• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 22

Member
Messages
39
Reaction score
2
Points
8
வேஸ்ட் ரூமில் நுழைந்த குமார் தன் கைகுட்டையை எடுத்து முகத்தில் கட்டி கொள்கிறான். இல்லையேல் அவனின் wheezing பிரச்சினையினால் மூச்சு விட சிரமபடுவான்.
"ஏதாச்சும் clue இங்க இருக்கும் தேடி பாருங்க..."என குமார் கூறி கொண்டே தேட ஆரம்பிக்கிறான்.
அனைவரும் தேடி கொண்டு இருக்கின்றனர். உடைந்த மர மேசைகள், நாற்காலிகள், புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன. திவ்யா அங்கே உள்ள ஜன்னலை திறந்து காற்று வரட்டும் என திறக்க, அங்கே ஜன்னலின் கண்ணாடிகள் மிகவும் பழைய கண்ணாடிகள் என்பதால் பாதி உடைந்த நிலையில் இருக்கிறது. அப்பொழுது காற்று பலமாக வீச கண்ணாடி உடைந்து திவ்யாவின் மேல் விழபோக மீரா ஓடி வந்து திவ்யாவை பின்னே இழுத்து விடுகிறாள்.
"பார்த்து ஆபத்து இருக்க மாதிரி பொருட்களை தொடாத..."என பல்லவி கூறுகிறாள்.
"ஒன்னும் இல்ல...ஒன்னும் ஆகலை...எல்லாரும் தேட ஆரம்பிங்க..."என ஆசுவாசத்துடன் திவ்யா கூற, அனைவரும் மீண்டும் தேட ஆரம்பிக்கின்றனர்.
அப்பொழுது உடந்த மேசைகளில் சற்று வித்தியாசமாக ஒரு மேசை இருக்க, நவீன் அதன் பக்கம் சென்று பார்க்க, அது பார்க்க மீராவின் மேசையை போன்றே உள்ளது. நவீன் அந்த மேசையின் அடிபக்கத்தில் கை விட்டு பார்க்க அங்கு ஏதோ ஒட்டியிருப்பது அவனிற்கு தெரிகிறது.
"குமார் இங்க வந்து இந்த desk தூக்குடா... என்னமோ இருக்கு இதுல..."என நவீன் குமாரை அழைக்க, குமார் மேசையை தூக்க உதவி செய்கிறான்.
நவீன் அந்த மேசையை தனியே வைத்து விட்டு குனிந்து கீழே பார்க்கிறான். ஏதோ ஒரு பொருளை tape வைத்து சுற்றி ஒட்டி இருக்கிறார்கள். நவீன் அந்த tape பிரித்து எடுக்கிறான்.
"என்னடா அது..."என குமார் கேட்க,
"Tape recorder ல போட்டு கேட்கிற tape டா..."என நவீன் கூறி அதை பார்க்க அதில் "A கிளாஸ் சாபம்" என எழுதி இருந்தது.
"இதை போட்டு கேட்க நமக்கு ரெக்கார்டர் வேணும்...இப்போ என்ன பண்றது"என திவ்யா கேட்க,
"நம்ம principal ரூம்ல ரெக்கார்டர் இருக்கு "என மீரா கூற,
"ஆமா நான் போய் எடுத்துட்டு வரேன்...நீங்க இங்கேயே இருங்க" என கூறிவிட்டு பல்லவி செல்கிறாள்.
சிறிது நேரம் கழித்து பல்லவி ரெக்கார்டர் உடன் வருகிறாள். அவசரமாக அந்த டேப் எடுத்து ரெக்கார்டரில் போட்டு அனைவரும் கேட்கத் தொடங்குகின்றனர்.
".......இதை நீங்க கேக்கறீங்கன்னா....நீங்களும் கிளாஸ் A சாபத்தில் பாதிக்க பட்டு இருப்பீங்க.....இல்லேனா கிளாஸ் A ஸ்டூடண்டா இருப்பீங்க....இப்போ நான் சொல்ல போறதை நீங்க சரியா பண்ணுனா எல்லாம் சரியா நடக்கும்....நான் ஒரு தப்பு பண்ணிருக்கேன்....அதுலதான் நான் இத பண்ணினேன்.... ஆனா அது என்ன பண்ணினேனு..... யார்கிட்ட சொல்லறதுன்னு கூட தெரியல...."என காற்று சப்தத்துடன் ஒரு நபர் பேசும் சப்தம் கேட்கிறது.
"நாங்க படிக்கும் பொழுது டூர் போனோம்...நம்ம ஆர் கே புரம்ல இருக்க மலைகோவில் போனோம்...அப்போ எங்க கிளாஸ்ல மொத்தம் நாற்பது பேர் இருந்தோம்...எங்க டீச்சர் சேர்த்து நாற்பத்து ஒரு பேர்...அப்போ நல்லா மழை பெய்துட்டு இருந்துச்சு...நாங்க மலைல இருந்து கீழே இறங்கி வந்துட்டு இருந்தோம்....எல்லாரும் மெதுவா பார்த்துதான் போய்ட்டு இருந்தோம்...என் கண்ணு முன்னாடி எனக்கு முன்னாடி போன பையன் குடை வெச்சு போய்ட்டு இருந்தான்... திடீர்னு மின்னல் தாக்கி குடைல இருந்து அவன் உடம்புக்கு மின்னல் இறங்க அந்த இடத்திலேயே அவன் கருகி செத்து போய்ட்டான்... அவன் உடம்பு கருகுன வாசம் கூட எனக்கு இன்னும் நினைவு இருக்கு....அதை பார்த்து எனக்கு பின்னாடி வந்த பொண்ணு பயந்து வேகமாக ஓடுனா... வேகமா ஓடுனதால கால் தடுக்கி மலைல இருந்து கீழே விழுந்து செத்து போயிட்டா....என் கண்ணு முன்னாடியே ரெண்டு பேர் செத்து போயிட்டாங்க...எனக்கு என்ன பண்ணறதுன்னே தெரியல..."
"டப்...டப்...டப்...."என ஐவரும் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது யாரோ நடந்து வரும் சப்தம் கேட்க, ஐந்து பேரும் ஒளிகின்றனர்.குமார் அவசர அவசரமாக அந்த tape ஐ இழுத்து கொண்டு போய் ஒளிகிறான். வாட்ச்மேன் கதவை திறந்து பார்த்துவிட்டு யாருமில்லை என்பதை உறுதி செய்த பின் மீண்டும் கதவை மூடிவிட்டு செல்கிறார்.
"நல்ல வேளை மாட்டல..."என பல்லவி பெருமூசசுடன் நடந்து வர,
"என்னடா பண்ணி வெச்சிருக்கே...."என நவீன் கோவத்துடன் குமாரை பார்த்து கத்துகிறான்.
"Sorry டா....."என குமார் கூறுகிறான்.
"இப்போ எல்லாமே வேஸ்ட்டா"என நவீன் கோபத்துடன் குமாரை பார்க்க, வேகமாக tape எடுத்ததால் உள்ளே இருந்த சுருள் எல்லாம் வெளியே வந்து கிடக்கிறது.
இதை பார்த்து திவ்யா,
"இது ஒன்னும் பிரச்சினை இல்லை....என்கிட்ட re ரோல் மெசின் இருக்கு....நான் ரெடி பண்ணி தரேன்....நீ கோவப்படாத..."என கூறுகிறாள்.
வெளியே வந்த சுருள் மற்றும் tape இரண்டையும் வாங்கி கொண்டு திவ்யா அவர்களுடன் வெளியே செல்கிறாள்.

61685846080d07c424a87ac7bb9a0882.jpg

(இருள் சூழும்.....)
 
Top