- Messages
- 997
- Reaction score
- 2,811
- Points
- 93
Last edited:
Jaanu Murugan சிஸ்டர் எழுதிய "உனை எண்ணாத நாளில்லை"
மாறன்.. தன் நண்பன் தனஞ்செயனின் திருமணத்திற்கு தன் தந்தை சாரதி தாய் லோகநாயகி மற்றும் தங்கை மலர்விழியோடு செல்கிறான்.. அங்கு மணப்பெண் திருமணம் பிடிக்காமல் சென்று விட மலர் விழியை மணமகளாக கேட்கிறார்கள் தனஞ்செயனின் தாய் லீலாவும் தந்தை ராமலிங்கமும் இவர்களின் வசதி நிலையை கண்டு சிறிது தயங்கினாலும் அவர்களின் நட்பு முறைக்காகவும் மணமகனின் குண நலனிலும் மகனின் நண்பனாக முன்பே அறிமுகமாகி இருந்ததாலும் மகளை மணம் முடித்து கொடுக்க சம்மதிக்கிறார்கள்.. ஆனால் இதற்கு துளியும் சம்மதிக்காமல் பிடிவாதமாக இருக்கும் தங்கையே ஏதோ சொல்லி சம்மதிக்க வைக்கிறான் மாறன்.. என்ன சொன்னான் என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் தனஞ்செயன்.. சிறு வயதிலிருந்து தெரிந்த பெண்ணான மலர் விழியை திருமணம் முடித்தாலும் அவள் சம்மதம் இல்லாமல் கட்டாயத்தோடு தன்னை மணம் முடித்தாலா என்ற சிந்தனையும் இவனுக்கு.. அதைக் கொண்டு அவளிடம் கேட்க சண்டை வெடிக்கிறது இருவருக்கும்.. சிலருக்கு வாயில் சனி என்பது போல தனஞ்செயனுக்கும் வாயை விட்டு மாட்டிக் கொள்கிறான் மனைவியிடம் ஆனாலும் பாவம் தான் இவன்.. இவனே எப்போதும் மனைவியிடம் தாழ்ந்து போகிறான் அவள் கொண்ட காதலுக்காகவும் இவன் கொண்ட காதலுக்காகவும் மலர்விழி.. ரொம்பத்தான் அடம் இவளுக்கு கோபமும் பிடிவாதமும் அதிகம் அத்தோடு தன்மானமும் அதிகம்...அது நல்லது தான் ஆறு வருட காதலின் வலியும் அதிகம் எலியும் பூனையுமாக இருக்கும் இவர்கள் வாழ்வில் அவ்வப்போது கரடியாக மாறனும் வருகிறான் ஆரம்பத்தில் மனைவியை சமாளிக்க தெரியாமல் முழிக்கும் தனஞ்செயன் பிறகு ஜெய்யாக அவனின் விழியை சரி கட்டும் சூட்சமத்தை அறிந்து கொள்கிறான் கோபமாக ஆரம்பித்த இவர்களின் வாழ்வு காதலாக தொடர்ந்து செல்கிறது சுவாரஸ்யமாகவே நகர்த்தது கதை வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி
Good luck dear
Keep rocking