• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 19

Member
Messages
55
Reaction score
2
Points
8
ஞயிற்றுக்கிழமை அதிகாலை மணி ஐந்து...குமார் சித்தி உமாவிடம் தன் வகுப்பில் என்ன நடந்தது என சொல்லி கொண்டு இருந்தான்.
"நேத்து கூட விஜய்னு ஒருத்தங்கள பத்தி கேள்விப்பட்டோம்...அவங்க டூர்ல என்னமோ பண்ணி இருக்காங்க...அப்போ இருந்து அந்த சாபம் அந்த வருஷத்துல வரல..."என குமார் கூற,
"விஜய்...விஜய்...எங்க கிளாஸ் நினைக்கறேன்...சரி நான் விசாரிச்சு பார்க்கறேன்..."என உமா கூறுகிறாள்.
உமா விசாரித்துவிட்டு, "எங்க கிளாஸ் விஜய் இப்போ நம்ம பக்கத்து ஊரான லக்ஷ்மி புரம்ல இருக்கான்..."என கூறுகிறாள்.
"சரிங்க சித்தி" என குமார் கூற, அப்பொழுது பல்லவி குமாரின் அலை பேசிக்கு அழைக்கிறாள்.
"ஹலோ..."
"குமார்...அந்த விஜய் எங்க இருக்காங்கன்னு அவங்க call பண்ணி சொன்னாங்க...பக்கத்து ஊருல இருக்காங்க...நீ மீராவை கூப்பிடு நாம போய் பார்த்துட்டு வரலாம் அவரை..."
"எந்த ஊரு...?"
"லக்ஷ்மி புரம்..."என கூறிவிட்டு பல்லவி அலைபேசியை துண்டிக்கிறாள்.
மணி காலை பத்து மணி...குமார் மீராவை தொடர்பு கொண்டு அவளை ஆயத்தம் ஆக சொல்கிறான். அப்பொழுது பல்லவி நவீன் தினேஷ் காரில் வந்து இறங்குகிறார்கள்.
"என்ன மீரா வந்துட்டாளா..."என பல்லவி கேட்க,
"இல்லை இன்னும் வரலை..."என குமார் சொல்கிறான்.
"நானும் உங்களோட வரேன்...சின்ன பசங்க தனியா போனால் உங்கள் வீட்டில் ஏதாச்சும் சொல்லுவாங்க"என உமா கூறுகிறாள்.
"சரிங்க மேடம் வாங்க...."என பல்லவி கூறுகிறாள்.
"சாரி... லேட் ஆகிருச்ச்சா...."என வேகமாக மீரா மூச்சு வாங்க வாசலில் நின்று கேட்கிறாள்.
"வந்துட்டியா... கிளாஸ்ல லேட் னா இப்போ கூடவா..."என கேட்டு கொண்டே பல்லவி வெளியே செல்கிறாள்.
வெளியே சென்று குமார் பார்க்கிறான்...இரண்டு காரில் பல்லவி மற்றும் நவீன் வந்து இருக்கிறார்கள்.
"உனக்கு கார் ஓட்ட தெரியுமா..."என குமார் கேட்க,
"என்கிட்டேயும் நவீன் கிட்டேயும் லைசென்ஸ் இருக்கு.."என பல்லவி கூறி கொண்டே காரின் உள்ளே ஏறுகிறாள்.
"நான் நவீன் கூட வரேன்..."என தினேஷ் கூற,
"ஏண்டா..."
"வரப்போவே எனக்கு குமட்டிட்டு வருது...நவீன் பொறுமையா ஓட்டுவான்..அதான்..."என தினேஷ் கூற,
"இவங்கள வெச்சுகிட்டு எப்படி சாபத்தை வெளியேத்த போறோம்..."என சலித்து கொண்டு குமார் பல்லவியின் காரில் ஏற மீராவின் அதே காரில் ஏறுகிறாள்.
உமா, தினேஷ் இருவரும் நவீனின் காரில் ஏறுகிறார்கள்.
கார் ஆர் கே புரம் எல்லையை நோக்கி பயணித்து கொண்டு இருந்தது. ஆசிரியர் கண்ணன் கூறிய சொற்கள் குமாரின் மனதில் ஓடி கொண்டு இருந்தது.
"இந்த சாபம் இந்த ஊருக்குள் மட்டும் வேலை செய்யும்..."என கண்ணன் கூறியது நினைவு வர,
அப்பொழுது பெரிய லாரி ஒன்று எதிரே வர...குமார் பயத்துடன் அந்த லாரியை பார்க்கிறான்..அந்த லாரி அவர்களை கடந்து சென்றவுடன் பெருமூச்சு விடுகிறான்.
ஊரின் எல்லையை தாண்டியவுடன் நிம்மதி பெருமூச்சுடன் குமார் பாதையை வேடிக்கை பார்த்து கொண்டே லக்ஷ்மி புரத்தை அடைகிறான்.
லக்ஷ்மி புரத்தை அடைந்ததும் விஜய் இருக்கும் இடத்தை நோக்கி செல்கிறார்கள். விஜயின் வீட்டிற்கு செல்ல, விஜய் வீட்டில் இல்லை என்பது தெரிய வருகிறது. உமா விஜய்க்கு தன் கைபேசியில் அழைத்து பேசிக்கொண்டே வருகிறாள்.
"அவன் வேலையாக வெளியே இருக்கிறான்... வரஒரு மணி நேரம் ஆகும்னு சொன்னான்..."என உமா கூற,
"சரி அப்போ பக்கத்துல இங்க ஒரு ஏரி இருக்கு அங்க போலாமா..."என நவீன் கேட்க,
"அதெல்லாம் வேண்டாம்..."என மீரா கூறுகிறாள்.
"நல்லா இருக்கும் சும்மா வேடிக்கைதான் பார்க்க போறோம்...வா போய் பார்ப்போம்..."என பல்லவி கூற,
வேறு வழியில்லால் அனைவரும் விஜய் வரும் வரை பக்கத்தில் உள்ள எரிகறைக்கு செல்கின்றனர்.
எரிகரைக்கு சென்று அனைவரும் மகிழ்ச்சியாக விளையாண்டு கொண்டு இருக்கிறார்கள். ஏரியில் கல் எறிந்து விளையாண்டு கொண்டு இருக்கிறார்கள்.
உமா பக்கத்தில் உள்ள ஒரு கட்டையின் மேல் உட்க்காந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறாள். மீரா ஏரியில் நீந்தும் மீன்களை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறாள். நவீன் மற்றும் தினேஷ் தன் மொபைல் போனில் புகைப்படங்களை எடுத்து கொண்டு இருக்கிறார்கள். குமார் மற்றும் பல்லவி கல் எறிந்து கொண்டே கை கடிகாரத்தை பார்க்கிறார்கள். "என்ன ஒரு மணி நேரம் ஆச்சு இன்னும் அவரை காணோம்..."என எண்ணி கொண்டே மீரா மீன்களை பார்த்து கொண்டு இருக்கிறாள்.
"ஹாய்..."என குரல் வந்த திசையை நோக்கி உமா திரும்ப,
"எப்படி இருக்கே..."என விஜய் கேட்டு கொண்டே உமாவிடம் வருகிறான்.
"நல்லாருக்கேன்... நீ எப்படி இருக்கே..."என உமா கேட்கிறாள்.
"நான் நல்லாருக்கேன்.."என விஜய் கூறி கொண்டே ஏரியை பார்கிறான்.

images (95).jpeg

(இருள் சூழும்.....)
 
Top