• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 1

Member
Messages
55
Reaction score
2
Points
8
சூரியன் மறையும் நேரம் ஊட்டியில் உள்ள ஆர் கே புரம் அருகில் உள்ள மரப் பாலத்தின் கீழே உள்ள புதர்கள் மெதுவாக இருளில் மறைய தொடங்கிய வேளை. மெதுவாக காற்றில் புதர்கள் அந்தி வேளையில் அசைந்தாடும் நேரம் அது.
சூரியன் மறைய காரிருள் தோன்ற ஆரம்பிக்கும் நேரம் அங்குள்ள சாரதா கலை கல்லூரியில் உள்ள கதவுகள் யாரோ வேகமாக மூடியது போல சப்தத்துடன் அடிக்கிறது.


அந்த மாலை நேரத்தில் ஊட்டி சுதா மருத்துவமனையில் குமார் கண்விழிக்கிறான். அவனருகில் குமாரின் பாட்டியான ராஜேஸ்வரி அமர்ந்திருப்பதை அவன் பார்க்கிறான். அந்த அறையில் உள்ள சன்னலின் வழியே இருள் ஆள தொடங்கும் வேளையை பார்த்து கொண்டிருக்கிறாள் குமாரின் சித்தி உமா. குமார் கண் விழித்ததை பார்த்த பாட்டி ராஜேஸ்வரி குமாரை பார்த்து மெல்லிய கோபத்துடன் பேச தொடங்குகிறாள்.

"குமார்...உனக்கு அம்மாவும் இல்லை நீ பிறக்கும் போதே அவள் உன்னை விட்டு போய்விட்டாள்...உன் அப்பா உன்னை கண்டுக்கறதே இல்லை..வேலை வேலைன்னு போய்ட்டு இருக்கார்...பையன் காலேஜ் சேர நாள் கூட வர முடியாத அளவுக்கு அப்படி என்ன வேலை...நீ படிக்க போற காலேஜ் இதோ இங்கே இருக்கு பாரு" என்று கை நீட்டி தூரத்தில் இருளில் மூழ்கி உள்ள சாரதா கலை கல்லூரியை காட்டுகிறாள் பாட்டி.

"இருட்டுல ஒன்னும் தெரியல பாட்டி நாளைக்கு காலேஜ் போய் பார்த்துக்கறேன்" குமார் சொல்லியவாறு எழுந்து உட்கார குமாரின் சித்தி அவனை பார்த்து" உனக்குத்தான் wheezing problem இருக்குல்ல நீ எதுக்கு உன்னோட ரூம் சுத்தம் பண்ணினே...இப்போ பாரு ஊட்டிக்கு வந்ததும் இப்படி ஹாஸ்பிடல சேர்ந்துட்ட"என சொல்லியவாறே அவனருகில் அமருகிராள்.

அப்போது குமாரின் கைபேசி சிணுங்க.. அதை எடுத்து காதில் வைத்து
"ஹலோ..."
"ஹலோ...குமரா...?"
"ஆமாம்..நீங்க..?"
"நாளைக்கு சேர இருக்க காலேஜ் class teacher தம்பி... நீங்க transfer student...நாளை காலை எட்டு மணிக்கு கிளாஸ் வந்திருங்க...நான் நீங்க கொண்டு வர வேண்டிய புத்தகங்களை whatsapp பண்ணி இருக்கேன்..." என பயத்துடன் பேசுகிறார் ஆசிரியர் ஆசைத்தம்பி.
"Ok sir" என கூறி கைபேசியை அணைக்கிறான்.

நேரம் இரவு பதினொன்று.
பாட்டியும் சித்தியும் தூங்கிவிட குமாருக்கு ஏனோ தூக்கம் ஆளவில்லை.
மருத்துவமனையில் தன் அறையை விட்டு வெளியே செல்கிறான் குமார். மாடி சென்று வரலாம் என லிஃப்ட் தேடுகிறான். அந்த வளாகத்தில் கடைசியில் இருள் சூழ உள்ள ஒரு பகுதியில் லிஃப்ட் உள்ளதை பார்கிறான். பழைய மருத்துவமனை போல லேசாக இடிந்துள்ளது. இருளில் நுழைந்து லிஃப்டை அடைகிறான் குமார்.
லிஃப்ட்டில் நுழைந்து மாடி செல்ல பொத்தானை அழுத்தி காத்திருக்கிறான். லிஃப்ட்டின் உள்ளே ஒரு அழகான பெண் ஏற்கனவே கீழே செல்ல காத்திருக்கிறாள்.அந்த பெண் குமாரின் கல்லூரி சீருடை அணிந்திருக்கிறாள். அவள் கைகளில் கிழிந்த நிலையில் உள்ள ஒரு பொம்மையை வைத்திருக்கிறாள்.

குமார் லேசாக தொண்டையை செருமியபடி"நீங்களும் சாரதா Collegeஆ?" என கேட்க,
"இல்லை"
"சரி..உங்கள் பெயர் என்ன?"குமார் கேட்க,
"மீரா...நீங்கள் என்னை பத்தி தெரியாம இருப்பதுதான் நல்லது"என பதில் கூறிவிட்டு லிஃப்ட் விட்டு வெளியேறி நேராக நடக்க தொடங்குகிறாள்.
மீரா லிஃப்ட்டில் இருந்து நடந்து காரிருளில் மறைவதை குமார் பார்க்கிறான். நிமிர்த்து குமார் பார்க்க அவள் செல்லும் இடம் கண்டு அதிர்கிறான்.
மெல்லிய சிவப்பு நிற மின்விளக்கின் உதவியுடன் அவள் நோக்கி செல்லும் அறை சொல்லியது அது "பிணவறை" என்று...
images (38).jpeg


(இருள் சூழும்.....)
 
Administrator
Staff member
Messages
1,115
Reaction score
3,189
Points
113
Welcome to our website ma ♥️♥️ all the best💐💐💐
 
Top