• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 6

Member
Messages
37
Reaction score
2
Points
8
மாலை ஆறு மணி..
ஊட்டியின் குளிரில் சூரியன் இருளில் மறைந்து கொண்டிருக்கும் தருணம் அது...
கல்லூரி முடிந்து நவீனும் குமாரும் வீட்டிற்கு சென்று கொண்டிருக்க நவீன் அவன் குமாரிடம் இருந்து விடை பெற்று கொண்டு அவன் வீடு இருக்கும் திசையை நோக்கி செல்கிறான்.
குமார் நடந்து வீட்டிற்கு செல்ல, மீராவை பற்றிய கேள்விகளை சிந்தித்து கொண்டே நடக்கிறான்...
அப்பொழுது மீராவின் உருவம் அவன் விழித்திரையில் விழ, கூர்ந்து கவனிக்கிறான்..."ஆம் அது மீராதான்..." என மீராவை பார்த்து மீராவின் பின் செல்கின்றான்.
மீராவை அவன் பின்தொடர மீரா வேகமாக நடக்க தொடங்குகிறாள்...மீரா வேகமாக செல்ல குமாருக்கு மூச்சு வாங்க தொடங்குகிறது.. குமார் மீராவின் உருவத்தை தொலைக்கிறான்... குமார் மீராவை தேடிக்கொண்டே அந்த யாருமில்லா சாலையில் நடந்து செல்ல....இருள் ஆள தொடங்கியது...
குமார் நடந்து கொண்டிருக்கும் பொழுது அந்த சாலையில் ஒரு பழைய பொம்மை கடையை பார்க்கிறான்.. மீராவை முதல் முறை சந்தித்த பொழுது அவள் கைகளில் ஒரு கிழிந்த பழைய பொம்மை இருந்ததை கவனித்தான்...அது தற்போது நினைவிற்கு வர அந்த பொம்மை கடையினுள் குமார் நுழைகிறான்..
குமார் அந்த பொம்மை கடைக்குள் சென்றவுடன் அங்குள்ள பொம்மைகளை பார்க்கிறான்...அங்குள்ள எந்த ஒரு பொம்மையும் சாதாரணமாக தெரியவில்லை...கருப்பு உடை உடுத்தி இரத்தம் கேட்கும் ஒரு ஓநாயை போல கண்களை கொண்ட மனித பொம்மைகள், கை கால் இழந்த பொம்மைகள் , கைகளில் கத்தி போன்ற உருவம் கொண்ட பொம்மைகள் என விநோதமான பல பொம்மைகளை குமார் பார்க்கிறான்..
"உங்களுக்கு என்ன தம்பி வேணும்...?"
குரல் வந்த திசையை நோக்கி குமார் பார்க்க ஒரு மூதாட்டி, உணர்வற்ற முகத்துடன் அவனை பார்த்து கேட்கிறாள்.
"இங்க காலேஜ் பசங்க எல்லாம் வரமாட்டாங்க... நீ வந்தது ஆச்சரியமாக இருக்கு...சொல்லு உனக்கு என்ன வேணும்...?"என அந்த மூதாட்டி கேட்க,
"நான்....சு... சும்மா வந்தேன்... நல்லா இருந்தால்.....வா.....வாங்கலாம் ன்னு வந்தேன்..."என குமார் திக்கி பதில் கூறுகிறான்.
"கீழ இன்னும் நிறைய பொம்மை இருக்கு...போய் பாரு" என சொல்லிவிட்டு அந்த மூதாட்டி புத்தகம் படிக்க தொடர்கிறார்.
"இங்க பார்த்தது பத்தாதா..."என எண்ணி கொண்டு கீழே செல்கிறான்.
மேலே கூட பரவா இல்லை என சொல்ல தோணும் அளவிற்கு பொம்மைகள் கீழே உள்ளது. இதயம் வெளியே வந்தது போன்ற பொம்மை, முதுகெலும்பை தனியாக எடுத்து வைத்தது போன்ற பொம்மை என எல்லாமே பயத்தை உண்டு பண்ணும் அளவிற்கு உள்ளது.
இந்த பொம்மைகளுக்கு மத்தியில் பெரிய பொம்மை ஒன்று இருப்பதை குமார் பார்க்கிறான்.
வட்ட வடிவ முகம்..உணர்வற்ற கண்கள்...ஆம் இது அவளேதான்...மீரா...
மீரா நீ ஒரு பொம்மையா என்பதை போல அந்த பொம்மையை குமார் பார்த்து கொண்டிருக்க...
"நீ கண்டுபுடிசிட்டே போல....."என மீராவின் குரல் கேட்கிறது.

images (55).jpeg


(இருள் சூழும்......)
 
Top