Member
- Messages
- 55
- Reaction score
- 2
- Points
- 8
குமார் மாலாவின் இறந்த உடலை பார்த்து பயத்துடன் வீட்டிற்கு வருகிறான். "கொஞ்ச நேரம் முன்னாடிதானே நம்மகிட்ட பேசினாங்க அதுக்குள்ள எப்படி..." என மாலாவின் உடலை பார்த்த அதிர்ச்சியில் வீட்டினுள் நுழைந்து குமாரின் தாத்தாவிடம் சென்று பேசுகிறான்.
"என்ன நடக்குதுன்னு தெரியலை தாத்தா.. கொஞ்ச நேரம் முன்னாடி உயிரோட இருந்தவங்க இப்போ இல்ல..."
"சாவுன்னா அப்படிதான் இருக்கும்...நீ கவலைப்படாத... நம்ம கூட இருக்கவங்க இல்லாம போனால் அப்படிதான் இருக்கும்..."என ஆறுதல் கூற, குமார் சிறிது ஆசுவாசம் அடைகிறான்.
மறுநாள் கல்லூரியில், வழக்கம் போல் யாரும் குமாரையும் கண்டு கொள்ளவில்லை. மீரா வழக்கம் போல் தாமதமாக வருகிறாள். அவளையும் யாரும் கண்டு கொள்ளவில்லை. வகுப்பு இடைவேளை வர, குமார் நவீனிடம் சென்று
"இங்க என்னதான் நடக்குது நீயாச்சும் சொல்லு"என கேட்க,
நவீன் அவனை கொண்டுகொள்ளமல் செல்கிறான்.
"நீங்க ஒன்னும் சொல்ல வேணாம் நானே கண்டுப்புடிக்கறேன் பாருங்க எல்லாரும்...."என குமார் அடக்க முடியாமல் கோவமாக கத்தி விட்டு, சாரதா கல்லூரியின் நூலகத்திற்கு செல்கின்றான்.
"காலேஜ்ல group photos ல அந்த இறந்து போன பொண்ணு இருந்துச்சின்னு சொன்னாங்க அதை இப்போ பார்க்கலாம்" என எண்ணி பழைய காலேஜ் போட்டோ ஆல்பம் நூலகர் கண்ணனிடம் கேட்டு வாங்கி பார்க்கிறான்.
"கிட்டத்தட்ட இருபது வருஷம் மீரா சொன்னா.... அப்போ 2000கிட்டஇருக்கும்..."என ஆல்பம் வாங்கி அதிலுள்ள எல்லா போட்டோவும் பார்த்து கொண்டே போகிறான்.
அப்போது அவனின் அம்மா குரூப் போட்டோ பார்க்கிறான். அவனின் அம்மாவும் சித்தியும் அதே வகுப்பறையில் படித்ததாக அவனின் சித்தி கூறியதை நினைத்து கொண்டு, அவனின் அம்மாவின் புகைப்படத்தை பார்க்கிறான். அப்போது அவனின் பக்கம் வந்த நூலகர் கண்ணன்,
"என்னப்பா பார்க்கறே...?"
"இதுதான் என் அம்மா சார்..."என அவனின் அம்மாவை காட்ட,
கண்ணன் குமாரின் அம்மா உஷாவை காட்ட," இதுதான் உங்க அம்மாவா... இவங்களுக்கு நான்தான் கிளாஸ் டீச்சரா இருந்தேன்.. இப்போதான் நான் லைப்ரரியன் முன்னாடி நான் கிளாஸ் டீச்சர்தான்..."என கண்ணன் கூற,
"அப்படியா சார்..."என குமார் கண்ணனை பார்க்க,
"ஆமா...உங்க அம்மா இறந்ததா கேள்விப்பட்டேன்..எப்படி இறந்தாங்கன்னு சொல்ல முடியுமா...உனக்கு கஷ்டமா இருந்தா வேணாம்.."என கண்ணன் கேட்கிறார்.
"அப்படி எல்லாம் இல்ல சார்...நான் பிறந்ததும் பிரசவத்தில் இறந்துட்டாங்க..."என குமார் கூற,
"சரிப்பா... நல்லா படி..."என கண்ணன் சொல்லி கொண்டே கல்லூரியின் வெளியே பார்க்கிறார்.
"உங்க அம்மாவோட தங்கச்சி கூட இதே காலேஜ்லதானே படிச்சாங்க..."என கண்ணன் கேட்க,
"ஆமாம் சார்..."என குமார் கூறி கொண்டே, ஆல்பம் பார்க்கிறான்.
"சரிப்பா பார்த்து இருப்பா..."என சொல்லி கொண்டு கண்ணன் புத்த்கங்களை அடுக்க போகிறார்.
அப்பொழுது, நூலகத்தினுள் பல்லவி வருகிறாள்.
"குமார்...உன்னை Staff roomல கூப்பிட்டாங்க நீ போய் பார்த்துட்டு வா... அதுக்கு முன்னாடி sorry..."என பல்லவி கூற,
"எதுக்கு sorry...?"என குமார் குழப்பத்துடன் கேட்க,
"அது உனக்கே புரியும்...நீ Staff room போ"என சொல்லிவிட்டு பல்லவி செல்கிறாள்.
குமார் பல்லவி சொன்னது போல் staff room சென்று பார்க்கிறான். அங்கு உள்ளே சென்றதும் இரண்டு போலீஸ் அதிகார்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் வகுப்பாசிரியர் ஆசைத்தம்பி இருக்கிறார்.
"நீங்கதான் குமாரா...?"என போலீஸ் அதிகாரி கேட்க,
"ஆமாம் சார்..."என குமார் கூற,
"ஒன்னுமில்ல...நீங்கதான் கடைசியாக நர்ஸ் மாலாவுக்கு call பண்ணி இருந்தீங்க..."
"ஆமாம் சார்...அவங்களுக்கு என்ன சார் ஆச்சு...call நல்லாதான் பேசிட்டு இருந்தாங்க...திடீர்னு accident ஆகிருச்சு போல.."
"அது வெறும் லிஃப்ட் rope கட் ஆகி விழுந்து இறந்து இருக்காங்க.. நீங்க ஒன்னும் பயப்படாதீங்க...இது வெறும் formalityதான்...கடைசியாக உங்க call இருந்துச்சு....அதான் விசாரிக்க வந்தோம்..."என கூறிவிட்டு போலீஸ் கிளம்புகிறது.
மாலை கல்லூரி முடிந்தவுடன் குமார் வினிதா மற்றும் நவீனிடம்சென்று ,
"நம்ம ஒரே வழியாதான் போறோம்..நம்ம ஒன்னா போலாமா...?"என கேட்கிறான்.
அவர்கள் தயங்கினாலும் ,"சரி வா போகலாம்" என நவீன் கூற, அவர்கள் கல்லூரி விட்டு கிளம்பி செல்கிறார்கள். மாலை சூரியனின் வெளிச்சத்தில் மெதுவாக இருள் வர தொடங்கியதை பாரத்து கொண்டே நடக்கிறார்கள். குமார் எதுவும் பேசாமல் , "இவர்களும் எதுவும் சொல்லல... நம்மலாலயும் ஒன்னும் தெரிஞ்சுக்க முடியல..."என யோசித்து கொண்டே நடக்கிறான்.
வினிதா சட்டென்று நிற்க, குமார் மற்றும் நவீன் அவளை பார்க்கிறார்கள்.
"சரி....குமார்....உன்கிட்ட சொல்லாம இருக்கறது தப்புதான்....இங்க என்ன நடக்குதுன்னா.... ஆ ஆ ஆ...."என ஏதோ சொல்ல வந்து வினிதா திடீரென தன் நெஞ்சை பிடித்து கொண்டு கீழே விழுந்து துடிக்கிறாள். அப்படியே கண்களை மூடி உணர்வற்று போகிறாள் வினிதா. குமார் ஆம்புலன்சை அழைத்து அவர்கள் வந்த பொழுதுதான் தெரிந்தது வினிதாவின் உயிர் அவளின் உடலை விட்டு பிரிந்து விட்டது என்று....
(இருள் சூழும்......)