• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 4

Member
Messages
37
Reaction score
2
Points
8
குமாரின் பின் ஏதோ நிழல் ஆடுவது போல அவனுக்கு தோன்றுகிறது. யாரோ அவன் பின்னால் மூச்சு விடுவது போன்ற உணர்வு. அவன் தோள் மேல் ஏதோ ஒன்று கை வைப்பது போல தோன்றுகிறது. குமாரிற்கு பயம் ஆட்கொள்கிறது. குமார் பயத்துடன் மெதுவாக திரும்பி பார்கிறான்.

கல்லூரியின் நூலகர் வருகிறார் குமாரின் பின்.
"லைப்ரரில உற்காந்து இப்படி எல்லாம் கத்த கூடாது தம்பி".
குமார் ஆசுவாசத்துடன், "சாரி சார்..!"
குமார் எழுந்து நூலகத்தை விட்டு வெளியே வருகின்றான்.

குமார் கல்லூரியை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்புகிறான்.
மணி இரவு எட்டைத் தொடுகிறது. குமாரும் அவனது சித்தியும் சாப்பிட்டு முடித்து விட்டு கதை பேசி கொள்கிறார்கள்.
அப்போது குமார் நூலகர் பற்றி கேட்க,
"அவர் இன்னும் மாறவே இல்லை...இன்னும் அப்படியேதான் இருக்கார் போல.. நாங்க அங்க ஸ்டூடண்டா இருக்கப்போ இருந்தே இப்படித்தான்...நானும் உங்க அம்மாவும் அந்த காலேஜ்லதானே படிச்சோம்.. அப்போ இருந்தே அவரு அப்படிதான் மர்மமா இருப்பாரு.."
"ஆமா...அவரு பேரு என்ன சித்தி...?"
"கண்ணன்...பார்க்கத்தான் அப்படி இருப்பாரு...ஆனா நல்ல மனுஷன்". என சித்தி உமா கூறி கொண்டே எழுந்து தன் அறைக்கு செல்கிறாள்.
குமார் அவன் அறைக்கு சென்று தூக்கம் வராமல் படுக்கையில் புரல்கிறான். அவனுக்குள்ளே பல கேள்விகள் ஓட தொடங்கியது.
"மீரா யார்? ஏன் யாரும் அவளிடம் பேசுவது இல்லை? அவள் உண்மையில் ஒரு பெண்தானா? அவள் இருப்பதை நம்மை தவிர வேறு யாரும் காட்டிக்கொள்வது இல்லை? அவள் உண்மையில் இருக்கிறாளா? இல்லை நம் மனப்ரம்மையா? இல்லை அவள் ஒரு பேயா?"

கேள்விகள் நீள அவன் அப்படியே தூங்கி போய் விடுகிறான்.
மறுநாள் கல்லூரி விடுமுறை...வார விடுமுறை என்பதால் குமார் அவன் check-up காக சுதா மருத்துவமனை செல்கிறான்.அங்கு குமாரை பார்த்த மாலா என்னும் செவிலிய பெண்மணி அவன் அருகே வந்து,
"நீ குமார்தானே..?" என கேட்க,
"ஆமா நான் குமார்தான் என்ன சொல்லுங்க மேடம்..?"
"என் தம்பி நவீன் உங்க கிளாஸ்லதான் படிக்கிறான்...அவன் நல்லா படிக்கிறானா? அவன் உன்னை பத்தி சொல்லிருக்கான்" என கூற,
தன் மேசைக்கு பின் உள்ள மேசையில் உள்ள நவீனின் நினைவு வர,
"நல்லா படிக்கிறான்...நீங்க அவனுக்கு யாரு?"
"நான் அவன் அக்கா",என கூறிகொண்டே அவனின் check-up results அவனிடம் கொடுக்கிறாள்.
அதை வாங்கி கொண்டு குமார் மாலாவை பார்த்து "எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?"என மீராவை மனதில் நினைத்து கொண்டு கேட்கிறான்.
"என்ன தம்பி சொல்லு"
"நான் இங்க அட்மிட் ஆகிருந்த நாள் எங்க காலேஜ்ல இருந்து ஏதாச்சும் ஒரு பொண்ணு இந்த ஹாஸ்பிடல இறந்தாங்களா??..."


images (49).jpeg


(இருள் சூழும்......)
 
Top