• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 8

Member
Messages
37
Reaction score
2
Points
8
"அந்த பொண்ணு செத்த பிறகு கிளாஸ்ல எடுத்த group photoல அந்த இறந்து போன பொண்ணு இருந்திருக்கு..." என மீரா கூறியவாறு மிரண்டு போயிருந்த குமாரை பார்க்கிறாள்.

"என்ன நான் சொல்லறது நம்ப முடியலையா.... ஆனா இதுதான் உணமை...அந்த photo ல அந்த கிளாஸ் டீச்சர் இருந்திருக்கார்...அந்த கிளாஸ்ல இருந்த நாற்பது பேருமே இருந்து இருக்காங்க...அந்த photo எடுத்த பிண்ணதான் தெரிஞ்சு இருக்கு செத்த பொன்னு அந்த photo ல இருந்திருக்கா... அப்படின்னு..."என மீரா மேலும் தொடர, குமார் எட்சிலை விழுங்கியவாறு கேட்கிறான்.
"விநோதமாக இருக்குல்ல...அதே மாதிரிதான் அந்த வருஷத்துல இருந்து இப்போ வரைக்கும் இருபது வருஷமா அந்த பொண்ணுக்கு அவங்க போட்ட அந்த desk அப்படியே இருக்கு....ஒவ்வொரு வருஷமும் இதேதான் நடக்குது...அதுவும் நம்ம படிக்கர அதே A கிளாஸ்...நம்ம படிக்கர அதே காலேஜ்ல...."என மீரா கூற,
"அதே மாதிரிதான்....."என மேலும் மீரா தொடரும் பொழுது குமாரின் கைபேசி சப்தத்தை வெளியிட்டு யாரை அவனை அழைப்பதை காட்டியது.

குமார் அவனின் கைபேசியை எடுத்து கைபேசியின் திரையில் காட்டிய பச்சை நிற பொத்தானை மேல் நோக்கியவாறு இழுத்து அவன் செவியருகே வைத்து பேசியவாறு சிறிது நகர்கிறான்.

சிறிது நேரத்தில் வந்த குமார்,"sorry மீரா... வீட்டுல இருந்து பாட்டி கூப்பிட்டாங்க...late ஆகிருச்சு... எனக்கு நீ இதை இன்னொரு நாள் கண்டிப்பா சொல்லு மீரா.."என கூறுகிறான்.

மீரா அங்கிருந்து கிளம்ப, குமார் கிளம்பி அந்த கடையை விட்டு வெளியே வரும்போது,

"மீரா...."
"என்ன..?"
"அந்த கடையில பார்த்தோம்ல அந்த பொம்மை..."
"ஆமா"
"அது யாரு பண்ணுனா"
"பத்மான்னு ஒருத்தங்க..."
"சரி மீரா...நாளைக்கு காலேஜ்ல பார்ப்போம்..."
பதிலேதும் பேசாமல் மீரா நடந்து அவன் கண் பார்வையில் இருந்து மறைகிறாள்.
குமார் வீட்டிற்கு நடந்து செல்ல தொடங்குகிறான்.

மறுநாள் காலை பத்து மணயளவில் சூரியனின் ஒளியினை மேகங்கள் வழி விட்டு சாரதா காலேஜ் மேல் பட்டது போல காட்சியளிக்க A கிளாஸ் மாணவர்கள் கல்லூரியின் அறிவிப்பு பலகை முன் கூடியிருந்தனர். இந்த வருடத்தின் செமஸ்டர் தேர்வுக்கான கால அட்டணை ஒட்டப்பட்டு இருந்தது.

"இந்த தடவை கஷ்டமா இருக்கும் போல.."என கிளாஸ் லீடர் பல்லவி கூற,

"எவ்வளவு கஷ்டமா இருந்தும் நாம்தான் எழுதணும்..."என பல்லவியின் தோழி திவ்யா கூறுகிறாள்.

"இந்த தடவை bit ரெடி பண்ணிரலாம் ..."என அட்டவணை பார்த்து நவீன் கூற,

"எனக்கும் சேர்த்து காட்டுடா..."என நவீணின் நண்பன் அருண் கூறுகிறான்.

"அவள் என்ன இன்னும் வரல போல"என மீராவை பற்றி குமார் யோசித்து கொண்டு இருந்தான்.

அவனருகில் வந்த நவீன் குமாரின் மீது கை வைத்து "வாடா கிளாஸ் போலாம்..."என வகுப்பறைக்குள் செல்கின்றனர்.

வகுப்பறைக்குள் சென்ற குமார் மீராவின் அந்த பழைய மேசை பக்கம் சென்று பார்க்கிறான். பழைய மேசை துருப்பிடித்து தூசிகள் படிந்து இருந்தது. அதன் மீது கை வைத்து தடவியபடி பார்கிறான்.அந்த மேசையில் என்னமோ எழுதி இருப்பது போல குமாருக்கு தோன்ற உடனே chalk பீஸ் எடுத்து அதை மேசையின் அந்த பகுதியில் தேய்க்க மேல லேசாக ஒரு துணி வைத்து தேய்க்க, அந்த வார்த்தைகள் அவனிற்கு தெரிந்தது...

"யார் மரணித்தார்..." என காட்டியது அந்த மேசை....

images (62).jpeg


(இருள் சூழும்.....)
 
Top