• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 11

Member
Messages
55
Reaction score
2
Points
8
"நான் இந்த உலகத்துல இல்ல...அவ்ளோதான் இத பத்தி நீ ரொம்ப யோசிக்காத..."என மீரா கூறிவிட்டு மழையை வேடிக்கை பார்க்கிறாள்.
"இல்ல...எனக்கு தெரியனும்... எல்லாரும் ஏன் உன்னை avoid பண்றாங்க...."என குமார் மீண்டும் கேட்க மீரா பதிலேதும் பேசாமல் மழையை பார்த்து கொண்டு இருக்கிறாள்.
அப்போது அந்த கல்லூரியின் பியூன் மானவர்கள் தேர்வெழுதும் அந்த வகுப்பறைக்கு வந்து அங்கு தேர்வு எழுதி கொண்டு இருக்கும் அருணிடம் என்னமோ கூறுகிறார். இதை குமார் வகுப்பறைக்கு வெளியே இருந்து பார்த்து கொண்டு இருக்கிறான்.
அருண் தேர்வு எழுதி கொண்டு இருந்த தேர்வுதாளை ஆசிரியரிடம் கொடுத்து விட்டு வேகமாக வகுப்பறையை விட்டு வெளிய வர மழையை பார்த்தவுடன் வேகமாக சென்று குடையை எடுத்து கொண்டு மீண்டும் வெளியே வருகிறான்.
வெளியே மீரா இருப்பதை பார்த்து அதிர்ச்சியுடன் வேகமாக பயத்துடன் ஓடுகிறான் கீழே செல்ல படிக்கட்டை நோக்கி..
"அருண்.... ஏன் இப்படி பயந்து ஓடறே...என்னாச்சு..." என குமார் குழப்பத்துடன் கத்துகிறான்.
அருண் பதிலேதும் கூறாமல் வேகமாக ஓடி, படிக்கட்டை அடைகிறான். படிக்கட்டை அடைந்ததும் கீழே செல்ல வேகமாக இறங்க முற்படும் பொழுது அவனது கால் வழுக்கி கீழே விழ செல்ல, அவனது கைகளில் இருந்த குடை அவன் கைகளில் இருந்து நழுவி கீழே கடைசி படியில் விழுகிறது செங்குத்தாக. சரியாக அருண் முன்னோக்கி கீழே விழ அவன் கழுத்தில் குடையின் மேல் உள்ள கூர்மையான பகுதி ஆழமாக குத்துகிறது. மூச்சு விட முடியாமல் கத்த கூட முடியாமல் அருண் குருதி வெள்ளத்தில் துடிக்கிறான். அருண் ஓடுவதை பார்த்து பின் தொடர்ந்து வந்த குமார் அருண் உயிருக்கு போராடுவதை பார்க்கிறான். அவன் பின் வந்த ஆசிரியரும் பியூனும் பார்ப்பதற்குள் அவன் உடலில் இருந்து இரத்தம் வெளியாகி அதே இடத்தில் அருண் துடி துடித்து இறக்கிறான். குமார் மீராவை பார்க்கிறான். மீரா அங்கு இல்லை...

இரண்டு நாள் கழித்து, சாரதா கல்லூரியில் ஆசிரியர் ஆசைத்தம்பி தன் வகுப்பிற்கு சென்று கொண்டிருக்கிறார்.
அங்கே வந்த பியூன் மயில்சாமி, "சார்.... என்ன சார் இப்படி ஆகிருச்சு..உங்க கிளாஸ்ல....A கிளாஸ் சாபம் மறுபடியும் ஆரம்பிச்சுருச்சு போல..."
"இருக்கலாம்....அருணின் அம்மாவும் அப்பாவும் ஒரு பெரிய accidentல இறந்திட்டாங்கன்னு நீங்க சொன்னதும், அதை கேட்டு அவன் ஓடி தவறுதலாகவும் இப்படி ஆகிருக்கலாம்...இல்லேனா நீங்க சொன்னது மாதிரி அது மறுபடியும் ஆரம்பிச்சுருச்சு போல... ஆனா அது மறுபடியும் ஆரம்பிச்சு இருந்தா அதை விட கெட்ட விஷயம் வேற ஒன்னும் இல்ல..."என ஆசைத்தம்பி பதட்டத்துடன் சொல்கிறார்.
"என்னமோ சார்...அது அந்த சாபமா இருந்தா இனிமேல்தான் நீங்க எல்லாரும் ஜாக்கிரதையா இருக்கணும் சார்..."என சொல்லிவிட்டு மயில்சாமி கிளம்புகிறார்.
பெருமூச்சுடன் ஆசைத்தம்பி அந்த A வகுப்பிற்குள் நுழைவதற்கு முன் அந்த வகுப்பறையின் மேல் உள்ள "கிளாஸ் A" என்ற பலகையை பார்த்து விட்டு உள்ளே செல்கிறார். உள்ளே எல்லா மாணவ மாணவிகளும் உள்ளனர். இரண்டு மேசை மட்டும் காலியாக உள்ளது. ஒன்று அருணின் மேசை. மற்றொன்று மீராவின் மேசை.

images (79).jpeg


(இருள் சூழும்.....)
 
Top