• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 5

Member
Messages
37
Reaction score
2
Points
8
"நான் இங்க அட்மிட் ஆகிருந்த நாள் எங்க காலேஜ்ல இருந்து ஏதாச்சும் ஒரு பொண்ணு இந்த ஹாஸ்பிடல இறந்தாங்களா??..." என குமார் மாலாவிடம் கேட்கிறான்.
"எனக்கு அதை பத்தி எல்லாம் தெரியாது... இந்த விவரம் எல்லாம் வெளியில சொல்ல கூடாதுப்பா"
"எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதான் கேட்டேன்"
"சரி என்னால உனக்கு உதவ முடியும்...ஆனா ஒரு condition.. நவீன் வர வர mark கம்மியா எடுக்கிறான்...நீ நல்லா படிக்கிற பையன்னு கேள்விப்பட்டேன்...நீ அவனுக்கு பாடத்துல உதவி பண்ணனும் ஓகேவா..?"
"ஓகே"என குமார் கூற,
"சரி...உன் நம்பர் குடுத்துட்டு போ..நான் check பண்ணிட்டு சொல்லறேன்"என மாலா கூற,
குமார் தன் கைபேசி என்னை கொடுத்துவிட்டு செல்கிறான்.

மறுநாள் திங்கள் கிழமை... காலை மணி ஒன்பது...வகுப்பிற்குள் நுழைந்த குமார் மீராவின் மேசையை பார்க்கிறான்..மீரா இன்று வரவில்லை...
நவீனிடம் சென்று, " மீராவை காணோம்.. என்ன இன்னைக்கு அவ வரலை?"
"யாரு மீரா...?"என நவீன் கூற...
மற்ற மாணவிகளிடம் மீராவை பற்றி கேட்க, அவர்களும் மீராவை யாருக்கும் தெரியாது என கூறுகிறார்கள்...
"யார் இவள்...?" என கேள்வி ஓடை வேகமாக குமாரின் மனதில் ஓடுகிறது.

கல்லூரி அன்று முடிந்து மாணவ மாணவிகள் வீட்டிற்கு செல்ல ஆரம்பிக்கிறார்கள்..
நவீன் மற்றும் குமார் நடந்து செல்ல,
"இந்த காலேஜ் உனக்கு செட் ஆகிருச்சா..?" குரல் வந்த திசை நோக்கி திரும்பி பார்க்கிறான் குமார்.
பெண்ணிற்கு உண்டான கம்பீரத்துடன் ஒரு பெண் நிற்க,
"யார் நீங்க..?"
"நான் பல்லவி...உங்க கிளாஸ் லீடர்..நான் ஒரு வாரம் லீவ்ல இருந்தேன்... இன்னிக்கு தான் வந்தேன்.. கிளாஸ்ல என்னை பார்க்கலயா..?"
"Sorry கவனிக்கலை" குமாரின் மனம் முழுவதும் மீரா யார் என்ற யோசனையில் பல்லவியை குமார் பார்க்கவில்லை.
"எனக்கு எல்லாம் ஓகே தான்" என குமார் கூற,
"கிளாஸ காப்பாத்தற லீடர்ல அதான் கேட்டேன்" என பல்லவி சொல்ல,
"காப்பாத்த போரீங்களா..எதுல இருந்து?"
"அது வந்து..."என பல்லவி எதோ சொல்ல வர,
நவீன் வேணாம் என சைகை காட்டுகிறான்.
"இப்போதான் வந்திருக்கே...போக போக உனக்கே புரியும்"என கூறிவிட்டு பல்லவி செல்கிறாள்.
குமார் மனதில் கேள்விகள் வழுவடைகின்றன.....

images (52).jpeg


(இருள் சூழும்......)
 
Top