• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காதல் 40 இறுதி அத்தியாயம்

Administrator
Staff member
Messages
459
Reaction score
785
Points
93
காதல் 40:

"பாட்டி அம்மாவும் அப்பாவும் எப்போ வருவாங்க…?" என்று பத்தாவது முறையாக எழில் வினா தொடுக்க,

"இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவாங்கடா செல்லம்" என்று கோதையும் பொறுமையாக பதில் அளித்தார்.

"இதையே தான் ரொம்ப நேரமா சொல்லிட்டு இருக்கிங்க பாட்டி" என்ற சின்னவனது அலுப்பில் கோதைக்கு புன்னகை மலர,

"இன்னும் கொஞ்ச நேரம் தான்டா செல்லம் இப்போ தான் பேசுனேன். ஏர்போர்ட்ல இருந்து கிளம்பிட்டாங்க பட்டு" என்று அவனை தனது மடியில் அமர்த்தியவாறு பதில் அளித்தாள்.

இத்தனை நேரம் அமைதியாக தொலைக்காட்சியில் தனக்கு மிகவும் பிடித்த சின்சானை பார்த்து கொண்டிருந்த கவினும்,

"சீக்கிரமா வந்துடுவாங்களா பாட்டி. அப்பா எனக்கு சாக்லேட் வாங்கிட்டு வர்றதா சொல்லி இருக்காங்க" கள்ளம் கபடமற்ற சிரிப்புடன் மொழிய,

அப்படியே கவினது கன்னத்தை கிள்ளிவைக்க தோன்றியது கோதைக்கு.

"எனக்கும் எனக்கும் வாங்கிட்டு வருவாங்க" என்று எழில் கூற,

"ரெண்டு பேருக்கும் சாக்லேட் வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன்" என கோதை பதில் அளித்த நேரம் வெளியே மகிழுந்து வரும் ஓசை கேட்டது.

அவ்வளவு தான் இருவரும், "அப்பாவும் அம்மாவும் வந்துட்டாங்க" என்று கோதையை கண்டுகொள்ளாது எழுந்து வாசலுக்கு விரைந்தனர்.

குரு மகிழுந்தில் இருந்து இறங்கிவர,

"அப்பா…" என்று ஓடி சென்று இருவரும் அவனது காலைக் கட்டி கொள்ள,

"இவ்ளோ நேரம் பாட்டி பாட்டின்னு என்கிட்ட இருந்துட்டு இப்போ உன்னை பார்க்கவும் கண்டுக்காம ஓடி வந்துடானுங்க" இந்த கோதை புன்னகையுடன் புகார் வாசிக்க,

"அப்டியா‌..?" என்று தானும் மாறாத சிரிப்புடன் கேட்டவன் இருவரையும் கையில் வாரி கொண்டான்.

"அப்பா எங்களுக்கு எங்க சாக்லேட்" என்று இருவரும் கோரஸாக கேட்க,

"டெய்லியும் உங்களுக்கு சாக்லேட்டா. லாஸ்ட் வீக் தான டாக்டர் சொன்னாங்க டெய்லி சாக்லேட் சாப்டா கேவிட்டி வந்திடும்னு…" என்று கண்டிப்புடன் மகியின் குரல் வெளிவந்தது.

தாயின் கண்டிப்பில் முகம் சுருக்கிய இருவரும்,

"ப்பா…" என்று உதடு பிதுங்கினர்.

இதில் குருவிற்கு மனம் பாகாய் கரைந்திட,

"நான் உங்களுக்கு சாக்லேட் வாங்கிட்டு வந்திருக்கேன். மார்னிங் சாப்பிடலாம் பட்டூஸ்" என்று மகன்களை சமாதானம் செய்தவன் மனைவியின் முறைப்பை ஓரம் பார்வையில் கவனித்தபடி மாடியேறி சென்றான்.

கையில் சிறிய ட்ராலியுடன் வந்தவள் நீள்விருக்கையில் செல்லும் மூவரையும் பார்த்துவிட்டு அமர,

"என்னம்மா பயணம் எல்லாம் சவுக்கியமா இருந்துச்சா…?" என்று கோதை வினவ,

"ஹான்த்தை. ரெண்டு பேரும் ரொம்ப படுத்திட்டாங்களா…?" என்று வினவ,

"அதெல்லாம் எதுவுமில்லை.‌ ரெண்டு பேரும் சமத்தா இருந்தாங்க" என்ற கோதை,

"போய் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்க,

"அவங்க சேட்டை பண்ணியிருந்தாலும் நீங்க சொல்ல மாட்டிங்க" என்று மாமியாரை செல்லமாக முறைத்துவிட்டு அறைக்கு சென்றாள்.

அங்கு குரு அதற்குள் இலகு உடைக்கு மாறிவிட்டு குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தான்.

குருவை கீழே போட்டு இருவரும் ஒருவர் பின் ஒருவராக ஏறி அமர்ந்து அவனை அடித்து கொண்டிருக்க குருவோ வலிப்பது போல போலியாக நடித்து கொண்டிருந்தான்.

மகியை பார்த்து, "மகி என்னை இவனுங்ககிட்ட இருந்து காப்பாத்து…" என்று போலியாக அலற,

"நோ நோ அம்மா கேம்க்கு வர கூடாது" என்று கவின் கத்த,

"கிட்ட வந்தா நான் உங்களை சூட் பண்ணிடுவேன்" என்று பொம்மை துப்பாக்கியை வைத்து மிரட்டினான்.

மகிழ் சிரிப்புடன், "நான் வரலைப்பா உங்க விளையாட்டுக்கு. நீங்களாச்சு உங்க பசங்களாச்சு" என்றுவிட்டு மாற்று உடையுடன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

மகிழ் அலுப்பு தீர குளித்து வரும் போதும் குரு அதே நிலையில் இருக்க மகிழிற்கு சிறிது பாவமாகிவிட்டது.

"டேய் போதும் விடுங்கடா அவரை சாப்பிட போகணும்…" என்று போராடி விடுவித்தவள் உணவுண்ண அழைத்து வந்தாள்.

உணவை எடுத்து வைத்திருந்த கோதை,

"கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா குரு…?" என்று வினவ,

"ஹான்மா நல்லா முடிஞ்சது" என்று குரு பதில் அளித்தான்.

"அந்த பொண்ணு ஹனிகா உனக்கு எப்படிப்பா பழக்கம் பிஸ்னஸ்லயா…?" என்று கோதை இட்லியை எடுத்து வைத்தபடியே வினா எழுப்ப,

குருவின் விழிகள் ஒரு நொடி மகியை சந்தித்தது. அச்சமயம் அவளும் குருவை தான் பார்த்திருந்தாள்.

"ஹ்ம்ம் பிஸ்னெஸ் ப்ரெண்ட் தான்மா" என்ற குரு உணவுண்ண துவங்க மகியும் அவனை பார்த்துவிட்டு சாப்பிட தொடங்கினாள்.

மூவரும் பேசியபடி உணவை முடித்தனர்.

தாத்தா முன்பே உண்டு படுக்க சென்றிருந்தார். வர்ஷினி காலேஜ் டூர் ஒன்றிற்கு சென்றிருந்தாள்.

மகிழ் உண்டு முடித்ததும் பாத்திரங்களை ஒதுங்க வைக்க மாமியாருக்கு உதவ செல்ல குரு குழந்தைகளை அழைத்து கொண்டு அறைக்கு சென்றான்.

மாமியாரிடம் பேசியபடியே அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு மகிழ் அறைக்குள் நுழைந்தவன் பத்ரகாளியாகிருந்தாள்.

காரணம் குழந்தைகள் இருவரும் கையில் பெரிய சாக்லேட் ஒன்றை வைத்து சாப்பிட்டு கொண்டிருக்க குரு பால்கனியில் நின்று அலைபேசியில் பேசி கொண்டிருந்தான்.

"சாக்லேட் சாப்பிடக்கூடாதுனு இப்போ தான சொன்னேன். நான் வர்றதுக்குள்ளயும் ரெண்டு பேரும் அதுவும் நைட் டைம்ல இவ்ளோ பெரிய சாக்லேட்டை சாப்பிட்டு இருக்கிங்க" என்று ஏகமாய் முறைக்க,

"ம்மா…" என்று மாட்டி கொண்டதில் குழந்தைகள் விழிக்க,

"என்ன அம்மா டெய்லி சாக்லேட் சாப்பிட கூடாதுனு டாக்டர் சொல்லி இருக்காங்க தான…?" என்று மீண்டும் வினவ,

"ப்பா…" என்று உதட்டை பிதுக்கிய இருவரது விழிகளிலும் நீர் கோர்த்து அழுகைக்கு தயாராகியிருந்தனர்.

இதற்குள் குரு குழந்தைகளின் குரலில் அலைபேசியை உடனே அணைத்துவிட்டு வந்து,

"என்னடா என்னடா செல்லம் ஏன் அழறிங்க…?" என்றவாறு குழந்தைகளை கொஞ்ச,

"ப்பா அம்மா சாக்கி சாப்டதுக்கு திட்றா" என்று இருவரும் தந்தையிடம் புகார் வாசிக்க,

"அம்மாவ நான் அடிச்சிட்றேன். நீங்க அழாதிங்க" என்றவன் மனைவியின் புறம் திரும்ப,

"நீங்க கொடுக்குற செல்லத்துல தான் அவங்க ரெண்டு பேரும் ரொம்ப அடம் பண்றாங்க" என்றவள் குருவை முறைக்க,

"ப்ச் மகி குழந்தைங்க தான விடு. ஆசைப்பட்டு கேட்டாங்க நான் தான் எடுத்து கொடுத்தேன்" என்று சமாதானம் கூற,

"என்னவோ பண்ணுங்க" என்றவள் அலைபேசியை எடுத்து அகிலனுக்கு அழைத்து பேச பால்கனிக்கு சென்றுவிட்டாள்.

இங்கு குருவோ குழந்தைகள் இனிப்பை உண்டு முடித்ததும் பல்விளக்க வைத்து பின்னர் உறங்குவதற்காக கதையை கூறி கொண்டிருந்தான்.

மகிழ் இரவு தினம் செய்யும் வேலையை இப்போது குருவும் செய்ய துவங்கி இருந்தான்.

காரணம் அவர்களுடைய செல்ல பிள்ளைகள்,

"அம்மா நீ ஒரே ஸ்டோரியவே திரும்ப திரும்ப சொல்ற‌. அப்பாவ சொல்ல சொல்லு" என்று குருவிடம் அடம்பிடித்து அவனையும் கதை சொல்ல வைத்திருந்தனர்.

இப்பொழுது எல்லாம் மகியை விட குருவிடம் தான் அதிகமாக கதையை கேட்கின்றனர். குருவும் இவர்களுக்கு கதை சொல்லி உறங்க வைத்த பின்பே அலுவலக வேலைகளை கவனிக்கிறான்.

இங்கு தம்பியிடம் பேசி முடித்த மகிழ் இரவு நேர காற்றையும் அமைதியையும் அனுபவித்தபடி கைகளை கட்டி கொண்டு நின்றுவிட்டாள்…

மனது இந்த மூன்று மாத வாழ்க்கையை நினைத்து பார்த்தது.

அவள் ஆசைப்பட்டு ஏங்கிய காதல் கணவனுடன் அழகான நிறைவான வாழ்க்கை.

அன்று இருவரும் மனம் திறந்து பேசிய பிறகு உடனடியாக அவர்கள் ஒருவருக்கொருவர் பொருந்தி இயல்பு நிலையை அடைந்துவிடவில்லை.

இருவருக்குமே காயங்கள் ஆற யாவையும் ஏற்று கொள்ள ஒருவரைப் புரிந்து கொள்ள கால அவகாசம் தேவைப்பட்டது.

இருவரும் சிறு வயதில் இருந்த இயல்புக்கு திரும்பி ஓரளவு தங்களது இணையை அறிந்து கொள்ள விழைந்தனர்.

செயல் மூலம் வார்த்தைகள் மூலம் இணைக்கு அன்பை உணர்த்தினர்.

காலத்தின் போக்கில் நேசம் அமைத்து கொடுத்த வாழ்வை அழகாக வாழ்ந்தனர்.

ஒருவருக்கொருவர் வார்த்தைகள் அல்லாத‌ அசைவில் புரிந்து கொண்டு நடக்க முயன்றனர்.

மூன்று மாதம் இருவருக்கும் நிறைய நினைவுகளை நேசத்தை பரிசளித்திருந்தது.

வார்த்தைகள் தொடங்கி செயல்களிலும் உரிமை வெளிப்பட துவங்கியிருந்தது.

மகிழினிக்கும் குருவின் மீது முழு நம்பிக்கை பிறந்திருந்தது. இவனுடன் தான் இனி என்னுடைய இறுதி காலம் வரை என்று உள்ளத்தில் ஆழமாய் பதிந்து போனது.

பெரிதாய தொட்டுக்கொள்ளாத ஸ்பரிசிக்காத விழியசைவில் உள்ளமறியும் நேசம் ஒருவகையில் அவர்களை ஈர்த்தது.

ஓரளவு இருவரும் மற்றொருவரை நன்றாக புரிந்து கொண்டிருந்தாலும் இருவருக்கும் வாழ்வை தொடங்குவதில் இருந்த பெரிய வருத்தம் ஹனிகா.

ஒரு பெண்ணை நம்ப வைத்து இறுதியில் ஏமாற்றிவிட்டோம் என்று குரு குற்றவுணர்வோடும் தன்னால் தான் ஹனிகா இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளாள் அவளுடைய இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம்.

தான் மட்டும் குருவின் வாழ்வில் வந்திராவிட்டால் ஹனிகாவிற்கு இந்த நிலைமை ஏற்ப்பட்டிருக்குமா…? என்று தனக்குத்தானே பலவாறாக குற்றவுணர்ச்சியில் இருந்தாள்.

இதோ இன்று ஹனிகாவின் திருமணத்திற்கு சென்று வரும் வரையிலே இருவருக்கும் ஒருவித அவஸ்தை மனநிலை தான்.

ஹனிகாவின் முகத்தில் ஓரளவு தெளிவை கண்டதும் தான் இருவருக்கும் நிம்மதி பிறந்தது.

அதுவும் ஹனிகா இருவரையும் எதுவுமே இல்லாத பாவனையில் புன்னகையுடன் எதிர்கொண்டது இருவருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சியை கொடுத்தது.

அவள் யாவிலும் இருந்து வெளியே வந்துவிட்டாள் கடந்துவிட்டாள் என்று அவளது முகமே கூற குருவும் மகிழினியுமே சற்று சந்தோஷத்துடன் வாழ்த்தி வந்தனர்.

வரும் போது இருந்த மனநிலை செல்லும் பொழுது இருந்ததற்கு தலைகீழாக இருந்தது.

இத்தனை நாள் இருந்த குற்றவுணர்வு வருத்தம் குழப்பம் எல்லாம் சுத்தமாக நீங்கியிருந்தது.

அதன் பொருட்டே இருவரும் சிரிப்புடன் நுழைந்தனர்.

கோதைக்கும் பிறைசூடனுக்கும் குருவின் இந்த மாற்றம் நம்பிவியலாத ஆச்சர்யத்தை கொடுத்தது.

குரு மற்றும் மகிழ் இருவருக்கும் ஏதோ பிரச்சனை இருந்தது இப்போது இருவரும் சமாதானம் ஆகிவிட்டனர் என்று புரிந்தது.

ஆனால் குருவின் இந்த மாற்றம் வியப்பிற்கு உரியது. தந்தை இறப்பதற்கு முன்பு இருந்த குரு அவ்வ போது பேச்சிலும் செய்கையிலும் எட்டி பார்த்தான்.

மகனின் மாற்றம் அளவில்லாத ஆனந்தத்தை கொடுத்தது. மகனும் மருமகளும் இதே போல மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி கொண்டனர்.

என்ன இன்னும் அவர்களுக்கு குழந்தை இல்லாதது தான் பெரும் கவலையாக இருந்தது. ஆனால் வெளிக்காண்பிப்பது இல்லை. கடவுள் நிச்சயமாக விரைவில் நல்லது செய்வார் என்று நம்பிக்கையுடன் இருந்தனர்.

வானத்தை வெறித்தவளது விழிகள் அவ்வபோது முகம் முழுவதும் சிரிப்புடன் குழந்தைகளுக்கு கதை சொல்லி கொண்டிருந்த குருவின் மீது படிந்து மீண்டது.

இவன் மட்டும் இல்லை என்றால் தான் என்னவாகி இருப்போம் என்று எண்ணம் பிறக்க அதற்கு பதில் இல்லை.

அவனுடைய அத்தனை கொள்கைகள் கோட்பாடுகள் என அனைத்தையும் உடைத்து உதறிவிட்டு தனக்காக தன் மீது கொண்ட நேசத்திற்காக பழியையும் சுமந்து கொண்டு வந்திருக்கிறானே இத்தகைய நேசத்தை தன்னால் தர இயலுமா என்றெல்லாம் கூட அடிக்கடி எண்ணம் பிறக்கும்.

என்னவோ வாழ்வு அவ்வளவு அழகாய் மாறிவிட்டது போல தோற்றம்.

அன்பான கணவன் அழகான குழந்தைகள் இதனைவிட பெற்ற மகளை போல பாவிக்கும் மாமியார் எவ்வளவு நிறைவான வாழ்க்கை.

தன்னுடைய குடும்பத்தினரின் ஆசிர்வாதம் தான் தனக்கு ஒரு இவ்வளவு அழகான அன்பான குடும்பம் அமைந்துள்ளது என்று கூட சிந்தையில் தோன்றும்.

பலவாறான யோசனையுடன் அவர்களையே பார்த்தபடி மகிழ் கம்பியில் சாய்ந்து நின்றுவிட இங்கு குழந்தைகளை உறங்க வைத்துவிட்டு வந்த குரு தன்னை மறந்து நின்று கொண்டிருந்த மனைவியை கண்டு,

"என்ன மேடம் தூரத்தில இருந்து சைட்டிங்கா பக்கத்துல வந்தே பாக்க வேண்டியது தானே உனக்கில்லாத ரைட்ஸா…?" என்று சிரிப்புடன் வினவ,

அதில் தன்னிலை அடைந்தவள்,

"ஹான் என்ன என்ன‌ கேட்டிங்க…?" என்று விழிக்க,

"நத்திங்" என்று புன்னகையுடன் கூறியவன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டு அவளுக்கு கைக்கொடுக்க,

அவனது கையை பிடித்து அருகில் அமர்ந்து கொண்டாள்.

இருவரிடமும் மொழியில்லாத மௌனம் . இரவின் ஏகாந்தத்தை ஒருவர் அருகாமையில் மற்றொருவர் அனுபவித்தனர்.

தன்னுடைய கரத்தில் இருந்த மகியின் கரத்தை கன்னத்தோடு வைத்து கொண்டவன் அவள் புறம் திரும்பி முகம் பார்த்து புன்னகைக்க

மகியும் புன்னகைத்து, "என்னவாம்?" என்றிட,

"தேங்க்ஸ்…" என்று குரு பதில் அளித்திட,

"எதுக்காம்…?" என்று மாறாத தோரணையில் கேட்டாள்.

"எல்லாத்துக்கும் சேர்த்து என் லைஃப்ல வந்ததுக்கு என் லைஃபை இவ்ளோ அழகா மாத்துனதுக்கு கள்ளமில்லாத பாசத்தை என் மேல கொட்டுற பிள்ளைங்களுக்கு கொடுத்ததுக்கு" என்று கூறிட,

"ஓ…" என்று இழுத்தவள்,

"அப்போ நானும் தாங்க்ஸ்…"என்று மொழிய,

"எதுக்காம்…?" என்று இவன் சிரிப்புடன் அவளது தோரணையிலே கேட்க,

"ஹான் என் லைஃப்ல வந்ததுக்கு அப்புறம் இவ்ளோ அழகான குடும்பத்தை கொடுத்ததுக்கு… அப்புறம்…?" என்று தாடையில் கை வைத்து சிந்திக்க,

அவளது பாவனையில் குருவிற்கு அப்படியே கையில் அள்ளிக் கொள்ள தோன்றியது.

"என்ன நான் சொன்னதுக்கு போட்டியா…?" என்று மாறாத சிரிப்புடன் குரு வினா எழுப்ப,

"ஆமா போட்டி தான் நீங்க சொன்னிங்க நானும் பதிலுக்கு சொன்னேன்" என்றவள் இதழை சுழிக்க,

"ஓ… நான் என்ன செஞ்சாலும் பதிலுக்கு செய்வ அப்படிதானா…?" என்று மர்ம புன்னகையுடன் வினா தொடுக்க,

அதனை உணராதவள்,

"ஹ்ம்ம் செய்வேன்" என்று விடாது கூறினாள்.

"பேச்சு மாற கூடாது" என்றவனது மந்தகாச புன்னகையில் அவனது எண்ணம் புரிந்தவள்,

"நோ அதெல்லாம் இதுல…" என்று பதறுகையிலே சட்டென்று அவளை தன் மடிக்கு மாற்றி இருந்தான்.

இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி சுழியம் ஆகியிருந்தது.

இடையோடு சேர்த்து அணைத்தவனது முகம் மகியின் முகத்திற்கு வெகு அருகாமையில் தெரிய இவளுக்கு வாயில் வார்த்தைகள் இல்லாது போனது.

"என்ன இப்போ பேசு ஏன் சைலண்ட் ஆகிட்ட…?" என்று பெரிதான புன்னகையுடன் கேட்க,

"அது வி… விடுங்க குழந்தைங்க எழுந்திட போறாங்க…" என்றவள் நெளிய,

"அவங்க நல்லா தூங்குறாங்க கன்பர்ம் பண்ணிட்டு தான் வந்தேன். எழுந்திரிக்க சேன்சே இல்லை" என்றவனது முக பாவனையில் இவளுக்கு இதயம் தாறுமாறாக துடித்தது.

இதோ இதே போல ஒரு புன்னகையில் தானே தன்னை மறந்து லயித்து நின்றிருந்தாள்.

இப்போது வரை இந்த புன்னகை தானே இவளை தொல்லை செய்து கொண்டு இருக்கிறது.

என்னவோ அவளுடைய கண்களுக்கு மட்டும் அத்தனை அழகாய் தெரிந்து தொலைக்கிறானே…

"இப்போ நான் செய்யிறதெல்லாம் நீயும் செய்யணும் என்ன…?" என்றவனிடம் பதறி,

"இல்லை நான் இதை மீன் பண்ணலை" என்க,

"அதெல்லாம் எனக்கு தெரியாது நான் எல்லாத்தையும் மீன் பண்ணிதான் சொன்னேன்" என்று சிரிப்புடன் கண்ணடித்தவனது செயலில் இவளுக்கு இதயம் எகிறி குதித்தது.

"என்ன ஸ்டார்ட் பண்ணலாமா…?" என்று மந்தகாச சிரிப்புடன் கேட்க,

"ம்ஹூம்…" என்றவளுக்கு வார்த்தைகள் வர மறுத்தது.

"ம்ஹூம் ஹ்ம்ம் எதுவும் கிடையாது…" என்றவனது முகம் இன்னும் நெருங்க,

இவளுக்கு நெஞ்சுக்கூடு சில்லிட்டது.

அவளது முகத்திற்கு வெகு அருகில் சென்றவனது விரல்கள் அவளது முகத்தில் அலைய,

"ஹேய் உன்னோட பேபி ஹேர்ஸ் ரொம்ப அழகா இருக்கு…" என்று கழுத்தோரம் வருட, இவளுக்கு அடிவயிற்றில் ஏதோ செய்தது.

இதழ்களை குவித்தவன் காற்றை இழுத்து ஊத சட்டென்று புல்லரிக்க விழிகளை மூடி கொண்டாள்.

"ஹேய் கண்ணை திறந்து பாருடி. கண்ணை மூட கூடாது அதான் போட்டியோட ரூல்ஸ்…" என்று ஹஸ்கி குரலில் மொழிய,

"ம்ஹூம்…" என்று விழிகளை திறக்காது மொழிந்தவளுக்கு காற்றில் மிதப்பது போல உணர்வு பிறந்தது.

"ஏய் திறடி…" என்று மீண்டும் கூற,

"ம்ஹூம்…" என்றவளது தலை இடம் வலமாக அசைய,

"சரி‌ உன்னை எப்படி கண்ணை திறக்க வைக்கிறேன்னு பாரு" என்றவனது அட்டகாசமான சிரிப்பு செவிக்குள் மோதிய போதும் மகிழ் விழிகளை திறக்கவில்லை.

"ஓகே ஸ்டார்ட் பண்ணிட்றேன்" என்றவனது இதழ்கள் மெதுவாய் நெற்றியில் உரச மகிக்கு உள்ளுக்குள் உருகியது.

அப்படியே இதழ்கள் அவளது நாசியில் பதிந்து மீண்டது.

"இப்போவும் ஓபன் பண்ண மாட்டியா…?" என்றவனது இதழ்கள் அவளது இதழுக்கு நூலிழையில் இருக்க,

சட்டென்று விழிகளை மலர்த்தியிருந்தவளது முகத்தில் சிறிதான கலவரம்.

அதில் உதித்த புன்னகையை இதழுக்குள் அதக்கியவனது ஒற்றை கரம் அவளது கன்னத்தில் பதிய அவனது எண்ணம் உணர்ந்தவள் தலையை பின்னிழுக்க பார்க்க சடுதியில் மற்றைய கரத்தால் பின்னந்தலையை பற்றியவனது இதழ்கள் அவளிழதோடு உரசியது.

இருவருக்கும் உள்ளே தீ பற்றியது. மகிக்கு மின்சாரம் தாக்கியது போல உணர்வில் அவனது சட்டையை இறுக்கி கொள்ள மெது மெதுவாய் அவள் இதழில் தன்னிதலை சேர்த்து இருந்தான்.

வாழ்வின் முதல் இதழணைப்பு உயிர் வரை இனித்தது. இருவரின் இதழ்களும் தாமாக மூடி கொள்ள நிமிடங்கள் நொடிகளானது.

குருவை முயன்று விலக்கி தள்ளியவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

குருவிற்கு சற்று மூச்சு வாங்கியது ஆனால் மகி அளவிற்கு இல்லை.

"இதுக்கே இப்படி டையர்ட் ஆன எப்படி இனிமே தான் கச்சேரியே இருக்கு" என்றனது கூற்றில் இவளுக்கு சடுதியில் முகம் சிவந்துவிட, அவனை முறைக்க முயன்றாள்.

"என்ன என்ன முறைப்பு இப்போ உன் டர்ன் கொடு பாப்போம்" என்றவனது வார்த்தையில் சிறிதாக அதிர்ந்தவள்,

"என்ன நானா…?" என்க,

"ஆமா நீதான் காம்பெடிஷன் காம்பெடிஷன் தான்…" என்று மொழிய,

"நோ உங்க போட்டிக்கு நான் வரலை" என்று விலக பார்க்க,

இடையோடு சேர்த்து அணைத்து பிடித்து கொண்டவன்,

"அப்படிலாம் எஸ்கேப் ஆக முடியாது" என்று சிரிப்புடன் கூற,

"ப்ச் விடுங்க" என்றவள் சிணுங்கலில் இவனுக்கு என்னவோ ஆகியது.

"ஏய் இப்படிலாம் என்னை டெம்ப்ட் பண்ணாதடி" என்றவனது கிரக்கமான பேச்சில் இவளுக்கு தொண்டையில் நீர் வற்றி போனது.

"என்னடி பதிலையே காணோம்…" என்று வினா எழுப்ப,

இவளிடம் மருந்துக்கும் வார்த்தை இல்லை. அவனுடைய கிரக்கமான குரல் உள்ளுக்குள் ஏதேதோ மாயா ஜாலம் செய்து கொண்டிருந்தது.

"நான் ரொம்ப நியாவாதி பெண்களுக்கு ஈக்குவல் ரைட்ஸ் கொடுப்பேன். ஒன்னு நான் கொடுத்தா இன்னொன்னு நீ கொடுக்கணும்" என்று சிரிக்க,

'இவன் என்னை இப்படி பேசுகிறான். இதுக்கு முன்பு போல உர்ரென்று இருந்திருக்கலாம்' என்றே தோன்றிவிட்டது.

"என்ன சீக்கிரமா கொடு" என்றவன் முகத்தினருகே செல்ல,

இவள் விழிகளை இறுக மூடினாள் மீண்டும்.

"ப்ச் நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா என் நிலைமை என்னாகுறது… நான் வேற என் பசங்ககிட்ட சீக்கிரமா விளையாட பாப்பா கொண்டு வர்றேன்னு சொல்லி வச்சிருக்கேன்" என்றவனது சொல்லில் பட்டென்று கண்விழித்தவள்,

"என்ன…?" என்று அதிர்ச்சியாக பார்க்க,

"ஆமா எண்ணி பத்து மாசத்துல கொண்டு வர்றேன்னு சொல்லி இருக்கேன் இப்போவே ப்ராசஸ் பண்ணா தான் கரெக்ட்டா பத்தாவது மந்த் குழந்தை பிறக்கும்" என்றிட,

"குழந்தைககங்கிட்ட போய் என்ன சொல்லி வச்சி இருக்கிங்க. அவனுங்கே வேற நாளைக்கு எல்லார் முன்னாடியும் இதை சொல்லி என் மானத்தை வாங்க போறாங்க போச்சு போச்சு" என்று புலம்ப,

இங்கு குருவிற்கு அடக்கமாட்டாது சிரிப்பு வந்தது.

"சிரிக்காதிங்க எல்லா உங்களாலதான். அப்படி எதுவும் நடந்துட்டா நான் எப்படி எல்லார் முகத்திலயும் முழிப்பேன்" என்று அவனை அடித்தாள்.

மேலும் பெரிதாக நகைத்தவன்,

"ஹேய் போதும் நிறுத்துடி. அடிச்சே நைட் புல்லா வேஸ்ட் பண்ணிடுவ போலயே… நான் வேற என் பசங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கேன்" என்றிட,

ஒரே துள்ளலில் அவனிடமிருந்து விலகியவள்,

"போங்க போய் தூங்குங்க. உங்க பசங்களுக்காகவெல்லாம் நான் குழந்தை பெத்து தர மாட்டேன். போங்க" என்றவளது கோபத்தில் மேலும் நகைக்க தான் தோன்றியது.

"என் பசங்களுக்காக செய்யாம வேற யாருக்குடி செய்வ" என்று மேலும் வம்பிழுக்க,

"யாருக்காகவும் செய்ய மாட்டேன் போங்க" என்று கோபித்து கொண்டு நடக்க,

"ஏய் நில்லுடி சும்மா சொன்னேன். உனக்காக மட்டும் தான் வந்தேன். உன்னை காலையில பட்டு சேலையில பார்த்து ஏங்கி தவிச்சு…" என்று பேசுகையிலே பதறிக்கொண்டு ஓடி வந்து அவனது வாயை கையால் மூடியவள்,

"என்னென்ன பேசுறீங்க‌…" என்று மூச்சு வாங்க முறைத்தவளது முகம் முழுவதும் குங்கும சிவப்பில் இருந்தது.

"என்ன பேசுனேன்" என்றவன் சிரியாது வினவ,

இவள் பதிலற்று முறைத்தாள்.

"சொல்லுடி என்ன பேசுறேன்" என்று மேலும் அவளை சீண்ட,

"ரொம்ப கெட்டபையன் நீங்க" என்றவள் முறைக்க,

"ஹேய் நான் இன்னும் எதுவுமே பண்ணலையேடி அதுக்குள்ள கெட்டப்பையன் பட்டம் கொடுத்துட்ட" என்றவனது மர்ம புன்னகையில் இவளுக்கு மேலும் மேலும் முகம் சிவக்க,

"ப்ச் நீங்க கொஞ்சம் கூட சரியில்லை நான் போறேன்" என்றவள் உள்ளே நுழைந்தாள்.

"என்னடி என்னை கடைசி வரைக்கும் பிரம்மசாரியாவே வச்சிடுவே போல…" என்றபடி தானும் வர,

"ஷ்…" என்று வாய் மேல் விரல் வைத்தவள்,

"பசங்க தூங்குறாங்க சைலண்ட்" என்று மொழிய,

"ஆமா அவங்க எழுந்துட்டா எப்படி நாம கச்சேரிய ஸ்டார்ட் பண்றது" என்று அதற்கும் அவளை சீண்ட,

"உங்களை…" என்று அடிக்க வந்தவளை பட்டென்று கைகளில் அள்ளி கொண்டவன் மற்றொரு அறைக்குள் நுழைந்தான்.

"இப்போ பண்ணு…" என்று அவளை இறக்கிவிட,

"என்ன பண்ண…?" என்றவள் விழிக்க,

"அதான் உங்களைன்னு முன்ன வந்தியே. குழந்தைங்க எழுந்துட்டா என்ன பண்றதுனு தான் இங்க தூக்கிட்டு வந்தேன். என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ" என்று இரண்டு கைகளையும் உல்லாசமாக விரிக்க,

இவளுக்கு தான் வெட்கம் தாளாமல் முகத்தை மூடி கொண்டாள்.

'அய்யோ என்ன இவன் இன்னைக்கு இத்தனை பாடுபடுத்துகிறான்' என்று தான் தோன்றியது.

காரணம் வாழ்வில் இருந்த சிறு குற்றவுணர்வும் நீங்கியது தான். இனி தன் வாழ்வை அனுபவிக்க எந்தவித பிரச்சனையும் இல்லை என்ற ஆனந்தம் தான் இவனை இப்படி பேச வைக்கிறது என்று அவளுக்கு புரிந்தது.

மகியும் ஹனிகாவின் நிலையால் ஒருவித குற்றவுணர்வில் இருந்தால் தானே…?

முகத்தை மூடி கொண்டவளுக்கு அவன் தன்னை தூக்குவதும் படுக்கையில் கிடத்தி தன்னருகில் விழுவதும் தெரிந்தது.

இதயம் குதிரை வேகத்தில் துடித்தது.

"என்னடி ஸ்டார்ட் பண்ணலாமா…?" என்று காதோரம் வினவ,

"ப்ச் நீங்க ஒன்னும் ஸ்டார்ட் பண்ண வேணாம் அப்போதுல இருந்து கேட்டுட்டு மட்டும் தான் இருக்கிங்க" என்று பேசியபடி இருந்தவள் நாக்கை கடித்து முகத்தை அவன் மார்பிலே புதைத்து கொண்டாள்.

"ஹப்பாடா இப்போ தான் நீ என் பார்ம்க்கு வந்திருக்க" என்றவனது இதழ்கள் அவளது கழுதோரம் பதிந்து அவளது வாசத்தை உள்ளிழுத்தது.
 
Administrator
Staff member
Messages
459
Reaction score
785
Points
93
"ஹ்ம்ம்… என்ன வாசம் இது ரெண்டு வருஷமா சும்மா ஸ்மெல் பண்ணிட்டே இருந்து இன்னைக்கு தான் பக்கத்துல பீல் பண்றேன்" என்று பிதற்ற,

இவளுக்கும் ஒருவித மயக்கநிலை தான்.

"காலையில பட்டு சேலை சரசரக்க மல்லிகை பூ வச்சிட்டு நீ வந்தப்போ அப்படியே உன்னை தூக்கிட்டு போய் ரூம்க்குள்ள‌…" என்றவனது வார்த்தைகள் மகியின் இதழுக்குள் முடிந்து போனது.

இதனை தவிர அவனது வாயை மூட வைக்க வேறு வழியில்லாததால் இதை கையாண்டிருந்தாள்.

அவளது முத்தத்தில் மொத்தமாய் உருகி போனவன் மெது மெதுவாக முன்னேறினான்‌.

தன் வாழ்வை வரமாக்க வந்த தேவதையை கொண்டாடினான். அவளுக்குள் கரைந்தான்.

அவளை தனக்குள்ளே தொலைத்தான் தானும் தொலைந்து போனான்.

சிணுங்கல்களை எல்லாம் கீதமாக்கினான். இருந்தும் வாயை மூடவில்லை.

சிறிது சிறிதாக சீண்டி அவளை சிவக்க வைத்து அடிகளையும் பெற்று கொண்டான்.

முதன் முதலாக ஆணின் அருகாமை அதுவும் நேசத்திற்கு உரிய நெஞ்சம் எங்கும் நிறைந்திருக்கும் காதல் கணவனது அருகாமை ஒருவித மோனநிலையை கொடுத்தது.

"மகி மகி…" என்று மகி பித்து பிடித்தவன் போல தான் ஏதேதோ பிதற்றி கொண்டிருந்தான்.

மொத்தமாய் அவளுக்குள் மூழ்கி எழுந்தவன் அவளை இறுக்கமாக அணைத்து கொண்டான்.

அவனது மார்பில் முகத்தை புதைத்து கொண்டவளுக்கும் ஏதோ சொல்ல முடியாத நிறைவு மனதில்.

"ஹப்பா ஒரு வழியா முப்பது வருஷ பிரம்மசாரியத்தை இன்னைக்கு கலைச்சிட்டேன்" என்று சிரிப்புடன் மீண்டும் கூற,

மகி நாணம் தாளாது மேலும் மேலும் அவனுள் புதைந்தாள்.

"ஹேய் மகி இப்போ சொல்லு நான் பிள்ளைங்களுக்காகவா வந்தேன்.‌ என் பெர்மாமென்ஸ பார்த்த பின்னாடியும் அப்படியா தோணுது. ஹ்ம்ம்" என்று கண்ணடிக்க,

"ப்ச் கொஞ்ச நேரம் சும்மா இருங்க மாட்டிங்களா…?" என்று அதட்ட,

"இவ்ளோ நேரம் சும்மாதானடி இருந்தேன்" என்று ஏதுமறியா பாவனையில் கூற,

இவளுக்கே சிரிப்பு‌ வந்துவிட்டது.

"எவ்ளோ பேசுறிங்க.‌ இதுக்கு முன்ன மாதிரி உம்னா மூஞ்சியாவே இருந்திருக்கலாம். எப்போ பார்த்தாலும் உர்ருனு திரிவிங்களே அது மாதிரி" என்று சிரிப்புடன் கூற,

"ஹ்ம்ம் இருந்திருக்கலாம். ஆனால் ஒரு பொண்ணை பாத்ததும் குப்புற விழுந்துட்டேனே அதான் இப்படி ஆகிட்டேன். மாயக்காரி" என்று வசீகரமாய் சிரிக்க,

"யாரு நானா மாயக்காரி. நீங்க தான் வசீயக்காரன். ஒரே ஒரு சிரிப்புல என்னை ஃப்ளாட் ஆக வச்சவரு" என்றவளது பார்வை வழக்கம் போல அவனது புன்னகையில் இமைக்க மறந்தது.

குருவும் அவளை மறந்து தனது புன்னகையை ரசிக்கும் மனைவியை நேசம் தழும்பும் முகத்துடன் தான் பார்த்திருந்தான்…


முற்றும் மீரா க்ரிஷ்…






 
Well-known member
Messages
854
Reaction score
626
Points
93
Superrrrrrrrr ma
Azhaghana ending
Guru va ipdilam pesurathu, nambave mudiyala
Guru magizh ah romba missssss pannuven, kutties rendu perayum
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🎉
 
Active member
Messages
341
Reaction score
229
Points
43
Azhagana mudivu pa avanga love epudi natural ah avanga vazhkkai kula vandhatho atha love than ippo.avangala indha alavuku azhaga oruthar ah innoruthar purinchikitu life ah adutha step ku kondu poi iruku
 
Active member
Messages
289
Reaction score
191
Points
43
சுப்பர் சிஸ்டர்😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌. ஒரு எபிலாக் போடலமே சிஸ்டர்
 
Administrator
Staff member
Messages
459
Reaction score
785
Points
93
Azhagana mudivu pa avanga love epudi natural ah avanga vazhkkai kula vandhatho atha love than ippo.avangala indha alavuku azhaga oruthar ah innoruthar purinchikitu life ah adutha step ku kondu poi iruku
🐱🐱😍😍😍 Thanks ka
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Guru sir ennama romantic pesuran 💙💙🤩ayoo mahi ethu tha ne aasai pattu ketta life ❤️❤️nalla santhosama iruga 😍😍😍nice ending with 🤩🤩🤩
 
Top