• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காதல் 36

Administrator
Staff member
Messages
459
Reaction score
785
Points
93
காதல் 36

ஹனியின் முகத்தில் பிறந்த அதிர்ச்சியை கண்ட மகி,

"நீங்களும் குரு சாரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினிங்க தான? அப்புறம் ஏன் நீங்க‌ வேற ஒருத்தரை மேரேஜ் பண்ணிக்க போறீங்க?" என்று வினவ,

ஹனி அதிர்ச்சி விலகி புரியாது நோக்கியவள்,

"மகிழினி நீங்க‌ என்ன பேசுறீங்க உங்களுக்கு புரியுதா?" என்று வினா தொடுத்தாள்.

"நான் எல்லாம் புரிஞ்சு தான் மேம் பேசுறேன். குரு சாருக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அவரோட அழகு படிப்பு ஸ்டேட்ஸ் எல்லாத்துக்கும் நீங்க தான் பொருத்தமான ஆள். அதுக்கு மேல நீங்க ஒருத்தரை ஒருத்தர் எவ்ளோ விரும்புனிங்க. வீட்ல ஒத்துக்கலைன்ற ஒரு ரீசனுக்காக உங்க காதல் கல்யாணத்துல முடியாம போய்ட கூடாது" என்று பேச,

ஹனி பதில் கூறாது வெறித்தாள்.

"நேசிச்ச காதல் கைக்கூடாததோட வலி எனக்கு தெரியும். குரு சாரும் சரி நீங்களும் சரி ரொம்ப ரொம்ப நல்லவங்க. நீங்க வாழ்க்கையில ஒன்னு சேர்ந்தா அதிகமா சந்தோஷப்பட்ற ஆள் நானாதான் இருப்பேன். ப்ளீஸ் மேம் குரு சாரை வேண்டாம்னு சொல்லாதிங்க. உங்களுக்குள்ள என்ன சண்டை இருந்தாலும் பேசி சரி பண்ணிடலாம்"

"மகிழினி இதை பத்தி பேச எதுவும் இல்லை. ப்ளீஸ் இங்க இருந்து போய்டுங்க" என்று ஹனிகா பொறுமை இழந்து கூற,

"மேம் ப்ளீஸ் மேம். இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க மேம். அங்க குரு சார் நீங்க இல்லாம சந்தோஷமாவே இல்லை.‌ எப்பவும் போல இருந்தாலும் அவர் முகத்தில ஒரு சோகம் இருக்கும்‌. அது மத்தவங்களுக்கு தெரியலைன்னாலும் எனக்கு தெரியிது மேம். அத்…" என்றவள் நிறுத்திவிட்டு,

"சாரோட அம்மாக்கிட்டயும் தாத்தாக்கிட்டயும் நான் பேசுறேன் மேம். நீங்க தான் சாரு எப்பவுமே ஏத்த பொண்ணுன்னு சொல்றேன் மேம். கண்டிப்பா அவங்க புரிஞ்சுப்பாங்க. ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக இதை கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க" என்று ஹனிகாவின் கையை பிடித்து கொண்டு விழிகளில் கெஞ்சலுடன் கேட்க,

ஹனிகா தான் இவளிடம் என்ன கூறுவது என்று அவளை நோக்கினாள்.

குரு இன்னும் தன்னுடைய மனதினை இவளிடம் வெளிப்படுத்தவில்லை என்று புரிந்தது. தான் இப்போது மகியிடம் என்ன கூறுவது எப்படி அவளுக்கு புரிய வைப்பது என்று தெரியவில்லை.

"உங்க வீட்ல பேசணும்னா கூட நானே பேசுறேன் மேம். மேம் ப்ளீஸ் எனக்காக ஓரே ஒரு தடவை கன்சிடர் பண்ணுங்க. குரு சார் ரொம்ப நல்லவரு. அக்ரிமெண்ட் மேரேஜ் பண்ண‌ என்னையே அவ்ளோ நல்லா பாத்துக்கிட்டாரு. நீங்க அவர் ஆசைப்பட்டு விரும்பின பொண்ணு உங்களை எவ்ளோ நல்லா பாத்துபாரு. சாரை பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலை மேம். எனக்கு குரு சாரோட சந்தோஷம் முக்கியம் மேம். வேணும்னா நான் உங்க கால்ல விழுந்து கூட கேட்குறேன்" என்று விழிகளில் நீருடன் குனிய,

"ஏய்… என்ன‌ என்ன பண்றீங்க…" என்று ஏகமாய் அதிர்ந்து பதறிய ஹனிகா விலகி,

"பர்ஸ்ட் எழுந்திருங்க…" என்று சற்று உரக்க கத்திவிட்டாள்.

இதில் மகிழ் சற்று அதிர்ந்து விலகி நின்றுவிட,

விழி மூடி தன்னை நிலைநிறுத்திக் கொண்ண ஹனிகா,

"மகிழினி உங்களுக்கு இப்போ என்ன வேணும் உன் குரு சார் சந்தோஷமாக இருக்கணும் அவ்ளோதான?" என்று வினவ,

மகியின் தலை மேழும் கீழும் அசைந்தது.

"பர்ஸ்ட் நீங்க ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். நான் குருவை விட்டு வரலை. உங்க‌ குரு சார் தான் என்னை விட்டு போய்ட்டாரு" என்று பேசுகையிலே இடை நுழைந்தவள்,

"குடும்பத்தில இருக்கவங்ககிட்ட பேச முடியாம தான் இப்படி செஞ்சிட்டாரு" என்று மகிழ் இடை நுழைய,

"ஷ்… நான் பேசிட்டு இருக்கேன்ல எதுக்கு இன்டர்பியர் ஆகுறிங்க. அமைதியா நான் சொல்றதை கேளுங்க" என்று அதட்டிவிட்டு,

"அவர் என்னை விட்டுட்டு போனதுக்கு அவர் பேமிலி ரீசன் இல்லை. நீங்க தான் நீங்க மட்டும் தான்" என்று மகியை நோக்கி ஒரு விரலை நீட்டியவளது குரல் சிறிதாக பிசிறு தட்டியது.

"என்ன நா… நானா…?"என்ற மகிக்கு வார்த்தைகள் திக்கியது.

"ஆமா நீதான்…" என்று அழுத்தம் திருத்தமாக வார்த்தைகள் ஹனியிடமிருந்து வெளிவந்தது.

'நானா நான் எப்படி காரணம் ஆவேன். நான் என்ன செய்தேன். நான் எதுவுமே செய்யவில்லையே. ஒருவேளை என்னையறியாமல் எதாவது தவறு செய்துவிட்டேனா…? நான் அப்படி செய்திருக்க வாய்ப்பே இல்லையே…? விவாகரத்து வாங்கிய பிறகு நான் அவரை எந்தவகையிலும் தொடர்பு கொள்ளவில்லையே. ஏன் அவருக்கு தெரியாத ஓரிடத்தில் தானே இருந்தேன். ஒருவேளை இந்த இரண்டு வருடத்தில் என்னையறியாமல் எதாவது இடையூறு செய்துவிட்டேனா…?'

'இத்தனை நாட்களாய காதலியுடன் சேராமல் துன்படுகிறாரே என்று அவருக்காக வருந்திய நான் தான் அவருடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமா…? ஆனால் அவர் இப்போது வரையிலும் என்னையும் என் பிள்ளைகளையும் எவ்வளவு நன்றாக பார்த்துக் கொள்கிறார். ஆனால் நான் அவர் வாழ்வை அழித்தது நான் தான் என்றே தெரியாமல் இருந்திருக்கிறேன்' என்று நொடி நேரத்தில் பலவாறாக நினைத்து மறுகியவளுக்கு விழி நீர் பெருகிவிட,

"நான் என் மனசறிஞ்சு எதுவும் செய்யலை மேம். குரு சார் எனக்கு கடவுள் மாதிரி. அவர் வாழ்க்கையில என்னால எந்த கெடுதலும் நடக்காது. எதாவது தெரியாம செஞ்சிருச்சா நான் எப்படியாவது சரி செஞ்சிட்றேன் மேம். என்னை… என்னை மன்னிச்சிடுங்க மேம்" என்று ஹனிகாவின் கரத்தை பிடித்து கொண்டாள்.

மகியின் கண்ணீரை கண்ட ஹனிகா தன்னிலை அடைந்து,

"ஹே நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்குறிங்க.‌ உங்க மேல எந்த மிஸ்டேக்கும் இல்லை" என்று மொழிய,

"நானே உங்க லைஃபை சரி பண்ணிட்றேன் மேம்" விழிகளை துடைத்தபடி மகிழ் பதில் அளிக்க,

"மகிழினி பர்ஸ்ட் நான் சொல்றதை கேளுங்க. நாங்க பிரிஞ்சதுக்கு நீங்க தான் ரீசன்.‌ பட் நீங்க எதுவும் பண்ணலை" என்றவள்,

"அன்ட் ஒன் மோர் திங்க் இதை எப்பவுமே சரி பண்ண முடியாது" என்று முடித்தாள்.

மகிழினி ஹனிகா கூறியது விளங்காது பார்க்க,

"பிகாஸ் குருவுக்கு உங்களை தான் பிடிச்சிருக்கு" என்றிட,

மகியின் முகத்தில் ஆயிரம் மின்னல்கள் வந்து போனது.

ஆழிப்பேரலையாய் அதிர்ச்சி தாக்க,

"என்ன…?" என்றவளுக்கு வார்த்தை வர மறுத்தது.

'குரு சாருக்கு தன்னை பிடித்துள்ளதா…? இருக்காது அவர் எங்கே அவர் என்னை எல்லாம் வீட்டிற்குள் விட்டதே பெரியது என்று எண்ணுபவர் அப்படிப்பட்டருக்கு தன் மீது விருப்பமா இருக்கவே இருக்காது' என்று முடிவு செய்தவள்,

"இல்லை மேம். நீங்க ஏதோ தப்பா புரிஞ்சு இருக்கிங்க. அவர் எங்க நான் எங்க…" என்றவள் நொடியில் சமாளித்து கூற,

"இல்லை மகிழினி நான் தப்பா நினைக்கலை. குரு குரு தான் அவர் வாயால எனக்கு மகிழினியை தான் பிடிச்சிருக்குனு சொன்னாரு. அவளை நினைச்சிட்டு உன் கூட வாழ முடியாது ரெண்டு பேருக்கும் செய்யிற துரோகம்னு சொல்லிட்டு போய்ட்டாரு" என்று தெள்ளத் தெளிவாக இயம்பிட,

மகிழினி கண நேரத்தில் இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை.

ஹனிகா கூறுவதை கிரகித்துக் கொள்ள மனது நேரமெடுத்தது.

விழிகளில் நீர் வற்றாது வழிய,

"கு.. குரு சாருக்கு என்னை பிடிச்சு இருக்கா…?" என்று நடுங்கிய இதழ்களுடன் வார்த்தைகள் வெளி வந்தது.

உள்ளே ஏதோ ஒன்று நழுவி சென்றதை மனது உணர்ந்தது.

"ஆமா நீங்க எவ்ளோ டைம் கேட்டாலும் இது தான் உண்மை. குரு சார் சந்தோஷமா இல்லைன்னு சொன்னிங்களே அந்த சந்தோஷம் உங்ககிட்ட தான் இருக்கு. நீங்க தான் அந்த சந்தோஷத்தை கொடுக்க முடியும். அவர் சோகமாக இருக்காருன்னு சொன்னிங்களே அதை நீங்க தான் சரி பண்ண முடியும்" என்று கூறிவிட,

அமைதியாக அவளை வெறித்து பார்த்தாள் மகிழினி.

உள்ளுக்குள் என்ன உண்ர்வென்று தெரியவில்லை. மகிழ்ச்சியா வருத்தமா என்று இனம் புரியாத உணர்வொன்று ஆட்டி படைத்தது.

"விட்டுட்டு போகணும்னு நினைக்கிறவங்களை இழுத்து பிடிக்க முடியாது. நான் இப்போ தான் கொஞ்சம் மூவ் ஆன் ஆகிட்டு இருக்கேன். என் ஆசை தான் நிறைவேறலை என் பேரண்ட்ஸ் ஆசை நடக்கட்டுமேன்னு தான் இந்த மேரேஜ்க்கு சம்மதம் சொல்லி இருக்கேன். நீங்க இல்லைன்னா நான் அப்படியே நின்னு போயிட மாட்டேன்னு புரிய வைக்க தான் குருவுக்கு இன்விடேஷன் அனுப்புனேன். திரும்பவும் வந்து எல்லாத்தையும் ரிமைண்ட் பண்ணி என்னை கஷ்டப்படுத்தாதிங்க" என்ற ஹனிகாவின் வார்த்தையில் இருந்த வலி மகியை தீயாய் சுட சட்டென்று எழுந்து விட்டாள்.

ஒரு பெண்ணின் வலி துன்பம் அழுகைக்கு தான் காரணமாகிவிட்டோம் என்ற உண்மை சுட்டது.

ஒரு தலையாய் நேசித்த தனக்கே பிரிவு அத்தனை வலிகளை கொடுத்திருக்கும் போது நான்கு வருடம் ஆசையாய் காதலித்த பெண்ணுக்கு எவ்வளவு வலித்திருக்கும்.

அதுவும் எனக்கு வேறு ஒரு பெண்ணை பிடித்துள்ளது என்ற வார்த்தையை எந்த பெண்ணால் தான் தாங்க முடியும்.

ஒரு பெண்ணின் தீரா துயரத்திற்கு முழு முதற் காரணம் தானாகிவிட்டோம் என்ற எண்ணம் நெருஞ்சி முள்ளாய் குத்த

"சா… சாரி என்னை மன்னிச்சிடுங்க. நான் இங்க வந்தது அவருக்கு தெரிய வேணாம்" என்றவள் விறுவிறுவென கிளம்பி வந்துவிட்டாள்.

எப்படி விமான நிலையம் வந்தாள் எப்படி விமானத்தில் ஏறினாள் என எதுவும் அவளுக்கு தெரியவில்லை.

விழி நீர் மட்டும் ஊற்று போல பெருகி கொண்டே இருந்தது.

விவாகரத்து வாங்கிய பிறகு குரு பிரசாத் தன்னை தேடி வந்து தன்னுடன் வருமாறு அழைத்தது கண்முன்னே நழுவி சென்றது.

அந்த சோகம் இளைத்து கருத்த தோற்றம் யாவும் தனக்காக தான் எனும் போது என்னவோ உள்ளே ஒன்று பிசைந்ததது.

ஆனால் அவன் தன்னுடன் வர கூறிய காரணம் நினைவு வர உள்ளே இதயம் இறுகியது.

ஆக அவருக்கு என்னை பிடித்துள்ளது ஆனால் ஒரு வேலை செய்யும் பெண்ணை பிடித்துள்ளது என்பதை கூற முடியவில்லை.

காரணம் தன்னுடைய நிலையா…? நேசத்தை அறிந்து கொள்ளும் அளவிற்கு கூட தனக்கு தகுதி இல்லையா…?

வேலைக்கார பெண்ணை பிடித்துள்ளது என்பதை ஒப்பு கொள்ள மனமில்லை. அப்படியென்ன நான் குறைந்துவிட்டேன் என்று நெஞ்சம் விம்மி தவிக்க

மற்றொரு மனம் ஆம் உனக்கு என்ன தகுதி இருக்கிறது. பணம் அழகு அந்தஸ்து இது போல எதாவது ஒரு தகுதியாவது இருக்கிறதா…?

குரு பிரசாத் பெரிய தொழிலதிபன் அவன் எங்கே மாத சம்பளத்திற்காக ஓடியோடி உழைக்கும் உன் நிலை எங்கே…?

இப்போது அவர் வீட்டை விட்டு அனுப்பிவிட்டாலும் உனக்கு இருக்க இடமில்லை அடுத்த வேலை சாப்பாட்டிற்கு நீ வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம்.

அப்படிபட்ட உன்னை பிடித்திருக்கிறது என்று தன்னிலையில் இருந்து இறங்கி வந்து எவ்வாறு அவரால் கூற இயலும்.

அதுவும் அன்று குரு பேசிய வார்த்தைகள்,

"இப்படி‌ ஒரு பணக்கார வாழ்க்கையில சொகுசா வாழ்ந்ததும் இங்கயே செட்டில் ஆகிடலாம்னு ஆசை வந்திடுச்சா…? என்னோட மிஸ்டேக். வாசலோட நிறுத்த வேண்டிய உன்னை என் பெட்ரும் வரை அலோவ் பண்ணது என் மிஸ்டேக் தான் ஹவ் சீப் யூ ஆர். பணத்துக்காக என்ன வேணா செய்விங்களா…" அந்த நொடியும் மனதிற்குள் அச்சு பிசகாமல் வந்து போக இதயத்தின் ரணம் அதிகமானது.

அதுவும், "சீ…" என்றவனின் முக சுழிப்பிலே இதயம் மரித்து போயிருந்ததே.

வாசல் வரை நிறுத்த வேண்டிய உன்னை என்று கூறயிருக்கிறார் என்றால் உன்னை வீட்டிற்குள் அனுமதித்ததே பெரியது உன்னை போன்றவர்கள் எல்லாம் எனக்கு அருகில் அமர கூட தகுதியற்றவர்கள் என்பது தானே அவரது எண்ணமாக இருந்திருக்கும்.

உன்னை ஒரு சதவீதம் கூட நம்பாத நம்ப தயாராக இல்லாத பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் நீ செய்வாய் என்று எண்ணிய ஒருவரால் எப்படி உன்னிடம் இறங்கி வந்து காதலை கூற முடியும்…? நடந்தவற்றை மறந்துவிட்டாயா…?

போயும் போயும் இவள் மேல் காதல் வந்துவிட்டதே என்று அவரே வருந்தி கொண்டு இருப்பார் அவர் உன்னிடம் எப்படி மனதை உரைப்பார்.

நேசித்த ஒருவன் தன் நேசத்தை உரைக்கும் அளவிற்கு கூட தகுதியற்று போய்விட்டேனா…? அப்படியென்ன இந்த பணம் அழகு எல்லாம் முன்னிற்கிறது என்று ஒரு மனது எண்ண,

மற்றொரு மனம் ஆமாம் பணம் அந்தஸ்து அழகு எல்லாம் முக்கியம் தான் அந்த பணம் இல்லை என்றால் உன் தம்பியை மருத்துவம் படிக்க வைக்க இயலுமா அல்லது கவினை காப்பாற்றி இருக்க இயலுமா…? என்று வினா எழுப்பியது.

அதுவும் சரி தான் ஹனிகாவை பார் எவ்வளவு அழகு நல்ல படிப்பு வளமையான குடும்பத்து பெண் அவளை பிடித்திருந்தது அதனை அவரால் கூற இயலும்.

எதுவுமே இல்லாத எதிலுமே சமமில்லாத உன்னை பிடித்திருக்கிறது என்று அவரால் எப்படி கூற முடியும்.

பிச்சைக்காரர்களுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை தான் இல்லை என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறியும் உரிமை கூட இல்லை என்பதை அந்த கணம் உணர்ந்தாள்.

சரி விடு உன்னால் ஏன் அவர் மீதிருந்த நேசத்தை கூற இயலவில்லை.

காரணம் அவருடைய பணம் புகழ் என யாவும் தானே அது போல தான் அவருக்கும்‌.

எட்டாத உயரத்தில் இருக்கிறார் என்று நீ எண்ணினால் தரை மட்டத்தில் இருக்கிறாய் என்று அவர் எண்ணியது சரி தானே…?

பணம் அழகு எல்லாம் இருப்பவருக்கு தான் நேசிக்க தகுதி உள்ளது போலும். இது ஏதும் இல்லாதவர் நேசத்தை பற்றி எண்ண கூட தகுதி அற்றவர்கள் போலும்…

ஆக அவர் என்னிடம் நேசத்தை உரைக்காததற்கு காரணம் என்னிலை தான் என்று முடிவு செய்தவளுக்கு மனது ஆறவேயில்லை.

ஊருக்கு வந்தடையும் வரையுமே அழுகை தான் அழுதழுது முகமே கசங்கி சிவந்து இருந்தது.

ஓட்டுநர் வந்து காத்திருந்ததை கண்டவள் ஏதும் கூறாது ஏறி அமர்ந்து கொண்டாள்.

அமைதியாக கண்மூடி சாய்ந்து கொண்டாள்.

வீடு வந்ததும் தெரியவில்லை. மனதில் பலவாறான எண்ணங்கள்.

ஓட்டுநர் அழைத்து கூறியதும் தான் வீடு வந்தது உறைக்க இறங்கி உள்ளே சென்றாள்.

காலை சென்றவள் திரும்பி வர இரவு ஆகியிருந்தது.

வீடு இருட்டாயிருக்க விளக்கை ஒளிர செய்தாள்.

நீள்விருக்கையில் சாய்ந்து இருந்த அம்மு எழுந்து,

"அண்ணி வந்துட்டிங்களா…? நானும் அம்மாவும் தான் இவ்ளோ நேரம் உக்கார்ந்து இருந்தோம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தூங்க போனாங்க" என்றவள் மகியின் முகத்தை கவனித்துவிட்டு,

"அண்ணி ஏன் உங்க முகம் ரெட்டிஷ்ஷா இருக்கு?" என்று பதறி வினவ,

"அது ஒன்னுமில்லை ட்ராவலிங்ல கூலிங் ஒத்துக்கலை அதான் அப்படி இருக்கு" என்று சமாளித்தாள்.

"ஓ… பேஸ கவர் பண்ணிட்டு வந்து இருக்கலாம்ல அண்ணி. சரி போய் ப்ரெஷ் ஆகிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்று மொழிய,

"இல்லை எனக்கு வேணாம் மதியம் சாப்பிட்டதே ஒரு மாதிரி இருக்கு. நீ போய் படு. நான் இதை எடுத்து வச்சிக்கிறேன்" என்றிட,

வர்ஷினியும் ஏதும் கூறாது சரியென தலையசைத்தவள்,

"பசங்க ரெண்டு பேரும் அம்மாக்கூட தூங்க போய்ட்டாங்க. உங்களை கேட்டு அழவும் அம்மாதான் சமாதானம் பண்ணி தூங்க வச்சாங்க" என்றாள்.

சரியென்றுவிட்டவள் பாத்திரங்களை எடுத்து ஒதுங்க வைத்துவிட்டு அறையை நோக்கி சென்றாள்.

என்னவோ அந்த நொடி குரு பிரசாத்தின் அறைக்குள் நுழைய துளியும் விருப்பம் இல்லை.

விருப்பத்தை அறிய தகுதியில்லை என்று எண்ணியவரது முகத்தை பார்க்க கூட மனதிற்கு ஒப்பவில்லை.

இருந்தும் நீ அவருக்கு நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளாய் அதற்காக செய்துதான் ஆக வேண்டும்.

பெற்று கொண்ட நன்றியை நீ என்றும் மறக்க கூடாது என்று தனக்குத்தானே கூறி கொண்டவள் இறுகிய மனதுடன் அறைக்குள் நுழைந்தாள் விளக்கு எறிந்து கொண்டு தான் இருந்தது.

மெத்தையில் சாய்ந்தவாறு அமர்ந்து இருந்த குருவின் பார்வை அவளிடம் தான்.

மகிழ் விறுவிறுவென அறைக்குள் நுழைந்தவள் மாற்றுடை எடுத்து கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

உடை மாற்றி முகத்தில் நீரை நன்றாக அடித்து அடித்து கழுவினாலும் மனதின் வெம்மை குறையவில்லை.

வெகுநேரம் சென்றே வெளியே மகிழ் வர இன்னும் குரு அதே இடத்தில் தான் இருந்தான்.

வெளியே வந்தவள் அவன் ஓருவன் இருப்பதையே கவனியாது போல படுக்க வர,

"மகிழினி…" என்றவனது குரல் அவளை தடுத்து நிறுத்தியது…




 
Active member
Messages
341
Reaction score
229
Points
43
Adaponga love panrathu ah solluratha vittutu ipadi avangalae oru mudivu ah pannitu love ah sollama ivangalum kastapattu mathavanga la yum kastapaduthuraga
 
Well-known member
Messages
854
Reaction score
626
Points
93
Rendu perayum enna solrathu ne theriyala
Aalalukku onnu ninachikkiraanga
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Honey unmaiya sollita paravailla yes mahi guru ku unaya romba romba pidikum unkitta sollama irupan solluvan feel pannatha 😍😍😍
 
Top