• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 3

Member
Messages
37
Reaction score
2
Points
8
கல்லூரியில் மணி பத்தை தொட்டது. ஆனால் ஊட்டி குளிரோ அதிகாலை ஆறு மணி போல காட்சியளிக்க சூரியன் மேகத்திற்குள் மறைந்து கருமேகங்களை வானம் காட்டியது.

குமார் கல்லூரியில் சேர்ந்து பத்து நாள் ஆகியும் மீரா மற்ற மாணவர்களிடம் பேசியோ அவர்கள் இவளிடம் பேசியோ பார்த்ததில்லை. மீராவை பற்றி பேச்சு எடுத்தால் மற்றவர்கள் தட்டி கழிப்பதை மட்டும் தெரிந்துகொண்டான் குமார்.

வகுப்பறைக்குள் நுழைந்த ஆசைத்தம்பி"மழை காரணமாக வர வேண்டிய ஆசிரியர் கவிதா வர முடியாததால் இந்த period ஏதாச்சும் படிங்க" என கூறிவிட்டு வகுப்பறையை விட்டு ஆசைதம்பி வெளியேறுகிறார்.

மாணவர்கள் அவர்கள் நண்பர்களுடன் சந்தோசமாக பேசி கொண்டு இருக்கிறார்கள். குமார் உடனே மீராவின் மேசையை பார்கிறான். மீரா அங்கு இல்லை.
"இவ எதுக்கு தனியா போய்கிட்டு இருக்கா? இவளை ஏன் எல்லாரும் தனியா பாக்கறாங்க? யாரும் ஏன் இவகிட்ட பேசறது இல்ல?" மனதில் கேட்டு கொண்டே வகுப்பறையை விட்டு வெளியேறி குமார் நடக்கிறான்.

வெளியே நடந்து வரும் குமார் மீரா கல்லூரி நூலகத்தில் இருப்பதை கவனிக்கிறான். நூலகத்தின் உள்ளே சென்று அவளை நோக்கி நடக்கிறான்.

ஆள் இல்லாத தனி நூலக அறை. நூலகம் என்றாலே அமைதிதான் ஆனால் இங்கு நிசப்தமே சப்தமாக உள்ளது போல குமாருக்கு தோன்றியது. வெளியே குளிரோ சூரியனை மறைத்து நூலகத்தினுள் இருளை கொடுத்து கொண்டு இருந்தது. இருளை போக்க அங்கே உள்ள மின்விளக்கு மெதுவாக போராடி கொண்டிருந்தது.

குமார் அவளிடம் சென்று, " நீ ஏன் எப்பவும் தனியா இருக்கே? மத்தவங்க யாரும் பேசமாட்டங்களா?"என கேட்டு கொண்டே அவளுக்கு எதிரில் அமர்கிறான்.
மீரா, " அது உனக்கு தேவையில்ல... தேவை இல்லாத விஷயத்துல நீ உள்ள வராத...அது உனக்கு ஆபத்துல கொண்டு போய் விடும்.."என்று சொல்கிறாள் அவனை பார்த்து உணர்ச்சியற்ற முகத்துடன்.

"பரவாயில்ல நீ எங்கிட்ட சொல்லலாம்"

" அது உனக்கு தேவை இல்லாத விஷயம்...நீ என்னை பத்தி தெரிஞ்சுக்காம இரு..."

"இல்ல எனக்கு தெரியனும்" விடாப்பிடியாக குமார் கேட்க,

"என்னால சொல்ல முடியாது..."என மீரா சிறிது கோவத்துடன் குரலை உயர்த்துகிறாள்.

அப்போது குமாரின் பின் ஏதோ நிழல் ஆடுவது போல அவனுக்கு தோன்றுகிறது. யாரோ அவன் பின்னால் மூச்சு விடுவது போன்ற உணர்வு. அவன் தோள் மேல் ஏதோ ஒன்று கை வைப்பது போல தோன்றுகிறது. குமார் பயத்துடன் மெதுவாக திரும்பி பார்கிறான்.

images (40).jpeg


(இருள் சூழும்.....)
 
Top