• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 23

Member
Messages
37
Reaction score
2
Points
8
ஊட்டி ஆர் கே புரம்...மாலை சூரியன் மறைந்து ஆரஞ்சு மஞ்சள் கலந்த வானத்தை மேகங்கள் மறைத்து கொண்டிருந்தது..
"ஏன் என்னை விட்டு போன...?"என அழுது கொண்டே கோபத்துடன் பல்லவி காலடியில் உள்ள ஒரு காலி கோலா கேனை எட்டி உதைக்கிறாள். அவள் எட்டி உதைத்த கேன் நேராக கீழே உட்கார்ந்து கொண்டு இருந்த குமாரின் மேல் படுகிறது. குமார் யாரென திரும்பி பார்க்க, நேராக பல்லவியிடம் வருகிறான்.
"எனக்கு ஒன்னும் ஆகலை.... என்னாச்சு உங்களுக்கு... ஏதாச்சும் பிரச்சினையா...?"என குமார் கேட்க,
"இல்லை எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லைங்க..."என பல்லவி சொல்லிக்கொண்டே அழுகையுடன் நடக்க, பல்லவி நித்திரையில் இருந்து கண்விழித்து கொள்கிறாள்.
"சே.... கனவா... ஏன் எனக்கு இந்த மாதிரி எல்லாம் கனவு வருது....குமாரை நான் கிளாஸ்ல பாக்கறதுக்கு முன்னாடியே எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு... ஏன் எனக்கு இப்படி எல்லாம் தோணுது..."என எண்ணிக்கொண்டே கடிகாரத்தை பார்க்கிறாள். மணி ஆறு.
"அய்யயோ...மணி ஆறு ஆச்சா...இன்னிக்கு கிளாஸ்ல டூர் போறோம்... லேட்டா போன அவ்ளோதான்..."என எண்ணியவாறு அவசர அவசரமாக பல்லவி ஆயத்தம் ஆகிறாள்.
மணி காலை பத்து... சாரதா கல்லூரியில் சூரியன் மேகங்களை விலக்கி தன் தலையை காட்டி கொண்டு இருந்தது. மாணவர்கள் அனைவரும் கல்லூரியின் முன் குழுமியிருந்தனர்.பல்லவி எல்லாரும் வந்துவிட்டார்களா என எண்ணி பார்த்துவிட்டு ஆசிரியை லாவண்யா மற்றும் ஆசிரியை உமாவிடம் சொல்லிவிட்டு அனைவரையும் பேருந்தில் ஏற்றி கொண்டு ஊட்டியில் உள்ள மலர் பூங்காவிற்கு செல்கின்றனர். அங்கு சென்று மாலை வரை தன் கவலைகளை மறந்து ஒற்றுமையாக நேரத்தை செலவிடுகின்றனர்.
"வாங்க எல்லாரும் போட்டோ எடுக்கலாம்"என திவ்யா கூற, சரி என எல்லாரும் நிற்க, திவ்யா தன் கைபேசியில் போட்டோ எடுக்கிறாள்.
"திவ்யா நீ நில்லு நான் போட்டோ எடுக்கிறேன்..."என நவீன் கூற, நவீன் நின்று கொண்டு இருந்த இடத்தில் திவ்யா நிற்க, புகைப்படம் எடுத்து கொள்கிறார்கள்.
நேரம் இரவு எட்டு மணி...ஆசிரியர் கண்ணன் அவர்களுக்காக ஊட்டியில் ஒரு காட்டேஜ் முன்பதிவு செய்து இருந்தார். அவர்கள் அங்கு சென்று பார்க்க, அழகாக ஒரு வீடு போன்ற அமைப்பில் பெரியதாக இருந்தது. அந்த காட்டேஜ் பின்புறம் காடு இருக்க இரவு நேரம் என்பதால் உள்ளே உள்ள பூச்சிகள் எழுப்பும் சப்தமும் அந்த தெருவில் உள்ள நாயின் ஊளையும் கலந்து மாணவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது. அவர்களும் வெளியே காட்டி கொள்ளாமல் அந்த காட்டேஜ் உள் செல்கின்றனர்.
"வாங்க ..என் பேரு மாணிக்கம் நான்தான் இந்த காட்டேஜ் ஓனர்...இது என் மனைவி புஷ்பா..."என மாணிக்கம் கை காட்ட,
"உங்களுக்கு இங்க ஏதாச்சும் தேவைபட்டால் எங்களை கூப்பிடுங்க.."என புஷ்பா கூறுகிறாள்.
வயதான தோற்றத்துடன் கன்னங்களில் சுருக்கம் நிறைந்த தம்பதிகளை மாணவர்கள் பார்த்துவிட்டு உள்ளே சென்று தத்தம் அறைகளுக்கு செல்கின்றர்.
குமாரும் நவீனும் ஒரு அறையில் தங்கி இருக்கிறார்கள். குமார், "இப்போ நாம வந்து இருக்க மாதிரி அவங்களும் முன்னாடி ஒரு டூர் போய் இருக்காங்க... அப்போ என்னமோ நடந்து இருக்கு...அது என்னனு தெரிஞ்சா போதும்...நாம இப்போ இந்த டூர் ல அதை பண்ணி சாபத்தை எடுத்திறலாம்...நம்ம கூட இருக்கவங்க நம்மள விட்டு போற வலி என்னன்னு நல்லா தெரிஞ்சது... இதுக்கு மேல இதை விட கூடாது..."என எண்ணி கொண்டு இருக்கும் பொழுது அவர்கள் அறையினை யாரோ தட்டுகிரார்கள்.
"இந்த நேரத்துல யாரா இருக்கும்..."என கேட்டுக்கொண்டே நவீன் கதவை திறக்க, வெளியே திவ்யா,பல்லவி மற்றும் மீரா நின்று கொண்டு இருக்கிறார்கள்.
"என்ன இந்த நேரத்துல...?"என குமார் கேட்க,
"Tape ரெடி ஆகிருச்சு...வேற டைம் இல்ல..இப்போதான் எல்லாரும் தூங்கிட்டு இருப்பாங்க...இந்த விஷயம் மத்தவங்களுக்கு தெரிஞ்சா பயப்படுவாங்க...அதுதான் உங்களை கூப்பிட வந்தோம்...ரெடி ஆகி வெளிய வாங்க...இந்த காட்டேஜ் பின்னாடி கேம்ப் fire போட ஒரு இடம் இருக்கு...அங்க போலாம்..."என திவ்யா கூற,
"சரி நீங்க கிளம்புங்க...நாங்க வர்றோம்..."என குமார் கூற, அவர்கள் முன்னே காட்டேஜ் பின் உள்ள camp fire இடத்திற்கு செல்கிறார்கள்.
இருள் சூழ்ந்து கொண்டிருக்க, இருள் மேகங்கள் நிலவின் ஒளியை கூட மறைத்து கொண்டு இருக்க, குமாரும் நவீனும் அங்கு வருகிறார்கள்.
"சரி அவங்க வந்துட்டாங்க...tape on பண்ணு திவ்யா... கேப்போம்..."என மீரா கூற, அந்த இருள் வேளையில் பனி பொழிய அந்த சாபத்தை பற்றிய tape போடுகிறாள் திவ்யா.
"கொஞ்சம் பின்னாடி backward பண்ணி போடு திவ்யா..."என குமார் கூற, குமார் கூறியபடி திவ்யா செய்கிறாள்.
"......ட்ரீ... ட்ரீ...என் கண்ணு முன்னாடியே ரெண்டு பேர் செத்து போயிட்டாங்க...எனக்கு என்ன பண்ணறதுன்னே தெரியல... அப்போதான் நான் அதை பார்த்தேன்...எங்க கிளாஸ்ல இருக்க ஒரு பையன் மட்டும் இந்த சாவ பார்த்து பயப்படாம இருந்தான்...எனக்கு ரொம்ப சந்தேகமா இருந்துச்சு...அதுனால நான் அவன்கிட்ட சண்டை போட ஆரம்பிச்சேன்...இது எல்லாத்துக்கும் நீதான் காரணம்... அப்படினு சண்டை போட்டேன்...ஒரு கட்டத்துல அந்த சண்டை ரொம்ப முத்தி போக நான் ஆவேசத்துல அந்த பையனை பிடிச்சு தள்ளிவிட்டேன்...அவன் கீழ விழுந்துட்டான்...ஆனா அவன் விழுந்த இடத்தில ஒரு கூர்மையான மரக்கட்டை இருந்து இருக்கு...அது அவன் பின் மண்டைல சொருகி அவன் கண்ணு வழியா வெளிய வந்திருச்சு...அவன் உடம்பெல்லாம் இரத்தம்...அவன் அங்கேயே இறந்துட்டான்.... எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல...நான் பயத்துல ஓட ஆரம்பிச்சிட்டேன்... மழை பயங்கரமா பெய்ஞ்சுட்டு இருந்துச்சு... நைட் முழுசா எனக்கு தூக்கமே வரல...காலைல எழுந்து அந்த இடத்த போய் பார்த்தேன்...அங்க யாருமே இருந்ததுக்கான சின்ன தடயம் கூட இல்ல...ஒரு துளி ரத்தம் கூட இல்ல...பிறகு நான் எங்க கிளாஸ் பசங்ககிட்ட போய் இந்த மாதிரி இவன பார்த்தீங்களான்னு கேட்டேன்...ஆனா அவங்க அப்படி ஒரு பையன் நம்ம கிளாஸ்லயே இல்லைன்னு சொன்னாங்க...யாருக்குமே அந்த பையனை பத்தி நினைவு இல்ல.... அப்போதான் எனக்கு புரிஞ்சுது...அந்த செத்து போன பையன்தான் extra ஸ்டூடண்ட்...பிறகு காலேஜ் மறுபடியும் ஆரம்பிச்சது... ஆரம்பிச்சு பல மாசம் ஆச்சு ஆனா யாரும் சாகல...இதுல இருந்து தெரிஞ்சுது உங்களுக்குள்ள இருக்க அந்த extra ஸ்டூடண்ட நீங்க கண்டுபிடிச்சு கொன்னா மட்டும்தான் இந்த சாபத்துல இருந்து வெளிய வர முடியும்...அந்த extra ஸ்டூடண்ட் ஏற்கனவே இறந்து இருப்பாங்க...அதுனால அவங்க இறந்ததும் அவங்கள பத்தின நினைவுகள் எல்லாரோட மனசுல இருந்தும் போயிரும்... இதை நான் மறக்கறதுகுள்ள ரெகார்ட் பண்ணி வைக்கறேன்....."என அந்த tape முடிகிறது.
ஐவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிறார்கள்.
"யார் அந்த extra ஸ்டுடெண்டா இருக்கும்..."என குமார் கேட்க,
"அப்படி ஒரு extra ஸ்டூடண்ட் இருக்காங்களா அப்படின்னு தெரியலை ஆனா சாவு தொடர்ந்து வருதும்..அப்போ இருக்காங்கன்னு அர்த்தம்...அதை எப்படி கண்டுபிடிக்கறது...?"என திவ்யா கேள்வி ரேகைகளுடன் பார்க்கிறாள்.
"யாரா வேணாலும் இருக்கட்டும்...ஆனா இதை வெளிய சொல்லாதீங்க... யாருன்னு தெரிஞ்சுக்க கிளாஸ்ல சண்டை வந்தாலும் வரும்..."என பெருமூச்சுடன் பல்லவி கூற,
"யாருன்னு கண்டுபிடிக்கனும் சீக்கிரமா..."என நவீனும் குமாரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிறார். அப்பொழுது அவர்கள் தங்கி இருந்த காட்டேஜ் திடீரென வெளிச்சம் வர அந்த காட்டேஜ் உள்ளே அலறல் சப்தம் கேட்கிறது.
ஐவரும் பயத்துடன் ஓடி சென்று அந்த காட்டேஜ் உள்ளே செல்ல, அங்கே மாணவன் ஒருவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கிறது. ஆசிரியர் கண்ணன் மற்ற மாணவர்களை ஆசிரியர் லாவண்யா மற்றும் ஆசிரியர் உமாவிடம் ஒப்படைத்து விட்டு அந்த மாணவனை அழைத்து கொண்டு செல்கிறார்.
"சித்தி என்னாச்சு..."என ஆசிரியர் உமாவிடம் குமார் கேட்க,
"அவனுக்கு மூச்சு திணறல்...இங்க சிங்கனல் இல்ல...அதான் ஆம்புலன்ஸ் கூப்பிட முடியல...அதான் கண்ணன் சார் கூட்டிட்டு போறாரு..."என சொல்லி கொண்டே அவர்களை பார்க்கிறாள் உமா.
"மத்தவங்க எல்லாரும் போய் தூங்குங்க..."என லாவண்யா கூற, மாணவர்கள் தத்தம் அறைகளுக்கு செல்கிறார்கள்.
"சரி...யாருனு சீக்கிரம் கண்டுபிடிப்போம்.."என குமார் கூற, ஐவரும் பிரிந்து செல்கிறார்கள்.
"குமார் உன்கிட்ட தனியா பேசணும்..."என மீரா தனியாக செல்லும் குமாரிடம் கூற,
குமார் தனியாக மீராவை அழைத்து சென்று,
"என்ன மீரா...?"
"உன் ஃபோன்ல குரூப் ஃபோட்டோ ஆல்பம் photos இருக்குல்ல அதுல அந்த tape ரெகார்ட் பண்ணுன விஜய் உள்ள group photo எடு..."என மீரா கூற, குமார் அவள் கேட்கும் புகைப்படத்தை காட்டுகிறான். அதை பார்த்த மீரா ஒரு காலி இடத்தை காட்டி "இந்த பையன்தான் அப்போ extra ஸ்டூடண்ட்..."என கூறுகிறாள்.
"அங்க யாருமே இல்ல மீரா..."என குமார் கூற,
"ஆமா ஆனா எனக்கு அவங்க தெரிவாங்க...நான் கிட்டத்தட்ட சாவுக்கு விளிம்புல இருந்து தப்பிச்சதால எனக்கு யாரு செத்தாங்க..இல்ல சாக போறாங்கன்னு என் கண்ணுக்கு தெரியும்...அவங்களோட நிறம் மட்டும் மாறி தெரியும்... மரணத்தோட நிறம் என்னால பார்க்க முடியும்....இதை வெச்சுதான் நான் சொன்னேன் என் சகோதரி மீனாவுக்கு என்னமோ நடக்க போகுது அவ சாக போறான்னு..."என உயிரற்ற கண்களுடன் மீரா குமாரை பார்க்கிறாள்.
அதிர்ச்சியுடன் பார்க்கும் குமாரை பார்த்த மீரா, "நீ உயிரோடதான் இருக்கே...உன்கிட்ட அந்த நிறம் தெரியல..."என கூறுகிறாள்.

"இன்னிக்கு நவீன் எடுத்த போட்டோ காட்டு..."என மீரா கூற,
"இந்தா..."என வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய போட்டோவை காட்டுகிறான். அதை வாங்கி பார்த்த மீரா, நிமிர்ந்து குமாரை பார்க்கிறாள்.
"இதை பத்தி மத்தவங்ககிட்ட நீ சொல்லி இருக்கலாம்ல.."என குமார் கூற,
"இல்ல வேணாம் எல்லாரும் என்னை வித்தியாசமா பாப்பாங்க.."என கூறிய மீராவை பார்த்து,
"சரி யாரு ஏற்கனவே இறந்து extra ஸ்டூடண்ட் ஆகிருக்காங்கன்னு தெரிஞ்சுதா...?"என குமார் கேட்க,
"தெரிஞ்சுது...அது யாருன்னா..."என மீரா சொல்ல வர,
"குமார்...."என பதட்டத்துடன் நவீன் அவர்களை நோக்கி வேகமாக ஓடி வருகிறான்.


images - 2023-02-13T065647.530.jpeg


(இருள் சூழும்.....)
 
Top