Member
- Messages
- 55
- Reaction score
- 2
- Points
- 8
மறுநாள் குமார் கல்லூரிக்கு செல்கிறான். அவன் நினைத்தது போல மீரா அன்று வரவில்லை." சரி இன்னிக்கு மாலை பொம்மை கடைக்கு போய் பார்ப்போம் அவள் இருப்பாள் பேசலாம்"என மனதிற்குள் எண்ணியவாறு வகுப்பை கவனிக்கிறான்.
மாலை ஆறு மணி, குமார் பொம்மை கடைக்கு வருகிறான். அதே பொம்மைகள் பார்த்தாலே பயத்தை உண்டாக்க கூடிய பொம்மைகளை பார்த்து கொண்டே உள்ளே செல்கிறான்.அங்குள்ள அந்த மூதாட்டியிடம் "நான் பொம்மைகளை பார்க்க வந்திருக்கேன் கீழ போய் பார்க்கவா..?"என கேட்டு அனுமதி வாங்கி கொண்டு கீழ் அறைக்கு செல்கிறான். அன்று பார்த்த அதே பொம்மை அங்கு உள்ளது. மீராவை போன்ற தோற்றம் கொண்ட அந்த பொம்மையை பார்த்து கொண்டு இருக்கிறான்.பார்த்து கொண்டே திரும்ப அவன் பின்னால் மீரா நின்று கொண்டு இருக்கிறாள்.
"மீரா...நீ இங்கதான் இருக்கியா...?"
"ஆமா நான் இங்கதான் இருக்கேன். உனக்கு என்ன வேணும்.?"
" உன்னை ஏன் எல்லாரும் avoid பண்றாங்க..?"என குமார் கேட்க,
"உன்கிட்ட எத்தன தடவ சொல்லறது...உனக்கு சம்பந்தமில்லாத விஷயத்தை பத்தி கேட்காத...அது உன்னையும் உன்கூட இருக்கவங்களையும் சும்மா விடாது..."என மீரா கூறுகிறாள்.
"சரி நம்ம கிளாஸ்ல என்னதான் நடக்குது... நீயாச்சும் சொல்லு... யாரை கேட்டாலும் சொல்லல..."என குமார் கேட்கிறான்.
"அத பத்தி நீ தெரிஞ்சுக்காம இருக்கரதுதான் நல்லது."என சற்று கோபத்துடன் மீரா கூற,
"சரி இத பத்தி இனி கேட்டு ஒன்னும் இல்ல"என நினைத்து குமார் மீராவிடம் இருந்து விடை பெற்று கொண்டு வீட்டிற்கு செல்கிறான்.
மறுநாள் விடுமுறை என்பதால், குமார் கல்லூரிக்கு செல்லவில்லை. குமாரின் சித்தி உமாவும் விடுமறை என்பதால் கல்லூரிக்கு செல்லாமல் தூங்கி கொண்டு இருக்கிறாள். பின் குமார் எழுந்து வரும் சப்தம் கேட்டு உமா எழுந்து கொள்கிறாள்.
"குமார் உனக்கு ஏதாச்சும் சாப்பிட வேணுமா...செஞ்சு குடுக்கவா..."என உமா கேட்க,
"இல்ல வேணாம் சித்தி...உங்ககிட்ட ஒன்னு பேசனும்..."
"என்ன குமார்"
"நீங்க காலேஜ் எங்க காலேஜ்லதானே படிச்சீங்க...எந்த கிளாஸ்ல படிச்சீங்க..."
"நான் A கிளாஸ்"
"அப்போ அந்த கிளாஸ்ல ஏதாச்சும் வித்தியாசமா தெரிஞ்சுதா சித்தி.."
"அதெல்லாம் எப்போவோ படிச்சது இப்போ கேக்கறே...எனக்கு ஒன்னும் நியாபகம்இல்ல..."என கூறிய உமாவின் கைகளை குமார் பார்க்கிறான். உமாவின் கைகள் நடுங்குவதை குமார் கவனிக்கிறான். "சித்தி என்னமோ மறைக்கறாங்க"என எண்ணி கொண்டு,
"யோசிச்சு சொல்லுங்க சித்தி"என குமார் கூற,
"நீ அதை பத்தி யார்கிட்டேயும் கேட்காத..."என உமா கோவமாக கத்தி விட்டு எழுந்து சமையல் செய்ய ஆரம்பிக்கிறாள்.
திங்கள் கிழமை கல்லூரி திறந்துவிட மாணவர்கள் திங்கள் கிழமையை வெறுத்தபடி கல்லூரிக்குள் நுழைந்து கொண்டு இருக்கிறார்கள். A கிளாஸ் மாணவர்கள் குமாரின் மேசையை பார்த்து பேசி கொண்டு இருக்கிறார்கள்.
"என்னதான் பண்றதுன்னு தெரியல...இந்த பையனுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கறதுண்ணு புரியல..."என பல்லவி கூறுகிறாள்.
"எனக்கு தெரிஞ்சு அது ஆரம்பிச்சுருச்சு போல... எப்படியாச்சும் சொல்லணும்...இன்னும் நிறைய சாவு விழலாம்..."என நவீன் பல்லவியை பார்த்து கூறுகிறான்.
அப்பொழுது குமார் வகுப்பறைக்குள் நுழைய எல்லாரும் அவனை பார்த்து அமைதி அடைகிறார்கள்.பின் குமாரை கவனிக்காதது போல திரும்பி கொள்கிறார்கள். குமார் மீராவின் மேசையை பார்க்க, மீரா இன்று வரவில்லை என்பதை அந்த காலி மேசை உணர்த்தியது. வகுப்பில் இடைவேளை வர குமாரிடம் யாரும் ஒன்றும் பேசவில்லை. குமாருக்கு ஒன்றும் புரியவில்லை. குமார் நவீனிடம் சென்று, "அன்னிக்கு மழை பெய்யும் போது கொஞ்ச நாள் கழிச்சு எங்கிட்ட எல்லாம் சொல்றேன்னு சொண்ணெல்ல...இப்போ சொல்லு..."என கேட்க,
"இல்ல இப்போ வேணாம்.கொஞ்சம் டைம் ஆகட்டும்."என நவீன் கூற மறுக்கிறான்.
"இல்ல இப்போ எனக்கு தெரியணும்...எல்லாரும் இன்னிக்கு என்னை பார்த்து பயப்படரீங்க...என்னாச்சு...எதுக்கு அந்த பொன்னையும் பார்த்து பயப்படறீங்க..."என குமார் விடாப்பிடியாக கேட்க,
பக்கத்தில் இருந்த பல்லவி , "இல்ல இப்போ சூழ்நிலை மாறிடுச்சு...கொஞ்ச நாள் போகட்டும் சொல்லறோம்..."என கூற,
அப்பொழுது குமாரிற்கு கைபேசியில் அழைப்பு வர,
"நான் மாலா பேசறேன்..."
"சொல்லுங்க அக்கா"
"மீரான்னு ஒரு பொண்ணு உண்மையிலேயே இருக்கா..."
"என்னாச்சு"என குமார் கேட்க,
"இல்ல அந்த பொண்ணு உண்மையில் இருக்கா...நான் என் தம்பி கிட்ட கேட்டேன் நேத்து...அந்த மாதிரி பொண்ணே இல்ல...அவ செத்து போயிட்டன்னு சொன்னான்.."
"இல்ல அதுக்கு வாய்ப்பே இல்ல...நான் அவளை பாத்து இருக்கேன்.."என குமார் கூற,
"டாமால்ல்ல்ல்....." என சப்தத்துடன் கைபேசி துண்டிக்கப்படுகிறது.
குமார் மீண்டும் அழைக்க, ஸ்விட்ச் ஆஃப் என வர, வேறு வழியின்றி குமார் சுதா மருத்துவ மனைக்கு செல்கின்றான். அங்கு கூட்டமாக உள்ளது. என்ன நடக்கிறது என குமார் உள்ளே சென்று பார்க்க,
மருத்துவமனையில் லிஃப்ட் wire அறுந்து லிஃப்ட் மேலே இருந்து வேகமாக கீழே அடித்து செவிலியர் மாலா இறந்து விட்ட செய்தி அறிந்து குமார் பயத்துடன் மருத்துவ மனையின் உள்ளே செல்கிறான். அங்கு மாலாவின் உடல் தலை நசுங்கி இருப்பதை பார்த்து மூச்சு விட முடியாமல் பயத்துடன் வெளியே செல்கிறான்.
(இருள் சூழும்......)