• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 2

Member
Messages
37
Reaction score
2
Points
8
காலை ஆறுமணி...
ஊட்டி பனி விலக கதிரவன் தலை காட்ட காலை நேரத்தை குயில்களும் குருவிகளும் கூவி வரவேற்கின்றன. குமார் மருத்துவமனையில் இருந்து discharge ஆகி பாட்டியின் வீட்டிற்குள் செல்கிறான். குமார் வீட்டினுள் நுழைய பாட்டி வீட்டில் உள்ள கிளி ஒன்று "good morning கவி....good morning உமா" என குமாரை பார்த்து பேசுகிறது.
குமார்,"நான் சித்தி இல்லை...என் பேரு குமார்..."என கூறி அடைபட்ட கிளி கூண்டு கதவை திறந்து விட வெளியே வந்த கிளி குமாரை சுற்றி பறக்கிறது.
வீட்டினுள் குமாரின் சித்தி உமா தேநீர் கோப்பையுடன் குமாரை நோக்கி வந்து தேநீர் அருந்த கோப்பையை நீட்டுகிறாள்.
குமார் கோப்பையை வாங்கி தேநீரை சுவைத்தபடியே,"சித்தி நீங்களும் சாரதா காலேஜ்ல part time lecturerதானே?"
"ஆமாம் குமார்...ஆனால் நான் lecturerனால அப்படி நடந்துக்கோ...சித்தி மாதிரி நடந்துக்காத..என்கிட்ட எந்த doubts கேளு"என உமா சித்தி கூறி கொண்டே " காலேஜுக்கு நேரம் ஆச்சு...நீ ரெடி ஆகு...நானும் கிளம்பறேன்"சொல்லிவிட்டு செல்கிறாள்.
குமார் காலேஜுக்கு ரெடி ஆகி தன் தாத்தா பாட்டியிடம் சொல்ல அவர்களை காண அவர்கள் அறைக்கு செல்கிறான். குமாரின் தாத்தா ஊதுபத்தி பற்ற வைத்து இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தி கொண்டே குமாரை பார்த்து" நான் இந்த இடத்தில நெறய பார்த்துட்டேன்பா..நீ பார்த்து பத்திரமா போய்ட்டு வா..." என கூறி கைகூப்பி வணங்கி அஞ்சலி செலுத்துகிறார். இவ்வளவு வருடம் ஆகியும் அம்மாவுக்கு அஞ்சலி செலுத்துகிறார் என மனதிற்குள் எண்ணி கொண்டே காலேஜ் நோக்கி நடக்கிறான்.

நேரம் எட்டு தொட குமார் அவன் கல்லூரிக்கு சென்று அவன் வகுப்பை தேடி வகுப்பறைக்குள் செல்கிறான். ஆசிரியர் ஆசைத்தம்பி அவனை அழைத்து அவனை பற்றி கூற சொல்கிறார்.
"My name is குமார்..நான் கோவையில் இருந்து இங்கு பாட்டி தாத்தாவுடன் தங்கி உங்களுடன் படிக்க வந்திருக்கேன்" என கூற அந்த வகுப்பில் உள்ள ஒரு நபர் கூட அவன் முகத்தை பார்க்கவில்லை. அனைவரும் பயத்தில் உறைந்தது போல கீழே பார்த்து கொண்டு இருக்கிறார்கள். குமார் அவர்களிடம் பேரமைதி சூழ்ந்து கொண்டதை உணர்கிறான்.
குமார் பார்வையை அலைய விட கடைசி மேசையில் ஒரு ஓரத்தில் நேற்று குமார் பார்த்த மீரா அமர்ந்திருப்பதை கவனிக்கிறான். வகுப்பு இடைவேளை விட எல்லா மாணவர்களும் அவனிடம் இயல்பாக பேச தொடங்குகிறார்கள். குமார் பேசிவிட்டு எழுந்து மீராவை பார்கிறான். மீராவின் மேசை மட்டும் பழைய மேசை போலவும் அதில் யாரோ கிருக்கியது போல அடையாளம் இருப்பதை பார்க்கிறான். அந்த வகுப்பில் உள்ள மாணவ மாணவிகள் மீரவிடம் பேசாமல் இருப்பதை குமார் கவனிக்கிறான். அவள் இருப்பதை கூட கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

இடைவேளை முடிய கல்லூரி மாணவர்கள் மற்ற கல்லூரிகளில் விளையாட்டு போட்டிகளில் பங்கு வகிக்க PET ஆசிரியர் அவர்களை மைதானத்திற்கு கூட்டி செல்கிறார். குமார் தன்னால் வேகமாக ஓடி விளையாட முடியாது எனக்கு wheezing problem இருக்கு என சொல்லி மைதானத்திற்கு பக்கத்தில் உள்ள பெஞ்சில் அமர்கிரான். அப்போது அவன் classmate வினிதா அங்கு வந்து அவனிடம் பேச தொடங்குகிறாள்.
"உன்னால வேகமாக ஓட முடியாதா...எனக்கும் அதே பிரச்சினை இருக்கு..என்னால கூட ஓட முடியாது" என வினிதா கூற,
"இந்த காலேஜ்ல என்னமோ தப்பா இருக்கு...எல்லாமே வித்தியாசமா இருக்கும்... நேத்து நான் நம்ம கிளாஸ் மீராவ பார்த்தேன்... அவ ஏன் ground வரல...அவள பார்த்தியா..?" என்று குமார் கேட்க,
அதை கேட்ட வினிதா இருவிழி அகல விரிய பயத்துடன் நடுங்கியவாறு,"இல்ல... எனக்கு வேலை இருக்கு" என கூறி வேகமாக அங்கிருந்து கிளம்புகிறாள்.
குமார் இந்த கல்லூரியில் என்னமோ இருக்கு ஏன் மீராவை எல்லாரும் கண்டுக்கவில்லை உண்மையில் மீரா ஒரு பேயோ என யோசித்தபடி நிமிர்ந்து வானத்தை பார்கிறான்.மழை லேசாக தூறல் போட்டு பூமியை நனைக்க கல்லூரியின் மொட்டை மாடியில் மீரா நிற்பதை பார்க்கிறான் குமார்.
குமார் அவளிடம் பேச மொட்ட மாடி செல்கிறான். அங்கே சென்று பார்த்தால் மீரா கையில் பேப்பர் வைத்து ஏதோ வரைந்து கொண்டிருந்தாள். குமார் அவள் அருகே சென்று,
"நீ மட்டும் இங்கே தனியா மழையில் என்ன பண்ணிட்டு இருக்கே..?"
"நான் இந்த உலகத்திலேயே இல்ல" என மீரா கூற ,
"என்னது உலகத்துல இல்லையா"என லேசாக மிரண்டபடி குமார் கேட்க,
"அது உனக்கு தேவை இல்ல" என மீரா சொல்கிறாள் வெளிர்ந்த உணர்ச்சியற்ற முகத்துடன்.
மீரா அவனை தாண்டி செல்கிறாள்..

மழை தூறல் நிற்க குமார் மனதில் கேள்வி தூறல் தொடங்குகிறது.

PicsArt_01-16-11.45.33.jpg


(இருள் சூழும்.....)
 
Top