• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 15

Member
Messages
37
Reaction score
2
Points
8
சாரதா கல்லூரி நண்பகல் வேளையிலும் ஊட்டி குளிரில் மேகங்கள் சூரியனை மறைத்து கொண்டு இருந்தது. குமார் வகுப்பறையில் அமர்ந்து கொண்டு வினிதா எவ்வாறு இறந்தாள் என யோசித்து கொண்டு இருக்கிறான். அப்போது வகுப்பாசிரியர் ஆசைத்தம்பி வகுப்பறைக்குள் நுழைகிறார்.
வழக்கம் போல் குமாரையும் அங்குள்ள மாணவ மாணவிகள் கண்டு கொள்ளவில்லை. ஆசிரியர் ஆசைத்தம்பி கூட கண்டு கொள்ளவில்லை. குமார் வகுப்பு நடக்கும் பொழுது பக்கத்தில் இருக்கும் மாணவர்களை கூப்பிட்டு பார்க்கிறான். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. குமார் பெருமூச்சுடன் ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்து கொண்டு யோசிக்க தொடங்குகிறான். "இங்க என்னதான் நடக்குது..?"என்ற கேள்வி குமாரை துளைத்து எடுக்கிறது.
கல்லூரி முடிந்து கிளம்பும் பொழுது குமாரின் புத்தக பையில் இருந்து ஒரு காகிதம் விழுகின்றது. குமார் அதை எடுத்து படிக்கிறான். அது ஒரு கடிதம்.
"உன்கிட்ட பேசாம இருப்பதற்கு sorry. நீ இப்போ போய் மீராவை பாரு. அவகிட்ட கேளு. அவ சொல்லுவா எல்லாம். அவளுக்கு எல்லாம் தெரியும்."என எழுதி இருந்தது. ஆனால் யார் வைத்தது என குமார் கவனிக்கவில்லை.
குமார் கல்லூரி முடிந்து வழக்கம் போல் மீரா இருக்கும் அந்த பொம்மை கடைக்கு சென்று பார்க்கிறான். அந்த பேய் போன்ற பொம்மைகள் நிறைந்த கடையின் கீழ் பகுதிக்கு சென்று பார்க்கிறான். மீரா அவனை பார்த்ததும் ,
"இங்க என்ன பண்ற" என மீரா கேட்க,
குமார் அந்த கடிதத்தை எடுத்து மீராவிடம் கொடுக்கிறான்.
மீரா அதை வாங்கி படிக்கிறாள்.
"நீ பேய் இல்லைன்னு இப்போதான் புரியுது.."என குமார் கூற,
"உனக்கு இது இப்போதான் புரியுதா... நான் பேய் எல்லாம் இல்ல..."என மீரா உயிரற்ற கண்களுடன் குமாரை பார்க்க,
"இதுக்கு முன்னாடி உன்னை எப்படி எல்லாரும் கண்டுக்காம இருந்தாங்களோ...இப்போ அதே மாதிரி என்னை பண்றாங்க..என்னதான் ஆச்சு...யாரும் என்னை கண்டுக்கல..."என குமார் சோகமாக கூற,
"நான் அனுபவிக்கிற தனிமை வலி இப்போ உனக்கு புரியுதா...சரி இந்த கடைக்கு மேலதான் என் வீடு அங்க வா எல்லாமே உனக்கு சொல்றேன்..."என மீரா சொல்லிவிட்டு நடக்க,
குமார், " அப்போ இது உங்க கடையா...அப்போ இந்த பொம்மையை செய்யும் பத்மா யாரு...?"
"அவங்க என் அம்மா.."என மீரா மேலே சென்று ஒரு கதைவை திறந்து அவளின் வீட்டிற்குள் செல்கிறாள். குமார் மீராவின் பின் நடந்து அவளின் வீட்டிற்குள் செல்ல, மீரா குமாருக்கு தேநீர் கொண்டு வந்து கொடுக்கிறாள்.
"சரி மீரா இப்போவாச்சும் சொல்லுங்க...என்னாச்சு..."
"அன்னிக்கு நான் சொன்னேன் நியாபகம் இருக்கா...இருபது வருஷத்துக்கு முன்னாடி நம்ம படிக்கற இதே கிளாஸ்ல ஒரு பொண்ணு இறந்திட்டான்னு..."
"ஆமா..."என குமார் மீராவை பார்க்க,
"அதுனால ஒரே ஒரு desk மட்டும் காலியா இருக்கும். ஆனா அந்த வருஷத்துல எடுத்த group photo ல நாற்பது பேருமே இருந்து இருக்காங்க.அதே மாதிரி attendance ல கூட நாற்பது பேருமே இருந்து இருக்காங்க.. ஆனா எப்படி இருந்தான்கன்னு யாருக்கும் தெரியாது. அந்த கிளாஸ்ல இருந்த எல்லாருக்கும் அந்த இறந்த பொன்னு இறந்த மாதிரியே தோணல... அவளோட நடமாட்டம் இருக்கறத அவங்களால உணர முடிந்தது. அப்போ இருந்து அடுத்த வருஷம் அந்த கிளாஸ்ல ஒரு desk மட்டும் extra இருந்து இருக்கு. மாசம் ஆனா அந்த கிளாஸ்ல ஒரு ஒருத்தங்களா இறந்துட்டே போனாங்க. அது என்னன்னா extra ஒரு desk அந்த கிளாஸ்ல இருந்துட்டே இருக்கணும். இல்லேனா எல்லாரும் desk fill பண்ணிட்டாங்கன்னா மாசம் மாசம் இறந்துட்டே இருப்பாங்க. "என மீரா குமாரின் முகத்தை பார்க்க,
குழம்பிய முகத்துடன்,"சரி... ஒன்னும் புரியல... ஆக மொத்தம் மாச மாசம் யாராச்சும் இறந்து போவாங்க...அந்த இறந்த பொண்ணு பேயா வந்திருக்கு...அதானே..."என குமார் கேட்க,
மீரா சிரித்துவிட்டு, "இதுக்கு நிறைய பண்ணி பார்த்தாங்க..அந்த கிளாஸ் மூடி பார்த்தாங்க...அந்த கிளாஸ் மாத்தி பார்த்தாங்க... பூஜை பண்ணி பார்த்தாங்க....அந்த கிளாஸ் இல்லாம பண்ணி பார்த்தாங்க...ஆனா இருந்தாலும் என்ன பண்ணாலும் மாச மாசம் அந்த கிளாஸ்ல இருக்க எதாச்சும் ஸ்டூடண்ட் இல்ல அவங்களோட குடும்பத்துல இருக்க யாராச்சும் இறந்து விடுவாங்க...எல்லாமே முயற்சி பண்ணி தோத்து போனாங்க...சாவு எண்ணிக்கை அதிகமா ஆச்சு...இதுக்கு கடைசியாக ஒரு திட்டம் போட்டங்க...அது என்னன்னா இருக்கற ஒரு ஸ்டூடண்ட இல்லாம பண்ணிட்டா அந்த ஆன்மாக்கு நிம்மதி குடுத்த மாதிரி ஆகிரும்... அந்த ஆன்மாக்கு கிளாஸ்ல ஒரு இடம் குடுத்த மாதிரி ஆகும்... இருபது வருசத்துக்கு முன்ன இறந்து போன பொண்ணு பேரு மீரா...என் பேரும் மீரா...அதுனால என்னை கிளாஸ்ல இல்லாம பண்ணிட்டாங்க... உன்கிட்டயும் என்னை avoid பண்ண சொல்ல முயற்சி பண்ணாங்க...ஆனா நீ அன்னிக்கு என்கிட்ட ஹாஸ்பிடல பேசிட்டே... அதுனால இப்போ அந்த சாபம் மீண்டும் ஆரம்பிச்சு நிறைய சாவு வருதுன்னு சொல்லிட்டு இருக்காங்க..."என மீரா சொல்லி முடிக்கவும்,
"அப்போ நீயும் நானும்தான் நம்ம கிளாஸ்ல பேயா...சரி... அப்படியே போகட்டும்..."என குமார் பெருமூசசுடன் எழுந்து நிற்கிறான்.
"சரி நீ எதுக்கு யார் மரணித்தார் அப்படின்னு desk ல எழுதி வெச்சு இருக்கே..."என குமார் கேட்க,
"ஆமா நான் இறக்கல...அதுனால நான் பேய் இல்ல...யாரு இறந்தான்னு தெரியல... அதான் அப்படி எழுதி இருந்தே..."என மீரா கூறுகிறாள்.
"சரி உன் கண்களுக்கு என்னாச்சு.. அன்னிக்கு ஹாஸ்பிடல யாரை பார்க்க வந்தே...."என குமார் கேட்க,
"எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா....நாங்க twins... அவ பேரு மீனா... நாங்க பிறந்ததும் எங்க அத்தைக்கு குழந்தை இல்லைனு அவளை அவங்களுக்கு குடுத்திட்டாங்க...ஆனா நாங்க அக்கா தங்கச்சியா இருந்தோம்... ஊரு சுத்தரது...ஒன்னா விளையாட்டு...வீட்டுக்கு வரதுண்ணு இருந்தோம்...இதெல்லாம் எங்க அத்தைக்கு பிடிக்கல...எங்க அவள் அவங்கள விட்டுட்டு எங்கிட்ட வந்திருவான்னு பயந்து என்னை இனி பார்க்க கூடாதுன்னு அவகிட்ட சொல்லிட்டாங்க...ஆனா அவ அவங்களுக்கு தெரியாம என்னை பார்க்க வருவா...அவ என்னை மாதிரி இல்ல... ஜாலி type... நல்லா பழகுவா...அப்போ ஒருநாள் ஒன்னா ரோட்ல நடந்து போகும் போது ஒரு accident ஆகிருச்சு... அப்போ கண்ணாடி பட்டு என் கண்ணு இப்படி ஆகிருச்சி...ஆனா அதுக்கு பிறகும் மீனா என்னை பார்க்க வந்தா...அப்போ ஒருநாள் நான் அவளை பார்த்தேன்...எனக்கு சரியா படல...அவளுக்கு என்னமோ நடக்க போகுதுனு தோணுச்சு... அதுனால நான் அவளை பாதுகாப்பா பார்த்துட்டே இருந்தேன்...அப்போ ஒரு நாள் அவ நடந்து போய்ட்டு இறுக்கப்போ அவ மயங்கி விழுந்தா...சுதா ஹாஸ்பிடல் கொண்டு போய் பார்த்தோம்...அவளுக்கு ஏதோ வியாதி இருக்குன்னு சொன்னாங்க...அன்னிக்கு நைட் அவ இறந்து போய்ட்டா...அவளை பார்க்கத்தான் நான் ஹாஸ்பிடல் அன்னிக்கு வந்தேன்...நீயும் என்கிட்ட பேசுனே..."என மீரா கூறிவிட்டு, திரும்பி பார்க்காமல் எழுந்து செல்கிறாள்.
குமார் புரிந்து கொண்டு, "சரி நாளைக்கு கிளாஸ்ல பார்ப்போம்...நீயும் நானும் இப்போ ஆவிகள் ஆகிட்டோம்ல..."என சொல்லிவிட்டு குமாரின் வீட்டை நோக்கி குமார் செல்கிறான்.

images (90).jpeg


(இருள் சூழும்....)
 
Top