயக்கமாக கேட்க,

“ஏன் இது வீடு தான? இல்லை காடா? தங்குறதுக்கு வீடு இருந்தா போதாதா? போய் நைட்டுக்கு மட்டன் பிரியாணி செய்” என்று அவளை விரட்ட,

நரேன் சிரிப்புடன் இருவரையும் பார்த்திருந்தான்.

“சரிங்கண்ணி. நான் சௌம்யாக்கிட்ட கறி வாங்கிட்டு வர சொல்றேன்” என்று மகிழ்வுடன் கூறியவள் அலைபேசியை எடுத்து சௌம்யாவிற்கு அழைத்து ஆட்டுக்கறி கோழிக்கறி மீன் என அனைத்தும் வாங்கி வர கூற,

“அடியே ஒரு வேளை சாப்பாட்டுக்கு எதுக்கு இவ்ளோ” என்று அதிர,

“என்னைக்கோ ஒரு நாள் வர்றீங்க. இனி எப்போ மீட் பண்ண சான்ஸ் கிடைக்குதோ அதான்” என்றாள்.

“நீ மட்டும் ஓகே சொன்னா எப்பவும் நீ எங்க கூடவே இருக்கலாம்” என்று தீபா கூற,

“ஒரு பைவ் மினிட்ஸ் கிச்சனை மட்டும் ஒதுங்க வச்சிட்டு வர்றேன்” என்றவள் நகர போக,

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம எஸ் ஆகுற?” என்று தீபா முறைக்கையிலே,

“அத்தை மாமா” என்று சிரிப்புடன் வந்து தீபாவின் கையை பிடித்து கொண்டாள் ஜீவி‌.

“ஜீவி எப்படி இருக்கடா? ஸ்டடீஸ் எப்படி போகுது?” என்று தீபாவின் கவனம் அவள் புறம் திரும்பிவிட,

இது தான் சமயம் என்று எண்ணியவள் விதுரனை தூக்கி கொண்டு சமயலைறைக்குள் நுழைந்துவிட்டாள்.

அவனை சமையலறை திண்டில் அமர வைத்தவள் பாதியில் விட்ட பணியை தொடர்ந்தாள்.

ஜானவி முடித்துவர சரியாக சௌம்யா கையில் பையும் நுழைந்தாள்.

தானும் நரேனையும் தீபாவையும் விசாரித்துவிட்டு கிளம்பினாள்.

பின்னர் ஜானவி சௌம்யா வாங்கிவந்தவற்றை எடுத்து கொண்டு சமையலறைக்குள் நுழைய தீபாவும் உடன் சென்றாள்.

நரேன் விதுரன் மற்றும் ஜீவியுடன் அமர்ந்துவிட்டான்.

ஜானவி கறியை சுத்தம் செய்ய தீபா தக்காளியை எடுத்து நறுக்கினாள்.

அதனை கண்ட ஜானவி, “அண்ணி நீங்க எதுக்கு இதெல்லாம் பண்றீங்க. வைங்க நான் பாத்துக்கிறேன்” என்று கூற,

“ஏன் நான் பண்ணா என்ன ரெண்டு பேரும் செஞ்சா வேலை சீக்கிரம் முடியும்” என்று அதட்டினாள்.

தீபா இப்படித்தான் பாசத்தை கூட அதட்டலாக தான் காண்பிப்பாள்‌.

ஜானவிக்கு தீபா மீது எப்போதும் ஒரு வியப்பு உண்டு காரணம் அவளது பின்புலம். தீபா நீர்வளத்துறை அமைச்சரின் மகள்.

ஆனால் அவளது செய்கையில் சிறிதும் பகட்டு இருக்காது. எந்த ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அனைவரிடமும் ஒரே போல பழகுவாள்.

தான் இவளிடத்தில் இருந்தால் இப்படி இருப்போமா என்பது அவளுக்கு சந்தேகம் தான்.

அதுவும் நரேனும் தீபாவும் தனக்கு செய்த உதவியை யாராலும் செய்திட முடியாது.

அதற்காவே காலம் முழுவதும் நன்றி கடன் பட்டிருக்கிறாள.

“நாளைக்கு ரிசப்ஷனுக்கு வர்றீயா?” என்று தீபா வினவ,

யோசனையில் இருந்தவள் விடுபட்டு,

“இல்லைண்ணி நான் வரலை” என்றாள்.

“ஏன் வரலை?”

“அதான் கல்யாணத்துக்கு வந்துட்டேனே”

“ஓ… கல்யாணத்துக்கு வந்தா ரிசப்ஷனுக்கு வர கூடாதா?”

“அப்படியில்லை ண்ணி. எதுக்கு தேவையில்லாம” என்று ஜானவி இழுக்க,

தீபாவிற்கு உள்ளுக்குள் அபாய மணி ஒலித்தது.

இவள் வரவில்லை என்றால் தங்களது திட்டம் என்ன ஆவது என்று எண்ணியவள்,

“நரேன் உங்க தங்கச்சி நாளைக்கு ரிசப்ஷனுக்கு வரலையாம்” என்று அங்கிருந்தவாறே குரல் கொடுக்க,

“ஏன்?” என்பது போல ஜானவி தீபாவை காண,

“ஏன்மா வரலை?” என்று நரேனும் எழுந்து வந்தான்.

அவளிடம் கூறிய அதே காரணத்தை கூற,

“நாளைக்கு நைட் எங்களுக்கு ப்ளைட் டா. ரொம்ப நாள் அப்புறம் மீட் பண்றோம். உங்கூட டைம் ஸ்பென்ட் பண்ணதான் ரிசப்ஷனுக்கு கூப்பிட்றோம்” என்க,

“இல்லைண்ணா நாளைக்கு மறுநாள் ஜீவிக்கு எக்ஸாம் இருக்கு” என்று மொழிய,

“ம்மா நான் டியூசன் முடிஞ்சு வந்து சஞ்சுவோட வீட்ல இருக்கேன்” என்றாள் ஜீவி.

சஞ்சு சௌம்யாவின் மகன் மாமியாரை மற்றும் கணவனுடன் வசிக்கிறாள்‌.

ஜானவி யோசிக்க, “ம்மா அதான் சஞ்சுவோட பாட்டி இருக்காங்கல்ல நான் இருந்துப்பேன்” என்று கூற,

“அதான் பாப்பாவே சொல்றாள்ல அப்புறம் என்ன?” என்று தீபா வினவ,

“வர்றேன்ண்ணி” என்று ஒப்பு கொண்டாள்.

நாளை விடியல் தன்னை உடைந்து போக செய்வதை உணர்ந்திருந்தால் இத்தைய பதிலை கூறியிருக்க மாட்டாளோ…?

இப்போது தான் இருவருக்கும் நிம்மதியாக இருந்தது.

பிறகு பேசியபடி சமைத்து இரவு உணவை முடித்த நேரம் நரேனுக்கு அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்றவன்,

“சொல்லுடா” என்றதிலே ஜீவானந்தம் தான் அழைத்தது என்று தெரிந்தது ஜானவிக்கு.

பேசியபடி பால்கனிக்கு சென்றவன் சில நிமிடங்களில் திரும்பி வந்து,

“தீபா, ஜீவா வீட்டுக்கு கூப்பிட்றான்” என்க,

தீபா ஜானவியை பார்த்துவிட்டு,

“ஹ்ம்ம் போகலாம்” என்க,

ஜானவியும் புன்னகையுடனே வழியனுப்பி வைத்தாள்.

என்னதான் இங்கு தங்குவதாக கூறி இருந்தாலும் நிச்சயமாக அவர்களுக்கு இங்கே வசதிப்படாது என்றே எண்ணினாள்.

ஜீவா மண்டபத்தில் வேலையை முடித்துவிட்டு மறுநாள் வரவேற்புக்கும் வேலைகளை கவனித்துவிட்டு தாமதமாக தான் வீட்டிற்கு வந்தான்.

நரேன் வந்த போது கூட வீட்டினர் தான் உபசரித்தனர்.

ஜீவா அறைக்குள் நுழைய மகனருகே படுத்திருந்த லாவண்யா பட்டென்று கண்விழித்தாள்.

“மாமா வந்துட்டிங்களா?” என்று கூந்தலை அள்ளி முடிந்தபடி அவனருகே வந்தாள்.

அவன் முகத்தை வைத்தே காலையில் இருந்து நிற்காது ஓடியதால் சோர்வாக இருப்பதை உணர்ந்தவள்,

“வேலை முடிய இவ்வளோ நேரமாகிடுச்சா? ரொம்ப டையர்டா தெரியிறிங்க” என்று அவனது சிகையை கோதினாள்.

“ஹ்ம்ம் இப்போ தான் முடிஞ்சது” என்றவன் மனைவியை கட்டி கொள்ள,

அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்து ஆழ்ந்து வியர்வை வாசத்தை இழுத்தவள்,

“வாசமா இருக்கிங்க மாமா” என்று கூற,

“உன்னை விடவா?” என்றவன் அவளை தன்னுயரத்திற்கு தூக்கி பிடிக்க,

“ஆமா” என்றவள் சிரிப்புடன் முன்னுச்சியில் ஊதினாள்.

விழிமூடி அதனை உள்வாங்கியவன் மூக்கோடு மூக்கை உரசி,

“இன்னைக்கு சேலையில அப்படி இருந்த” என்று மோகன புன்னகையுடன் கூற,

“நிஜம்மா?” என்றவள் விழிகளை சிரிப்புடன் விரிக்க,

“ஆமா அப்படியே தூக்கிட்டு போய்டலாம்னு இருந்துச்சுடி பொண்டாட்டி” என்றவன் மூக்கின் நுனியில் முத்தமிட்டான்‌.

“எங்க தூக்கிட்டு போவ மாம்ஸ” என்றவள் சிரிப்புடன் கேட்க,

ஜீவா பதில் அளிக்கும் முன் மகன் சிணுங்கினான்.

அதில் இருவரும் சட்டென்று விலக,

லாவண்யா, “தூங்குடா தங்கம்” என்று மகனை சில நிமிடம் தட்டி கொடுத்தவள்,

“போய் குளிச்சிட்டு வாங்க மாம்ஸ். நான் பால் எடுத்துட்டு வர்றேன்” என்க,

அவன் மாற்றுடை எடுத்து கொண்டு குளிக்க சென்றான்.

லாவண்யா பாலை சுட வைத்து கணவனுக்கு எடுத்து வர மகன் எழுந்து மெத்தை மீது அமர்ந்து இருந்தான்.

“எழுந்துட்டியா தங்கம்” என்று லாவண்யா மகன் அருகே செல்ல,

“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தவன் ஒரு பொம்மையை கை காண்பிக்க,

“இந்த நேரத்தில விளையாட போறீயா?” என்று லாவி அதிர,

“எடுத்து கொடும்மா” என்று மகன் உதடு பிதுக்கினான்.

“சரி சரி எடுத்து தர்றேன் அழாத” என்று அவன் கேட்டதை எடுத்து கொடுத்தாள்.

ஜீவா குளித்து வந்ததும் கண்டது விளையாடி கொண்டு இருந்த மகனையும் வேடிக்கை பார்த்தபடி இருந்த மனைவியையும் தான்.

“என்னடி இது?” என்று வினவ,

“உங்க விளையாட்டை மகன் தடுத்துட்டான் மாமா” என்று கேலிச்சிரிப்புடன் கூற,

மனைவியை பொய்யாய் முறைத்தவன் மகனிடம்,

“அதிக்குட்டி இந்த நேரத்தில என்ன விளையாட்டு தூங்குங்க நாளைக்கு விளையாடலாம்” என்க,

“நோப்பா நீயும் வா விளையாடலாம்” என்று அழைக்க,

“அதி கூப்பிட்றான்ல போய் விளையாடுங்க” என்று மனைவி நகைக்க,

மகனரியாது மனைவியின் இடையில் கிள்ளி வைத்துவிட,

“ஆ…” என்று கூச்சத்தில் துள்ளியவள்,

“மாமா” என்று சிணுங்கினாள்.

அவளை கண்டு கொள்ளாது புன்னகையை இதழ்கடையில் அதக்கியவன் மகனிடம்,

“அதி வா அப்பா ஸ்டோரி சொல்றேன்” என்க,

“லையன் ஸ்டோரியா பா?” என்று மகன் ஆர்வமானான்.

கணவன் தன்னை கண்டு கொள்ளாததாதில் கோபம் கொண்டவள் இதழை சுழித்து விட்டு படுத்து கொள்ள,

ஜீவா அதனை கண்டு கொள்ளாது மகனுக்கு கதை கூற துவங்கி இருந்தான்.

சில நிமிடங்களில் கதை கேட்டபடியே அதி உறங்கிவிட அவனை தூக்கி அருகில் இருந்த குட்டி மெத்தையில் படுக்க வைத்தவன் இரவு விளக்கை போட்டுவிட்டு படுக்க, மனைவியிடம் அசைவில்லை.

முழித்து கொண்டு தான் இருப்பாள் என்று அறிந்தவன் அருகில் செல்ல வேண்டுமென்றே விலகி படுத்தாள்.

அதில் புன்னகையுடன் அவளது இடையில் கைக்கொடுத்து தன்னுடன் இறுக்கி கொண்டான்.

“விடுங்க விடுங்க‌. போய் உங்க மகன் பக்கத்திலயே எடுத்துக்கோங்க. எதுக்கு என்கிட்ட வர்றீங்க” என்று ஊடல் கொள்ள,

“எதுக்கு வர்றேன்னு தெரியாதா?” என்று சரசத்துடன் கூறி செவிமடலில் இதழ் பதிக்க,

அதில்
கூசி சிலிர்த்தவள், “இவ்ளோ நேரம் கண்டுக்காம இருந்துட்டு இப்போ மட்டும் என்னவாம்” என்று முறுக்கி கொள்ள,

“கண்டுக்கிட்டா போச்சு விடிய விடிய இது தான் வேலையே” என்றவன் மெதுவாய் அவளுள் ஊர்ந்து அவளை ஆக்கிரமித்து கொண்டிருந்தான்.

முதலில் திமிறியவளும் பிறகு சிணுங்கி கெஞ்சி கொஞ்சி அவனுக்கு அடங்கி போனாள்.

கரை காணாத காதலும் காமமும் அவர்களை சுகமாய் அணைத்து கொண்டது…






 
Last edited:
Well-known member
Messages
964
Reaction score
712
Points
93
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Well-known member
Messages
416
Reaction score
300
Points
63
Janavi life la ennavo oru secret iruku pola athu ippo varaikkum nama ku theriyala parpom.
 
Top