• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தவம் 19

Administrator
Staff member
Messages
548
Reaction score
800
Points
93
ஜென்மம் 19:

கனவோடு தான் அடி

நீ தோன்றினாய்
கண்களால் உன்னை

புகைப்படம் எடுப்பேன்…

விழிகளை மூடி படுக்கையில் விழுந்தவளது மனக்கண்ணில் புன்னகையுடன் வந்து நின்றான் ஜீவா.

“ப்ச்…” என்று சலித்துவிட்டு திரும்பி படுக்க,

அப்போதும் சிரிப்பும் முறைப்புமாக வந்து நின்றான்.

“ப்ச் என்னடா நீ எந்த பக்கம் போனாலும் வந்து நிக்கிற” என்று முனகியவளது முகமெங்கும் புன்னகை பூத்தது.

உண்மையில் அவளுக்கு தெரியவில்லை. எப்படி எதனால் இந்த காதல் தன்னிடத்தில் தஞ்சம் புகுந்தது என்று.

எந்த புள்ளியில் தான் அவனுடன் இணைந்து போனோம் என்று பலவாறாக சிந்தித்து பார்த்தும் பதிலில்லை.

இங்கிருந்து சுற்றுலாவிற்கு செல்லும் வரை எதுவும் தெரியவில்லை. நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் என்று ஒரே கொண்டாட்டம் தான்.

அன்றைய தினத்தை கோலாலமாக கழித்துவிட்டு அறைக்கு வந்து படுத்த பிறகு தான் உள்ளுக்குள் ஏதோ செய்தது.

எதையோ இழந்தது போல உணர்வு. என்னவென்று தெரியவில்லை. நரேன் செய்தி அனுப்பியிருக்க அதற்கு பதிலனுப்பியவள் தலையணையில் முகத்தை அழுத்தி கொண்டாள்.

இதுவரை இது போல எப்போது உணர்ந்ததில்லை. என்னவோ மனது எதையோ எதிர்பார்க்கிறது.

அப்போது ‘டிங்’‌ என்ற சத்தத்துடன் வந்து விழுந்தது ஒரு செய்தி.

தலையை திருப்பி அலைபேசியை எடுத்து பார்க்க ஜீவா தான் அனுப்பி இருந்தான்.

“சேஃப்லி ரீச்சிட்” என்று செய்தி வந்திருந்தது.

அதனை பார்த்ததும் உள்ளுக்குள் உற்சாகம் குமிழிட்டது.

“ஜீவா…” என்று உதடு மெதுவாக முணுமுணுக்க,

விரல்கள் அந்த செய்தியை திறந்தது.

ஜீவாவும் அந்நொடி அவள் செய்தியை பார்த்துவிட்டதை அறிந்து பதிலுக்காக காத்திருந்தான்.

“ஹ்ம்ம் ரீச் ஆகிட்டேன் ஜீவா” என்றவள் இதழில் முளைத்த மென்னகையுடன் பதில் அளித்தாள்.

“ஹான் ஓகே என்ஜாய் யுவர் ட்ரிப்” என்று ஜீவா முடித்திட,

“ஓகே…” என்று பதில் அனுப்பிவிட்டு அலைபேசியை தூர எறிந்தவள் முகத்தை முழுவதுமாக போர்வையில் போர்த்தி கொண்டாள்.

இத்தனை நேரம் இருந்த அலைப்புறுதல் மெதுவாக அடங்கி மனது அமைதியாகி இருந்தது.

மெதுவாக ஒரு இதம் பரவுவதை மனது உணர்ந்து கொண்டது.

சடுதியில் மூளை விழித்து கொள்ள இவ்வளவு நேரம் தன் மனது தேடியது ஜீவாவையா? என்று பெரிதான கேள்வி பூதகரமாக எழுந்தது.

அடிவயிற்றில் இருந்து கிளம்பிய ஏதோ ஒன்று அது உண்மை தான் என்று கூற, இதயம் படபடவென அடித்து கொண்டது.

நொடியில் அதனை அசட்டை செய்தவள்,

“ப்ச் அதெல்லாம் ஒன்னுமில்லை. ஜீவா இஸ் மை குட் ஃப்ரெண்ட். டூ டேஸ் என்னை கூடவே இருந்து பாத்துக்கிட்டதால அப்படி தோணுது” என்று தன் எண்ணத்திற்கு மூட்டை கட்டி தூர போட்டவள் உறங்கி போனாள்.

ஆனால் மறுநாள் காலை விழித்ததுமே அலைபேசியை எடுத்ததும் அவனிடமிருந்து குறுஞ்செய்தி எதேனும் வந்துள்ளதா? என்று மனம் எதிர்ப்பார்த்தது.

“ப்ச் என்ன உனக்கு இப்போ. ஒருத்தர் உதவி செஞ்சா அவர் மேல உனக்கு விருப்பம் வந்திடுமா. சும்மாயிரு” என்று தன்னை தானே அமைதிப்படுத்தி கொண்டவள் தோழிகளுடன் ஆட்டம் பாட்டம் என்று துவங்கினாள்.

இருந்தும் ஏதோ ஒன்று இதயத்தின் ஓரம் குறைந்தது. என்னவோ சொல்லவே முடியாத வெற்றிடம்.

என்ன செய்தாலும் முதல் முறை அமைதியாக பார்த்துவிட்டு குனிந்து கொண்ட ஜீவா தனது பேச்சை கேட்டு வியப்புற்ற ஜீவா தனது வம்பிழுத்தல்களை புன்னகையுடன் கடந்து செல்லும் ஜீவா என்று பலவாறான பரிமாணங்கள் ஒவ்வொன்றாக மனத்திரையில் நழுவி சென்றது.

ஒதுக்கி தள்ள முடியாத வெற்றிடம் அவனுடையது என்று மனது அப்போதுதான் புரிந்து கொண்டது.

உணர்ந்த கணம் இதயத்தின் ஓரம் மென்சாரல் வீசியது.

உண்டு கொண்டிருந்தவள் கைகளை கழுவிவிட்டு வேகவேகமாக அறைக்கு வந்து கதவை பூட்டிவிட்டு அதன் மீது சாய்ந்து கொண்டாள்.

மூச்சு பெரிதாக வாங்கியது.‌ இதோ இந்த உணர்விற்கு பெயர் நேசம் தான் என்று புரிந்து கொண்ட நொடி மனதின் உணர்வை கூற வார்த்தைகள் வரவில்லை.

இத்தனை நாள் யார் யாரிடத்திலோ தேடிய நேசம் தன் கையருகே இருந்திருக்கிறது.

அதனை உணர்ந்து கொள்ள இந்த பிரிவு தேவைப்பட்டிருக்கிறது.

வலது கரத்தை இதயத்தின் மேல் வைத்து அழுத்தி கொண்டவளது இதழ்கள் ஊஃப் என்று பெருமூச்சை வெளியிட்டது.

‘ரிலாக்ஸ் ஜானு ரிலாக்ஸ். ஒன்னுமில்லை யு ஆர் இன் லவ் அவ்ளோதான். அதுவும் உன்னோட ஜீவாக்கிட்ட தான்’ என்று தன்னைத்தானே அமைதி படுத்தியவளுக்கு அவனிடத்தில் இதனை ஒப்படைத்துவிட்டால் மனது சமன்படும் என்று தோன்றியது.

இரண்டு நாட்கள் தான் சென்றதும் அவனிடத்தில் தன் உணர்வுகளை கொட்டிவிடலாம் என்று முடிவெடுத்து கொண்டவள் இரண்டு நாட்கள் முடிவதற்குள் தவித்து போனாள்.

எதையும் மனதில் வைத்து கொள்ளலாமல் பேசி பழகியவளுக்கு இந்த தவிப்பு புதுவித அவஸ்தையாய் இருந்தது.

அதுதான் வந்த உடனே பால்கனியில் குதித்து வந்து அவனிடத்தில் நேசத்தை அர்த்த ஜாமத்தில் ஒப்படைத்து இருந்தாள்.

இருந்தும் மனது சமன்படவில்லை. சதா அவனது நினைவுகளிலே சுற்றி வந்தது.

உணர்வுகளை உரியவனிடத்தில் கொண்டு சேர்ப்பித்த பிறகு தான் அவஸ்தை இன்னும் அதிகமாகியது போல எண்ணம் பிறந்தது.

தயங்கி தவித்து கூறிய பிறகு அவனை பார்க்க ஒருவித பதட்டம் என்னவென்று தெரியவில்லை.

அவன் முகத்தை அந்த கண்களை பார்த்து தன்னால் பேச முடியும் என்று தோணவில்லை. ஓடிவந்துவிட்டாள்.

எழுந்து வெளியே செல்ல மனம் வரவில்லை. சென்றால் அவனை பார்க்க நேருமோ என்று தவிப்புற்றது மனது.

இப்படியே தனக்குள் புலம்பியபடியே உறங்கி போனாள்.

“ஜானு ஜானு…” என்ற நரேன் கதவை தட்ட,

“ஹ்ம்ம்…” என்றவாறு புரண்டு படுத்தவள் நேரத்தை பார்க்க மதியம் ஆகியிருந்தது.

“வரேண்ணா” என்று குரல் கொடுத்தவள் எழுந்து சென்று கதவை திறக்க முயற்சிக்க,

“உடன் ஜீவா இருந்தால்?” என்று எண்ணம் ஜனிக்க, கை அந்தரத்தில் நின்றது.

“ஜானு கதவை சீக்கிரம் திற” என்று மீண்டும் நரேன் அழைக்க,

‘எப்படியும் ஒருநாள் எதிர்கொண்டு தானே ஆக வேண்டும்’ என்று தன்னை தானே சமாதானம் செய்தவள் அச்சத்துடன் கதவை திறக்க,

“எவ்ளோ நேரம் கதவை திறக்க உனக்கு” என்று திட்டியபடி உள்ளே நுழைய,

அவன் மட்டும் வந்திருப்பதை கண்டு ஆசுவாசம் அடைந்தவள்,

“தூங்கிட்டேன் ண்ணா” என்றபடி தானும் வந்து அமர்ந்தாள்.

“டூர்லாம் எப்படி போச்சு?” என்று நரேன் கேட்க,

“ஹ்ம்ம் நல்லாதான் போச்சு. உனக்கு பங்ஷன் நல்லபடியா முடிஞ்சதா?” என்று சாய்ந்தமர்ந்தாள்.

“ஹ்ம்ம் சூப்பரா போச்சு. நீயும் வந்திருக்கலாம்” என்றவன்,

“உனக்கு ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று கூற,

“என்ன?” என்றவளது குரலில் ஆர்வம் இல்லை.

நரேன் அப்போது தான் அதனை கவனித்தான். எப்போதும் அவளிடத்தில் இருக்கும் துள்ளல் இப்போது இல்லை.

“என்னாச்சு ஜானு ஏன் டல்லா இருக்க? எதாவது பிரச்சனையா?” ஒரு தீவிர குரலில் கேட்க,

“ஹ்ம்ம்…” என்று அவளது தலை மேலும் கீழும் அசைந்தது.

அவனிடத்தில் தானே கூறிவிடும் எண்ணத்தில் தான் இருந்தாள் இப்போது அவனே கேட்டுவிட்டான்.

“என்ன யாரும் எதுவும் சொல்லிட்டாங்களா?” என்றவனது குரலில் பதட்டம்.

“பிராப்ளம் எதுவும் இல்லை” என்று அவனது பதட்டத்தை கவனித்து கூறியவள்,

“நான் தான் ஒருத்தன்கிட்ட குப்புற விழுந்துட்டேன்” என்று சோகமாக கூற,

“என்ன?” என்று புரியாமல் திகைத்தவன் பின்னர் அறிந்து,

“ஹேய் யாரு அது. எதாவது சேட்டன்கிட்ட விழுந்துட்டியா?” என்றவன் திகைப்பு மாறாமல் கேட்க,

“ம்ஹூம் சேட்டன் இல்லை. தமிழன் தான்” என்று கூற,

“நாலு நாள் கல்யாணத்துக்கு போய்ட்டு வர்ற கேப்ல லவ்ல விழுந்திருக்க? யார் அந்த லக்கி பெல்லோ” என்றவன்,

“ஆள் யாருன்னு தெரிஞ்சதும் நான் நல்லா விசாரிச்சு சொல்றேன். அதுக்குள்ள போய் உளறி வைக்காத” என்றவர் அக்கறையுடன் கூற,

“ஆல்ரெடி சொல்லிட்டேனே”

“அவசர குடுக்கை. இந்த காலத்துல யாரையும் நம்ப முடியிறது இல்லை. நீ வேற விவரம் இல்லாம இருக்க” என்று நரேன் திட்ட,

“அதுக்கெல்லாம் அவசியம் இல்லை. அவன் ரொம்ப நல்லவன்”

“உனக்கு எல்லாரும் நல்லவங்க தான். கொஞ்ச நாள் பழகுனதை வச்சு யாரையும் நல்லவங்கன்னு சொல்லிட முடியாது. நான் விசாரிச்சு சரின்னு சொன்ன பிறகு தான் நெக்ஸ்ட் ஸ்டெப்” என்றவன்,

“அவன் ஓகே சொல்லிட்டானா?” என்று கேட்க,

“இல்லை. நான் பதில் எதுவும் கேக்கலை”

“சந்தோஷம் ரெண்டு நாள் அப்படியே இரு” என்றுவிட்டு,

“சரி யாரு அது உன்னை கவுத்ததுன்னு சொல்லு” என்று கேட்க,

“உனக்கு தெரிஞ்ச ஆள் தான்”

“எனக்கு தெரிஞ்ச ஆளா? நம்ம காலேஜா?”

“ஆமா”

“நம்ம ரெண்டு பேருக்கும் காமென் பர்சனா?”

“எஸ்”

“அர்ஜுன்”

“நோ”

“ஜான்”

“நோ”

“கவின்”

“நோ”

“நீயே சொல்லிடு நோ சஸ்பென்ஸ்”

“நம்ம காலேஜ் மட்டுமில்லை. நம்ம அப்பார்ட்மெண்ட் கூட” என்றவள் அவன் முகம் காண,

“நம்ம அப்பார்ட்மெண்ட்?” என்று சிந்தித்தவன் தான் நினைத்தவனை அவள் கூறிவிட கூடாது என்று எண்ணி தவிப்புடன் அவள் முகம் காண,

“ஜீவா. ஜீவா இஸ் லவ் ஆஃப் மை லைஃப்” என்று அவனது தவிப்பை கூட்டியிருந்தாள்.

“ஜானு” என்றவன் அதிர்ச்சி விலகாது அவளை நோக்க,

“ஆமாண்ணா. எனக்கே டூர் போயிருந்தப்போ தான் ரியலைஸ் ஆச்சு” என்றவள்,

“என்ன பேச்சையே காணோமே ஏதோ விசாரிக்கணும் அது இதுன்னு சொல்லிட்டு இருந்த. இப்போ சொல்லு என் ஆளு எப்படி?” என்று சிரிப்புடன் அவன் முகம் காண,

“அவன் நல்லவன் தான்” என்று நிறுத்தியவன் நிதானமாக அவள் முகம் பார்த்து,

“ஆனால் அவன் உனக்கு வேணாம்” என்றிட,

“அண்ணா” என்றவளது முகத்தில் அதிர்ச்சி அலையலையாக பரவியது.

“ஐ ஆம் சீரியஸ் ஜானு. ஜீவா உனக்கு வேணாம்” என்று அழுத்தத்துடன் கூற,

“ஏன் ண்ணா” என்றவளது குரல் முழுவதும் தவிப்பு,

“அவனுக்கும் உனக்கும் செட் ஆகாது”

“அதான் ஏன்?” என்று மீண்டும் கலங்கியவளாக கேட்க,

“அவன் ஸ்டேட்டஸ் பத்தி உனக்கு தெரியும் தான?”

“லவ்வுக்கு ஸ்டேட்டஸ் எல்லாம் பாக்கணுமாண்ணா?”

“நீ பாக்க மாட்ட. ஆனால் ஜீவா அவனோட குடும்பம்?”

“ஜீவா அந்த மாதிரியாண்ணா? இவ்ளோ நாள் நம்ம கூட பழகியிருக்கானே எப்போவாது தான் ரிச்சுனு எந்த இடத்திலயாவது காட்டியிருக்கானா?”

“ப்ரெண்ட்ஸா பழகுறது வேற. லைஃப் பாட்னரா சூஸ் பண்றது வேற ஜானு. உன்னை மாதிரியே எல்லாரும் இருக்க மாட்டாங்க”

“...”

“அவனோட பேக் ரவுண்ட் தெரியுமா உனக்கு? அவன் எவ்ளோ சொத்துக்கு சொந்தக்காரன். அவங்க அப்பாவோட ஒன் மந்த் டர்ன் ஓவர் எத்தனை கோடின்னு தெரியுமா உனக்கு? இவ்ளோ ஏன் அவன் போட்ற ட்ரெஸ் எவ்ளோன்னு தெரியுமா? அவன் ஷுவே பதினைஞ்சாயிரம் ஜானு. அது உன்னோட ஒன் மந்த் எக்ஸ்பென்ஸ்”

“...”

“வாட்ச்ல இருந்து ஷூ வரைக்கும் ப்ராண்ட் இல்லாம அவன் எதுவும் போட மாட்டான். அவனோட எக்ஸ்பென்ஸே மந்த்லி ஒன் லேக் இருக்கும். இங்க நம்ம கூட வந்து நார்மலா பழகுறதால அவனும் நம்மள மாதிரின்னு நினைச்சிட்டு இருக்கியா நீ?”

“...”

“அவனை ஸ்கூல் டேஸ்ல இருந்து பார்த்துட்டு இருக்கேன். இங்க ஹாஸ்டல் செட் ஆகலைன்னு தான் இந்த ரூம்ல தங்கி இருக்கான் அவ்ளோதான் அதுக்கே அவங்க அம்மா இங்க ஏதாவது வீடு வாங்கி தரவான்னு கேட்டாங்க. டெல்லியில போஸ் ஏரியால ஒரு தனி வீடு எத்தனை கோடின்னு உனக்கு தெரியும் தான?” என்று அவள் முகம் காண,

அவளது தலை மேலும் கீழும் அசைந்தது.

“ஹம்ம். யோசிச்சு பாரு அவனோட வெல்த்தை. அவங்க வீட்டை நீ பாத்து இருக்கியா? அதை வீடுன்னு சொல்ல முடியாது பங்களா. அவனோட ரூமே நம்ம ரெண்டு வீட்டை சேர்த்தா வராது. அவங்க நகைக்கடையை பாத்து இருக்கியா? அவங்ககிட்ட ஓர்க்கர்ஸ் மட்டும் ஐநூறு பேர் இருப்பாங்க”

“...”

“அவன் வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுத்து வைக்க கூட ஆள் இருப்பாங்க. இதெல்லாம் அவனோட ஸ்டேட்டஸ நீ புரிஞ்சுக்கணும்னு தான் சொல்றேன். அப்படியே உன்னோட நிலைமைய யோசிச்சு பாரு. உன்கிட்ட இருக்கது இந்த ரெண்டு வீடு ப்ளஸ் கொஞ்சம் நகை அப்புறம் கொஞ்சமா சேவிங்ஸ். இதெல்லாம் அவன் பக்கத்துல கூட போக முடியாது”

“...”

“ஜீவா மாதிரி பணக்காரங்களை ப்ரெண்டா தான் வச்சிக்க முடியும். வாழ்க்கைக்குள்ள கொண்டு வர முடியாது ஜானு. புரிஞ்சுக்கோ எனக்கு ஜீவாவை பத்தி நல்லா தெரியும் அவன் கண்டிப்பா உன் காதலை ஏத்துக்க மாட்டான். ஏன்னா அவன் குடும்பம் அவனுக்கு ரொம்ப முக்கியம். அவங்களை மீறி எதுவும் செய்ய மாட்டான். அவங்க வீட்டுல எந்த காலத்துலயும் உன்னை மருமகளா ஏத்துக்க மாட்டாங்க”

“...”

“நீயே சொல்லு அவங்கவங்க ஸ்டேட்ஸ்க்கு தகுந்த மாதிரி தான பொண்ணு எதிர்ப்பார்ப்பாங்க?” என்று அவளது முகம் காண,

கலங்கிய விழிகளை துடைத்து கொண்டு தலையசைத்தாள்.

“இது எல்லாத்துக்கும் மேல அவனுக்கு ஒரு மாமா பொண்ணு இருக்கு. அவளை தான் ஜீவாக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அவங்க வீட்ல எல்லாருக்கும் ஆசை. மோஸ்ட் ப்ராப்பப்லி ஜீவாக்கும் அதான் விருப்பமா இருக்கும்” என்றவன் தன் அலைபேசியை எடுத்து வந்து லாவண்யாவின் ஐ.டியை எடுத்து காண்பித்தான்.

அதில் லாவண்யா விதவிதமான உடைகளில் சிரித்தபடி நின்றிருந்தாள்.

“இதான் அந்த பொண்ணு. போர் லாவண்யா. அவங்க அப்பா க்ரானைட் பிஸ்னஸ் பண்றாரு. ஜீவாக்கும் லாவண்யாக்கும் தான் கல்யாணம்னு சின்ன வயசிலே அவங்க வீட்ல முடிவு பண்ணது” என்று அவளது காதல் செடியில் சுடு நீரை ஊற்ற,

அதில் துடித்து போனவள்,

“போதும் போதும்ணா. எனக்கு புரிஞ்சிடுச்சு. நான் என்னை மட்டும் மனசுல வச்சு எல்லாத்தையும் யோசிச்சிட்டேன். இதுல ஜீவா அவனோட விருப்பம் குடும்பம்னு நிறைய இருக்கு. நீ சொன்ன மாதிரி எனக்கு விவரம் பத்தலைதான்” என்றவளது குரல் என்ன முயன்றும் தழுதழுத்திட,

“ஜானு” என்று பரிவித்த நரேன் அவளை தோளோடு அணைத்து கொண்டான்.

மொட்டுவிட்ட நொடியிலே உயிர்விட்ட தனது நேசத்தை எண்ணி துடித்தவள் தான் வருந்தினால் நரேனும் வருந்துவான் என்று வேதனையை விழுங்கினாள்.

“உனக்கு வாய்ப்பு இருந்தா கண்டிப்பா நான் சேர்த்து வச்சிருப்பேன். ஆனால் இதுல ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை ஜானு” என்று வேதனையுடன் அவள் முகம் காண,

நொடியில் தன்னை சமாளித்து கொண்டவள், “விடுண்ணா எனக்கு வாச்சது அவ்ளோதான். கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும் அப்புறம் மறந்திடுவேன். இதென்ன பல வருஷ காதலா? ஜஸ்ட் ஆறு மாசமா தெரியும் போன வாரம் தான் இது காதல்னு நானே தெரிஞ்சிக்கிட்டேன். காலம் எல்லாத்தையும் மறக்க வச்சிடும்” என்று அவனுக்கும் தனக்கும் சேர்த்து சமாதானம் கூறியவள்,

“என்ன அவசரப்பட்டு அவன்கிட்ட சொல்லிட்டேன். என்னை நல்ல ப்ரெண்ட்டா நினைச்சு பழகி இருப்பான். இதுக்கப்புறம் எப்படி அவன் முகத்துல முழிக்க போறேன்னு தெரியலை” என்று துக்கத்தை விழுங்கினாள்.

அவளது கையை ஆதரவாக அழுத்தி கொடுத்தவன், “இவன் உனக்கானவன் இல்லை. ஜஸ்ட் பாஸிங் க்ளவுட்” என்றவன்,

“ஜீவா எதுவும் தப்பா நினைக்க மாட்டான். கீர்த்தி விஷயத்தில அவனுக்கு அட்வைஸ் பண்ணானே அது மாதிரி உனக்கும் எதாவது பண்ண நினைச்சு இருப்பான்” என்க,

“அதுக்கெல்லாம் அவசியம் இல்லை ண்ணா. அதான் நீயே நல்லா உறைக்கிற மாதிரி சொல்லிட்டியே” என்றவள்,

“நீ சொல்ற மாதிரி நான் அவசர குடுக்கை தான் கொஞ்சம் யோசிச்சு பேசியிருக்கலாம். இல்லை அவனுக்கு வேற யாராவது பிடிச்சு இருக்கான்னு கேட்டுட்டாவது பேசியிருக்கலாம். அவனுக்கு மாமா பொண்ணு மேல விருப்பம்னு தெரியாம சொல்லி” என்று பெரும் தயக்கத்துடன் நிறுத்தியவள்,

“இப்போ அவனை எப்படி பேஸ் பண்ண போறேன்னு தெரியலைண்ணா” என்று தவிப்பு நிறைந்த விழிகளுடன் நரேனை கண்டாள்.

“ப்ச் நீ இவளோ தூரம் யோசிக்கிற அளவுக்கு ஜீவா இதை எடுத்துக்க மாட்டான். நீ ஏதோ இன்பாக்சுவேஷன்ல பேசுறேன்னு நினைச்சுவிட்ருவான். அதுக்கும் மேல உனக்கு எதாவது பிரச்சனைன்னா நானே அவன்கிட்ட பேசுறேன”

“நோ வேணாம்ணா நீ பேசி இது இன்னும் கொஞ்சம் பெருசாக நான் விரும்பலை. இதை இப்படியே விட்றலாம்” என்று முடித்திட,

“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவன் அவளுக்கு தனிமை தேவையாக இருப்பதை உணர்ந்து,

“நான் போய் லஞ்ச் ரெடி பண்றேன் குளிச்சிட்டு சாப்பிட வா” என்றிட,

“ஹ்ம்ம்…” என்று மௌனமாக தலையசைத்தவள் அவன் அகன்றதும் கதவை அடைத்துவிட்டு அப்படியே குறுகி அமர்ந்து கொண்டாள்.

மனது நரேனது வார்த்தையே சுற்றி வந்தது. அவன் கூறியெதெல்லாம் கேட்ட பிறகு தனது ஆசை எவ்வளவு அபத்தம் என்று புரிந்தது.

அவன் எங்கே தான் எங்கே? ஏணி வைத்தாலும் இருவருக்கும் எட்டாதே? அதிலும் அவனுக்கு அன்னை தந்தை உடன் பிறந்தவர் உறவினர் என்று அத்தனை நபர்கள் இருக்க தனக்கு?
யாருமேயில்லை. இன்றைய நிலையில் தான் ஒரு அநாதை.

அதற்கும் மேல் அவனது செல்வநிலை என்ன? தனது ஒரு மாத செலவில் காலணி அணியும் அவன் எங்கே எண்ணி எண்ணி செலவு செய்யும் நான் எங்கே?

இவை எல்லாவற்றிக்கும் மேல் லாவண்யா அவனுடைய மாமா பெண். க்ரானைட் தொழிற்சாலை முதலாளியின் பெண். அவளுடைய அந்தஸ்த்து அழகு என எதற்கும் தான் அருகே கூட செல்ல முடியாது.

யாருமில்லாத அநாதை சிறு பெண் என்று அவன் தன்னிடம் காட்டிய பரிவை தான் தவறாக பயன்படுத்திவிட்டோமே?

என்னை பற்றி என்ன நினைத்து இருப்பான். நிச்சயம் தவறாக எண்ணியி
ருக்க வாய்ப்புண்டு.

தகுதிக்கு மீறி ஆசைப்பட்டுவிட்டேன் என்று எண்ணியவளுக்கு அழுகை பெருகியது.

தன்னை மீறி வந்த கேவலை அடக்கியவள் தாய் தந்தையர் புகைப்படத்தை எடுத்து நெஞ்சோடு அணைத்து கொண்டாள்.

அவர்களை போல தானும் ஆத்மார்த்தமான காதலுடன் வாழ வேண்டும் என்று எண்ணியது அவ்வளவு பெரிய தவறா? என்று உள்ளம் வெதும்பியது.


 
Active member
Messages
192
Reaction score
159
Points
43
So sad of Jaanu. But naren said the practicality.. even thought she slipped some where it seems.
 
Well-known member
Messages
445
Reaction score
323
Points
63
Naren sonnathu ah endha vagai la yum thappu nu solla mudiyathu yae athu nitharsanam than ah yen ippo jeeva ku enna aachi nu theriyala aana avan lavanya kooda oru nalla life vazhundhutu irukan but janu single parent ah thani ah than ah iruku ah
 
Top