• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 10

Member
Messages
37
Reaction score
2
Points
8
அன்று குமார் இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு சென்று வரும் தேர்வுக்கு படிக்கலாம் என புத்தகங்களை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறான்... ஊட்டி குளிரில் நிலா நனைந்து கொண்டிருக்க, குமாருக்கு யாரோ கைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள்...குமார் கைபேசியை எடுத்து யாரென பார்க்க மருத்துவமனையில் இருந்து மாலா செவிலிய பெண் என கைபேசி அடையாளம் காட்டுகிறது...குமார் கைபேசியை எடுத்து,
"ஹலோ"
"நான் மாலா பேசறேன்..."
"சொல்லுங்க...என்ன இந்த நேரத்துல..."
"எனக்கு இப்போதான் duty முடிஞ்சுது... நீ சொன்ன அந்த தேதில ஒரு பொண்ணு உங்க காலேஜ்ல இருந்து செத்து போய்ருக்கு...நான் அந்த file பாதிதான் படிச்சேன்...அந்த பொண்ணு பேரு கூட பார்க்க முடியல...ஆன மார்க்ஸ் பார்த்தேன்...அந்த பொண்ணு குட்டையா வெளிர்ந்து போனது போல தோல் இருக்கும்..."என மாலா கூற,
குமாருக்கு தூக்கி வாரி போட்டது...மாலா சொன்ன அடையாளம் எல்லாம் மீராவின் உருவத்துடன் ஒத்து போகிறது....
"அந்த பொண்ணோட பேரு எதுவும் பார்த்தீங்களா... நல்லா யோசிச்சு பாருங்க..."என குமார் பயத்துடன் கேட்க,
"எனக்கு சரியா நியாபகம் இல்ல... ஆனா M ல ஸ்டார்ட் ஆகும்....நினைக்கறேன்..."
"சரி... ரொம்ப நன்றிங்க..."என கூறி கொண்டு கைபேசியை குமார் வைக்கிறான்...
மறுநாள், செமஸ்டர் தேர்வின் முதல் நாள்...
அனைவரும் இருக்கையில் அமர்ந்து தேர்வை எழுதி கொண்டு இருக்கிறார்கள்...குமார் மீராவின் மேசையை பார்க்கிறான்...மேசை காலியாக உள்ளது... ஏன் டீச்சர்ஸ் கூட மீரா வரலேனு கேக்கல என யோசிக்கிறான்...அப்போது மீரா வகுப்பறையில் வந்து தேர்வை எழுத தொடங்குகிறாள்... ஏன் பாதியில் வற்றே என ஆசிரியர்கள் கூட கேட்கவில்லை...மீரா தேர்வை வேகமாக எழுதிவிட்டு வெளியே சென்றுவிடுகிறாள். குமாரும் அதே நேரம் முடிக்க பேப்பரை ஆசிரியரிடம் கொடுத்து விட்டு வெளியே செல்கிறான்..அங்கே மீரா கிளாஸ் வெளியே நின்று மழையை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறாள்...குமார் அவளருகே வந்து,
"உனக்கு கூட பிறந்த அக்கா இல்ல தங்கச்சி யாரும் இருக்காங்களா...?"என கேட்க,
"எதுக்கு உனக்கு..?"
"இல்ல உன்னை ஹாஸ்பிடல பார்த்தபோது நீ கூட பொம்மையை கொண்டு போனெல்ல... அப்போ அங்க இருக்க nurse மீரான்னு ஒரு பொண்ணு இறந்து போனதா சொன்னாங்க..அதான்..."
"அப்படியா அதை பத்தி எனக்கு தெரியாது...."என சொல்லிவிட்டு மீரா மழையை வேடிக்கை பார்கிறாள்.
குமார் மீராவை மீண்டும் பார்க்க,
மீரா பெருமூச்சுடன்,"அது மீரா இல்ல... மீனா என்னோட தூரத்து சொந்தம்... அவதான் இறந்து போனா....அது ஒரு பெரிய கதை...."என கூற,
"நான் இந்த உலகத்துல இல்ல...அவ்ளோதான் இத பத்தி நீ ரொம்ப யோசிக்காத..."என கூறிவிட்டு மீண்டும் மழையை வேடிக்கை பார்க்கிறாள் ...

images (72).jpeg


(இருள் சூழும்.....)
 
Top