• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தவம் 17

Administrator
Staff member
Messages
548
Reaction score
800
Points
93
தவம் 17:

இளமாறன் கண்ணுக்கு

எப்போதும் நான் அழகு…

கோயம்புத்தூர் செல்லும் ரயில் இன்னும் இருபது நிமிடங்களில் புறப்படும் என்று அறிவிப்பு வர ஜீவாவும் நரேனும் அந்த ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர்.

ரயிலில் ஏறுவதற்கு ஆங்காங்கு ஆட்கள் கையில் பையுடன் நிற்க,

“எந்த கோச்டா?” என்று ஜீவா வினவ,

“எஸ் டூல பிப்டி நைன்டா” என்று நரேன் கூற,

“இந்த லாஸ்ட்ல தான் வரும். வா” என்ற ஜீவா நடக்க துவங்க, நரேன் அவனை பின் தொடர்ந்தான்.

ஐந்து நிமிடத்தில் எஸ் டூ கம்பார்ட்மென்ட்டை இருவரும் அடைந்தனர்.

“நீ உட்காரு. நான் சாப்பிட எதுவும் வாங்கிட்டு வர்றேன்” என்று ஜீவா மொழிய,

“இல்லைடா வேணாம். ஆப்டர்நூன் சாப்டதே ஹெவியா இருக்கு” என்று நரேன் மறுக்க,

“சரி ஸ்னாக்ஸ் ஜூஸ் எதுவும் வாங்கிட்டு வர்றேன்” என்று ஜீவா கடையை நோக்கி செல்ல,

நரேன் ரயிலில் ஏறி தனது சீட்டை பிடித்து அமர்ந்தான்.

இரண்டு நிமிடத்தில் ஜீவாவும் தின்பண்டங்கள் வாங்கி வந்தான்.

“எதுக்கு டா இவ்வளோ?” என்று கேட்டபடி நரேன் பையை வாங்கி வைத்துக் கொள்ள,

ரயில் கிளம்புவதற்கான அறிவிப்பு வந்தது.

“சரிடா நான் கிளம்புறேன்” என்று ஜீவா கூற,

“ஹ்ம்ம் மழையா இருக்கு பாத்து ட்ரைவ் பண்ணுடா” என்று நரேன் கூற,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவன் இறங்கி கொள்ள,

“ஜானுவ பாத்துக்கோடா” என்று நரேன் கூற,

“ஹ்ம்ம்” என்றவனது மனக்கண்ணில் அவளது புன்னகைத்த முகம் நழுவி சென்றது.

“மழையில நனைஞ்சு பீவரை இழுத்துக்குவா. நான் சொல்லிட்டு தான் வந்து இருக்கேன் நீயும் கண்டிச்சு வை‌‌. அதுவும் அவ ஃப்ரெண்ட்ஸ் கூட்டத்தோட சேர்ந்தா நாம பேச்சை கேக்கவே மாட்டா” என்று அக்கறையில் துவங்கி சலிப்புடன் முடிக்க,

இவனுக்கும் அவளது சேட்டையை எண்ணி புன்னகை முகிழ்ந்தது.

“சரி” என்க,

“ஹ்ம்ம் நான் இங்க இருக்க வரை தான் அவளை பாத்துக்க முடியும் அதுக்கப்புறம் என்ன பண்ண போறேன்னு தெரியலை” என்றவன் வருத்த குரலில் கூற,

சடுதியில் இவனுக்கு உள்ளத்தின் ஓரம் பாரமேறியது. இங்கிருந்து சென்ற பிறகு அவளை பார்க்க இயலாது அதற்கு மேல் தனியாக என்ன செய்வாள்.

இந்த உலகத்தை தனியாக எப்படி எதிர்கொள்வாள் என்று கேள்விக்கணைகள் அவனை தாக்கியது.

என்னவோ இப்போதெல்லாம் அவளை விட்டுவிட கூடாது என்ற எண்ணம் தன்னுள் வலுப்பெறுவதை அவன் உணர்ந்தே இருந்தான்.

அவளை தன் வாழ்வில் இணைத்து கொள்வதற்கான வழிகளை மூளை சிந்திக்க துவங்கி இருந்தது.

“அப்பார்ட்மெண்ட்ல இருக்கவங்க பாத்துப்பாங்க தான் இருந்தாலும் என்னால அவளை அப்படி விட முடியாது” என்றவன் ஜீவாவின் சிந்தையை கலைத்திட்டான்.

ஜீவா எதுவும் கூறாது நோக்க,

“நானும் தீபாவும் இதுக்கு தான் யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்து இருக்கோம். என்னோட மாமா மகன் தினேஷ் இருக்கானே அவன் நல்ல பையன் அவனை ஜானுக்கு கல்யாணம் பண்ணி வச்சா என் கூடவே இருப்பா. நல்லா பாத்துக்கலாம்” கூற,

சடுதியில் ஜீவாவிடத்தில் அதிர்ச்சி அலையலையாய் பரவியது.

எல்லாம் ஒரு கணம் தான் பிறகு புதிதாய் கோபம் முளைத்தது.

தன்னவளுக்கு வேறு ஒருவனை பார்ப்பதா என்று? அதுவும் இதுவரை நேரில் பார்த்திராத தினேஷ் மீது வெறுப்பு பொங்கியது.

முகத்தில் உணர்வுகளை காண்பிக்காதிருக்க பிரம்ம பிரயாத்தனம் பட்டவன்,

“ட்ரெயின் கிளம்பிடுச்சு. அப்புறம் பேசலாம்” என்று அந்த பேச்சிற்கு முற்று புள்ளி வைத்தவன்,

“ரீச்சாகிட்டு மெசேஜ் போடு” என்றவன் விறுவிறுவென வெளியே வந்தான்.

இரவு நேரத்தின் குளுமையை அதிகரிக்கும் விதமாக மழை அடித்து ஊற்றி கொண்டிருந்தது.

தனது ரெயின் கோட்டை எடுத்து மாட்டி கொண்டவன் வீட்டை நோக்கி பயணமானான்.

நரேனின் பெரியப்பா மகனுக்கு திருமணம் அதற்காக தான் ஒரு வாரம் விடுப்பெடுத்து ஊருக்கு சென்று கொண்டிருக்கிறான்.

மழையின் வேகத்திலும் போக்குவரத்து நெரிசலிலும் சென்று கொண்டிருந்தவனது எண்ணம் முழுவதும் நரேன் கூறிய வார்த்தைகள் தான் ஓடியது.

அதுவும் ஜானவிக்கு வேறு ஒருவனுடன் திருமணமா? நினைப்பே பாகற்காயாய் கசந்தது.

அவளை வேறு ஒருவனுடன் சேர்த்து கற்பனை கூட செய்ய மனது வரவில்லை.

இவன் யார் என்னுடையவளுக்கு துணையை தேட என்று உற்ற நண்பன் மீதே கோபம் தாறுமாறாக பெருகியது.

என்னவோ இந்த பிறவியில் தன்னால் அவளை விட முடியாது என்றே தோன்றியது.

அவளை எண்ணியதும் உள்ளிருந்து கிளம்பும் சுகமான பூகம்பத்தை அவளை தவிர இந்த ஜென்மத்தில் யாராலும் கொடுக்க இயலாது என்று புரிந்தது.

மனதிற்குள் கோபம் குழப்பம் எப்படி அனைத்தையும் சரி செய்து அவளை தன் வாழ்வில் இணைக்க போகிறோம்.

பெற்றோரை குடும்பத்தினரை உறவினர்களை எவ்வாறு சமாளிக்க போகிறோம் என்று பெரிதான கேள்வி.

இருந்தும் மனதினோரம் இவளை விட்டுவிடாதே என்று ஒரு குரல் கூச்சலிட்டது.

இதுவரை தான் கேட்டு எதையும் மறுக்காத பெற்றோர் காதலை நிச்சயமாக ஏற்று கொள்வார்கள் என்று ஒரு மனம் கூற மற்றொரு மனமோ லாவண்யாவை தனக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தில் இருக்கும் பெற்றோர் கண்டிப்பாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றது.

இதனை நினைத்தாலே கண்ணை கட்டி கொண்டு வந்தது‌.

இவையாவிற்கும் முன் நரேன் கூறிய தினேஷ் விடயத்தை முடிக்க வேண்டும்.

ஆனால் எப்படி என்று தான் புரியவில்லை. ஆனால் எதாவது செய்து நரேனது பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று நினைத்தபடியே வாகனத்தை ஓட்டியவன் எப்போதும் தான் நிறுத்துமிடம் நோக்கி சென்றவன் எதிரில் தெரிந்த உருவத்தை கவனித்துவிட்டு நொடியில் நிறுத்தி இருந்தான்.

“அம்மாடி” என்று என்று நெஞ்சில் கை வைத்தபடி தொப்பலாக நனைந்திருந்த ஜானவி ஜீவாவை கவனித்துவிட்டு,

“ஊஃப் நீ தானா ஜீவா. பயந்துட்டேன்” என்று ஆசுவாசமாக மொழிய,

தன்னை கண்டதும் நிம்மதியில் மிளிர்ந்த விழிகளை கண்டதும் மற்ற நினைவுகள் யாவும் பின்னோக்கி சென்றது.

“இங்க என்ன பண்ற?” என்று ஜீவா வினவிட,

“இங்க பாரு ஜீவா” என்றவள் கையில் இருந்த பூனைக்குட்டியை காண்பித்து,

“பாவம் ஜீவா இதை இங்க யாரு விட்டுட்டு போனான்னு தெரியல மழையில நனைஞ்சிட்டு இருந்துச்சு அதான் ஆதரவு கொடுத்தேன்” என்று புன்னகைக்க,

அந்த புன்னகையில் இதயம் இளகியது.

இதழில் தோன்றிய மென்னகையை மறைத்து,

“அதுக்கு இப்படி தான் மழையில நனைஞ்சிட்டு இருப்பியா?” என்று அதட்டினான்.

“சாப்பாடு வாங்க வந்தேன் ஜீவா. அதுக்குள்ள மழை பிடிச்சிடுச்சு” என்று மொழிய,

“நீ மழைய பாத்தா நனையாம இருக்க மாட்ட. கண்டிச்சு வைன்னு நரேன் சொல்லி அனுப்புனான்” என்று ஜீவா புருவம் உயர்த்த,

“அண்ணா எப்போ பாரு அப்படிதான். விடு ஜீவா ஒன்னும் ஆகாது” என்றவள்,

“வீட்டுக்கு போகலாம்‌. பாரு இது எப்படி நடுங்குதுன்னு” என்று நடக்க,

தானும் அவளுடன் நடந்தான்.

“உனக்கு குளிருதா தங்கம். வீட்டுக்கு போய் துவட்டிவிட்றேன்” என்று பூனைக்குட்டியுடன் பேசியபடி நடக்க,

ஜீவா புன்னகை சுமந்த வதனத்துடன் அவளை தொடர்ந்தான்.

தன்னை கண்டதும் நிம்மதியை அடைந்த அந்த விழிகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றே தோன்றியது.

தான் எண்ணப்போக்கை உணர்ந்தவன் இதழ்கள் இமை நீள,

“என்ன ஜீவா தனியா சிரிச்சிட்டு வர்ற?” என்று சிரிப்புடன் விழிகளை உயர்த்த,

“ம்ஹூம். நத்திங்” என்றவன் வீட்டை அடைந்தான்.

“சரி ஜீவா நான் போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு தங்கத்துக்கு பால் ஆத்தி கொடுத்துட்டு வர்றேன் நாம சாப்பிடலாம் உனக்கும் சேர்த்து தான் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்றவள் வீட்டினுள் நுழைய,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவன் உள்ளே நுழைந்து உடை மாற்றிவிட்டு வீட்டிற்கு அழைத்து பேச துவங்கினான்.

இங்கு ஜானவி பூனைக்கு துவட்டி நடுக்கத்தை சரி செய்து சூடான பாலை அதற்கு பருக கொடுத்தவள் தானும் உடை மாற்றியவள் உணவினை எடுத்து கொண்டு பக்கத்து வீட்டினுள் நுழைந்தாள்.


“ஜீவா சாப்பிடலாமா?” என்று கேட்டபடி வர,

வீட்டினருக்கு அலைபேசியில் பேசி கொண்டு இருந்தவன் திரும்பி,

“டூ மினிட்ஸ்” என்று இதழசைக்க,

“அவசரம் இல்லை பேசிட்டு வா” என்றவள் தனது பூனைக்குட்டியையும் தூக்கி வந்து அருகில் அமர்த்தி கொண்டு அதனுடன் பேச துவங்கினாள்.

“பூனையோட பேச்சு வார்த்தையா?” என்றபடி ஜீவா வர,

“ஆமா சீக்ரெட் பேசுறோம்” என்று சிரித்தவள்,

“இட்லிதான் இருந்துச்சு ஜீவா. உனக்கு ஓகே தான?” என்று வினவினான்.

“ஹ்ம்ம்” என்று ஜீவா தலையசைக்க,

“பிடிக்கலைன்னா சொல்லு ஜீவா நான் வேற எதாவது பண்ணி தர்றேன்” என்று மீண்டும் வினவிட,

“இதுவே போதும் இட்லி ஓகே தான்” என்றான்.

“இல்லை இங்க கொஞ்சம் சாப்பாடு சுமாரா தான் இருக்கும். உன்னை கேட்காம வேற வாங்கிட்டு வந்துட்டேன். உனக்கு பிடிக்கலைன்னா” என்றவள் தயக்கத்துடன் இழுக்க,

அவளது தயக்கத்தை கண்டு முறுவல் புரிந்தவன்,

“ஒரு நாள் தான சாப்பிட்டுக்கலாம்” என்றவன்,

“அப்புறம் நீ ஏன் இவ்ளோ தயங்குற நான் ஒன்னும் வானத்தில இருந்து குதிச்சு வரலை. சாதாரண மனுஷன் தான் கிடைக்கிற சாப்பாட்டை சாப்பிட்டுக்குவேன்” என்று இங்கு வந்து பழகியதில் கூற,

“சரிதான் ஜீவா‌. இருந்தாலும் அண்ணன் சொல்லி இருக்கு நீங்க பெரிய இடம்னு” என்க,

“பெரிய இடம் சின்ன இடம்னு என்ன பேச்சு இது. பசிச்சா எல்லாரும் சாப்பாடு தான் சாப்பிடுவாங்க” என்றவன் அந்த பேச்சை வளர்க்க பிடிக்காமல்,

“எனக்கு பசிக்கிது சாப்பிடலாமா?” என்று வினவிட,

“ஹ்ம்ம் சாப்பிடலாம்” என்றவள் இருவருக்கும் சாப்பாட்டை பரிமாறினாள்.

ஜீவா இட்லியை பிய்த்து வாயில் வைக்க ஜானவி அவனது முகத்தை தான் பார்த்திருந்தாள்.

ஒரு விள்ளல் உண்டதுமே ஜீவாவிற்கு ஜானவி கூறியது உண்மை தான் என்றே தோன்றியது.

ஏனெனில் உணவு மிகவும் சுமாராக இருந்தது.

டெல்லிக்கு வருவதற்கு முன்னிருந்த ஜீவாவாக இருந்தால் அடுத்த வாய் வைத்திருக்க மாட்டான்.

ஆனால் இப்போது இருப்பதோ ஜானவியின் ஜீவா ஆகிற்றே.

அவளது சிறு முக சுணக்கத்தையும் விரும்பாதவன்,

“நல்லாதான் இருக்கு அவ்ளோ மோசமில்லை” என்றிட,

ஜானவியின் முகத்தில் ஆசுவாசம் ஜனித்தது.

வழக்கம் போல அவனுக்கும் சேர்த்து வாங்கி வந்து உணவுண்ண அழைத்துவிட்டாள் தான். அதன் பிறகு தான் தானே இந்த கடை உணவை பெரும்பாலும் விரும்ப மாட்டோம் அவன் எப்படி உண்பான் என்று தோன்றியது. அதன் பொருட்டே இதனை கேட்டாள்.

அவளுடன் இரவு பொழுதில் தனிமையில் பேசியபடி உண்ணும் உணவு அவனுக்கு தோவாமிர்தமாக தோன்றியது.

இந்நொடி நீள கூடாதா? என்று உள்ளதில் ஏக்கம் ஜனித்தது.

பேசியபடி இருவரும் உண்டு முடிக்க ஜானவி,

“ஓகே ஜீவா நானும் புஜ்ஜியும் கிளம்புறோம் குட் நைட்” என்று ஜானவி எழுந்து கொள்ள,

“புஜ்ஜி?” என்றவன் புருவம் உயர்த்த,

“இதோ என் செல்லக்குட்டி தான். இப்போதான் பேர் வச்சேன் நல்லா இருக்கா?” என்று கண்சிமிட்ட,

அந்த பாவனையில் மனது நூறாவது முறையாக காதல் கொண்டது.

“நல்லா இருக்கு” என்றவனது முகம் மென்னகை முகிழ்ந்தது.

“குட் நைட் ஜீவா” என்றவள் எழுந்து கொள்ள,

“என்னைவிட்டு போகாதடி” என்று அரற்றிய மனதை அடக்கியவன்,

“எனக்கு காஃபி குடிக்கணும் போல இருக்கு. உனக்கு வேணுமா?” என்று அவளை இருக்க வைக்க திட்டம் தீட்டினான்.

“வொய் நாட் மழைக்கு சூடான காஃபி சூப்பரா இருக்கும். நானே போட்டு கொண்டு வர்றேன்” என்று அடுக்களைக்கு செல்ல புஜ்ஜியும் அவளை பின்தொடர்ந்து சென்றது.

அவளது இருப்பே அவனுக்கு அவ்வளவு நிறைவை கொடுத்தது.

“பின்னாடியே வந்துட்டிங்களா தங்கம்” என்று பூனையை தூக்கி கொஞ்சியவள்,

“இனிமே நீ என் கூடவே இருக்கலாம். உனக்கும் யாருமில்லை எனக்கும் யாருமில்லை இனிமே நாம ரெண்டு பேரும் பேமிலி” என்று சிரித்தவள் அதனை அணைத்து கொள்ள,

கேட்டு கொண்டிருந்தவனுக்கு உள்ளுக்குள் பாரம் ஏறியது.

அவளை இறுக்கமாக அணைத்து நான் இருக்கிறேன் உனக்கு எல்லாமுமாக என்று கூற மனது துடித்தது.

ஆனால் கூற முடியவில்லை. தோழனாய் பார்க்கும் இவளிடத்தில் காதலை கூறி அவள் தன்னை விட்டு விலகி சென்றுவிட்டால் என்ன ஆவது என்று உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது.

அதுவும் தன் காதலை கூற இது சரியான நேரமும் அல்ல என்று தோன்ற விழிகளை அலைபேசியில் பதித்தான்.

“ஜீவா காஃபி ரெடி” என்றபடி வந்தவள் அவனுக்கு கொடுத்துவிட்டு பால்கனியில் நின்று கொள்ள தானும் ஒரு ஓரத்தில் மழையை பார்த்தபடி நின்றுவிட்டான்.

அமைதியாக மழையை பார்த்படி நிமிடங்கள் கரைய ஜானுவின் அலைபேசி அழைத்தது.

“நரேன் அண்ணாவா தான் இருக்கும். நான் போய் பேசுறேன். நான் மழையில நனைஞ்சதை சொல்லாத ஜீவா அண்ணா திட்டும்” என்று விழிகளை சுருக்கி கேட்க,

அவளது சுருங்கிய விழியில் ஆயிரமாவது முறையாக விழுந்து எழுந்தவன், “சொல்ல மாட்டேன்” என்று தலையசைக்க,

“சோ ஸ்வீட் ஆஃப் யூ” என்று அவனது கன்னம் கிள்ளியவள் வெளியேற,

“உன்னைவிட யாருமே ஸ்வீட்டா இருக்க முடியாது” என்று இதழ்கள் சன்னமாக முணுமுணுக்க,

“என்ன ஜீவா ஏதாவது சொன்னியா?” என்றவள் வாசலில் நின்று கேட்க,

“ம்ஹூம்” என்று தலையசைத்தவன் இதழ்களில் மர்ம புன்னகை.

அவளுடனான நினைவுகளை அசைப்போட்டபடி உறங்கியவன் காலை நேரத்திற்கே எழுந்து கொண்டான்.

குளித்து காலை கடன்களை முடித்துவிட்டு காலை உணவிற்கு சமைக்கலாமா அல்லது கடையில் வாங்கி கொள்ளலாமா? என்று யோசித்தவன் ஜானவியிடம் கேட்டு முடிவு செய்வோம் என்று அவளுக்கு அழைத்தான்.

அழைப்பை அவள் எடுக்கவில்லை. மீண்டும் அழைத்தும் பலனில்லை.

இத்தனை முறை அழைத்தும் ஏன் எடுக்கவில்லை. உறங்கி கொண்டிருக்கிறாளா? கல்லூரிக்கு கிளம்ப வேண்டுமே என்று எண்ணியவன் போய் கதவை தட்டினான்.

அவள் எழுந்து வரும் வழியை காணவில்லை என்றதும் இவனுக்கு லேசாக பதற்றமாகியது.

பால்கனியில் ஏறி குதித்துவிடலாமா? என்று சிந்திக்கையிலே கதவை திறக்கப்பட்டது‌.

“ஏன் இவ்ளோ நேரம்?” என்று ஜீவா வினவிட,

“லைட்டா பீவர் ஜீவா” என்று ஈனஸ்வரத்தில் முனகியவள் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

உடலின் வெம்மையை உணர்ந்தவன்,

“நேத்து மழையில நனைஞ்சப்போவே நினைச்சேன்” என்றவன்,

“டெம்பரேச்சர் ஹையா இருக்கும் போல டாக்டர்க்கிட்ட போகலாம் வா” என்று அழைக்க,

“ம்ஹூம் என்னால நடக்க முடியாது” என்று அவனது தோளை பற்றி கொண்டவள் மெதுவாக உள்ளே நடக்க இவனும் நடந்தான்.

நீள்விருக்கையில் அப்படியே சாய்ந்து கொண்டவள்,

“புஜ்ஜிக்கு பால் கொடு ஜீவா” என்றபடி விழிகளை மூடி கொண்டாள்.

ஒற்றை கையால் தன்னை பிடித்தபடி படுத்து கொண்டவளை கண்டு மனது இளகியது.

“புஜ்ஜிக்கு பால் கொடுத்துட்டு எனக்கு ரூம்ல ப்ளூ பாக்ஸ்ல டாப்லெட் இருக்கும் அதை எடுத்து கொடு. நான் கீர்த்திக்கிட்ட புட் வாங்கிட்டு வர சொல்றேன். உனக்கு காலேஜ்க்கு டைம் ஆச்சு” என்று விழிகளை திறக்காமலே கூறிட,

“நீ முதல் எழுந்திரு டாக்டர்கிட்ட போகாம டேப்லெட் போட கூடாது. ஹாஸ்பிடல் போகலாம்” என்று ஜீவா கண்டிப்புடன் கூற,

“ப்ச் நோ ஜீவா” என்றவள் விழிகளை திறக்க மறுத்தாள்.

இவள் கேட்க மாட்டாள் என்று நினைத்து தானே மருத்துவரது எண்ண தேடி எடுத்து அழைப்பு விடுத்தவன் சமையலறை சென்று அவளுக்கு கஞ்சி வைக்க துவங்கினான்.

கீர்த்தி அழைத்த போது தான் பார்த்து கொள்வதாக கூறிவிட்டவன் தனக்கு தெரிந்த சமையலை வைத்து கஞ்சியை தயாரித்தான்.

ஜானவி படுத்து நன்றாக உறங்கி கொண்டிருக்க அவளை எழுப்பி முகம் கழுவ செய்தவன் கஞ்சியை தானே ஊட்டிவிட்டான்.

“உனக்கு எதுக்கு ஜீவா சிரமம் என் ஃப்ரெண்ட்ஸ் யாரையும் வர சொல்லி இருக்கலாம்ல” என்று ஜானவி கேட்க,

“அப்போ நான் யாரு?” என்று காட்டமாக வந்த குரலில் வாயை மூடி கொண்டாள்.

மருத்துவர் வந்து பரிசோதித்துவிட்டு ஊசி மாத்திரை கொடுத்து செல்ல,

“அதான் எல்லாம் ஓவர் ஆகிடுச்சுல. நீ காலேஜ் கிளம்பு ஜீவா” என்று ஜானவி அவனை அனுப்ப முற்பட,

“ப்ச் ஒரு நாள் காலேஜ் போகலைன்னா ஒன்னும் ஆகாது. நீ போய் ரெஸ்ட் எடு. நான் ரூம்ல தான் இருப்பேன். எதாவது ஹெல்ப்னா கூப்பிடு” என்றிட,

விழிகளை திறந்து அவனை
கண்டவள்,

“ஹ்ம்ம்…” என்று தலையசைக்க,

நெற்றியில் கையை வைத்து பார்த்தவன்,

“டெம்ப்ரேச்சர் குறைஞ்சு இருக்கு. தூங்கி ரெஸ்ட் எடு. நான் லஞ்சு ரெடி பண்ணிட்டு வந்து எழுப்பிவிறேன்” என்று எழுந்து கொள்ள,

“ஹ்ம்ம்…” என்று விழிகளை திறக்காமலே தலையசைத்தவளுக்கு அவனது கரத்தின் வெம்மை காய்ச்சலை தாண்டியும் நெற்றியில் பரவியது…


 
Well-known member
Messages
993
Reaction score
735
Points
93
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Well-known member
Messages
445
Reaction score
323
Points
63
Jeeva ku than ava mela love overflow aaguthu aana janu avan kita ippo varaikkum normal ah than behave panra mathiri iruku
 
Top