Member
- Messages
- 37
- Reaction score
- 2
- Points
- 8
கூர்மையான மரக்குச்சியை வைத்து கொண்டு மீரா அவர்களை நோக்கி ஓடி வர அவர்கள் மீராவை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். மாணவர்கள் மீராவின் பின் மீராவை துரத்தி ஓடி வர, குமார் நடுவில் புகுந்து மாவனர்களை தடுக்கிறான். ஆனால் அதையும் மீறி, மாணவர்கள் அவளை பின் தொடர, நவீன் முன்னே சென்று அவர்களை தடுக்கிறான்.
"இவங்கதான் அவளுக்கு உதவி பண்றாங்க...இவங்களையும் கொல்லணும்"என மாணவர்களில் கூற, அவர்களுள் ஒருவன் கத்தரிக்கோல் வைத்து வேகமாக வீச, நவீன் சிறிது இடைவெளியில் தப்பிக்கிறான். நவீனின் சட்டை மட்டும் லேசாக கிழிய,
"நாம பேசாம தப்பிச்சிரலாம்... இப்போதைக்கு நம்மளால ஒன்னும் பண்ண முடியாது... ஏதாச்சும் பண்ணுனா அது நம்ம கிளாஸ் ஸ்டூடண்ட்ஸ்க்கு ஆபத்து....."என பல்லவி கூற,
அங்கு இருந்த உமா, கண்ணன், நவீன், குமார், பல்லவி, திவ்யா மற்றும் மீரா காட்டேஜ் பின்னே உள்ள காட்டிற்குள் ஓடுகின்றனர்.
தனித்தனியாக ஏழு பேரும் பிரிந்து அந்த இருள் நிறைந்த காட்டிற்குள் மூழ்கி மறைந்து போகின்றனர்.
"இன்னிக்கு அவளை கொன்னு சாபத்தை எப்படியாச்சும் நீக்கனும்..."என மானவர்கள் கத்தி கொண்டே அந்த காட்டிற்குள் நுழைகின்றனர்.
அந்த இருள் நிறைந்த காட்டிற்குள் நீளமான மரங்களும் நிறைய முட்புதர்கள் எங்கும் சூழ்ந்து கிடக்கின்றன.அந்த இரவு நேரத்தில் நிலா கூட மேகத்தில் மறைந்து கொண்டு இருளை கொடுத்து கொண்டு இருந்தது.
"இங்க என்ன நடக்குதுன்னு புரியல...ஆனா இது இப்படியே நீடிச்சா எத்தன உயிர் பொகும்னு தெரியல...எவ்வளவு சீக்கிரம் இதை முடிக்கணுமோ அவ்வளுவு சீக்கிரம் இதை முடிக்கனும்..."என மனதில் நினைத்து கொண்டே கண்ணன் மெதுவாக பூனை நடை போட்டு சப்தம் கேட்காத அளவிற்கு அந்த காட்டின் நடுப்பகுதியை அடைகிறார்.
அப்பொழுது அங்கு புதரில் ஏதோ அசைவது போல தெரிய, கண்ணன் மெதுவாக தன் கைகளில் கீழே கிடக்கும் முட்கள் நிறைந்த ஒரு கட்டையை எடுக்கிறார். அந்த அசைவு சப்தமாக மாறி யாரோ ஒருவன் தன் பக்கம் வருவதை உணர்கிறார் கண்ணன். அந்த உருவம் மெதுவாக பக்கம் வந்து கண்ணனின் பக்கம் வர, அப்பொழுது கண்ணன் அந்த உருவத்தின் முகத்தை பார்க்கிறார். அது நவீன்.
"சார்...என்னால ரொம்ப தூரம் ஓட முடியல சார்...அந்த பையன் கத்தரி வச்சு கிழிக்கும் போது என் உடம்பையும் கிழிச்சு இருக்கான் போல...இரத்தம் வடியுது" என கூற,
நவீனின் சட்டையை கழற்றி அவனின் காயத்தை சுற்றி கட்டுகிறார் கண்ணன்.
"மத்தவங்க எங்க...?"என கண்ணன் கேட்க,
"தெரியல சார்...உங்களைத்தான் நான் முதல்ல பார்த்தேன்..."என நவீன் கூறி கொண்டு இருக்கும் பொழுதே, மற்றொரு புறம் இருந்து குமார் மற்றும் பல்லவி வருகிறார்கள்.
"உங்களுக்கு ஒன்னும் ஆகலைல்ல..."என நவீன் கேட்க,
"ஒன்னும் ஆகலை..."என குமார் மூச்சு வாங்கி கொண்டே நவீன் பக்கம் வர,
"மற்ற மூணு பேர் எங்க..."என பல்லவி கேட்கிறாள்.
அப்பொழுது அந்த காட்டின் மற்றொரு பக்கம் அலறல் சப்தம் கேட்க,
அந்த நான்கு பேரும் வேகமாக அவர்களை நோக்கி ஓடுகிறார்கள். அந்த அலறல் சப்தம் கேட்ட திசையில் மீரா நின்று கொண்டு இருக்கிறாள்.
"மீரா...."என குமார் கத்த,
"இங்க வராத...குமார்..."என மீரா கூறுகிறாள்.
"அந்த extra ஸ்டூடண்ட் கண்டுபிடிச்சிட்டே சொன்னே...யாரு அது..."என கேட்டு கொண்டே அவளை நோக்கி நடந்து செல்கிறான் குமார்.
மீராவின் அருகே இறந்து கிடக்கும் சடலத்தை பார்த்து அதிர்ந்து போகிறான் குமார். அவன் சித்தி உமா அங்கு இறந்து கிடக்கிறாள் கழுத்தில் மரக்குச்சி வைத்து யாரோ குத்தியது போன்ற காயம் இருக்க, உமாவின் சடலத்தின் பக்கத்தில் இரத்த கரையுடன் மரக்குச்சி இருக்கிறது. பக்கத்தில் பயந்தபடி திவ்யா நின்று கொண்டு இருக்கிறாள்.
"சாரி குமார்....ஆனால் இதுதான் உண்மை நம்ம கிளாஸ்ல extra ஸ்டூடண்ட் யாரும் இல்ல... extra டீச்சர்தான் இருந்து இருக்காங்க...அதுதான் உங்க சித்தி..."என மீரா கூற, குமார் என்ன செய்வது என தெரியாமல் மூச்சை பிடித்து கொண்டு கதறி அழுகிறான்.
ஒரு வாரம் கழித்து....
ஊட்டி கே ஆர் புரம்..காலை ஒன்பது மணி...அன்று கல்லூரி வார விடுமுறை என்பதால் குமார் காலை எழுந்து உமாவின் கல்லறைக்கு செல்கின்றான்.அங்கு திவ்யா, நவீன், கண்ணன்,பல்லவி மற்றும் மீரா நின்று கொண்டு இருக்கிறார்கள்.
"நேத்து சொன்னேன்ல நாங்களும் வர்றோம்ன்னு நீ என்னடா எவ்ளோ லேட்டா வந்து இருக்கே..."என நவீன் கேட்க,
"அதான் வந்துட்டேன்ல..."என குமார் கூறி கொண்டே, உமாவின் கல்லறை முன் அஞ்சலி செலுத்துகின்றனர்.
"நான் இந்த ஊருல இந்த இடத்துக்கு நிறைய தடவ வந்து இருக்கேன் ஆனா உங்க சித்தி கல்லறையை பார்த்ததும் பேர் படிக்கல...முன்னாடியே படிச்சு இருந்தா எப்போவோ அந்த சாபத்த எடுத்து இருக்கலாம்..."என திவ்யா கூற,
"எனக்கும் என் சித்தி ஏற்கனவே இறந்தது மறந்து போயிருச்சு...அன்னைக்கு சித்திய மீரா கொன்னதுக்கு பின்ன வீட்டுக்கு போய் பார்த்தால்தான் தெரிஞ்சது வீட்டுல சித்தி ஃபோட்டோ மாட்டி அவங்க செத்த துக்கம் தாங்காம தாத்தா தினமும் அவங்களுக்கு அஞ்சலி செலுத்திட்டு இருக்காங்கன்னு...எங்க தாத்தா சாவ பத்தி பேசும் போது என் அம்மாவதான் சொல்றாங்கன்னு நினைச்சேன்...இப்போதான் தெரியுது அவரோட ரெண்டு பொன்னும் இறந்ததால் அப்படி சொல்லி இருக்குன்னு..அது மட்டுமில்லாமல் எங்க வீட்டுல ஒரு கிளி இருக்கு அது பேரும் உமாதான்...சித்தி இறந்த சோகம் தாங்காம வளர்த்து இருக்காங்க...."என குமார் கூற,
"எனக்கு உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்குனு யோசிச்சேன் இப்போதான் நினைவுக்கு வருது...உன்னை உங்க சித்தி இலவுல ஒரு தடவ பார்த்தேன்... அப்போதான் உன்மேல நான் கேன் எட்டி உதைச்சேன்...அது கனவு இல்ல..."என பல்லவி கூறுகிறாள்.
"லாவண்யா மேடம் இப்போ சரி ஆகிட்டாங்க...பிரதீப் கூட தேறிட்டான்...ரெண்டு பேரும் அடுத்த வாரம் திங்கள் கிழமைல இருந்து காலேஜ் வருவாங்க "என கண்ணன் கூற,
"இப்போதான் நிம்மதி...சம்மந்தம் இல்லாம ஒருத்தன கொண்ணுட்டோம்ன்னு குற்ற உணர்ச்சியில் இருந்தேன்..."என நவீன் பெருமூச்சு விடுகிறான்."நம்ம டூர் போன அப்போ எடுத்த ஃபோட்டோ இப்போ பாரு..."என நவீன் கூற,
"நினைச்சதுதான்...உமா மேடம் இருந்த இடம் இப்போ காலியா இருக்கு அந்த போட்டோல..."என திவ்யா கூறுகிறாள் தன் கைபேசியில் அந்த புகைப்படத்தை பார்த்து கொண்டே.
"இப்போ உமா மேடம் நினைவு நம்மள தவிர வேற யாருக்கும் இல்ல... மீராவையும் கொல்ல துரத்தல...."என நவீன் கூறுகிறான்.
"நம்ம கிளாஸ்ல நாற்பது பேருமே உயிரோட இருந்து இருக்காங்க....நாற்பது desk இருந்து இருக்கு...ஆனா டீச்சர் ரூம்லதான் ஒரே ஒரு டெஸ்க் இருந்து இருக்கு...மற்ற கிளாஸ்ல எல்லாம் ஒரே ஒரு டீச்சர் இருந்து இருக்காங்க...நம்ம கிளாஸ்லதான் உன் சித்தியோட சேர்த்து ரெண்டு டீச்சர்..."என் மீரா கூறி கொண்டே திரும்புகிறாள்.
"அப்போ அவ்ளோதான்ல நாம சாபத்தை நீக்கிட்டோம்ல இனி நான் தனியா இருக்கணும்னு அவசியம் இல்லல..."என மீரா கேட்க,
"இப்போவே நீ தனியா இல்ல உனக்கு உன்னோட நாலு ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க..."என கண்ணன் கூறி கொண்டே நடக்கிறார்.
"சரி நாம வந்த வேலைய பார்ப்போமா..."என நவீன் கூற,
"சரி"என திவ்யா கூறி கொண்டே அவளின் பையில் இருந்து ஒரு tape recorder எடுக்கிறாள்.
அதில் மீரா இது வரை நடந்தது மற்றும் எப்படி சாபத்தை போக்க வேண்டும் எனவும் கூறி பதிவு செய்கிறாள்.
"இனி சாபம் மறுபடியும் வரும் பொழுது நமக்கு இது நினைவு இருக்குமா இல்லையான்னு தெரியல...ஆனா இந்த tape அவங்களுக்கு கிடைக்கணும்..."என கூறி அந்த tape எடுத்து பார்க்கிறான் குமார்.
சாரதா காலேஜ்...
வாட்ச்மேனிடம் கண்ணன் பேசி கொண்டு இருக்க, ஐவரும் காலேஜ் உள்ளே நுழைந்து அதே வேஸ்ட் ரூம் குடோன் உள்ளே சென்று இவர்கள் பேசிய tape எடுத்து ஒரு பழைய மேசையின் அடியே ஒட்ட வைக்கிறான் நவீன். அந்த மேசையின் மேல் எமர்ஜென்சி என எழுதுகிறாள் பல்லவி. அந்த tape வைத்து விட்டு அங்கிருந்து ஐவரும் வெளியேறுகின்றனர்.
"என்ன வைச்சிட்டீங்களா..."என கண்ணன் கேட்க,
"வைச்சிட்டோம் சார்...இனி நாங்களும் ஒரு normal கிளாஸ்தான்..."என திவ்யா கூறுகிறாள்.
வருடம் 2028....
"அது ஆரம்பிச்சுருச்சு போல..."என மாணவி ஒருத்தி கூற,
"என்ன அது..."என ஒரு மாணவன் கேட்க,
"கிளாஸ் A சாபம்..."என இறந்து கிடக்கும் ஒரு மாணவனின் உடலை பார்த்து கூறுகிறான் ஒரு மாணவன்.
(முற்றும்.....)

Last edited by a moderator: