• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 25

Member
Messages
37
Reaction score
2
Points
8
மீராவை நோக்கி அந்த மாணவன் கையில் கத்தியுடன் வருவதை பார்த்த நவீன் மற்றும் குமார் பாய்ந்து அவன் கையை நவீன் பிடிக்க குமார் அந்த கத்தியை பிடுங்கி வீசுகிறான்.
"நீ மீராவை கூட்டிட்டு முன்னாடி போ நான் பின்னாடி வர்றேன்..."என அந்த மாணவனை தள்ளுகிறான் குமார்.
"சரிடா..."என கூறி மீராவின் கையை பிடித்து இழுத்து மீராவை அந்த காட்டேஜ் பின் இழுத்து கொண்டு நவீன் செல்கின்றான்.
வெளியே சப்தம் கேட்பதை உணர்ந்த காட்டேஜ் உரிமையாளர் வெளியே வந்து பார்த்து அனைவரும் மீராவை கொல்ல துடிப்பதை பார்த்து ஆசிரியர் கண்ணனுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு விவரத்தை கூறுகின்றனர்.
திவ்யாவை அறைந்த பல்லவி, "அவ ஒன்னும் extra ஸ்டூடண்ட் இல்ல...அவ நம்ம கூடத்தான் இருந்தா...நம்ம இதை பத்தி கண்டுபிடிக்கும் முன்னே அவ அந்த வேலைய ஆரம்பிச்சா நீ அவளை சந்தேகபடாத..."என கூற,
"என்னால தாங்கிக்க முடியல...எல்லாரும் இறந்து போறாங்க... நம்மளால ஏன் ஒரு normal கிளாஸ் மாதிரி இருக்க முடியல..."என கண்களில் கண்ணீருடன் கேட்கிறாள் திவ்யா.
"இப்போவும் ஒன்னும் கெட்டு போகல... உண்மையான extra ஸ்டூடண்ட் கண்டுபிடிச்சு கொன்னு இந்த சாபத்தை போக்கலாம்..."என பல்லவி திவ்யாவை அழைத்து கொண்டு அந்த காட்டேஜ் விட்டு வெளியே வருகிறாள்.
அந்த மாணவன் குமாரிடம்,"உனக்கு அறிவில்லையா அவளால எவ்ளோ கஷ்டபட்டு இருக்கோம் மறந்துட்டியா..."என கேட்டுக்கொண்டே அவனை நோக்கி ஓடி வர,
"அதுக்கும் அவளுக்கும் சம்மந்தம் இல்ல...உண்மையான extra ஸ்டூடண்ட் வேற யாரோ..."என ஓடி வரும் அவனின் கால்களை தட்டி விட்டு அங்கிருந்து வேகமாக ஓடுகிறான் குமார்.
"அவளுக்கு நீ உதவி பண்ற... அப்போ இது வரைக்கும் நடந்த சாவுக்கும் உனக்கும் சம்மந்தம் இருக்கு... உன்னையும் கொல்லாம விடமாட்டேன்..."என கதறுகிறான்.
அதற்குள் குமார் வேகமாக ஓடி சென்று அந்த காட்டேஜ் விட்டு வெளியேறுகிறான்.
"அவங்க இந்த காட்டேஜ் உள்ளதான் இருக்கணும் அவங்களை தேடுங்க...மீராவை கொல்லுங்க...கொன்னு இந்த சாபத்தை எடுங்க..."என மாணவர்கள் கத்த, காட்டேஜ் உள் மீராவை தேடி செல்கிறார்கள்.
வெளியே வந்த குமார், வெளியே மீராவும் நவீனும் நிற்பதை பார்த்து அவர்களிடம் வருகிறான்.
"இப்போ என்ன பண்றது..."என குமார் கேட்க,
"அந்த extra ஸ்டூடண்ட் கண்டுபிடிச்சு கொல்லனும்"என குமார் கூறுகிறான்.
அப்பொழுது அங்கு பல்லவியும் திவ்யாவும் வருகிறார்கள். திவ்யாவை பார்த்த மீரா, மெதுவாக காலை ஓடுவதற்கு ஏதுவாக பின்னோக்கி வைக்கிறாள்.
"பயப்படாத நான் சொல்லி புரிய வைச்சிட்டேன்..."என பல்லவி கூற,
"இருந்தாலும் உன் கண்ணு ஏன் அப்படி இருக்கு...நம்ம ஸ்கூல் படிக்கும் பொழுது உனக்கு கண்ணு இப்படி இல்ல...அதுக்கு மட்டும் பதில் சொல்லு...இத வெச்சுதான் என்னால நீ extra ஸ்டூடண்ட் இல்லைனு நம்ப முடியும்..."என திவ்யா மீராவின் கண்களை பற்றி கேட்கிறாள்.
மீரா தன் கண்களை பற்றியும் தன் கண்களால் மரணித்தின் நிறத்தை பார்க்க முடியும் என்பதையும் மீனாவை பற்றியும் கூறுகிறாள்.
திவ்யா தன் தலையில் கை வைத்து,"என்னை மன்னிச்சிடு மீரா...தப்பு பண்ணிட்டேன்...இப்போ எல்லாரும் உன்னை கொல்ல துரத்துறாங்க...அதுவும் என்னலாதான்..."என மீராவை பார்த்து திவ்யா கூறுகிறாள்.
"பரவா இல்லை...இப்போ இதுல இருந்து தப்பிக்க வழி இருந்தா சொல்லுங்க..."என மீரா கூற,
"ஒரு வழி இருக்கு..."என திவ்யா கூறுகிறாள்.
"என்ன வழி..."என கேள்வியுடன் பார்க்கிறான் குமார்.
"இப்போ அந்த tape ல சொன்ன மாதிரி அந்த extra ஸ்டூடண்ட் கண்டுபிடிச்சு கொண்ணுட்டா சாபம் போய்ரும்..."என திவ்யா கூற,
"அப்போ மீரா கதி...மத்த ஸ்டூடண்ட்ஸ் இவளை கொல்ல துறத்துவாங்க..."என நவீன் கூற,
"அந்த tape ல சொல்லி இருந்தாங்க... கொன்னதும் அவங்களை பத்திய நினைவுகள் நம்மகிட்ட இருக்காதுன்னு...ஆனா அவருக்கு மட்டும் இருந்துச்சு...அதுவும் கொஞ்ச நாள்...அப்போ extra ஸ்டூடண்ட் யாருன்னு தெரிந்தவர்கள் மட்டும் நினைவு இருக்கும்...மத்தவங்க மறந்து போயிருவாங்க...இப்போ அந்த extra ஸ்டூடண்ட் நாம கொன்னுட்டா அந்த extra ஸ்டூடண்ட் நினைவு எல்லாருக்கும் போயிரும் நம்மள தவிர...அப்போ மீராவை எதுக்கு கொல்லனும்னு தெரியாம இவங்க எப்படி கொல்ல துரத்துவாங்க..."என திவ்யா கூற,
"இது வேலை செய்யுமா..."என குமார் கேட்க,
"நம்மகிட்ட வேற வழி இல்ல...இதை தவிர...இதை நாம அஞ்சு பேர் சேர்ந்துதான் ஆரம்பிச்சோம்... நம்மதான் முடிக்கணும்..."என பல்லவி கூறுகிறாள்.
ஆசிரியர் கண்ணன் வேகமாக காட்டேஜ் வந்தடைகிறார். வெளியே யாரோ இரத்தத்துடன் இருப்பதை பார்த்து அருகே செல்கிறார். நவீன் தள்ளிவிட்ட பிரதீப் அங்கு இருக்கிறான். அவனின் நாடியை தொட்டு பார்க்கிறார். உயிர் இருப்பதை அறிந்த கண்ணன் அவனை தூக்கி கொண்டு அவரின் காரின் பின்புறத்தில் படுக்க வைக்கிறார். அப்பொழுது அங்கே மீரா, குமார், நவீன், பல்லவி மற்றும் திவ்யா வருகிறார்கள்.
"இங்க என்னதான் நடக்குது...உன்னை எதுக்காக கொல்ல வர்றாங்க... காட்டேஜ் ஓனர் எனக்கு போன் பண்ணி சொன்னாங்க..."என கண்ணன் கேட்க,
அப்பொழுது ஆசிரியை உமா அங்கு வருகிறாள்."மீரா எதுக்கு உன்னை கொல்ல வராங்க... லாவண்யா மேடம் வேற அடிபட்டு உள்ள இருக்காங்க... கண்ணன் சார் அவங்கள தூக்கிட்டு வாங்க...அவங்களையும் ஹாஸ்பிடல் கொண்டு போகனும்...குமார் உனக்கு ஒன்னும் ஆகலைல்ல...'"என பயந்த விழிகளுடன் கேட்கிறாள்.
"எனக்கு ஒன்னும் ஆகலை சித்தி..."என குமார் கூறுகிறான்.
"சரி நீங்க இங்கேயே இருங்க...நான் உள்ள போய் பார்த்துட்டு லாவண்யா மேடமை கொண்டு வரேன்..."என வேகமாய் கிளம்புகிறார் கண்ணன்.
"எதுக்காக உன்னை எல்லாரும் கொல்ல வறாங்க... நீ எதுக்கு Mike ல அப்படி சொன்னே திவ்யா..."என உமா கேட்கிறாள்.
திவ்யா நடந்த எல்லாவற்றையும் உமாவிடம்கூற, அப்பொழுது கண்ணன் அந்த காட்டேஜ் வெளியே வருகிறார் லாவண்யாவுடன். லாவண்யா இரத்தம் இழந்ததால் மயக்க நிலையில் இருக்க, லாவண்யாவை காரின் பின் புறத்தில் வைக்கிறார். அப்பொழுது அந்த காட்டேஜ் உள்ளே இருந்து மாணவர்கள் ஆயுதத்துடன் வர, மீரா வேகமாக ஓடுகிறாள் அவர்களை பார்த்தவுடன். மான்வர்கள் மீராவை நோக்கி ஓட, மீரா கீழே இருக்கும் ஒரு கூர்மையான மரத்தின் குச்சியை எடுக்கிறாள்.
"மீரா நீ இங்க வா கார்க்கு... கண்ணன் சார் உன்னை இங்க இருந்து கூட்டிட்டு வேற பக்கம் போயிருவார்..."என பல்லவி கூற,
"இல்லை எனக்கு யாரு extra person ன்னு தெரியும்...என் கண்ணால் பாத்துட்டேன்..."என கூறி கொண்டு வேகமாக, ஓடி வந்து மரத்தின் குச்சியை வைத்து கொண்டு வேகமாக அவர்களை நோக்கி ஓடி வருகிறாள்.
images - 2023-02-15T114207.527.jpeg

(இருள் சூழும்.....)
 
Top