• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 24

Member
Messages
37
Reaction score
2
Points
8
இரவு நேரம் இருள் சூழ்ந்து இருக்க, நிலா கூட வெளிவர மறுத்து மேகங்களுக்குள் ஒளிந்து கொண்டது.
"நான் ஒன்னு சொல்லணும்...நான் சொல்லறத நீ கொஞ்சம் யோசிச்சு பாரு..."என திவ்யா கூற,
"என்ன திவ்யா சொல்லு..."என பல்லவி திவ்யாவை பார்க்க,
"நானும் மீராவும் சின்ன வயசில இருந்தே ஒன்னாதான் படிச்சிட்டு வந்தோம்...ஆனா இதுக்கு முன்னாடி அவளோட கண்கள் இப்படி இல்ல... இப்போ அவளோட கண்கள் வித்தியாசமா இருக்கு... ஒரு வேளை அந்த extra ஸ்டூடண்ட் மீராவா இருக்குமோ..."என திவ்யா பல்லவியை பார்த்து கேட்கிறாள்.
"குமார்...."என பதட்டத்துடன் நவீன் அவர்களை நோக்கி வேகமாக ஓடி வருவதை பார்த்த குமார்,
"என்னடா..."என கேட்க,
"நம்ம கிளாஸ்ல ஒரு பையன் பிரதீப்ன்னு கண்ணாடி போட்டுட்டு இருப்பான்ல யாருகிட்டயும் பேசாம அவனை உனக்கு தெரியுமா...?"என பயத்துடன் கேட்க,
"ஆமாம் தெரியும் அவனுக்கென்ன..."என குமார் கேட்க,
விழி அகல விரிய,பதட்டத்துடன் "மீரா உனக்கு தெரியுமா அவனை..."என கேட்க,
"தெரியும்..."என மீரா கூற,
"போச்சு அப்போ நான்தான் தேவையில்லாம அவனை கொண்ணுட்டேனா...."என தலையில் கை வைத்து நவீன் அமருகிறான்.
"என்னடா உளர்ரே..."என குமார் கேட்க,
"இல்லடா...அவன் யாருகிட்டயும் பேசமாட்டான்... எதுலயும் கலந்துக்க மாட்டான்....அமைதியா தனியாவே இருப்பான்...நான் அவன்தான் extra ஸ்டூடண்ட்ன்னு நினைச்சேன்...அதை அவன்கிட்ட போய் கேட்டேன்... கிட்ட தட்ட அவனுக்கும் எனக்கும் வாய் சண்டை வந்துச்சு...அவனை தெரியாமதான் தள்ளினேன்...கீழ விழுந்துட்டான்...செத்து போயிருப்பான்னு நினைக்கறேன்...இன்னும் கீழ போய் பார்க்கல...இன்னும் கீழ போய் பார்க்கல..."என பயத்துடன் கைகள் நடுங்க நவீன் கூற,
"இன்னும் கீழ போய் பார்க்கவே இல்லையா..."என குமார், எழுந்து நவீனின் கைகளை பற்றி,
"சரி வா கீழ போய் பார்ப்போம்..."என கூற,
"சரி..."என தலையை ஆட்டி நவீன் குமார் மற்றும் மீரா கீழே சென்று கொண்டு இருக்கின்றனர்.
அப்பொழுது அவர்கள் எதிரே, பல்லவி மற்றும் திவ்யா வருகிறார்கள்.
"மீரா அந்த extra ஸ்டூடண்ட் நீதானே..."என கேட்டுக்கொண்டே திவ்யா மீராவின் பக்கத்தில் வருகிறாள்.
அவள் வருவதை பார்த்த மீரா, "இல்லை நான் இல்லை..."என கூற,
"பொய் சொல்லாத மீரா... நான் உன்னை ஸ்கூல இருந்து பார்த்துட்டு வந்து இருக்கேன்...அப்போ நீ இருந்ததுக்கும் இப்போ நீ இருப்பதுக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும்..."என கூறி கொண்டே திவ்யா தன் பின்னே இருந்து ஒரு கூர்மையான திருப்புளி ஒன்றை வைத்து கொண்டு மீராவிடம் வர,
உடனே நவீன் பாய்ந்து அவளின் கையில் உள்ள திருப்புளியை தட்டி விடுகிறான்.
"உனக்கு என்ன பைத்தியமா"என குமார் கேட்க,
"ஆமா பைத்த்தியம்தான்...கூட இருக்கவங்க... ஒன்னா படிச்சவங்க நம்ம கண்ணு முன்னாடி இருந்தவங்க...எல்லாரும் இறந்து போறப்ப வர வலி உனக்கு தெரியல...இவள தனியா வெச்சு இருந்தபோது சாவே நடக்கல... எப்போ நீ இவகிட்ட பேச ஆரம்பிச்சியோ அப்போதான் சாவு வந்துச்சு..."என பேசி கொண்டே திவ்யா கைகளில் மீண்டும் அந்த திருப்புளி எடுத்து கொள்ள,
பதிலேதுவும் பேசாமல் மீரா ஓடுகிறாள். மீரா ஓடுவதை பார்த்த திவ்யா மீராவை துரத்தி கொண்டு ஓட நவீனும் குமாரும் திவ்யாவை நோக்கி ஓடுகிறார்கள்.
வெளியே யாரோ ஓடுவது போன்ற சப்தம் கேட்டதும் மாணவர்கள் வெளியே வந்து பார்க்கிறார்கள்.
மீரா வேகமாக ஓடி திவ்யாவை திசை திருப்புகிறாள். திவ்யா வழி மாறி போக, திவ்யாவின் பின்னே ஓடி வந்த நவீன் மற்றும் குமாரை மீரா பிடித்து இழுக்கிராள்.
"பயப்படாத மீரா...நாங்க இருக்கோம்...ஒன்னும் ஆகாது உனக்கு...எங்களுக்கு தெரியும் நீ அந்த extra ஸ்டூடண்ட் இல்லைன்னு..."என குமார் கூற,
பதில் எதுவும் பேசாமல் மீரா ஆசிரியை உமாவின் அறையை நோக்கி ஓடுகிறாள்.
நவீன் மற்றும் குமார் அவர்களை பின்தொடர்ந்து வேகமாக ஓடுகிறார்கள். உமாவின் அறையை அடைந்ததும் பார்க்கிறார்கள் அங்கு உமா இல்லை.
மீண்டும் அவர்களை தாண்டி மீரா வேகமாக ஆசிரியை லாவண்யா அறையை நோக்கி ஓடுகிறாள். அங்கு சென்று பார்த்தால் லாவண்யாவும் அங்கு இல்லை.
அப்பொழுது அந்த காட்டேஜ் மைக்கில் இருந்து யாரோ பேசுகிறார்கள்.வேறு யாரும் இல்லை அது திவ்யாதான். இதுவரை நடந்த எல்லாவற்றையும் கூறி,
"மீராதான் அந்த extra ஸ்டூடண்ட்... அவளாளதான் நம்ம கூட இருந்த ஃப்ரெண்ட்ஸ் இறந்து போயிட்டாங்க...அவளை யாராச்சும் பார்த்தா கொண்ணுடுங்க...அப்போதான் இந்த சாபத்தில இருந்து நாம வெளிய வர முடியும்..."என கூறுகிறாள்.
அதை கேட்ட மாணவர்கள் அனைவரும் மீராவை கொல்ல தன் கைகளில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து கொண்டு அறையை விட்டு வெளியே வருகிரார்கள்.
திவ்யா பேசுவதை கேட்ட, ஆசிரியை லாவண்யா மீராவை நோக்கி வேகமாக ஓடி வருகிறாள். மாணவர்கள் ஆயுதத்துடன் நெருங்குவதை பார்த்த லாவண்யா, மீராவிடம் வந்து,
"உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு... நீங்க எவ்வளவு பெரிய தப்பு பண்ணறீங்க தெரியுமா..."என மீராவின் முன் நிற்க,
"உங்களுக்கு என்ன தெரியும்...நாங்க எங்க கிளாஸ்ல பட்ட வேதனையை பத்தி...நீங்க இப்போ வந்தவங்க..."என கத்தி கொண்டே வேகமாக மீராவை நோக்கி கூர்மையான கத்தியை வீச, நடுவே லாவண்யா வர அந்த கத்தி லாவண்யாவின் வயிற்று பகுதியை துளைக்கிறது.
லாவண்யா வலியால் துடிப்பதை பார்த்த அந்த மாணவன்"எல்லாத்துக்கும் நீதான் காரணம்...உன்னோட சாபம்தான்..."என கண்களில் கண்ணீருடன்"என் அண்ணன் செத்தது கூட இந்த சாபத்தால்தான்...உன்னால என் அண்ணனை திருப்பி கொடுக்க முடியுமா..."என கேட்டு கொண்டே மீராவை நோக்கி வருகிறான்.
"திவ்யா நீ என்ன பண்ணிருக்கே தெரியுமா...நாம என்ன நடக்க கூடாதுன்னு நினைச்சோம் அதை நீ பண்ணிருக்கே..."என பல்லவி திவ்யா இருக்கும் அறையை கண்டுபிடித்து திவ்யாவிடம் கேட்கிறாள்.
"அவதான் அந்த extra ஸ்டூடண்ட் அவளை போய் கொல்லு... ஏன் என்கிட்ட வந்து கேள்வி கேக்கறே..."என திவ்யா கேட்க,
"அவ அந்த extra ஸ்டூடன்ட் இல்ல அவ மேல எனக்கு நம்பிக்கை இருக்கு...இந்த விஷயம் நான் கண்டுபிடிக்கும் முன்னே அவளும் குமாரும் கண்டுபிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க..."என பல்லவி கூற,
"நீ என்ன சொன்னாலும் சரி... அவதான் extra ஸ்டூடண்ட் அவளை கொல்லாம விடமாட்டேன்..."என திவ்யா கூற,
பல்லவி பதில் எதுவும் பேசாமல் திவ்யாவின் அருகே வந்து அவள் கன்னத்தில் அறைகிறாள்.

images - 2023-02-14T071519.829.jpeg


(இருள் சூழும்.....)
 
Top