• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காதல் 34

Administrator
Staff member
Messages
459
Reaction score
785
Points
93
காதல் 34:

"அப்பா… வந்துட்டிங்களா…?" என்ற கூச்சலுடன் ஓடி வந்த பிள்ளைகளின் குரலில் தன்னிலை அடைந்த மகி,

"வா… வாங்க உள்ள வாங்க சார்" என்று வழிவிட,

"அப்பா…" என்று முகம் முழுவதும் சிரிப்புடன் வந்து தன் காலை கட்டி கொண்ட பிள்ளைகளின் செயலில் உள்ளம் கனிந்தவன் அவர்களை கையில் அள்ளி கொண்டு உள்ளே வந்தான்.

என்ன கேட்பதென்று தெரியாது மகி,

"என்ன குடிக்கிறிங்க சார்?" என்று வினவிட,

"காஃபி" என்றவன் பிள்ளைகளிடம் பேச துவங்கி இருந்தான்.

எழில், "ப்பா எப்போ நம்ம வீட்டுக்கு எங்களை அழைச்சிட்டு போவீங்க?" என்று வினா எழுப்ப,

"ஹ்ம்ம் சொல்லுங்கப்பா என் ப்ரெண்ட்ஸ் ஹவுஸ் எல்லாம் ரொம்ப பிக்கா இருக்குமாம் அவங்க சொல்லுவாங்க. எனக்கும் பிக் ஹவுஸ்ல இருக்கத்தான் பிடிச்சிருக்கு" என்ற கவினது வார்த்தைகள் மகியின் செவியில் விழ,

ஒரு கணம் திரும்பி பார்த்துவிட்டு பாலை எடுத்து அடுப்பில் வைக்க,

குருவின் பார்வையும் மகியின் மீது தான் நிலைத்தது.

உங்கள் இருவரது கேள்விக்குமான பதில் உங்களுடைய தாயிடம் தான் உள்ளது என்று மனது மொழிய,

"சீக்கிரமா போகலாம்டா செல்லம்…" என்று பதில் அளித்தான்.

இங்கு மகியின் மனதிற்குள் இரண்டு வருடம் வளமையான வாழ்விற்கு இவர்களுக்கு பழக்கப்படுத்திவிட்டு இப்போது இந்த சிறிய வீட்டில் அடைத்து வைத்திருப்பது தன்னுடைய தவறு தான் என்று தோன்றியது.

தான் எவ்வளவு முயன்று தன்னாலான அளவு நல்ல வாழ்க்கையை கொடுத்தாலும் இவர்களுடைய மனது குரு பிரசாத் கொடுத்த வாழ்வை தான் எதிர்பார்க்கிறது.

குழந்தைகள் அவர்கள் அவர்களுக்கு என்ன தெரியும் தான் கொடுப்பவற்றை தான் அவர்கள் பெற்று கொள்வார்கள் என்று நினைத்தபடி குளம்பியை தயாரித்தாள்.

"அப்பா இந்த நியூ ஸ்கூல்ல நான் ட்ராயிங் காம்பெடிஷன்ல பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கி இருக்கேன். இருங்க எடுத்துட்டு வர்றேன்" என்ற எழில் தான் பெற்ற பரிசையை தந்தையிடம் காண்பிப்பதற்காக ஓடி செல்ல,

"நானும் ரைம்ஸ் காம்பெடிஷன்ல வாங்கி இருக்கேன்" என்று கவினும் இறங்கி செல்ல,

குரு புன்னகையுடன் அவர்களை கண்டான்.

உள்ளே சென்ற இருவரும்,

"அப்பா…"

"அப்பா இங்க வாங்க" என்று கத்த,

மகிழுக்கு புரிந்தது பரிசு பொருட்களை சற்று உயரமாக வைத்து இருந்ததால் அதனை எடுக்க தான் அழைக்கின்றனர் என்று.

குழம்பியை எடுத்து வந்தவள்,

"அது ப்ரைஸ செல்ஃப்ல வச்சு இருக்கேன் அதை எடுக்க கூப்பிடுவாங்க. நீங்க குடிங்க நான் போய் எடுத்துட்டு வர்றேன்" என்று கூற,

"இல்லை நானே போய் எடுத்து தர்றேன்" என்று குரு எழுந்து உள்ளே சென்றான்.

குரு வந்ததும் எழில்,

"ப்பா எந்த ஷீல்ட் எடுங்கப்பா" என்று மொழிய,

"ப்பா அந்த பாக்ஸ் எடுங்க" என்று கவின் கை காண்பித்தான்.

குரு எடுத்து கொடுத்ததும்,

எழில், "ப்பா நான் பெரிய எலிஃபாண்ட் வரைஞ்சு இந்த ப்ரைஸ் வாங்குனேன்" என்று பெருமையாக கூற,

"ரொம்ப அழகா இருக்குடா செல்லம்" என்று குரு எழிலின் கன்னத்தில் முத்தமிட்டான்.

கவின், "ப்பா நானும் ஒரு பெரிய ரைம்ஸ் பாடி இதை வாங்குனேன்" என்று தன்னுடையதை காண்பிக்க,

அவனுக்கும் குரு முத்தமிட்டான்.

இதனை வாசலில் நின்று பார்த்த மகிழுக்கு என்னதான் தாயாய் தான் யாவையும் செய்தாலும் இவர்களின் இந்த தந்தைக்கான ஏக்கத்தை குருவால் மட்டும் தான் தீர்க்க முடியும் என்று எண்ணம் ஜனித்தது.

பிள்ளைகளின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை காணும் போது ஏனோ விழிகள் கலங்கியது.

"ப்பா நீங்க ஏன் நாங்க ப்ரைஸ் வாங்கும் போது வரலை. எல்லாருக்கும் அவங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் வந்து இருந்தாங்க. என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் உன் டாடியா எங்க எங்கன்னு கேட்டாங்க" என்று ஏக்கத்துடன் இயம்ப,

குருவிற்கு‌ உள்ளே ஒன்று நழுவி சென்றது.

"அப்பாவுக்கு வொர்க் இருந்துச்சுடா செல்லம். நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா வர்றேன்" என்று அவனுயரத்திற்கு குனிந்து கூற,

"நிஜம்மா…?" என்று எழில் வினவ,

"நிஜமா…" என்று அவனுடைய தோனியில குரு பதில் மொழிய,

"ப்ராமிஸ்ஸா…?" என்று நம்பாது கவின் தன்னுடைய கரத்தை நீட்ட,

ஒரு கணம் மகியின் மீது பார்வை படிந்து மீள,

"ப்ராமிஸ்ஸா" என்று அவனுடைய பிஞ்சு கரத்தில் தன்னுடைய கையை வைத்தான்.

எழில், "அப்ப ஓகேப்பா. நாங்க ப்ரைஸ் வாங்குன போட்டோ அம்மா மொபைல்ல இருக்கு வாங்க காட்றேன்" என்றவன் மின்னூக்கியில் இணைக்கப்பட்டிருந்த அலைபேசியை எடுத்து வந்து குருவிடம் நீட்டினான்.

அலைபேசியை வாங்கிய குரு கடவுச்சொல்லிற்காக மகியை நோக்க,

இத்தனை நேரம் அமைதியாக வேடிக்கை பார்த்திருந்தவளுக்கு அலைபேசி அவனுடைய கைக்கு மாறியதும் இதயம் எகிறி துடித்தது.

காரணம் அலைபேசியின் கடவுச்சொல் 'குருமகிழ்' என்றல்லவா போட்டிருந்தாள்.

அதனை எப்படி அவனிடம் கூறுவது இது தெரிந்தால் அவர் என்னை பற்றி என்ன நினைப்பார் என்று எண்ணம் பிறக்க உள்ளுக்குள் சிறிதான நடுக்கம் பிறந்தது.

நொடியில் தன்னை சமாளித்தவள்,

"கொ… கொடுங்க நான் போட்டு தர்றேன்" என்று கரத்தை நீட்டியவளது விரல்கள் லேசாக நடுங்கியது.

முயன்று அதனை மறைத்தவள் அலைபேசியை வாங்கி அவனுக்கு தெரியாதவாறு கடவுச்சொல்லை போட்டாள்.

இருந்தும் அவருக்கு தெரிந்துவிடுமோ தான் போடும் போது கவனித்திருப்பாரோ என்று ஆயிரம் எண்ணங்கள் மின்னி மறைந்தது.

அலைபேசியை அவனிடம் கொடுத்த பிறகும் அச்சம் தான். அவனுடைய புகைப்படத்தை அலைபேசியில் யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தாள்.

அவனுடைய நினைவு அதிகமாக வாட்டும் போது எடுத்து பார்ப்பாள். ஒன்று இரண்டல்ல கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள்.

ஒன்று அல்லது இரண்டு என்றால் தெரியாது வந்துவிட்டது அழிக்க மறந்துவிட்டேன் என்று கூறிவிடலாம்.

ஆனால் இதுவோ எக்கச்சக்கமாக இருக்கிறதே. யாருக்கும் தெரியாமல் வைத்திருந்த தன்னுடைய மனது அவருக்கு தெரிந்துவிடுமோ என்று பதற்றம் உள்ளே மகியை நடுநடுங்க வைத்தது.

வெளியே வந்து நாற்காலியில் அமர்ந்து இளையவர்களுடன் புகைப்படத்தை தள்ளி தள்ளி பார்த்தவாறு இருந்தவனை ஓரக்கண்ணால் கவனித்து கொண்டு சமையல் கூடத்தில் இருந்தவள் என்ன செய்வது என்ன செய்வது என்று நொடி நேரத்தில் சிந்தித்து பட்டென்று வெளியே வந்து,

"சாப்பிட்றிங்களா…?" என்று கேட்டுவிட,

நிமிர்ந்து பார்த்தவன்,

"ஹ்ம்ம் சாப்பிடலாம்" என்றுவிட்டிருந்தான்.

திசை மாற்றும் பொருட்டு கேட்டவளுக்கு அவன் சட்டென்று சரியென கூறிவிடுவான் என்று எதிர்பாரவில்லை.

நேற்று ஏதோ சௌமி உணவை கொண்டு வந்த காரணத்திற்காக சாப்பிட்டான் இன்று உண்ண வாய்ப்பில்லை என்று நினைத்து தான் கேட்டிருந்தாள்.

அவள் திகைப்பிற்கு காரணம் அவன் இன்றும் தன் வீட்டில் உண்பதாக கூறியது மட்டும் இல்லை அவள் இன்னும் சமைத்து முடித்திருக்கவில்லை.

"இதோ ஒரு டென் மினிட்ஸ்ல சாப்பாடு ரெடி பண்ணிட்றேன்" என்று மகிழ் சங்கடத்துடன் கூற,

குரு எதுவும் கூறாது, 'சரி' என்பது போல தலையசைத்தான்.

மகி வேகமாக சமையலறையினுள் நுழைந்து மாவை எடுத்து இட்லியை ஊற்றி மற்றொரு அடுப்பில் சட்னியை தயார் செய்தாள்.

பதினைந்து நிமிடத்தில் இட்லியை ஊற்றி முடித்து இரண்டு சட்னியை செய்திட்டவள் எல்லாவற்றையும் எடுத்து வந்து வைத்து மூவருக்கும் பரிமாறினாள்.

அவர்கள் உண்டு முடித்ததும் மகி தானும் சாப்பிட்டு வர குரு தான் வந்த காரணத்தை பேச துவங்கினான்.

"என்ன டிசிஷன் எடுத்து இருக்க மகி?" என்று வினவ,

மகியிடம் ஒரு கணம் மௌனம்.

அந்த நொடியில் குருவிற்கு தான் உள்ளுக்குள் பல போராட்டம்.

எங்கே எதிர்மறையான பதிலை கூறிவிடுவாளோ அப்படி கூறிவிட்டால் தான் என்ன செய்வது மகியின்றி ஒரு வாழ்வை அவனால் கனவிலும் கற்பனை செய்ய இயலவில்லை.

சில நிமிடங்கள் கடந்த பின் மகி,

"பசங்க ரெண்டு பேரோட ஸ்கூல்ல பேசி டிசி வாங்கணும். அப்புறம் என்னோட கம்பெனில ரிசைனிங் லெட்டர் கொடுக்கணும் அதுக்கு டூ டேஸ் ஆகும்…" என்று மறைமுகமாக தன்னுடைய பதிலை கூறிவிட,

சட்டென்று ஒரு விநாடி குருவுக்குள் சொல்ல முடியாத நிம்மதி மகிழ்ச்சி ஊற்றெடுத்தது.

என்னவோ யாருமற்ற இடத்தில் தொலைந்து போன குழந்தைக்கு தாயை கண்டவுடன் ஒரு ஆசுவாசம் பிறக்குமோ அதுபோல தான் இந்த நொடி குருவிற்கு இருந்தது.

உள்ளமெங்கும் ஊற்றெடுக்கும் மகிழ்ச்சியில் அவளை இறுக கட்டி கொள்ள வேண்டும் என்று எண்ணம் உந்தி தள்ள அதனை அடக்கியவன்,

"எந்த ஸ்கூல் நான் வந்து பேசுறேன். அப்புறம் நீ வொர்க் பண்ற கம்பெனி எம்.டி என் ப்ரெண்ட் தான் நான் உன் ரிசைனிங் பேப்பர்ஸ ரெடி பண்ண சொல்றேன்" என்று சிறிதான மகிழ்வுடன் கூறியவன்,

"அப்புறம் தாங்க்ஸ் மகி" என்றிட,

"எனக்கு எதுக்கு சார் தாங்ஸ் எல்லாம். நீங்க எனக்கு செஞ்ச உதவிக்கு இந்த ஜென்ம முழுக்க நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன். கவின் என்னோட உயிர் அவனை எனக்கு பத்திரமாக திருப்பி கொடுத்து இருக்கிங்க. அதுக்கே நான் காலம் முழுக்க நன்றிக்கடன் செய்யணும். இது போக என் தம்பியோட படிப்பு இவ்ளோ நாள் எங்களுக்கு பாதுகாப்பான இடம் இன்னும் நிறைய கொடுத்து இருக்கிங்க. அதுக்கெல்லாம் நான் என்ன செஞ்சாலும் ஈடாகாது. நீங்க வான்னு ஆர்டர் போட்டிருந்தா உடனே நான் சம்மதம் சொல்லி இருப்பேன்" என்று நீளமாக பேச,

இவனுக்கு உள்ளே பொங்கிய பிரவாகம் பொங்கிய வேகத்திலே அமிழ்ந்து போனது.

மனசாட்சி, 'எதற்காக இப்படி வருந்தி கொண்டிருக்கிறாய். உனக்கு தான் அவள் மீது நேசம் பொங்கி வழிகிறது அவளுக்கு அது போல எந்த எண்ணமும் அல்ல. ஆதலால் அவளுடைய பக்கத்தில் இருந்து அவள் கூறுவது மிகவும் சரிதான்' என்று எடுத்துரைக்க குருவும் நிலைமையறிந்து அமைதியாக தலை அசைத்தான்.

அடுத்தடுத்து வேலை வேகமாக நடந்ததது. குருவும் மகிழும் பிள்ளைகளுடன் பள்ளிக்கு சென்று மாற்று சான்றிதழுக்கு விண்ணப்பித்தனர்.

குருவின் செல்வாக்கால் வேலை வேகமாக நடக்க ஒரு மணி நேரத்தில் யாவையும் முடித்து கிளம்பினர்.

அடுத்து மகி பணி புரியும் நிறுவனத்திலும் விரைவாக வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டை அடைந்தனர்.

குரு மகியிடம் தேவையானவற்றை மட்டும் எடுத்து கொள்ளுமாறு கூறிவிட அவளும் உடையும் மற்றும் இதர தேவையான பொருட்களை மட்டும் எடுத்து கொண்டாள்.

சௌமியிடம் தான் கணவரிடம் கோபித்து கொண்டு இங்கு வந்து இருந்ததாகவும் இப்போது அவர் வந்து சமாதானம் செய்யவும் தங்களுடைய வீட்டிற்கே செல்வதாகவும் சுருக்கமாக சிறிய பொய்யுரைத்துவிட்டு இருந்த பொருட்களை அவளிடமே கொடுத்துவிட்டு வீட்டு உரிமையாளரிடம் கூறிவிட்டு ஊட்டியை நோக்கி பயணமாகினர்.

சௌமியின் தோழியின் வாழ்வு நன்றாகிவிட்டதில் மகிழ்ந்து அவர்களை மகிழ்வுடன் அனுப்பி வைத்தாள்.

விமானத்தில் ஊட்டியை நோக்கிய பயணம். குருவின் ஒருபுறம் எழிலும் மறுபுறம் கவினும் அமர்ந்து இருக்க இங்க மற்றொரு இருக்கையில் அமர்ந்து இருந்த மகியின் மனது நடந்தவற்றை அசை போட்டு கொண்டிருந்தது.

இந்த இரண்டு நாட்களில் தன் மனதில் எத்தனை மாற்றங்கள் அதுவும் குருவால்.

இனி குருவை வாழ்வில் சந்திக்க வாய்ப்பே இல்லை என்று எண்ணியிருக்க மீண்டும் அவனுடனான ஒரு பயணம் விமானத்தில் மட்டுமல்ல வாழ்விலும்.

இதுவும் நிரந்தரம் அல்ல என்று அவளுக்கு தெரியும். நேற்று குரு வந்து பேசி சென்ற பிறகு இரவு முழுவதும் அதே சிந்தனை தான்.

குருவை பற்றி தான் அவனுடைய நிலையை பற்றி தான். நேசம் கொண்டவனை இப்படி ஒரு உடைந்த நிலையில் அவளால் காண முடியவில்லை.

உள்ளம் மேவிய நேசத்தினால் உண்டான உறவு உடைவதென்பது உடலிலிருந்து உயிரை பிரிப்பதற்கு சமம்.

உள்ளம் கொண்ட நேசம் கைக்கூடாததன் வலி அவளுக்கு தெரியுமே. அவனுடைய வலியை உணர்ந்தாள்.

தன்னுடையதாக எண்ணினாள். தன்னுடைய வாழ்வில் எதிர்பாராது வந்து இத்தனை உதவிகளை செய்துவிட்டு சென்றவனுக்கு நிச்சயமாக தான் எதாவது செய்ய வேண்டும்.

தான் எவ்வளவு செய்தாலும் குரு தனக்கு செய்ததற்கு துளியும் ஈடாகாது. இருந்தும் தன்னால் ஆன உதவியை குருவிற்கு செய்ய வேண்டும்.

நிச்சயமாக கோதையிடமும் பிறைசூடனிடமும் நடந்ததவற்றை கூறி தான் எந்தவிதத்திலும் குருவிற்கு பொருத்தம் இல்லை.

ஹனிகா தான் அழகு அறிவு என யாவிலும் குருவிற்கு மிகவும் பொருத்தமான பெண் மேலும் குருவிற்கு ஹனிகாவின் மேல் தான் காதல் அவருடன் வாழ்ந்தால் தான் குருவின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று பேசி புரிய வைக்க வேண்டும் என்று எண்ணி கொண்டு தான் குருவிடம் தான் அவனுடன் வருவதாக சம்மதம் தெரிவித்தாள்.

சில மணி நேரப் பயணத்தில் இருவரும் திருச்சியை அடைந்து அங்கிருந்து அங்கிருந்து மகிழுந்தில் குருவின் வீட்டை அடைந்தனர்.

இத்தனை நேரம் அமைதியாக இருந்த மகியின் மனதிற்குள் இப்போது போராட்டம்.

கோதையிடமும் பிறைசூடனிடம் என்ன கூறுவது. தன்னை நம்பி தன் மீது அவ்வளவு பாசத்தை வைத்திருந்தவர்களை மதிக்காது ஒரு வார்த்தை கூட அவர்களிடம் கூறாது சென்றுவிட்டேன்.

இப்போது எப்படி அவர்களது முகத்தில் விழிப்பது. மகி மீண்டும் அவர்களை சந்திக்குமாறு சூழ்நிலை வரும் என்று கனவிலும் எண்ணியிருக்கவில்லை.

ஒருவித பதட்ட மனநிலையில் திரும்பி குருவை காண,

"பயப்படாத மகி. ஏற்கனவே நான் எல்லாம் பேசிட்டேன்" என்று தைரியம் கூற,

மௌனமாக தலையசைத்தவளுக்கு அவர்களிடம் என்ன பேசுவது கூறுவது என்று எதுவும் தோன்றவில்லை.

குரு தங்கள் இருவருக்கும் சண்டை அதனால் மகி கோவித்து கொண்டு சென்றுவிட்டாள்.

தவறு எல்லாம் தன் மீது தான் என்று ஏற்கனவே கூறி வைத்திருந்தான்.

மகிழுந்து வீட்டின் வாயிலுக்கு வந்ததும் மகி பிள்ளைகளுடன் இறங்கினாள். இளையவர்களை கையில் பிடித்து கொண்ட குரு,

"வா மகி…" என்றுவிட்டு முன்னே நடக்க,

அவன் பின்னோடு நடந்தவளுக்கு தான் ஏதோ முன் ஜென்மத்தில் இங்கு வாழ்ந்த உணர்வு.

இளையவர்களை பெரியவர்களை கண்டதும்,

"பாட்டி… தாத்தா…" என்று மகிழ்ச்சியுடன் ஓடி செல்ல,

கோதையும் பிறைசூடனும் சிறியவர்களை தூக்கி கொண்டனர்.

கோதைக்கும் பிறைசூடனுக்கும் எழிலையும் கவினையும் கண்டதும் அவ்வளவு மகிழ்ச்சி.

இளையவர்களுக்கும் தான் அது அவர்களது முகத்திலே பிரதிபலித்தது.

"டேய் குட்டிங்களா சொல்லாம கொல்லாம பாட்டியை விட்டு எங்கடா போனிங்க. நீங்க இல்லாம பாட்டியும் தாத்தாவும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்" என்று கோதை அவர்களை அணைத்து கொள்ள,

"நாங்களும் உங்களை மிஸ் பண்ணோம் பாட்டி. அம்மா தான் எங்களை அங்க கூட்டிட்டு போய்ட்டா. டாடி சொல்லிட்டாரு இனி நாங்க எப்பவும் உங்க கூட தான்னு" என்று எழில் மொழிய,

"ஆமா பாட்டி" என்று கவினும் அவரது கன்னத்தில் முத்தமிட்டான்.

சில பல நிமிடங்கள் இளையவர்களிடம் பேசிவிட்டு திரும்பிய கோதை மற்றும் பிறைசூடனது பார்வையும் மகியிடம் நிலைத்தது.

இருவரும் எதுவும் கேட்கவில்லை ஆனால் அவர்களை கண்டதும் மகிழுக்கு விழிகள் நிறைந்தது.

தனது தாய்க்கு பிறகு பெற்றவரை போல பார்த்து கொண்ட கோதையை கண்டு அவளுக்கு உள்ளத்தோடு சேர்ந்து விழிகளும் கலங்கியது.

என்ன பதில் மொழிவது தன் செயலுக்கு என்ன விளக்கம் கொடுப்பது என்று அறியாது நின்றவளது கண்ணீர் கன்னம் தாண்டி வழிய ஓடிச்சென்று கோதையை அணைத்து கொண்டாள்.

Active member
Messages
341
Reaction score
229
Points
43
Magi guru rendu perukum manasu kula oruthar mela innoruthar ku love irundhum sonna thappa nenachipagalo nu bayandhu yae thayangitu irukaga
 
New member
Messages
2
Reaction score
0
Points
1

Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Guru unaku feelings Irukura mari mahi kum iruku Ava react pannama iruka unaya avaluku romba pidikum da
Mahi vanthuda super ❣️❣️❣️Kavin ezhil happy guru romba happy
 
Top