தவம் 18:
நான் இங்கே
நீயும் அங்கே
இந்த தனிமையின்
நிமிஷம் வருஷமாவதேனோ…
தனது நெற்றியில் கை வைத்து பார்த்தவனிடம்,
“இப்போ பீவர் இல்லை ஜீவா குறைஞ்சிடுச்சு” என்று ஜானு புன்னகைக்க,
“ஹ்ம்ம் டெம்ப்ரேச்சர் குறைஞ்சு இருக்கு. எதுக்கும் டேப்லெட் டூ டேஸ் போடு” என்றான்.
“ஹ்ம்ம் போட்றேன் ஜீவா. நார்மல் பீவர்க்கு நீ ரொம்ப பண்ற” என்று சுகமாய் அலுத்து கொள்ள,
“எதுவுமே நாம ஒழுங்கா ட்ரீட் பண்ணலைன்னா சீரியஸ் ஆகிடும்” என்றவன் முறைக்க,
“ஓகே ஓகே அதான் சரியாகிடுச்சுல விடு” என்று ஜானவி கூற,
“ஹ்ம்ம் நைட்க்கு நானே கஞ்சி வச்சுத் தர்றேன்” என்றதும்,
“நோ…” என்று அலறியவள்,
“ரெண்டு நாளா கஞ்சி குடிச்சு நாக்கு டெத் ஆகிடுச்சு. இன்னைக்காவது காரமா ஏதாவது சாப்பிட்டுக்கிறேனே”என்று விழிகளை சுருக்கி கெஞ்ச,
வழக்கம் போல அந்த விழிகளில் தொலைந்து போனவன்,
“சரி நானே ஏதாவது லைட் காரத்துல செஞ்சு தர்றேன்” என்க,
“ஹ்ம்ம் காரசட்னி வச்சு இட்லி சுட்டுத்தா ஜீவா” என்றவள் ஆர்வமாய் விழிகளை விரிக்க,
“ஹ்ம்ம்” என்று சிரிப்புடன் தலையசைத்தவன் எழுந்து சமைக்க சென்றான்.
“ரெண்டு நாளா நீ என்னோட கேர் டேக்கர் மாதிரி ஆகிட்ட ஜீவா…” என்றவள் சமையலறையில் நின்று இருப்பவனை நோக்கி கூற,
அவனிடத்தில் மெல்லிய புன்னகை.
“ஏன் ஜீவா இங்க வந்து தான குக்கிங் கத்துக்கிட்ட நீ?” என்று ஜானவி வினவ,
“ஹ்ம்ம் ஆமா” என்றான்.
“வீட்ல இருக்கும் போது குக்கிங் ட்ரை பண்ணி இருக்கியா?”
“நோ…”
“ஏன் இன்ட்ரெஸ்ட் வரலையா?”
“இல்லை அம்மா காஃபி கப்பை கூட எடுத்து வைக்கவிட மாட்டாங்க”
“ஓ… அப்படி இருந்த நீ இங்க வந்து எனக்கு சேவகம் பண்ணிட்டு இருக்கியே உங்க அம்மாக்கு தெரிஞ்சா வருத்தப்பட மாட்டாங்களா?”
“தெரிஞ்சா தான?”
“என்னைக்காவது தெரிஞ்சா எம்மபுள்ளையை வேலை வாங்குறியான்னு என்னை தான் திட்ட போறாங்க”
“அதெல்லாம் தெரியாது. டோன்ட் வொர்ரி”
“ஏன் ஜீவா, படத்துலலாம் வர்ற மாதிரி பெரிய பங்களா அதுக்கு ரெண்டு வாட்ச்மேன் நாலு வேலைக்காரங்க கூப்பிட குரலுக்கு ஓடி வருவாங்களே அது மாதிரி இருக்குமா உன் வீடு?” என்று குறும்பு கூத்தாடும் குரலில் வினவிட, இவனிடத்தில் முறைப்பு பிறந்தது.
“ஹேய் நான் நிஜமாதான் கேக்குறேன். படத்துல பாத்து நான் யோசிச்சிருக்கேன் உண்மையில அப்படி இருக்குமான்னு” என்று ஆர்வமாக கேட்க,
“ஹ்ம்ம் இருக்கும் ஆனால் கூப்பிட்ட குரலுக்கு நாலு பேர்லாம் ஓடி வர மாட்டாங்க”
“ரியல்லி பெரிய பங்களாவா?” என்று நம்பாமல் வினவ,
“ஆமா” என்று மென்னகையுடன் தலையசைத்தான்.
“என்னை ஒரு நாள் உன் வீட்டுக்கு அழைச்சிட்டு போறீயா?” என்று ஆசையாக கேட்க,
“வாழ்க்கை முழுக்க நீ அங்கதான் வாழ போற” என்று தொண்டை வரை வந்த வார்த்தையை விழுங்கியவன்,
“கண்டிப்பா” என்று மொழிந்தான்.
“அப்போ ஓகே என் ஃப்ரெண்ட்ஸ கூட்டிட்டு ட்ரிப்புக்கு வந்திட்றேன். நீதான் சென்னையை சுத்தி காட்டணும்” என்க,
“ஹ்ம்ம்” என்று தலையசைக்க,
“லாஸ்ட் இயர் நரேன் அண்ணாவோட அது ஊருக்கு போயிருந்தேன். சூப்பரா இருந்துச்சு” என்றவள்,
“அவ்ளோ பெரிய வீட்ல இருந்துட்டு நீ எப்படி இந்த ரூம்ல இருக்க ஜீவா?”
“எவ்ளோ பெரிய இடமா இருந்தா என்ன? நாம தூங்குறதுக்கு சின்ன காட் போதாதா?” என்று வினா தொடுத்தான்.
“அது சரிதான் இருந்தாலும் எல்லா வொர்க்கையும் செய்ய ஆள் வச்சிட்டு பார்ன் வித் சில்வர் ஸ்பூன் நீ எப்படி எல்லா வேலையையும் செல்ப்பா செய்யிற?” என்று வியந்து கேட்க,
“ஏன் பணக்காரங்களா இருந்தா கொம்பா முளைச்சிடும். எங்க வேலையை நாங்க செய்ய கூடாதா?” என்று லேசான முறைப்புடன் கேட்க,
“இல்லை ஜீவா மூவிஸ்ல ஸ்டோரீஸ்ல எல்லாம் ஹீரோஸ் பெரிய பிஸ்னஸ்மேனா இருப்பான். பணம் இருக்க திமிர்ல மத்தவங்களை மதிக்க மாட்டான் அதெல்லாம் படிச்சிட்டு அப்படிதான் பணக்காரங்க இருப்பாங்கன்னு நினைச்சு வச்சிருந்தேன்” என்று சிரிப்புடன் கூற,
“அதெல்லாம் பொய். எல்லாரும் அப்படி இருக்க மாட்டாங்க” என்றான்.
“எல்லாரும் அப்படி இல்லை தான். ஆனால் என் க்ளாஸ் மேட் ஒருத்தி இருக்கா. ரிச்தான் ஆனா என்னம்மா சீன் போடுவா. எங்களை எல்லாம் ஒரு மாதிரி இளக்காரமா பாப்பா ஜீவா அதான் அப்படி கேட்டேன்”
“நான் உன்கிட்ட அப்படியா நடந்துக்கிறேன்”
“நோ நீ ரொம்ப ஸ்வீட் ஜீவா” என்றவள் அவனது கன்னத்தை கிள்ள இவனுக்கு புன்னகை முகிழ்ந்தது.
அந்த கரத்தை அப்படியே பிடித்து வைத்திருக்க தோன்றிய மனதை அடக்கிவைத்தான்.
“உங்க நகைக்கடை நேம் என்ன ஜீவா?”
“மங்களம் ஜுவல்லரி”
“மங்களம் யாரு?”
“என் பாட்டி நேம். தாத்தா வொய்ஃப் நேம்ல ஸ்டார்ட் பண்ணாரு”
“ஓ…” என்றவள் தனது அலைபேசியை எடுத்து நகைக்கடை பெயரை போட்டு தேட நிறைய காணொளி புகைப்படங்கள் வந்தது.
அவற்றை எல்லாம் எடுத்து பார்த்துவிட்டு,
“என்ன ஜீவா கடைன்ற பேர்ல கடல் மாதிரி வச்சு இருக்கிங்க” என்றவள் வியப்பில் விழி விரிக்க,
“அது மெயின் பிரான்ஞ் கொஞ்சம் பெருசா தான் இருக்கும். மத்த பிரான்ஞ் சின்னது தான்”
“ஓ… எத்தனை பிரான்ஞ் வச்சிருக்கிங்க?”
“ஏழு”
“ஓ…” என்று இழுத்தவள்,
“படிச்சு முடிச்சிட்டு எதாவது ஒரு கடையை டேக் ஓவர் பண்ணி ஜாலியா உட்காந்துடுவேல ஜீவா” என்று வினவிட,
“நோ எனக்கு நகைக்கடை பிஸ்னஸ்ல இன்ட்ரெஸ்ட் இல்லை” என்று மறுத்தான்.
“அப்புறம் என்ன பண்ண போற?”
“எனக்கு ஒரு பெரிய ரெசிடென்சி ஓபன் பண்ணணும்னு ஆசை”
“ஓ… பெருசா காலேஜ் பக்கத்துல இருக்கே ஜி.கே.டி ரெசிடென்சி அது மாதிரியா?”
“ஹ்ம்ம் ஆமா”
“நானே ஒரு நல்ல ப்ளேஸ் தேடி பாத்து வாங்கி நான் ஆசைப்பட்டபடி டிசைன் பண்ணணும்” என்று தனது ஆசையை கூற,
“வாவ் சூப்பர் ஜீவா. நல்ல ஐடியா” என்று மகிழ்வுடன் வாழ்த்தினாள்.
“என்னை பத்தி கேக்குறியே? நீ என்ன பண்ண போற? உனக்கு இந்த மாதிரி பிஸ்னஸ் ஐடியா இருக்கா?”
“பிஸ்னஸ் பண்றதுக்கெல்லாம் இன்வெஸ்ட்மென்ட் வேணும் ஜீவா. என்கிட்ட அதெல்லாம் இல்லை. படிச்சு முடிச்சிட்டு எனக்கேத்த வேலையா தேடி செட்டில் ஆகிடுவேன்” என்றவளது குரலில் இருந்த நிராசையை கண்டவன்,
“உனக்கு பிஸ்னஸ் பண்ற ஆசை இருக்கு தான?” என்று கேட்க,
“ஹ்ம்ம் இருக்கு” என்று ஒப்பு கொண்டவள்,
“பெருசா இல்லை. சின்னதா ஒரு பொட்டிக் வைக்கணும். அவ்ளோதான்” என்று முடித்திட,
“லோன் ட்ரை பண்ணலாம்ல” என்று அவளை ஊக்குவிக்க,
“லோனெல்லாம் கட்ற அளவுக்கு நான் பெரியாள் இல்லை” என்றவள்,
“இப்போதைக்கு யூஜி முடிச்சிட்டு எம்.பி.ஏ பண்ணனும். அப்புறம் வேலைக்கு போய் சம்பாதிச்சு கொஞ்சம் பணம் சேத்துட்டு அதை வச்சு பிஸ்னஸ் பண்ணனும்” என்றவள்,
“ஜீவா நான் படிச்சு முடிக்கும் போது நீ ரெஸிடென்சியை கட்டி முடிச்சிருப்பேல நீயே எனக்கொரு வேலை போட்டு தர்றீயா?” என்று ஆர்ப்பரிப்புடன் வினவ,
‘முதலாளியாக போறவ வேலை கேக்குறா’ என்று நினைத்து புன்னகைத்தவன்,
“ஹ்ம்ம் சரி” என்க,
“என்ன ஜீவா சிரிக்கிற? இப்படி விளையாட்டு தனமா இருக்காளே எப்படி வேலை போட்டு தர்றதுன்னு யோசிக்கிறியா? நான் வேலைன்னு வந்துட்டா சின்சியரா இருப்பேன் பிலீவ் மீ” என்று கண்சிமிட்ட,
அவனது புன்னகை இமை நீண்டது.
“இப்போ ஓகே சொல்லிட்டு அப்புறம் வேலை தரமாட்டேன்னு சொல்ல மாட்டியே?” என்று சந்தேகமாய் இழுக்க,
“ம்ஹூம் மாட்டேன்” என்று கூறினான்.
“அப்போ ஓகே எனக்கு ஒரு ஜாப் ரிசர்வ்டு” என்று சிரிக்க, ஜீவாவின் அலைபேசி இசைத்தது.
“நீ போய் பேசு ஜீவா நான் பாத்துக்கிறேன்” என்று ஜானவி கூற,
“இல்லை நான் ஸ்பீக்கர்ல போட்டு பேசிக்கிறேன்” என்றவன் ஒலிப்பெருக்கியில் போட்டுவிட்டு வேலையை தொடர,
தாயிடமிருந்து வழக்கமான விசாரிப்பு வந்தது.
“சாப்பிட்டியா ஜீவா?” என பரமேஸ்வரி வினவ,
“இல்லைம்மா இனிமேல் இப்போதான் செஞ்சிட்டு இருக்கேன்” என்று பதில் அளித்தான்.
“நீ ஏன் பா சமைச்சு கஷ்டப்பட்ற. வெளியில வாங்கிக்க வேண்டியது தான? ஆர்டர் பண்ணா வீட்லயே கொண்டு வந்து கொடுக்குறாங்களே” என்றவர் வருந்தும் குரலில் கேட்க,
“ம்மா ஒரு ஆளுக்கு சமைக்க எவ்ளோ நேரம் ஆக போகுது” என்று ஜீவா மொழிய,
“நான் வேணா நம்ம முத்துவ சமைக்க அனுப்பி வைக்கவா?” என்று தாய் கேட்க,
“வேணாம்மா. என் ஒரு ஆளுக்கு சர்வன்ட்டா” என்று தாயை சமாளித்து முடித்தவன் தந்தையிடம் பேச,
அடுத்தடுத்து உடன் பிறந்தவர்கள் வரிசையாக பேசினார்கள்.
பேசியபடியே சமையலை முடித்து இருந்தான்.
“ஒரு ஆளுக்கு குக் எல்லாம் ஓவர் ஜீவா” என்று ஜானவி கூற,
“நான் சமைச்சு கஷ்டப்பட்றேன்னு சொன்னாங்க” என்க,
“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவள்,
“வீட்ல நிறைய பேர் இருந்தா சூப்பரா இருக்கும்ல. ஜாலியா அடிச்சு புடிச்சு விளையாடிட்டு” என்றவளது குரலில் அப்பட்டமான ஏக்கம்.
அதனை கவனித்தவன் அமைதியாக தலையசைக்க,
“உனக்கு நிறைய பேமிலி மெம்பர்ஸ் இருந்தா பிடிக்குமா?” என்று வினவிட,
“ஹ்ம்ம் ரொம்ப” என்று கண்கள் மின்ன கூறியவள்,
“ஒரு பெரிய குடும்பத்தில இருக்க பையனா பாத்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கணும்” என்று கூற,
இவனது இதழில் புன்னகை மிளிர்ந்தது.
“ஹ்ம்ம் வேற என்ன ஆசை இருக்கு?”
“குறைஞ்சது மூனு பிள்ளைங்களாவது பெத்துக்கணும். வீடு முழுக்க அதுங்க விளையாட்றதை பாத்து சந்தோஷப்படணும்” என்று ஆர்வமாய் கூற,
இவனுக்குள் சில்லென்று சாரல் மழை.
“உன் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்” என்று கூற,
“தாங்க்யூ” என்று தலை குனிந்து ஏற்று கொண்டவள்,
“சாப்பிடலாமா பசிக்கிது?” என்று கேட்க,
“ஹ்ம்ம்” என்றவன் உணவை எடுத்து வைக்க,
இருவரும் பேசியபடியே உணவை உண்டனர்.
“ஹ்ம்ம் கார சட்னி சூப்பர் ஜீவா” என்று விழிகளை மூடி சப்பு கொட்டியவளை கண்டு மென்னகை எழுந்தது.
இதற்காகவே இவளுக்கு வாழ்க்கை முழுவதும் சமைத்து போடலாம் என்று தோன்றியது.
உண்டு முடித்ததும்,“ஓகே ஜீவா. குட் நைட்” என்றவள்
“நான் போய் ட்ரிப்க்கு ட்ரெஸ் எல்லாம் பேக் பண்றேன்” என்று குதூகலித்தாள்.
“ஹான் மார்னிங் எத்தனை மணிக்கு பஸ் வரும்?”
“ஆறு மணிக்கு ஜீவா”
“மார்னிங் எழுந்து பச்சை தண்ணீல கூலிங்கா குளிக்காத”
“ஹீட்டர் போட்டுக்கிறேன் ஜீவா. நீ நரேனுக்கு மேல இருக்க” என்று சலித்து கொள்ள,
‘மியாவ்’ என்று சத்தம் கேட்டது.
“என் புஜ்ஜிக்குட்டி தூங்கி எழுந்திடுச்சா பால் குடிக்கிறியா?” என்றபடி அதனை தூக்கி கொண்டாள்.
“ஹ்ம்ம் ஹில் ஸ்டேஷன், சீசன் டைம் வேற பாத்து போய்ட்டு வா. மார்னிங் ட்ராப் பண்ண வரவா?”
“இல்லை ஜீவா எல்லாரும் சேர்ந்து தான் போறோம் கேப் புக் பண்ணிக்கிறோம்” என்று முடித்து கொள்ள,
அவளை நான்கு நாட்கள் பார்க்க முடியாதே என்று ஏக்கம் உள்ளூர அரித்தது.
நான்கு நாட்கள் தானே என்று தன்னை தானே சமாதானம் செய்தவன் வந்து படுக்கையில் விழுந்தான்.
நான்கு நாட்களுக்கு தேவையான உடையை எடுத்து வைத்தவள் குதூகலத்துடன் உறங்கி போனாள்.
காலை எழுந்து குளித்து முடித்து தயாரானவள்,
“ஜீவா” என்று அவனது கதவை தான் தட்டினாள்.
ஜானவியை வழியனுப்பவென அவன் முன்பே எழுந்திருந்தான்.
கதவை திறந்ததும், “குட் மார்னிங் ஜீவா” என்று அழகாய் புன்னகைத்தாள்.
“குட் மார்னிங்” என்றவனுக்கு விடியல் அவ்வளவு அழகாய் தோன்றியது.
“டிஸ்டர்ப் பண்ணிட்டேனா ஜீவா?”
“இல்லை நான் முன்னாடியே எழுந்துட்டேன்”
“ஓ… ஓகே ஓகே. ஜீவா நான் போய்ட்டு வர்ற வரைக்கும் நீ தான் என் செல்லக்குட்டியை பத்திரமா பாத்துக்கணும்” என்று மொழிய,
“சரி” என்று தலையசைத்தான்.
“சேட்டை பண்ணாம இருக்கணும் புஜ்ஜி” என்றவள் அதன் தலையை தடவி கொடுத்து,
“என்னைவிட ஜீவா உன்னை ரொம்ப நல்லா பாத்துப்பான்” என்க,
இவன் புன்னகை செவிவரை நீண்டது.
“ஜானு டைம் ஆச்சு வாடி” என்று கீர்த்தி அழைக்க,
“ஓகே ஜீவா பாய் நான் கிளம்புறேன்” என்க,
“ஹ்ம்ம் பாத்து போய்ட்டு வா. ரீச் ஆகிட்டு மேசேஜ் போடு” என்று அனுப்பி வைக்க,
ஜானவி தோழிகளுடன் வர்காலா பயணமானாள்.
வர்காலா சென்றதும் அவனுக்கு செய்தி அனுப்பியவள் அதன் பிறகு பிஸியாகி போனாள்.
அவளை அனுப்பி வைத்தவனுக்கு தான் ஏதோ என்று குறைந்தது.
“ஜீவா...” என்று ஆர்ப்பாட்டமாய் கெஞ்சலாய் கோபமாய் முறைப்பாய் என்று அழைப்பவளின் குரலை மிகவும் தேடினான்.
நரேனும் இல்லாததால் நாள் சற்று மந்தமாக சென்றது. வீட்டிற்கு சென்று வரலாமா என்று கூட தோன்றியது.
சென்றால் உடனே கிளம்ப முடியாது என்று அந்த முடிவை கைவிட்டான்.
அதோ இதோவென நாளை நெட்டி தள்ள நாளை காலை இருவரும் வந்துவிடுவார்கள் என்று சமாதானம் செய்து உறங்க சென்றான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனுக்கு, “ஜீவா ஜீவா” என்ற ஜானவியின் குரல் கேட்க,
‘ப்ச் கனவு’ என்று எண்ணியபடி திரும்பி படுத்தான்.
மீண்டும் கேட்க விழிகளை திறந்தான்.
நிஜத்தில் அவள் கதவை தட்டி கொண்டிருந்தாள்.
நேரத்தை பார்க்க காலை நான்கு மணியாகிருந்தது.
போர்வையை சட்டென்று விலக்கியவன் எழுந்து கதவை திறக்க,
“நான் வந்துட்டேன் ஜீவா” என்றவள் சிரிப்புடன் அவனை அணைத்து கொள்ள,
“இந்த நேரத்துல எப்படி வந்த?” என்பது தான் அவனது கேள்வியாக இருந்தது.
“சார் கேப் பிடிச்சு கொடுத்தாங்க ஜீவா” என்று விலகியவள்,
“மிஸ் யூ ஜீவா” என்று மெது குரலில் முணுமுணுத்துவிட்டு,
“டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று வினவிட,
இவனது தலை சிரிப்புடன் எல்லா பக்கமும் அசைந்தது.
“டிஸ்டர்ப் பண்ணாலும் பரவாயில்லை உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் அதான் வந்தேன்” என்று கூற,
“என்ன?”
என்று அவனது புருவம் உயர்ந்தது.
அவனது விழியோடு விழி நோக்கியவள்,
“ரெண்டு நாளா எப்படா டூர் முடியும் உன்னை பாத்து பேசலாம்னு காத்திருந்து ஓடி வந்தேன் ஜீவா” என்றவள் முகத்தை வேறு புறம் திருப்பி,
“இந்த ஜீவாக்கிட்ட தான் என் ஜீவன் இருக்கு” என்றிட,
இவ்வளவு நேரம் சிரிப்புடன் நின்று இருந்தவன், “என்ன?” என்று திகைப்புடன் நோக்கினான்…