• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 21

Member
Messages
37
Reaction score
2
Points
8
"தினேஷ் இறந்து ஒரு வாரம் ஆயிற்று...ஆனால் எதுவும் மாறவில்லை...அந்த சாபம் இன்னும் அப்படியே இருக்கு...இதை எப்படியாச்சும் நிறுத்தியாகனும்..."என தன் மனதினுள் பேசி கொண்டே குமார் கல்லூரியின் படியில் ஏறி A கிளாஸ் பக்கத்தில் செல்ல, அங்கே இரத்தம் சொட்ட சொட்ட குடையுடன் அருண் நின்று கொண்டு இருக்கிறான்."இதுக்கு எல்லாத்துக்கும் நீதான் காரணம்.."என சொல்லிக்கொண்டே கழுத்தில் இரத்தம் வடிய குமாரின் பக்கம் அருண் வர, குமார் பயத்தில் கத்தி வேகமாக வகுப்பறைக்குள் ஓடுகிறான்.
அப்பொழுது குமார் வகுப்பறையின் தரையை பார்க்கிறான் இரத்தத்தில் நனைந்து நசுங்கிய தலையுடன் செவிலியர் மாலா, குமாரை நோக்கி கைகளை பயன்படுத்தி உடலை தரையுடன் தேய்த்தவாறு நகர, குமார் மாலாவை தாண்டி ஓட, அங்கே யாரோ திரும்பி நிற்பது போல தெரிய குமார் கை நீட்டி அந்த உருவத்தை தொடுகிறான்.அந்த உருவம் மெல்ல திரும்ப நெஞ்சில் இரத்தம் வடிய கண் கருவிழிகள் மேலே சென்றவாறு வினிதா நிற்கிறாள். குமார் பயத்தில் வியர்க வேகமாக ஓடுகிறான் அப்பொழுது அந்த வகுப்பறையின் ஒரு ஓரத்தில், "இது எல்லாருக்கும் நீதான் காரணம் குமார்..."என ஒரு குரல் கேட்க, குரல் வந்த திசையை நோக்கி குமார் பார்க்கிறான். தினேஷின் தலை மட்டும் தனியாக குமாரை பார்த்து கொண்டு இருக்க, தினேஷின் மற்ற உடல் பாகங்கள் குமாரின் பக்கம் வர, குமார் பயத்தில் அலறுகிறான்.
மணி காலை ஆறு...கடிகார அலாரம் அடிக்கும் முன்னே கெட்ட கனவு கண்டு குமார் அலறியடித்து எழுந்து மூச்சு வாங்கி வியர்த்து போய் அமர்ந்து இருக்கிறான்.
வெள்ளிக்கிழமை என்பதால் நாளை விடுமுறை என மாணவர்கள் அன்று வகுப்பறையில் மட்டம் போடாமல் வந்திருந்தனர். அப்பொழுது வகுப்பறையின் உள்ளே வந்த ஆசிரியை லாவண்யா,"தினேஷின் போஸ்ட்மாடர்ம் இப்போதான் சொன்னாங்க...அவன் படகில் அடிபடறதுக்கு முன்னாடியே இறந்துட்டான்னு வந்து இருக்கு...அவங்க அக்காகிட்ட கேட்ட பொழுது தினேஷ் கிளம்பும் பொழுதே கீழ விழுந்து தலையில் அடிச்சதா சொன்னாங்க...அவனுக்கு எல்லாரும் அஞ்சலி செலுத்துங்க..."என கூறி கண்களை மூடுகிறாள் லாவண்யா.
அனைவரும் கண்களை மூடி மௌன அஞ்சலி செலுத்துகின்றனர். குமார் கண்களை மூடி யோசிக்கிறான்."அப்போ தினேஷ் ஏற்கனவே அடிபட்டுதான் வந்து இருக்கான். அப்போ அந்த சாபம் இந்த ஊரு எல்லைக்குள் மட்டும்தான் வேலை செய்யும்."என சிந்திக்கிறான். மௌன அஞ்சலி முடித்து அனைவரும் அங்கிருந்து கிளம்ப, குமார் நேரே பல்லவியிடம் சென்று "இன்னிக்கு காலேஜ் முடிந்ததும் வெயிட் பண்ணு நவீனையும் இருக்க சொல்லு...உங்க கிட்ட ஒன்னு பேசணும் நான் மீராவை கூட்டிட்டு வரேன்..."என கூற, பல்லவி சரி என தலையை ஆட்டுகிறாள்.
மாலை ஆறுமணி, கல்லூரி முடிந்து அனைவரும் கிளம்ப குமார்,நவீன்,பல்லவி மற்றும் மீரா மட்டும் இருக்கிறார்கள்.
"சொல்லு குமார் என்ன பேசணும்..."என பல்லவி கேட்க,
"அன்னிக்கு தினேஷ் இறந்த பொழுது விஜய் சொன்னதை யாரெல்லாம் கேட்டீங்க...?"என குமார் கேட்க,
அனைவரும் சிறிது யோசித்து விட்டு ,யாரும் கேட்கவில்லை என கூறுகிறார்கள்.
"அவரு என்ன சொன்னாருன்னா அவங்க படிச்ச கிளாஸ்க்கு பக்கத்துல இருக்க வேஸ்ட் குடோன் ரூம்ல ஏதோ வெச்சுட்டு போனாதா சொன்னாரு... என்னனு தெரியல ஆனா அது சாபத்தை எப்படி நிறுத்தறது சம்பந்தமான்னு சொன்னாரு..."என குமார் கூற,
"அவரு இந்த கிளாஸ்லதான் படிச்சாரு... ஆனா பக்கத்துல எந்த ரூமும் இல்லையே..."என நவீன் யோசித்தபடி கூற,
"அவரு இந்த கிளாஸ்ல படிக்கல...சாபம் நிக்கணும்னு கிளாஸ் ஒருதடவை மாத்தி சாவு எண்ணிக்கை அதிகமாக ஆச்சு...அது இந்த கிளாஸ் இல்ல வேற கிளாஸ் இப்போ அந்த கிளாஸ் வேஸ்ட் ரூம் ஆகிருச்சு...ஆனா அது பக்கத்துல வேஸ்ட் ரூம் குடோன் இருக்கு..."என பல்லவி குமாரை பார்த்து சொல்கிறாள்.
"சரி அப்போ...எப்போ உள்ளே போய் பார்க்கலாம்..."என மீரா கேட்க,
"இப்போ வேணாம்...நாளைக்கு காலேஜ் லீவ்...அதுனால நாளைக்கு போகலாம்..."என நவீன் கூற,
"இதை எப்படியாச்சும் நிறுத்தனும்..."என குமார் கூற, நாளை அந்த வேஸ்ட் ரூமிற்கு செல்லலாம் என முடிவெடுக்கிறார்கள்.
மறுநாள் சனிக்கிழமை.. காலை மணி பத்து...ஆனால் லேசாக மழை தூறி கொண்டிருந்ததால் இரவு போல காட்சியளித்தது.
நான்கு பேரும் கல்லூரி வாட்ச்மேனிற்கு தெரியாமல் கல்லூரியில் உள்ளே சென்று பழைய கிளாஸ் A க்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்பொழுது அங்கே யாரோ நடந்து வருவது போல தெரிய, நால்வரும் ஒளிந்து நிற்க, பல்லவியின் தோளை ஒரு கை தொட, பல்லவி பயத்தில் கத்துகிறாள்.
"ஏய் லூசு நான்தான்...திவ்யா..."என திவ்யா கூற,
"சனியனே இங்க என்னடி பண்ற..."என மூச்சு வாங்க பல்லவி கேட்க,
"கிளாஸ்ல books வெச்சுட்டு போய்ட்டேன் எடுக்க வந்தேன்..நீங்க இங்க கும்பலா என்ன பண்ணறீங்க..."என திவ்யா கேட்க,
"என்ன திவ்யாட்டயும் சொல்லிட்டியா...clues எடுக்க போறோம்னு..."என திவ்யாவை பார்த்த நவீன் உளறுகிறான்.
வேறு வழியின்றி திவ்யாவிடம் அனைத்தும் கூற, "சரி நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்... இதுனால நம்ம கிளாஸ்ல யாரும் சாகலேன்னா நல்லதுதான்..."என திவ்யாவும் இவர்களுடன் சேர்ந்து அந்த அறையை அடைகின்றனர்.
"Do not allowed.... உள்ளே செல்ல அனுமதி இல்லை..."என எழுதி இருக்கிறது அந்த அறையின் முன். அதை பார்த்து கொண்டே அந்த அறையின் கதவை திறக்கிறான் குமார்.

8c24a949154252d86541d3c7b439ab03.jpg


(இருள் சூழும்......)
 
Top