• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காதல் 37

Administrator
Staff member
Messages
459
Reaction score
785
Points
93
காதல் 37:

அவனது குரல் செவியில் விழுந்ததும் உள்ளே ஒன்று இறுக நிமிர்ந்து,

"சொல்லுங்க சார்" ஏதுமில்லாத குரலில் வினவினாள்.

அவனது குரலே அவனுக்கு தான் ஹனிகாவை பார்த்து வந்தது தெரிந்துவிட்டது என்று அவளுக்கு புரிந்தது.

"அகிலனை பார்த்தியா என்ன சொன்னான் எப்படி இருக்கான்…?" என்று குரு வினவ,

"ஹான் பார்த்து பேசுனேன் சார். நல்லா இருக்கான் சார்" என்று தானும் ஏதுமறியாதது போல பதில் அளித்தாள்.

குரலில் எந்தவித மாறுபாடும் இல்லை. ஒரு வித இறுகிய தன்மை தான் இருந்தது.

"ஓ… ஸ்டடிஸ் எல்லாம் எப்படி போகுது…?" என்று குரு மீண்டும் வினா எழுப்ப,

"ஹ்ம்ம் நல்லா போகுது சார்" என்று பதில் மொழிந்தவள் படுக்க விழைய,

"ஓ… அப்போ நீ உண்மையாவே சென்னைக்கு தான் போயிட்டு வந்திருக்க ரைட்…?" என்று வினவ,

மகிழ் முகத்தில் சிறிதும் அதிர்ச்சி இல்லை. இருந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் கவனிக்கும் குரு பிரசாத்திற்கு தான் மும்பை சென்று வந்தது‌ தெரிந்ததில் எந்த வியப்பும் இல்லை.

ஏன் தான் சென்ற காரணம் பேசிய விடயம் கூற குருவிற்கு தெரிந்திருக்கலாம் என்று மகிக்கு தோன்றியது.

அமைதியாக நிமிர்ந்து அவனது விழிகளை நேர் கொண்டு சந்தித்தவள்,

"ஆமா நான் சென்னைக்கு தான் போய்ட்டு வந்தேன்" என்று சற்று அழுத்தத்துடனே கூறினாள்.

"மகிழினிக்கு என்கிட்ட பொய் சொல்ல கூட வருமா…?" என்று அவளை உறுத்து விழித்த குருவின் குரலில் காரம்.

தனக்கு தெரியாது ஹனிகாவைப் போய் பார்த்து வந்துள்ளாள். அதுவும் தன்னையும் அவளையும் சேர்த்து வைக்க. யாரை கேட்டு இதெல்லாம் செய்தாள்.

நான் இவளிடம் கேட்டேனா என்னையும் ஹனிகாவையும் சேர்த்து வை என்று. அதுவும் தன்னிடம் பொய் கூறிவிட்டு அவளை பார்த்து வந்துள்ளாள்.

இவள் பெரிய தியாகி தன்னையும் அவளையும் சேர்த்து வைக்கும் முயல்கிறாள்.

இப்போது வரை தான் கேட்ட பிறகும் எந்தவித மாறுபாடுமின்றி அப்படியே பேசுகிறாள் என்று ஏக போகமாய் கோபம் கனன்றது.

"ஹ்ம்ம் நல்லாவே வருமே…? உங்களுக்கு வீட்ல சொல்ல முடியலை என்கூடவே கடைசி வரை இருக்கியான்னு எப்படி பொய் சொல்ல வந்துச்சோ அதே மாதிரி தான் எனக்கும் வரும்" என்றவள்,

"உங்க… உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கு ரைட்…? ஆனால் அதை சொல்ல மனசில்லை. இல்லையில்லை போயும் போயும் ஒரு வேலைக்காரியை பிடிச்சிருச்சே அவக்கிட்ட எப்படி சொல்றதுன்னு எண்ணம்" என்றவளுக்கு என்ன முயன்றும் விழிகளில் நீர் நிறைந்து விட்டது.

எதிரில் இருந்தவனது முகம் மங்கலாக தெரிந்தது.

அவள் தன்னிடம் கூறாது அதுவும் தன்னையும் ஹனிகாவையும் சேர்த்து வைக்கும் எண்ணத்தில் இருக்கிறாள் என்று கோபமாக இருந்தவன் அவள் நடந்தவற்றை அறிந்து கொண்டு இவ்வாறு தவறாக எண்ணுவாள் என்று கிஞ்சித்தும் எண்ணவில்லை.

மகி‌ வந்ததும் கோபமாக நடந்தவற்றை கேட்டுவிட்டு இனி இதே போல நடக்காது இருக்க உன்னை தான் நான் விரும்புகிறேன் என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிடலாம் என்று தான் சிந்தித்து இருந்தான்.

ஆனால் மகிழினி இப்படி நினைப்பாள் என்று தோன்றவே இல்லை.

"மகி அப்படி…" என்று ஆரம்பித்தவனை கை நீட்டி தடுத்தவள்,

"அப்படியென்ன நான் இறங்கி போய்ட்டேன். உன்னை எனக்கு பிடிச்சிருக்குனு நீங்க சொல்ல கூட எனக்கு தகுதியில்லையா…? பணமில்லாதவங்களா இருக்கது அவ்ளோ பெரிய தப்பா…? சரி தான் பணத்துக்காக நான் எது வேணாலும் செய்வேன்னு நினைச்சவர் தானே. இப்போவும் நாம எது சொன்னாலும் பணத்துக்காகவும் இந்த பகட்டு வாழ்க்கைக்காவும் நாம பின்னாடி வந்திருவான்னு நினைச்சிட்டிங்களா…?" என்றவள் கண்ணீரை துடைக்க,

"நோ மகி நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட" என்று அவளது கையை குரு பிடிக்க,

சட்டென்று தட்டிவிட்டவள் ஓரடி பின்னால் நகர்ந்து,

"தொடாதிங்க உங்க நிலைமையில இருந்து இறங்கி வந்து என்னை தொடாதிங்க போய் கையை நல்லா கழுவிக்கோங்க. நீங்க எவ்ளோ பெரிய ஆள் எவ்ளோ பெரிய பணக்காரங்க நீங்க போய் என்னை தொட்டு உங்களை அசிங்கப்படுத்திக்காதிங்க" என்றவளது அழுகை பெரியதாகியது.

"மகி ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேளு…" என்ற குருவின் குரல் கெஞ்சலாக வர,

"நான் எதையும் கேட்க விரும்பலை சார். நீங்க நினைச்சது செய்யிறது எல்லாம் சரி தான். வீட்டு வாசல்ல வைக்க வேண்டிய ஆள்னு அன்னைக்கு சரியாதான் சொல்லி இருக்கிங்க. வீட்டுக்குள்ளயே விட மனசில்லாத உங்களுக்கு வாழ்க்கைக்குள்ள விட எப்படி மனசிருக்கும்…? இல்லை எனக்கு தான் என்ன தகுதி இருக்கு"

"என்னை பிடிச்சிருக்குனு சொல்ல கூட தகுதி இல்லாதவளா போய்ட்டேன்ல. சரிதான் உங்களோட அழகு அறிவு முக்கியமா ஸ்ட்டேட்டஸ் அளவுக்கு பொருத்தமா இருக்க ஹனிகாவை பிடிச்சிருக்குனு சொன்னா உங்க தகுதிக்கு சரியா இருக்கும். இது எதுலயுமே ஏன் நீங்க இப்போ வீட்டைவிட்டு வெளியே அனுப்புனா கூட போக போக்கிடமில்லாத என்னை போய் பிடிச்சிருக்குனு உங்களால எப்படி சொல்ல முடியும்."


"..."

"சரி தான் நீங்க சரியாதான் இருக்கிங்க. நான் தான் நீங்க சொன்ன மாதிரி இந்த பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு என்னென்னவோ பேசிட்டு இருக்கேன் யாருக்கு எப்போ மனசு எப்படி மாறும்னு தெரியாது.‌ எனக்கும் அதுதான் நீங்க கொடுத்த வாழ்க்கை பிடிச்சு போய் ஏதோ தெரியாம என்னோட தகுதி என்னன்னு புரியாம ஆசைப்பட்டுட்டேன்."

"நீங்க என்கிட்ட பொய் சொல்லி இங்க அழைச்சிட்டு வந்திருக்க வேணாம். வான்னு சொன்னாலெ நான் வந்திருப்பேன் ஏன்னா நீங்க எனக்கு அவ்ளோ உதவி பண்ணியிருக்கிங்க. அதுக்கு காலம் முழுக்க நன்றிக்கடன் பட்ருக்கேன். ஏன் இப்போ நீங்க என்கிட்ட வந்து என்னை என்ன பண்ணாலும் அமைதியா தான் இருப்பேன் ஏன்னா
நீங்க அக்ரிமெண்ட்ல சொன்னதை விட நீங்க எனக்கு நிறைய செஞ்சு இருக்கிங்க இப்போ வரை செஞ்சிட்டு இருக்கிங்க" என்றவள் சட்டென்று தன்னுடைய புடவை முந்தானையை எடுத்துவிட்டிருக்க,

அவளது பேச்சிலும் செயலிலும் ஏகமாய் அதிர்ந்த குரு,

"ஏய் மகி…" என்றவன் சட்டென்று கன்னத்தில் அறைந்திருந்தான்.

அவன் அடித்த வேகத்தில் மகிழனியும் சுருண்டு விழுந்திருந்தாள்.

ஏற்கனவே அழுது கொண்டு இருந்தவளுக்கு அவன் அறைந்த கன்னம்‌ விண்ணென்று வலிக்க மேலும் அழுகை பெருகியது.

நொடிகள் கடந்து தன்னிலை அடைந்தவன் கோபத்தில் செய்துவிட்ட காரியத்தை உணர்ந்து,

"ப்ச்…" என்று தன்னை நொந்துவிட்டு அவளருகே சென்று கையை பிடிக்க,

மீண்டும் பட்டென்று தட்டிவிட்டவள அதே வேகத்தில் திரும்பி,

"தொடாதிங்கன்னு சொல்றேன்ல என்னை தொட்டா உங்களுக்கு தான் அசிங்கம்" சிவந்த முகத்துடன் சினத்தில் இரைந்தாள்.

அவள் மீண்டும் மீண்டும் கூறிய அசிங்கம் என்ற வார்த்தை அவனை கோபமுறச் செய்ய சடுதியில் அவளை பிடித்து திருப்பி இறுக அணைத்து கொண்டான்.

தொடாதே என்றவளை விடமாட்டேன் என்பது போல அணைத்திருந்தான்.

"விடுங்க என்னை விடுங்க நான் கெட்டவ பணத்துக்காக என்ன வேணா செய்வேன். இப்போ கூட நீங்க கூப்டதும் பணத்துக்கு ஆசைப்பட்டு தான் இங்க வந்தேன். என் பசங்களுக்கு பணக்கார வாழ்க்கை கிடைக்கும் எனக்கும் நிறைய நகை காஸ்ட்லி ட்ரெஸ் எல்லாம் கிடைக்கும்னு தான் வந்தேன். நீங்க‌ அன்னைக்கு சொன்னது சரிதான் இந்த பணத்தை பார்த்ததும் என் மனசு மாறிடுச்சு. இன்னும் என்னவேணா பணத்துக்காக செய்வேன்" என்று அவனிடமிருந்து விடுபட போராடியவள் அழுகையுடன் வார்த்தைகளை விட,

இங்கே மகியின் வார்த்தைகளில் மொத்தமாக உடைந்துவிட்டவன்,

"மகி ப்ளீஸ் போதும்டி என்னை வார்த்தையால கொல்லாதடி" என்று கலங்கிய குரலில் கெஞ்ச,

"நான் கொல்றேனா…? நீங்க‌ நீங்க தான் என்னை உயிரோட கொல்றீங்க அன்னைக்கு பணத்துகாக எவ்ளோ கீழிறங்கி கூட போவீயா சீன்னு சொல்லி என்னை எவ்ளோ தூரம் பேச முடியுமோ அவ்ளோ தூரம் பேசி என்னை மொத்தமா கொண்ணுட்டிங்க. அன்னையில இருந்து ஒரு நடை பிணமா தான் வாழ்ந்துட்டு இருந்தேன். இப்போ உங்களுக்கு என்னை பிடிச்சிருந்தும் என்மேல் நம்பிக்கை இல்லாம எனக்கு எந்த தகுதியுமில்லைனு நினைச்சு சொல்லாம விட்டு மொத்தமாக புதைச்சிட்டிங்க"

"..."

"தினமும் நீங்க பேசுன வார்த்தை ஞாபகம் வந்து என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொண்ணுட்டு இருக்கு. இந்த ரெண்டு வருஷத்துல ஏன் நான் எதுக்குமே வழியில்லாம கைக்குழந்தைகளை வச்சிக்கிட்டு வந்த நாலு வருஷத்துல என்னைக்காவது உங்க முன்னாடி வந்திருக்கேனா…? அந்த நாலு வருஷத்துல முழுசா பத்து தடவை கூட நான் உங்களை பாத்திருக்க மாட்டேன். நீங்களா தான வந்து அக்ரீமெண்ட் மேரேஜ் போட்டுக்கலாம்னு கேட்டிங்க. நான் முதல்ல வேணாம்னு தான் நினைச்சேன் ஆனால் ஆசைப்பட கூட தகுதி வேணும் பணம் வேணும்னு என் தம்பி டாக்டர் படிக்க ஆசைப்பட்டப்போ ரொம்ப நல்லா புரிஞ்சது அதான் வேற வழியில்லாம ஒத்துக்கிட்டேன்"

"..."

"அப்போ கூட முழுசா ரெண்டு வருஷம் உங்க கூட ஒரே ரூம்ல இருந்தப்போ சின்னதா ஒரு இடத்திலயாவது நான் தப்பா நடந்து இருக்கேனா…? என்னைக்காவது என்னோட லிமிட்ல இருந்து சின்னளவுல கூட க்ராஸ் பண்ணி இருக்கேனா…? நீங்க முதலாளி நான் உங்ககிட்ட கை நீட்டி சம்பளம் வாங்குற வேலைக்காரின்ற எண்ணம் எப்பவுமே ஏன் இப்போ வரை இருக்கு. என் பிகேவியர் கூட அப்டி தான் இருந்திருக்கு. இல்லைன்னு ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை உங்களால சொல்ல முடியுமா…?" என்று அழுகையை அடக்கி வினவியவளிடம்,

விழிகளில் நீருடன்,

"ம்ஹூம்…" என்று தலையசைத்தான்.

"அப்புறம் ஏன் ஏன் என்னை பார்த்து பணத்துகாக என்ன வேணா செய்வியான்னு கேட்டிங்க. என்னை நடந்ததுனு விசாரிக்காம ஏன் மேல துளி கூட நம்பிக்கை இல்லாம எப்படி எல்லாம் பேசுனிங்க. பணமில்லாத ஒரே காரணத்துனால அந்த பணத்துகாக எவ்ளோ வேணாம் நாங்க தரம் தாழ்ந்து போவோம் நாங்க கன்டிப்பா தப்பு செஞ்சிருப்போம்னு முடிவு பண்ணிட்டிங்க. உங்ககிட்ட காசு வாங்குன ஒரே காரணத்துகாக நீங்க என்ன பேசுனாலும் நான் அமைதியா இருக்கணும் அப்படி தான…" என்றவள் பிறகு தானே,

"ஆமா அப்படி தான் நீங்க என் தம்பியை படிக்க வைக்க மட்டும் இல்லை என் பிள்ளையை காப்பாத்தி கொடுத்திருக்கிங்க. அதுவும் எவ்ளோ பணம் அந்த பணத்தை நான் வாழ்நாள் முழுக்க அடிமை வேலை பார்த்தாலும் சம்பாதிக்க முடியாது. அதனால அமைதியா நீங்க இன்னும் எவ்ளோ கேவலா பேசுனாலும் சுயமரியாதைன்ற ஒன்னுக்கு அர்த்தமே தெரியாம அமைதியா வாங்கிக்கணும். அப்புறம் உண்மை தெரிஞ்ச பிறகு வந்து நான் தெரியாம பேசிட்டேன்னு முடிச்சிடுவிங்க. நானும் சரின்னு தலையாட்டணும் அதோட எல்லாம் சரியாகிடும் அப்டிதான உங்க நினைப்பு"

"..."

"பேசுன நீங்கவேணா எல்லாத்தையும் மறந்திருக்கலாம் ஆனால் கேட்ட என்னால மறக்க முடியலை. சின்ன வயசுல இருந்து அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்பட கூடாது நம்மளால என்ன முடியுமோ அதை மட்டும் தான் ஆசைப்படணும். நேர்மையா இருக்கணும் சுயமரியாதையோட இருக்கணும்னு எங்க அப்பா சொல்லிக்கொடுத்த வார்த்தையை வேதவாக்கா நினைச்சு மனசளவுல கூட மத்தவங்களுக்கு கெடுதல் நினைக்காம வாழ்ந்திட்டு இருக்க என்னாலயும் என் தம்பியாலயும் அதை மறக்க முடியலை. அப்படியே ஒவ்வொரு செகெண்டும் உள்ளே குத்துது. ஒரு வேளை நாம தான் தப்பு பண்ணிட்டோமா…?"

"எதாவது இடத்தில தவறிட்டோமா…? அவர் சந்தேகப்படுற மாதிரி நடந்துட்டோமான்னு ஆயிரம் யோசனை. நீங்க இருக்கும் போது பகல்ல நான் ரூம்குள்ளயாவது இருந்திருக்கேனா…? எதாவது வேலை பார்த்திட்டு கிட்சன் ஹால்ல தான இருந்திருக்கேன். எனக்கு என்னோட நிலைமை ரொம்ப நல்லாவே தெரியும். குடிசை தான் உன் வீடு இங்க வேஷம் போட்டு தான் சுத்துறேன்னு ஆனால் என்னை அப்படி பேச உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு"

"நீங்க டிவோர்ஸ் கேட்டப்போ கையெழுத்து போட்டுட்டு அடுத்த நாளே நான் இங்க இருந்து கிளம்பிட்டேன்.‌ அதுவும் நான் இங்க வரும் போது கொண்டு வந்த என்னோட சம்பாத்தியத்துல வாங்கன என் திங்க்ஸ மட்டும் தான் எடுத்திட்டு போனேன். வேற எதாவது நான் எடுத்திட்டு போயிருப்பேன்னு உஙகளால சொல்ல முடியுமா…? ஏன் பஸ் ஏறு அடுத்த செகெண்டே நீங்க சொன்ன மாதிரி உங்க நம்பரையும் உங்க பேமிலி மெம்பர்ஸ் நம்பரையும் அழிச்சிட்டு மகிழினின்ற ஒருத்தி இருந்தான்ற அடையாளத்தையே விட்டுட்டு போன நான் ஒரு தடவையாவது உங்களை காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணேனா…?"

"தெரியாம கூட‌ என்னால உங்க வாழ்க்கையில பிரச்சனை வந்திட கூடாது. நீங்க எனக்கு என் பிள்ளையை காப்பாத்தி கொடுத்த கடவுள் நீங்க‌ என்னைக்கும் உங்களுக்கு பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமாக இருக்கணும்னு தான ஆசைப்பட்டேன். சாமி கும்பிடும்போது கூட என் பிள்ளைகளுக்கும் தம்பிக்கும் அடுத்து நீங்க நல்லா இருக்கணும்னு தான் தினமும் வேண்டிக்கிட்டேன். ஆனால் நீங்க‌ என்னை எவ்வளவுக்களவு கேவலா நினைக்க முடியுமோ அவ்ளோ நினைச்சிட்டிங்க…"

"இதெல்லாம் விட பெரிய விஷயம் எனக்கு உங்களை ஏதோ ஒரு புள்ளியில பிடிச்சிருச்சு ஆனால் அதை உணர்ந்த செகெண்ட் கூட இது தப்பு அவர் எங்க இருக்காரு நீ எங்க இருக்கன்னு நினைச்சு என் மனசுல புதைச்சிக்க தான் நினைச்சேன் ஆனால் நீங்க பேசுன பேச்சுல ஒருவேளை அவர் சொல்றது சரிதான் போல நாம இந்த சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தான் இவர் மேல விருப்பம் வந்திருச்சு போல நீ இவ்ளோ கேவலமான பிறவியா‌…? அவர் சொல்றது ரொம்ப கரெக்ட் தான் நீயும் பணத்தை பார்த்ததும் பச்சோந்தி மாதிரி மாறிட்ட இத்தனை நாள் ஒழுங்கா தான இருந்த கேவலம் இந்த பணம் உன்னை இப்படி மாத்திடுச்சான்னு என்னை நானே வெறுத்துட்டேன்"

"நடந்ததை நினைச்சு நினைச்சு மனசளவுல ரொம்ப உடைஞ்சிட்டேன். அதுக்கப்புறம் என்ன நடந்தாலும் உங்களை எதிர்பார்க்கவே கூடாதுனு தான் நான் உங்களுக்கே தெரியாத இடத்துக்கு போனேன் ஆனால் அங்கயும் தேடி வந்து மறுபடியும் என்னை இந்த வாழ்க்கைக்கு அழைச்சிட்டு வந்து ஏன் இப்படி பண்ணிங்க. நடபிணமா வாழ்ந்தாலும் ஏதோ ஒரு வகையில நிம்மதியா இருந்தேன் ஆனால் இப்போ ஹனிகாகிட்ட பேசி நீங்க என்னை விரும்புனதும் அதை சொல்லாம இருந்தது தெரிஞ்ச பிறகு இவ்ளோ நடந்த பின்னாடியும் இவருக்கு நம்ம மேல எந்த நம்பிக்கையும் வரலை"

"பணத்துக்காக நம்மள கல்யாணம் பண்ணி ரெண்டு வருஷம் பொண்டாட்டியா நடிச்சவ அதே பணத்துகாக வேசியா கூட போவான்னு உனக்கு தோணிருச்சா அதான் என்னை பிடிச்சதை சொல்லலையா…? நான் அவ்ளோ மோசமான பொண்ணா அதான் நீ என்கிட்ட நம்பிக்கை இல்லாம எதையும் சொல்லாம இருக்கியா…? அதே பணக்கார வாழ்க்கையை காட்டி என்னை அழைச்சிட்டு வந்துட்டியா…? நானும் காரு பெரிய வீடு நகை பட்டுப்புடவை இதுக்கெல்லாம் ஆசைப்பட்டு உன்கூட வந்துட்டேன்ல என்னை மாதிரி ஒரு கேவலமான பொண்ணை பிடிச்சிருக்குனு உன்னால எப்படி சொல்ல முடியும்"

"..."

"நீ அப்போ நினைச்சது இப்போ நினைச்சது எல்லாமே சரிதான் நான் ரொம்ப மோசமான பொண்ணுதான் போ என் பக்கத்துல வராது" என்று அவனது சட்டை பிடித்து உலுக்கியவள்,

"போ என்னை விட்டு போ இங்க இருந்து போ…" என்று அவன் மார்பிலே அடிக்க,

இத்தனை நேரம் மகியின் வார்த்தைகளை இவ்வளவு நாட்களாக அவளது மனதில் அழுத்தி கொண்டிருந்தவற்றை கேட்ட குருவிற்கு தான் எல்லா இடத்திலும் தான் தவறிவிட்டோம் ஏதுமறியா பெண்ணை மனதளவில் மரிக்க செய்திருக்கிறோம் என்று தெரிந்து ஆயிரமாயிரம் பாகங்களாய் சிதறி போனான்.

வார்த்தைகள் வரவில்லை என்ன சொல்வது எப்படி கூறுவது எப்படி தான் செய்துவிட்ட தவறை சரி செய்வது இந்த பெண்ணை எப்படி சரி செய்வது எங்கணம் தன்னிலையை விளக்குவது என்று தெரியாது தவித்தான்.

கைகள் அவளை அணைத்திருக்க விழிகள் கலங்கியிருந்தது. கொடுத்தவள் ஒருவிதத்தில் அமைதியாகிருக்க அதனை பெற்று கொண்டவன் தான் உருக்குலைந்து போயிருந்தான்.

கணங்கள் கடக்க பட்டென்று அவனிடமிருந்து விடுபட்டு எழுந்தவள் முகத்தை துடைத்துவிட்டு,

"சா… சாரி சாரி குரு சார்.‌ என்னை மன்னிச்சிடுங்க. நான் ஏதோ குழப்பத்துல தெரியாம பேசிட்டேன்.‌ ப்ளீஸ் நீங்க எவ்ளோ பெரிய ஆள் நான் போய் உங்களை நீ வா போன்னு மரியாதை இல்லாம பேசி உங்க சட்டையை வேற பிடிச்சு ரொம்ப ரொம்ப சாரி சார். நிஜமா நான் எதையும் மனசறிஞ்சு செய்யலை ப்ளீஸ் தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க. இனிமே எந்த காலத்திலயும் இப்படி நடந்துக்க மாட்டேன். நடந்ததை மறந்துடுவோம். இதுக்கு முன்னாடி எப்படி நாம லைஃப் இருந்ததோ அப்படியே நீங்க விருப்பப்பட்ற வரை இருக்கும். நீங்க‌ என்னோட முதலாளி நான் உங்ககிட்ட வேலை பார்க்குற வொர்க்கர் இதை நான் எப்பவும் மறக்கமாட்டேன் சார். உங்க லைஃப்ல என்னால எந்த பிராப்ளமும் வராது சார்" என்று எதுவுமே நடக்காத பாவனையில் பேசியவள்,

"சீக்கிரம் தூங்கணும் காலையில வேகமா எழுந்து சமைக்கணும் உங்களுக்கு வேற வி வி கம்பெனியோட மீட்டிங் இருக்கு" என்றவாறு படுக்கையை சரிசெய்ய,

அதை தாங்க மாட்டவன் எழுந்து சென்று அவள் முன் மண்டியிட்டு அவளது கையில் முகத்தை புதைத்து கொண்டான்.

மகியின் கரங்கள் குருவின் கண்ணீரில் நனைய துவங்கியது…


 
Active member
Messages
341
Reaction score
229
Points
43
Magizh motham ah kottita ah guru magi ipadi indha angle ah yosichi irupa nu avan nenaikala
 

Aji

New member
Messages
1
Reaction score
0
Points
1
பாவம் அவளும் எவ்வளவு நாள் தான் எல்லாத்தையும் பொருத்து கிட்டு பொறுமையா இருப்பா....… இப்பொ அவளுக்கு மனசுல இருந்த வலி வேதனை குழப்பம் எல்லாமே பிரசாந்த்க்கு புரிஞ்சிருக்கும் .... ரெண்டு பேரையும் சேர்த்து ங்க மீரா க்கா... 🥺🥺🥺🥺🥺
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Mahi fulla outburst pannida yes avaloda 2 years feeling cha kastama iruku 😭😭ippo atha vanguna Namma guru tha romba romba kastama iruku 🥺🥺🥺 guru mahi ya ne samathanam pannidu you can do it hero 😉😉😉😉
 
Top