• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 18

Member
Messages
55
Reaction score
2
Points
8
சாரதா கல்லூரி நண்பகல் வேளை சூரியன் ஊட்டி குளிரை ஒதுக்கி தள்ளிவிட்டு மெல்ல தன் தலையை காட்டி கொண்டு இருந்தது.
"இந்த வருசம் நம்ம காலேஜ்ல டூர் கூட்டிட்டு போறாங்க... யாருக்கெல்லாம் வர இஷ்டம் இருக்கோ அவங்க உங்க கிளாஸ் லீடர் கிட்ட பேர் கொடுங்க"என பாடத்தை முடித்துவிட்டு ஆசிரியை லாவண்யா வகுப்பறையை விட்டு செல்கிறார்.
மாணவ மாணவிகள் ஒவ்வொருவராக தன் பெயர்களை கொடுக்க மீதி மாணவர்கள் தன் பெயரை கொடுக்கலாமா வேண்டாமா என தன் நண்பர்களுடன் கலந்தோசித்து கொண்டு இருந்தனர். அப்பொழுது மீரா எழுந்து நூலகம் செல்கிறாள். மீரா நூலகம் செல்வதை கவனித்த குமார் அவனும் நூலகம் செல்கிறான்.
"சார்...எங்க கிளாஸ்ல டூர் கூட்டிட்டு போறாங்க...இது வரைக்கும் இந்த மாதிரி போனப்போ எங்க கிளாஸ் சாபத்தால் யாராச்சும் டூர்ல இறந்து இருக்காங்களா...?"என மீரா ஆசிரியர் கண்ணனிடம் கேட்டு கொண்டிருக்கும் பொழுது குமார் அங்கு வருகிறான்.
"இதைத்தான் சார் நானும் கேட்க வந்தேன்"என குமார் கூற,
கண்ணன் தன் கண் கண்ணாடியை கழட்டி துணியால் துடைத்தபடி,"கிளாஸ் டூர்ல இது வரைக்கும் ஒரே ஒருத்தங்க மட்டும் செத்து போய் இருக்காங்க...ஆனா அந்த வருஷத்துல அவங்க இறந்த பின்னால் அந்த கிளாஸ்ல எந்த ஒரு சாவும் வரல...அந்த டூர்ல என்னமோ மர்மம் இருக்கு..."என கண்ணன் கூறுகிறார்.
"சரி சார்...ரொம்ப தேங்க்ஸ்..."என மீராவும் குமாரும் விடை பெறுகின்றனர்.
மறுநாள் சனிக்கிழமை என்பதால் கல்லூரி விடுமுறை. குமார் தன் வீட்டில் கிளியுடன் விளையாண்டு கொண்டு இருக்கிறான். அப்பொழுது அவன் கைபேசி சிணுங்கியது. எடுத்து திரையை பார்த்தால் அது பல்லவி என காட்டியது.
"ஹலோ"என குமார் அந்த அழைப்பை எடுக்க,
"நான் பல்லவி...இன்னிக்கு நீ ஃப்ரீயா இருந்தால் சாயுங்காலம் அஞ்சு மணிக்கு மீராவை கூட்டிட்டு You and me காஃபி ஷாப் வா..."என பல்லவி கூற,
"சரி பல்லவி நாங்க வர்றோம்..."என் கூறிவிட்டு குமார் கைபேசியை அணைக்கிறான்.

நேரம் ஐந்து மணி....
குமாரும் மீராவும் அந்த காஃபி ஷாப் உள்ளே நுழைய, அங்கே நவீனும் பல்லவியும் அமர்ந்து இருக்கிறார்கள். நவீன் கையை உயர்த்த, குமார் நவீனிடம் வருகிறான்.
அப்பொழுது தேநீர் சாப்பிடலாம் என முடிவெடுத்து அங்கு வேலை செய்யும் பெண்மணியிடம் நான்கு தேநீர் சொல்கிறார்கள். அந்த பெண்மணி நான்கு கோப்பை தேநீர் கொண்டு வந்து கொடுக்கும் பொழுது அவர்களிடம்,
"நீங்க சாரதா காலேஜ் கிளாஸ் A வா?"என கேட்கிறாள்.
"ஆம்"என பல்லவி கூற,
"நான் உங்க கிளாஸ்ல படிக்கற தினேஷ் அக்கா...உங்களை பார்த்து இருக்கேன்..."என கூறுகிறாள்.
"சரிங்க அக்கா..."என நவீன் கூற,
"உங்க கிளாஸ் என்ன விசித்திரமாக இருக்கு போல... அப்போவும் இப்போவும்..."என கூற,
"அப்போவா...?"என மீரா கேட்கிறாள்.
"ஆமா...நான் உங்க காலேஜ்ல படிச்சேன்...ஆனா A கிளாஸ் இல்ல....C கிளாஸ்.... அப்போவே உங்க கிளாஸ்ல என்னமோ வித்தியாசமா நடக்குதுன்னு தெரியும்... ஆனா என்னன்னு தெரியல...ஆனா எனக்கு ஒரு ப்ரெண்ட் A கிளாஸ்ல இருந்தான்...அவன் அடிக்கடி புலம்புவான்...நான் ஒரு தப்பு பண்றேன்...எங்க கிளாஸ் பார்த்தா பாவமா இருக்கும்...அது ஆரம்பிச்சுருச்சு... அப்படின்னு என்னன்னவோ புலம்புவான்..."என கூற,
"அவங்க பேர் தெரியுமா...? அவர் இப்போ எங்க இருக்காரு...?"என குமார் கேட்கிறான்.
"அவன் பேரு விஜய்...அவன் இப்போ இந்த ஊருல இல்ல..."என கூறுகிறாள்.
"சரி...அவங்கள எப்படியாச்சும் தொடர்பு கொண்டு எங்கிட்ட பேச சொல்லுங்க...இந்த விஷயத்துல இருந்து எங்க கிளாஸ் வெளிய வரணும்... பிளீஸ்..."என பல்லவி கூற,
"சரி... கவலைபடாதீங்க...என் தம்பியும் உங்க கிளாஸ்ல படிக்கிறான்...நான் உதவி பண்றேன்... அவன்கிட்ட பேசிட்டு உங்களுக்கு நான் கூப்பிடுறேன்..."என பல்லவியின் நம்பர் வாங்கி கொண்டு அந்த பெண்மணி செல்கிறாள்.
மாலை நேரம் முடிந்து இரவு ஆரம்பிக்கும் தருணம். இருள் சூழும் நேரம். குமார் மீராவுடன் நடந்து சென்று அந்த பொம்மை கடையில் உள்ளே செல்கிறான்.
"நீ ஏன் இன்னும் அப்படியே இருக்கே...அதான் எல்லாரும் நார்மலா பேசறாங்கல்ல.."என குமார் கேட்க,
"இல்ல இன்னும் எதுவும் நார்மல் ஆகல...சாவு இன்னும் நடந்துட்டுதான் இருக்கு..."என மீரா உயிரற்ற கண்களுடன் குமாரை பார்க்கிறாள்.
"என்னை ஏன் அப்படி பார்க்கற மீரா...நான் செத்து போயிருப்பேன் நினைக்கறியா..."என குமார் கேட்க,
"இல்ல நீ சாகல...அதை என்னால பார்க்க முடியுது..."என மீரா அவனை பார்த்து கூறுகிறாள்.
"என்ன உன்னால பார்க்க முடியும்..."என குமார் கேட்க,
"ஒன்னுமில்ல...."என மீரா கூறிகொண்டு அவளின் வீட்டிற்கு நடந்து செல்கிறாள்.

images (94).jpeg


(இருள் சூழும்.....)
 
Top