• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 20

Member
Messages
37
Reaction score
2
Points
8
"என்ன ரொம்ப நாள் கழிச்சு எனக்கு கூப்பிட்டு இருக்கே...?என்ன ஏதாச்சும் உதவி பண்ணனுமா உமா...?"என விஜய் உமாவை பார்த்து கேட்க,
"இல்ல...எல்லாம் நம்ம A கிளாஸ் விஷயம்தான்... நீயும் அங்கதானே படிச்சே...இப்போ மறுபடியும் அந்த சாபம் ஆரம்பிச்சுருச்சு... ஏதாச்சும் hint கிடைச்சா use ஆகும்...அதான் உன்னை பார்க்க வந்திருக்கோம் விஜய்.."என உமா கூறி கொண்டே விஜய்யை பார்க்கிறாள்.
"உனக்கு தெரிஞ்ச யாராச்சும் அங்க படிக்கறாங்களா...?"என விஜய் கேட்க,
"என் அக்கா பையன் இப்போ அங்கதான் படிக்கிறான்..."என உமா கூறுகிறாள்.
வானம் மெதுவாக மேகத்தை அனுப்பி சூரியனை மறைக்க இருள் சூழ தொடங்கியது. மெதுவாக இதமாக வீசி கொண்டு இருந்த காற்று சற்று வேகமாக வீச, தினேஷ் தன் கால்சட்டையின் பையில் கை விட, அதில் தினேஷ் வைத்து இருந்த காகிதம் பறக்கிறது.
"அய்யய்யோ...அது என்னோட பைக் பாஸ்...தொலைச்சா வண்டி எடுக்கும் பொழுது fine கட்டணும்..."என சொல்லிக்கொண்டே காற்றில் பறக்கும் காகிதத்தை பார்க்கிறான்.
"இல்லை எனக்கு சுத்தமா நியாபகம் இல்லை...உனக்கே தெரியும் நாம ரெண்டு பேரும் அங்கதான் படிச்சோம்...நம்ம ரெண்டு பேருக்கும் அந்த நினைவே இல்ல..."என விஜய் கூற,
"ஆமாம்...எனக்கும் எதுவும் நினைவு இல்ல...குமார் கேட்கும் பொழுதும் எனக்கும் ஒன்னும் நினைவுக்கு வரல..."என உமா கூறி கொண்டு இருக்கும் பொழுது, மீராவும் குமாரும் உமாவின் பக்கத்தில் அமர்ந்து இருக்கும் விஜய்யை பார்த்து வருகிறார்கள்.
"எனக்கும் நினைவு இல்ல... நாம கடைசியாக டூர் போனோம்...அங்கதான் என்னமோ ஆச்சு...ஆனா என்ன ஆச்சுன்னு நினைவு இல்ல...அங்கதான் என்னமோ பண்ணோம்...அங்க சில பேர் இறந்தாங்க...என் கண்ணு முன்னாடி இறங்தாங்க...ஆனா எப்படி இரந்தாங்கன்னு நினைவுக்கு வரல..."என கண்களை மூடி விஜய் யோசிக்கிறான்.
"இப்போ என்ன பண்ண போறே...பைக் எப்படி எடுக்க போறே..."என நவீன் தினேஷிடம் கேட்க,
"Fine கட்டிதான்..."என சொல்லிக்கொண்டே பல்லவி உமாவின் அருகில் விஜய் இருப்பதை பார்க்கிறாள்.
"அவரு வந்துட்டாரு போல...நான் போய் என்ன பேசறாங்கன்னு கேக்கறேன்..."என கூறிவிட்டு உமாவை நோக்கி பல்லவி நடக்கிறாள்.
"இரு நாங்களும் வரோம்..."என நவீன் கூறிகொண்டே நடக்கிறான்.
"உன்னால முடிஞ்ச வரைக்கும் யோசிச்சு பாரு விஜய்..."என உமா கூறி கொண்டு இருக்கிறாள்.
காற்றில் பறந்து கொண்டு இருந்த பாஸ் ஏரி நீரில் விழுகிறது. அதை பார்த்த தினேஷ் சட்டென தன் சட்டையை கழட்டி நீரில் குதிக்கிறான். நீரின் சப்தம் கேட்டவுடன் பல்லவியும் நவீனும் திரும்பி பார்க்கிறார்கள். தினேஷ் நீரில் நீந்தி சென்று கொண்டிருக்கிறான். வேகமாக சென்று பாஸ் எடுக்க பாஸ்ஸை நோக்கி நீந்த, அப்பொழுது அந்த ஏரியில் மீன் பிடிக்க மோட்டார் படகு வருகிறது. படகில் இருப்பவர்கள் பார்ப்பதற்குள் தினேஷ் அந்த படகின் அடியில் சுழன்று கொண்டு இருக்கும் சக்கரத்தில் சிக்கி அவனின் உடல் பாகங்கள் அறுபட்டு குருதி நீரில் கலக்கிறது. இதை பார்த்த பல்லவி பயத்தில் கத்த ஆரம்பிக்கிறாள். பல்லவியின் அலறலை கேட்ட அனைவரும் ஏரியை பார்க்க, தினேஷின் கை கால்கள் தனி தனியாக நீரில் மிதக்கிறது.
"நீங்க இதெல்லாம் நிறுத்திட்டீங்கன்னு நினைச்சேன்...ஆனா இது இவளோ மோசமா இன்னும் இருக்குனு நான் நினைக்கல..."என விஜய் ஏரியை பார்த்து கூறுகிறான்.
மேலும் விஜய் ஏதோ கூற, அனைவரும் ஏரியை நோக்கி செல்ல, யாரும் விஜய்யை கவனிக்கவில்லை. ஆனால் குமார் விஜய் சொல்வதை கேட்கிறான்.

images (98).jpeg


(இருள் சூழும்......)
 
Top