• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 17

Member
Messages
37
Reaction score
2
Points
8
"இதுதான் நம்ம கிளாஸ்ல ஒன்னா இருக்கற நாள்...நான் இந்த வருஷம் கடைசி வரைக்கும் உங்க கூட வரமாட்டேன்...நீங்க பார்த்து இருங்க..."என ஆசைத்தம்பி கூற,
மாணவர்கள் குழப்பத்துடன் பார்க்க,
ஆசைத்தம்பி தான் கொண்டு வந்த பையில் இருந்த கூர்மையான ஒரு கத்தியை எடுக்கிறார்....
கத்தியை எடுத்து கொண்டு மாணவ மாணவிகள் பார்த்து கொண்டிருக்கும் பொழுதே தன்னுடைய கழுத்தில் வைத்து தன்னை தானே குத்தி கொள்கிறார். ஆசைத்தம்பி இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். மாணவர்கள் த்தன் கண் முன்னே வகுப்பாசிரியர் துடிதுடித்து இறப்பதை கண்டு கூச்சலிட்டு கொண்டு அலறியடித்து கொண்டு வெளியே வருகிறார்கள். A வகுப்பறையில் அலறல் சத்தம் கேட்டு நூலகத்தில் இருந்து ஆசிரியர் கண்ணன் விரைந்து வகுப்பறைக்கு வருகிறார்.
கண்ணன் வகுப்பறைக்குள் நுழைந்து பார்க்கும் பொழுது ஆசைத்தம்பியின் உயிருக்கான போராட்டம் நின்று கொண்டு இருந்தது. உடனே கண்ணன் தன் கைபேசியை எடுத்து காவல் துறைக்கும் ஆம்புலன்ஸ் க்கும் அழைத்து விவரத்தை கூறுகிறார். பின் அந்த வகுப்பில் உள்ள மாணவர்களை வேறு வகுப்பிற்கு அழைத்து கொண்டு செல்கிறார்.
காவல் அதிகாரி சாரதா கல்லூரிக்கு விரைந்து வருகிறார். எல்லா ஆசிரியரிடம் கேள்விகள் கேட்கிறார். ஆசிரியர் கண்ணனிடம் கேட்கிறார்.
"சார்... ஆசைத்தம்பி சார்... காலைல என்கிட்ட பேசறப்போ இனி காலேஜ் வரமாட்டேன்...என் கிளாஸ நீங்கதான் பார்த்துக்கணும் மட்டும் சொல்லிட்டு டைம் ஆச்சுன்னு கிளம்பினார்..."என கண்ணன் கூறுகிறார்.
"உங்களிடம் ஏதாவது சொன்னாரா....?"என காவல் அதிகாரி ஆசிரியர் லாவண்யாவிடம் கேட்கிறார்.
"இல்லை சார்....என்னிடம் எதுவும் கூறவில்லை...."என லாவண்யா சற்று பயத்துடன் கூறுகிறாள்.
அப்பொழுது அங்கு வந்த மற்றுமொரு காவல் அதிகாரி, "சார்... செத்து போன ஆசைத்தம்பி bag ல ஒரு கடிதம் இருக்கு சார்..."என காவல் அதிகாரி அந்த கடிதத்தை கொடுக்கிறார். அதை வாங்கி பிரித்தபடி படிக்கிறார்.
"என் சாவுக்கு முழு காரணம் நான்தான்...என் அம்மாவுக்கு ரொம்ப நாளாக உடம்பு சரி இல்லை... குணப்படுத்த முடியாத வியாதி...அதான் என்ன பண்றதுன்னு தெரியல...என் அம்மாவையும் கொண்ணுட்டு நானும் இங்க வந்து சாக போறேன்.."என எழுதி இருந்தது அந்த கடிதத்தில். காவல் அதிகாரி உடனே ஆசைத்தம்பி யின் அம்மாவை பார்க்க சொல்லி ஆளை அனுப்புகிறார். ஆசிரியர் கண்ணனிடம்,
"சார்...இந்த கையெழுத்து ஆசைத்தம்பி கையெழுத்தா...?"என கேட்க,
அதை வாங்கி பார்த்த கண்ணன்,"ஆமாம் சார்...இது அவரின் கையெழுத்துதான்..."என கூற, அப்பொழுது அந்த காவல் அதிகாரிக்கு அலைபேசியில் அழைப்பு வருகிறது. பேசி முடித்த காவல் அதிகாரி கண்ணனிடம் வந்து,
"ஆசைத்தம்பி யின் அம்மா இறந்து இருக்காங்க...இது வெறும் தற்கொலைதான்... வேற ஒன்னும் இல்ல... வேற ஏதாச்சும் பிரச்சினை ஆனா கூப்பிடுங்க..."என கூறிவிட்டு செல்கிறார். கண்ணன் கிளாஸ் A வை திரும்பி பார்த்து கொண்டு பெருமூச்சுடன் நடந்து செல்கிறார்.

மறுநாள் சாரதா கல்லூரி கிளாஸ் A உள்ளே ஆசிரியை லாவண்யா உள்ளே வருகிறார். சற்று பயத்துடன் கூறுகிறார்,
"இன்னைல இருந்து நான்தான் உங்க கிளாஸ் டீச்சர்..."என கூற, மாணவர்கள் அரண்டு போய் பார்க்கிறார்கள். லாவண்யா வகுப்பை தொடர இடைவேளை வருகிறது. வழக்கம் போல் மீராவும் குமாரும் கல்லூரி மாடியில் நின்று தனியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
"இது எல்லாம் எவ்ளோ நாளுக்கு... எங்க போய் முடிய போகுது..."என யோசித்து கொண்டு இருக்கிறான் குமார். அப்பொழுது பல்லவி மற்றும் நவீன் காலேஜ் மாடிக்கு வருகிறார்கள். நடந்து வந்து மீராவிடம்,
"உன்னை இவ்ளோ நாளாக தனியா விட்டதுக்கு sorry... நாங்க அப்படி பண்ணிருக்க கூடாது..."என பல்லவி கேட்கிறாள்.
நவீன் குமாரிடம்,"இப்போ உனக்கு எல்லாமே புரிஞ்சு போச்சா..."என கேட்க,
"புரிஞ்சுது..."என குமார் பதிலுரைக்க, மீராவும் பல்லவியும் கை குலுக்கி கொள்கிறார்கள்.
"இனி நடப்பதை பார்ப்போம்"என மீரா கூறிகொண்டே சூரியனை மறைக்கும் கருமேகங்களை பார்க்கிறாள்.
images (93).jpeg

(இருள் சூழும்......)
 
Top