• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 7

Member
Messages
39
Reaction score
2
Points
8
"என்ன நீ கண்டுபுடிச்சிட்டே போல" என மீராவின் குரல் கேட்டதும் குமாருக்கு பயம் ஆள்கொண்டது. குரல் வந்த திசையை நோக்கி திரும்ப மீரா மாலை மங்கும் நேர வெளிச்சத்தில் அவனை பார்த்து நிற்கிறாள்.
"எதுக்கு என்னை follow பண்ணி வர்றே...?"என மீரா கேட்க,
"நான் சும்மாதான் வந்தேன்... எதேச்சையா உன்ன பாத்தேன்...அதான் வந்தேன்.... உன்னை follw எல்லாம் பண்ணல" என குமார் மீராவிடம் கூறுகிறான்.
"சும்மா சொல்லாத... உண்மைய சொல்லு...எதுக்கு என்னை follow பண்ணறே...? எதுக்கு என்கிட்ட பேச முயற்சி பன்றே...?"என மீரா விடாப்பிடியாக கேட்க,
"இல்ல...நீ வித்தியாசமா இருக்கே... கிளாஸ்க்கும் சில நேரம் வர்றது இல்ல... உன்ன யாருமே கண்டுக்கறது இல்ல...கிளாஸ் அட்டெண்டன்ஸ்ல கூட உன் பேர் சொல்லறது இல்ல... டீச்சர்ஸ் கூட கண்டுக்கரது இல்ல... என்னதான் ஆச்சு... இத கேட்க்கதான் follow பண்ணேன்.."என மீராவின் குமார் மறைக்காமல் பதில் கூறுகிறான்.
மீரா நடந்து வந்து மீராவை போல உள்ள பொம்மையின் அருகே வந்து நின்று,
"இந்த பொம்மையை பார்த்தியா.... எவ்வளவு அழகா இருக்கு...என்னை போலவே இருக்குல்ல...இதோட கண்ணும் என்னோட கண்ணும் ஒரே மாதிரிதான்... உணர்ச்சி இல்லாத கண்கள்..."
"ஆமா...எனக்கும் அதான் தோணுது...சரி நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல...சரி உன் கண்ணு ஏன் இப்படி இருக்கு...?"என குமார் கேட்க,
"இத பத்தி நீ தெரிஞ்சுக்கணுமா...?"என மீரா உணர்வற்ற கண்களுடன் அவனை பார்த்து கேட்க,
"கண்டிப்பா எனக்கு தெரியனும்... இல்லேனா என் மண்டை வெடிச்சிரும்..."என ஆர்வத்துடன் சொல்கிறான்.
மீரா குமாரின் பக்கம் அருகில் வர அவளின் கண்களை பார்த்து குமார் மிரண்டு போகிறான்.மீராவின் கண்கள் உணர்வற்ற ஒரு பொம்மையின் கண்களை போல உள்ளன.
"நீ மனித பிறவியா..."என குமார் மனதினுள் எண்ணிக்கொண்டே அவளின் கண்களை பார்க்கிறான்.
"எனக்கு சின்ன வயசுல ஒரு பெரிய surgery நடந்துச்சு...அப்போ இருந்து எனக்கு கண்கள் இப்படி ஆகிருச்சு.."என சொல்லிக்கொண்டே மீரா திரும்பி,"உனக்கு இந்த ஊரை பத்தி தெரியுமா...நம்ம ஆர் கே புரம் பத்தி..."என மீரா கேட்க,
"இல்லை எனக்கு தெரியாது...நான் இப்போதான் வரேன் இந்த ஊருக்கு ..."
"இங்க என்ன ஆச்சுன்னு யாரும் உன்கிட்ட சொல்லலயா....?"
"இல்லை எல்லாரும் சொல்ல வர்றாங்க...ஆனா பயந்து சொல்லாம போகிடறாங்க... ஆனா என்ன சொல்ல வர்றாங்க....எதுக்கு சொல்ல வர்றாங்க ஒன்னும் புரியல..."
"சரி விடு அதுக்கும் உனக்கும் சம்மந்தம் இல்ல..."
"இல்ல நீயாச்சும் எனக்கு சொல்லு மீரா " என குமார் கேட்க,
"சரி...கிட்டத்தட்ட இந்த ஊருல 20 வருசத்துக்கு முன்னாடி...நம்ம படிக்கற சாரதா காலேஜ்ல....நம்ம A கிளாஸ்லயே ஒரு பொண்ணு இருந்தா... நல்லா படிக்கர பொண்ணு... ஆனா ஏதோ காரணத்தால் அந்த பொண்ணு இறந்து போய்ருச்சு... நிறைய பேர் accident.... பல பேர் தூக்குல தொங்கிருச்சு... அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க... எதுனால இறந்துச்சு...எப்படி இறந்துச்சு...யாருக்கும் தெரியல..."மீரா சொல்லி கொண்டே குமாரின் பக்கம் திரும்பி,
"ஆனா கொஞ்ச நாள் போன பிறகு அந்த பொண்ணு காலேஜ்ல நடமாடற மாதிரி அந்த கிளாஸ்ல இருந்த எல்லாருக்குமே தோனிருக்கு...அந்த பொண்ணு இருக்கு....சாகாத மாதிரி அவங்களுக்கு feel ஆகிருக்கு.... இவங்களும் அதுல இருந்து வெளியில வர extra desk போட்டு இருக்காங்க....இதுல ஆச்சரியம் என்ன தெரியுமா...?"
"எ.....என்ன....?" பயத்துடன் குமார் கேட்க,
"அந்த பொண்ணு செத்த பிறகு கிளாஸ்ல எடுத்த group photoல அந்த இறந்து போன பொண்ணு இருந்திருக்கு..."

attachment-EPHS-Ghost-Class-Picture-19852.jpg

(இருள் சூழும்.......)
 
Top