• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 16

Member
Messages
39
Reaction score
2
Points
8
சாரதா கல்லூரி பகல் வேளையில் சூரியன் எட்டி பார்த்து கொண்டு இருந்தது. குமார் கல்லூரியில் அமர்ந்து இருக்க குமாருக்கு எல்லாம் பழகி விட்டது போன்ற உணர்வு. வழக்கம் போல் அவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. மீராவும் தாமதமாக வகுப்பிற்கு வருகிறாள். மீராவை யாரும் கண்டுகொள்ளவில்லை. அன்று வகுப்பு இடைவேளையில் குமார் எழுந்து மீராவிடம் சென்று,
"எங்க அம்மா photo லைப்ரரில இருக்கு...வா நான் உனக்கு காட்டறேன்"என கூற,
"சரி" என குமாரும் மீராவும் நூலகத்தை நோக்கி செல்கிறார்கள்.
"நீ எப்படி உங்க அம்மா போட்டோவ பார்த்தே..."என நடந்து கொண்டே மீரா குமாரிடம் கேட்க,
"அன்னிக்கு நீ சொன்னது நினைவு இருக்கா...இருபது வருஷத்துக்கு முன்னாடி இறந்து போன பொன்னுன்னு அவங்க photo பார்க்கலாம் அப்படின்னு பார்க்கும் போது பார்த்தேன்..."என குமார் நூலகத்தில் நுழைந்து ஆசிரியர் கண்ணனிடம்,
"சார்...அன்னிக்கு பார்த்த அந்த photo ஆல்பம் குடுங்க சார்"என கேட்க,
கண்ணன் குமாருக்கு ஆல்பம் தருகிறார். ஆல்பம் வாங்கி குமார், பழைய புகைப்படங்களை திருப்பி அவன் அம்மாவை காட்டுகிறான். அதை பார்த்து மீரா,
"அழகா இருக்காங்க..."என மீரா கூறி கொண்டே,
ஆசிரியர் கண்ணனிடம் சென்று,"சார்...எங்க கிளாஸ் சாபம் இருபது வருஷத்துக்கு முன்னாடி தொடங்கியது...எப்போ இருந்து சார் ஒரு ஆள மட்டும் தனியா விட்டாங்க.."என மீரா கேட்க,
கண்ணன் சிறிது யோசித்து விட்டு, "இந்த எட்டு வருஷமா இப்படி பண்ணிட்டு இருக்காங்க... எட்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணை இதே மாதிரி தனியா விட்டாங்க...அதே மாதிரி அடுத்த வருசம் அதே பேர்ல பொண்ணு வந்தாங்க...இது எல்லா ரெகார்ட்ஸ்லயும் இருக்கு...அது எனக்கு நல்லா நியாபகம் இருக்கு....அந்த பொண்ணு இருந்ததுன்னு...ஆனா யாருக்கும் அது நியாபகம் இல்லை... ஆனா அந்த ரெகார்ட்ஸ் எல்லாம் அழிஞ்சு போச்சு...அடுத்த வருஷம் அதே பேர்ல அடுத்த பொண்ணு வந்துச்சு...அவளோட ரெகார்ட்ஸ் அழிஞ்சு போச்சு...அதுனால நீங்க ரெகார்ட்ஸ் பாக்கறது வேஸ்ட்... நினைவே அழிஞ்சு போகுது... ரெகார்ட்ஸ் எல்லாம் என்ன...எட்டு வருஷத்துக்கு முன்னாடி அந்த பொண்ணு இருந்ததுக்கு தடயமே இல்ல...அதே வருஷத்துல ஏழு பேர் இறந்து இருக்காங்க..."
"ஏழு பேர்தானா...கம்மியா இருக்கு..."என குமார் கூற,
"ஆமா நடுவுல ஒரு ஆள தனியா வச்சாங்க..."என கண்ணன் கூறுகிறார்.
"அப்போ அந்த பிளான் வொர்க் ஆச்சா....?"என மீரா வினவ,
"இல்ல முழுசா வொர்க் ஆகல...சில வருஷம் அந்த கிளாஸ்ல சாவு இல்ல...ஆனா சில வருஷம் ஏதோ ஒரு தப்பால அந்த சாவு எல்லாம் தொடர்ச்சியாக போச்சு...என்ன தப்புன்னு தெரியல...."என கண்ணன் கூற,
"அந்த சாபம் என்ன சார்... வெளியூர்ல கூட வொர்க் ஆகுமா...?"என குமார் கேட்க,
"இல்ல அது இந்த ஆர் கே புரம்ல மட்டும் வேலை செய்யும்...இத நான் உன்கிட்ட சொல்றதால நீ வருத்தபடாத குமார்...உங்க அம்மா இறந்ததும் கூட இந்த சாபத்தால் இருக்கலாம்...உங்க அம்மா இறந்த அப்போ உங்க சித்தி இந்த காலேஜ்ல படிச்சிட்டு இருந்தாங்க...அந்த சாபம் ஸ்டூடண்ட் இல்லேனா அவங்க குடும்ப ஆளுங்களை கொல்லும்...அதுனால வாய்ப்பு இருக்கு..."என கண்ணன் கூற,
குமார் ,"சரிங்க சார்..."என கூறிவிட்டு விடைபெறுகிறான்.
அன்று கல்லூரி முடிந்ததும் குமார் வீட்டிற்கு சென்று அவனின் சித்தி உமாவிடம் அந்த சாபத்தை பற்றி கூறி பேசுகிறான்.
"இதுனாலதான் அம்மா இறந்தாங்கள்ளா....சித்தி...."என குமார் கேட்க,
"அது எனக்கு உறுதியா தெரியலை....அதுனால கூட இருக்கலாம்...உன்னை எதுக்கு குழப்பணும் சொல்லல....நீ அதை பத்தி ரொம்ப கவலைபடாத...எல்லாம் சரி ஆகும்..."என உமா குமாரின் கைகளை பற்றி கூறுகிறாள்.
குமார் நடப்பது நடக்கட்டும் என தூங்க செல்கிறான்.
மறுநாள் காலை சாரதா கல்லூரியில் A கிளாஸ் உள்ளே ஆசிரியர் ஆசைத்தம்பி ஒரு பையுடன் நுழைகிறார். உள்ளே சென்று,
"இதுதான் நம்ம கிளாஸ்ல ஒன்னா இருக்கற நாள்...நான் இந்த வருஷம் கடைசி வரைக்கும் உங்க கூட வரமாட்டேன்...நீங்க பார்த்து இருங்க..."என ஆசைத்தம்பி கூற,
மாணவர்கள் குழப்பத்துடன் பார்க்க,
ஆசைத்தம்பி தான் கொண்டு வந்த பையில் இருந்த கூர்மையான ஒரு கத்தியை எடுக்கிறார்....
images (91).jpeg


(இருள் சூழும்.....)
 
Top