• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காதல் 33

Administrator
Staff member
Messages
459
Reaction score
785
Points
93
காதல் 33:

ஹனிகாவிற்கு தான் செவியில் விழுந்த வார்த்தைகளை நம்ப இயலவில்லை.

ஒரு வேளை தனக்குத்தான் தவறாக கேட்டிருக்குமோ என்று எண்ணி,

"எ… என்ன சொன்னிங்க குரு…?" என்று தடதடக்கும் இதயத்துடன் வினவ,

பதகளிப்புடன் தனது முகத்தை கண்டவளை சலனமில்லாது நோக்கியவன்,

"நாம பிரிஞ்சிடலாம். லெட்ஸ் ப்ரேக்கப்" என்று மொழிந்திட,

"குரு எ… என்ன பேசுறீங்க நீ… நீங்க நான்…" என்றவளுக்கு ஆயிரம் இடிகளை சேர்த்து இறக்கிய அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை.

விழிகள் முழுவதும் நிறைந்து இருந்தது. இத்தனை வருடங்களாக இவன் தான் இவன் மட்டும் தான் உலகம் என்று எண்ணி வாழ்ந்திருந்தவளால் அவனுடைய வார்த்தைகளை கிரகிக்க முடியவில்லை.

இதயம் சிறிது சிறிதாக சிதறி கொண்டு இருந்தது.

கன்னம் தாண்டிய கண்ணீர் அவளது நிலையை உறைக்க அந்த கனமும் அமைதியை தாங்கி பார்த்திருந்தான் எதிரில் இருந்த குரு.

ஹனிக்கு என்ன கேட்பது என்ன கூறுவது என்று எதுவும் புரியவில்லை. விழிகளில் வடிந்த நீருடன் தன்னுடைய உலகமாகி போனவனை தான் வெறித்திருந்தாள்.

நான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்த கணமே இதயத்திற்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்திட்டவனை தன்னுடைய வாழ்வினுள் இணைத்து கொள்ள எண்ணி அந்த நொடியே முடிவு செய்து அவனையே சுற்றி வந்து தன்னுடைய காதலை நேசத்தை விதவிதமாக கொட்டி அவனுடைய அன்பையும் பெற்று நான்கு வருடங்களுகாக இவனுக்காகவே வாழ்ந்து வந்தவளுக்கு குருவின் வார்த்தைகள் இதயத்தில் ஈட்டியை பாய்ச்சியது.

நிமிடங்கள் நொடிகளாக கடக்க நடந்ததை உள்வாங்கியவள் விழிகளை மூடி திறந்து அவனது கரத்துடன் கோர்த்திருந்த கரத்தை பிரித்தெடுத்து விட்டு,

"இ… இப்போ பி…" என்று ஆரம்பித்தவளால் அந்த வார்த்தையை கூற இயலாது போய்விட,

"இப்படி இந்த மாதிரி முடிவெடுக்குற அளவுக்கு என்ன என்ன நடந்துச்சு…?" என்று அவனது முகத்தை நேருக்கு நேர் பார்த்து வினவிட,

இவனிடம் தான் பதில் இல்லை. என்னவென பதில் கூறுவான் உன்னை நேசித்து கொண்டு இருக்கும் போதே எனக்கு மகிழ் மீது நேசம் பிறந்துவிட்டது என்றா…?

அந்த விடயத்தை நினைக்கும் போது குருவிற்கே தன் மீது ஒருவித வெறுப்பு தோன்றியது.

"இது ஐ மீன் நமம ரிலேஷன்ஷிப் சரி வராது…" என்று குரு மொழிய,

"சரி வராதுனா…? என்ன என்ன சரிவராது எனக்கு புரியலை…?" என்று வினா எழுப்பினாள்.

ஒரு நொடி விழிகளை மூடி திறந்தவன்,

"ஹனி ப்ளீஸ் ட்ரை டு அன்டர்ஸ்டாண்ட் மீ" என்று குரு இயம்ப,

"என்ன புரிஞ்சுக்க குரு. நீங்க தான் எதுவுமே சொல்ல மாட்றீங்களே…? என்ன பிரச்சனைன்னு சொன்னாதான புரியும்‌…?" என்றவள்,

"உங்க வீட்ல ஒத்துக்கமாட்டாங்கனு யோசிக்கிறிங்களா…? டோன்ட் வொர்ரி குரு. நான் என் பேரண்ட்ஸ பேச சொல்றேன்…" என்று மொழிய,

குருவிடம் மௌனம் குடி கொண்டது.

"வேற‌ என்ன ப்ராப்ளம் குரு. யாராவது எதாவது சொல்லுவாங்கன்னு யோசிக்கிறிங்களா…? உங்க மாமா அத்தை பேமிலி…?" என்று கேள்வியுடன் நிறுத்தியும் எந்த பயனும் இல்லை.

"என்னன்னு சொன்னாதான புரியும்…" என்றவளது பொறுமை கரைய துவங்கியது.

"என்னன்னு சொல்லித் தொலைங்களேன்… சும்மா பிரிஞ்சிடலாம் பிரிஞ்சிடலாம்னு சொன்னா என்ன அர்த்தம். நாலு வருஷம் நீங்கதான் உயிர் உலகம் எல்லாம்னு வாழ்ந்து இருக்கேன். இப்போ வந்து பிரிஞ்சிடலாம்னா நான் என்ன பண்ணுவேன்…" என்று கோபமாக கத்த துவங்கியவள் இறுதியில் உடைந்து அழத்துவங்க,

"ஹனி…" என்று தன்னை முற்றும் முழுதாக வெறுத்து கனத்த மனதுடன் அவளது தோளில் கையை வைக்க,

"ஐ கான்ட் லீவ் வித்தவுட் யூ குரு" என்று அவனை இறுக அனைத்து கொண்டவளது சூடான விழிநீர் குருவின் தோளினை நனைக்க,

இவன் மொத்தமாய் மரித்து இறுகிப் போனான். ஒரு பெண்ணுடைய கண்ணீர் அதுவும் முழுமுதற் காரணம் தான் தான்.

இத்தனை தூரம் உடைந்து அழுது தன்னிடமே வந்து தஞ்சம் கொள்ளும் இந்த பெண்ணின் நேசத்தை தீயில் இட்டு கொழுத்திய பாவம் தன்னை நிச்சயமாக எளிதில் விட்டுவிடாது.

எத்தனை பிறவி எடுத்தாலும் இந்த பாவத்திற்கு தன்னால் பரிகாரம் தேட இயலாது.

'விட்டுவிடு அவளை உன்னிடமிருந்து பிரித்துவிடு. நீ பிரிந்துவிடு' என்று உள்ளம் கூக்குரலிட்டது.

அத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆள்பவனால் இந்த சிறிய பெண்ணிடம் பேச இயலவில்லை.

ஒரு மூச்சு அழுது தீர்த்தவள்,

"குரு ப்ளீஸ். என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியணும். என்ன ப்ராப்ளமா இருந்தாலும் நாம சேர்ந்தே சால்வ் பண்ணலாம்" என்று அழுகையில் தேம்பியவள் அவனது கரத்தை அழுந்த பிடிக்க,

"ஹனி ப்ளீஸ் போதும் என்னை இதுக்கு மேல குற்றவுணர்வுக்கு ஆளாக்காத…" என்று அடிக்குரலில் கத்திவிட்டவன் தலையை இறுக பிடித்து கொண்டான்.

தலைக்குள் யாரோ சுத்தியலால் அடிப்பது போல வலித்தது.

ஹனி அவனது கத்தலில் அதிர்ந்து ஒரு அடி பின்னோக்கி சென்று எழுந்து நின்றுவிட்டாள்.

முகம் முழுவதும் அவனது கத்தலில் உண்டான அதிர்ச்சி விரவியிருந்தது. அவளது முகத்தை கண்டவன் ஒரு கணம் விழி மூடி திறந்து,

"நான் தான் நான் மட்டும் தான் பிராப்ளம். நான் தான் எல்லாத்துக்கும் காரணம். எனக்கு உன் கூட ரிலேஷன்ஷிப்ல இருக்கும் போது அவளை பிடிச்சிருச்சு. நா… நான் உனக்கு வேணாம். நான் உனக்கு ஏத்தவன் இல்லை. எனக்கு எந்த தகுதியும் இல்லை உன்னோட இந்த அன்பு காதல் எதுக்குமே எனக்கு ஒரு பர்சன்ட் கூட தகுதி இல்லை.‌ போய்டு என்னைவிட்டு போய்டு ப்ளீஸ்" என்றவன் கைகளில் முகத்தை புதைத்து கொண்டான்.

இங்கு அவனுடைய வார்த்தைகளை உள்வாங்கியவளுக்கு தான் உலகம் தட்டாமாலை சுற்றியது.

அதிர்ச்சியில் இதயம் ஒரு கணம் நின்று துடிக்க,

"குரு…" என்றவளுக்கு இதழ்கள் நடுங்கியது.

சட்டென்று விரலை ஊன்றி அழுத்தமாக நின்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டவளது இதயத்தினை குருவின் வார்த்தைகள் ஆயிரம் பாகங்களாக உடைத்திருந்தது.

ஹனியால் குருவினது வார்த்தைகளை துளியும் நம்ப இயலவில்லை.

இதற்கு முன்பு கூறிய வார்த்தைகளை விட இதோ இந்த ஒற்றை விடயம் அவளை நிலை குலையச் செய்திருந்தது.

அவன் தன்னை வேண்டாம் என்று கூறிய போது கூட ஏனென்று தெரியாத பயம் தான் நெஞ்சை கவ்வியது.

ஆனால் அதன் காரணம் ஒரு பெண் அதுவும் இத்தனை நாட்கள் தன்மேல் மட்டும் பாசம் காதல் அன்பு என யாவையும் வைத்திருந்தவளுக்கு இதயம் குருதியை பொழிந்தது.

தன்னவனது வாய் மொழியால் இன்னொரு பெண்ணை பிடித்திருக்கிறது என்றொரு வார்த்தையை கேட்பதெல்லாம் ஆக பெரும் கொடூரம்.

அத்தகைய துன்பத்தை தாங்கி தான் நின்றிருந்தாள் ஹனிகா. குரு பிரசாத் என்று ஒருவனை நேசித்ததை தவிர எந்த ஒரு தவறும் செய்யாத பேதை பெண்.

'அவள் அந்த பெண்…?' என்று இதயம் சிந்தித்த நொடி மனக்கண்ணில் வந்து போனது மகியின் முகம் தான்.

'இருக்காது… இருக்கவே இருக்காது…' என்று இதயம் கூக்குரலிட,

"அது ம… மகிழினியா…?" என்று கேட்பதற்குள் இதயம் நூறு முறை நின்று துடித்திருந்தது தெரிவைக்கு.

விழிகளை ஒரு நொடி மூடி திறந்தவன் நிமிர்ந்து அவளது மொத்தமாய் அதிர்ச்சியை உள்வாங்கி அழுது சிவந்த முகத்தை பார்த்து, 'ஆமாம…' என்பதாய் தலையசைக்க,

சட்டென்று பின்புறம் நகர்ந்து சுவற்றில் சாய்ந்து நின்றவளுக்கு எல்லாம் புரிந்திட விழிகள் நிறைந்து அவனுருவம் மங்கலாக தெரிந்தது.

'தவறு தன்னுடையது தான் என்று புரிந்தது தங்களுடைய வாழ்க்கையில் இன்னொரு பெண்ணை நுழையவிட்டது. என்ன பிரச்சனைகள் இருந்தாலும் தாங்களே அதனை சமாளித்திருக்க வேண்டும் வீட்டில் பேசியிருக்க வேண்டும். மற்றொரு பெண்ணை நாடகமே ஆயினும் அவனுடைய வாழ்வில் அதுவும் தன்னுடைய இடத்தில் நுழைய விட்டிருக்க கூடாது' என்று செய்துவிட்ட தவறு மிகவும் தாமதமாக தான் உரைத்தது.

ஆறாக பெருகிய விழி நீரை துடைக்க மனமின்றி,

"அ… அவங்க இப்போ உங்க கூட இருக்காங்களா…?" என்று இதயம் வலிக்க வலிக்க வினாவை தொடுக்க,

"நோ… மகி என்கூட இப்போ இல்லை. அவ மேல எந்த தப்பும் இல்லை. மகி ரொம்ப நல்லவ. அவளுக்கு என் மேல எந்த எண்ணமும் இல்லை. அக்ரிமெண்ட் முடிஞ்ச அடுத்த நாளே எல்லாத்தையும் என்கிட்ட ஒப்படைச்சிட்டு போய்ட்டா. இப்போ வரை ஒரு டைம் கூட என்னை காண்டாக்ட் பண்ணலை. ட்ரை பண்ணவும் மாட்டா. அவ அவளோட ஸ்டாண்ட்ல ரொம்ப கரெக்டா தான் இருக்கா. நான் தான் எதிலயும் யாருக்கும் சரியாக இருக்க முடியலை"

"..."

"எல்லா மிஸ்டேக்கும் என்னோடது தான். அவளை அனுப்புன பின்னாடி தான் எனக்கு புரிஞ்சது. என்னோட எல்லாத்தையும் சேர்த்து அவளோட அனுப்பிட்டேன்னு. என்னவோ எங்க எந்த புள்ளில இது நடந்ததுனு எனக்கு தெரியலை‌. நான் இவ்ளோ தானா…? இவ்ளோ வீக்கான ஆளா…? ஒரு பொண்ணு கூட இருந்தா நான் மாறிடுவேனான்னு எனக்குள்ள ஒரு போராட்டம். இது சரிவராது சரியும் கிடையாதுன்னு நான் எவ்வளோ மறக்க ட்ரை பண்ணேன் பட் முடியலை"

"..."

"என் மேலயே எனக்கு வெறுப்பு நாளுக்கு நாள் அதிகமாகுது. நான் உனக்கு வேண்டாம். என்னை மாதிரி ஒருத்தன் உனக்கு வேண்டாம். நீ ரொம்ப நல்ல பொண்ணு உனக்கு என்னை மாதிரி ஒருத்தன் சரி கிடையாது. யூ டிசர்வ் பெட்டர் ஹனிகா அண்ட் சாரி பார் எவ்ரிதிங்க். நான் செஞ்ச தப்பை எந்த சாரியாலயும் சரி பண்ண முடியாதுனு எனக்கு தெரியும். பட் எனக்கு வேற என்ன செய்றதுன்னு தெரியலை" என்று நீளமாக பேசி முடித்தவன் ஹனிகாவை பார்த்தான்.

இத்தனை நேரம் தன்னுடன் பேசியவனை முக பாவனைகளையும் உணர்வுகளையும் வலியோடு கண்டவளுக்கு உள்ளுக்குள் ஆறாத காயமொன்று தோன்றியது.

ஏதும் கூறாது சட்டென்று திரும்பி சென்று அருகில் இருந்த அறைக்குள் நுழைந்து கதவை பூட்டி அதன் மேல் சாய்ந்தபடி அமர்ந்துவிட்டாள்.

வாழ்க்கையின் மிக கொடூரமான நொடிகள் வாழ்க்கை ஆசைப்பட்டது எல்லாம் கேட்பதற்கு முன்பே கிடைக்கப்பெறும் வாழ்க்கையை இத்தனை நாள் வாழ்ந்திருந்தவளுக்கு குரு பிரசாத் என்றவனது இழப்பு ஏகமாய் வலித்தது.

"ஓ…" என்று கதறி அழுக தோன்றியது.

இதுதான் இவன் தான் இவனுடன் மீதம் உள்ள காலம் யாவும் என்று இந்த நான்கு வருடங்களில் தங்களுக்கான உலகத்தினை உருவாக்கி வைத்திருந்தவளால் அத்தனையும் ஆக்ரோஷ கடல் அலையில் அடித்து செல்லப்படும் மணல்வீடு போல இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதை ஏற்க இயலவில்லை.

நொடியில் அடித்து சென்றுவிட்ட கடல் அலையில் அதிர்ந்து மணல்வீட்டை தேடும் குழந்தையின் சாயல் தான் அவளிடம்.

கணப்பொழுதில் காணல் நீராய் மாறி போன நேசத்தை தேடி இதயம் தோற்றது.

அதுவும் மகிழினியை பற்றி கூறியதும் அவனிடமிருந்து வேகமாக வந்து விழுந்த வார்த்தைகள் அவனுக்கு மகி மேல் இருக்கும் உணர்வுகளை படம் போட்டு காண்பித்ததில் நொருங்கி தான் போயிருந்தாள்.

யாவிற்கும் மூல காரணம் தான் தான் தன்னால் மட்டும் தான் இதெல்லாம் தான் மட்டும் ஒப்பந்த திருமண யோசனையால் வந்தது.
என்று இதயம் கதறி துடித்தது.

அவள் வேகமாக எழுந்து சென்றது குருவிற்கு தாமதமாக தான் உறைக்க எழுந்து விறுவிறுவென நடந்து சென்றவன் அவள் கதவை அடைத்ததை கண்டு பதறி,

"ஹனி ஓபன் தி டோர். ஹனி ப்ளீஸ் கதவை திற. மிஸ்டேக் என்மேல தான் நீ எதுவும் தப்பான முடிவு எடுத்திடாத‌ ஹனி. ப்ளீஸ் ஹனி…" என்று கதவை தட்டினான்.

ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.

இங்கு ஹனியோ தன்னுடைய செயல்களால் விளைந்தவற்றால் வேரறுந்து கிடந்தாள்.

"ஹனி ப்ளீஸ்.‌‌.." என்றவன் தன் பலன் கொண்ட மட்டும் கதவை திறக்க முயற்சிக்க,

சடுதியில் கதவு திறக்கப்பட ஆழ்கடலின் அமைதியை உள்வாங்கி நின்றிருந்தவள்,

"போய் உட்காருங்க டூ மினிட்ஸ்ல வர்றேன். பயப்படாதிங்க நான் சூசைட் பண்ணிக்கிற அளவுக்கு கோழையில்லை" என்றுவிட்டு பட்டென்று மீண்டும் கதவை அடைத்துவிட்டாள்.

இங்கு குரு தான் அவளது பரிமாணத்தில் அதிர்ந்தவாறு வந்து அமர்ந்தான். நொடியில் அவளுடைய குழந்தை தனத்தை எதையும் ரசிக்கும் பாவனை என யாவையும் தன்னால் தான் இழந்துவிட்டாள் என்று இழக்க வைத்துவிட்டேன் என்று உள்ளம் தவித்தது.

இரண்டு நிமிடங்களில் அழுத முகத்தை கழுவி துடைத்துவிட்டு வந்து அமர்ந்தவளது பாவனையே சொல்லியது அவள் ஏதோ முடிவு எடுத்துவிட்டாள் என்று.

நிமிர்ந்து அமர்ந்து குருவை தீர்க்கமாக பார்த்தவள்,

"ஸோ நீங்க முடிவு பண்ணிட்டிங்க…" என்று வினவியவளுக்கு குருவால் பதில் மொழிய இயலவில்லை.

"தப்பு என் மேல தான் நான் அக்ரிமெண்ட் மேரேஜ் பத்தி பேசியிருக்க கூடாது. நீங்க சொன்னது சரி தான் நிறைய மூவிஸ் ட்ராமாஸ் பாத்து நான் ஒரு இமாஜினேஷன் உலகத்தில வாழ்ந்துட்டேன். ரியல் லைஃப்க்கும் ரீல் லைஃப்க்கும் நிறைய டிஃபரன்ஸ் இருக்கு. நீங்க தான் என் உலகம் நீங்க தான் எல்லாமேன்னு நினைச்சு இருந்துட்டேன் அதான் இப்படி ரியாக்ட் பண்ணிட்டேன்" என்றவளுக்கு குரல் தழுதழுக்க,

முயன்று தன்னை கட்டுப்படுத்தியவள்,

"என்னோட ப்ளேஸ்ல இன்னொருத்தவங்களை நுழைய விட்டு இருக்க கூடாது. என்னோட செயல்களுக்கான ரியாக்சனை நான் பேஸ் பண்ணி தான் போகணும். நான் உங்க டிசிசஷனை அக்செப்ட் பண்ணிக்கிறேன். பிகாஸ் ஐ ஸ்டில் லவ் யூ. நீங்க நான் வேணும்னு நினைச்சப்போ அதை அக்செப்ட் பண்ணிக்கிட்ட நான் நீங்க வேணாம்னு சொல்றதையும் அக்செப்ட் பண்ணிக்கிறேன்"

"..."

"பிகாஸ் நீங்க வேணா தவறி இருக்கலாம் பட் என்னோட லவ் இட் வாஸ் அ டிவைன். போங்க உங்களுக்கு பிடிச்ச லைஃபை அமைச்சிக்கிட்டு வாழுங்க. இனி என் முன்னாடி வராதிங்க. என்னால இதே மாதிரி ஸ்ட்ராங்கா பேச முடியுமான்னு எனக்கு தெரியலை‌. போய்டுங்க" என்று முகத்தை வேறுபுறம் திருப்பியவளது முகம் அழுகையை அடக்கியதில் கன்றி சிவந்திருந்தது.

கண்ணாடியாய் தன்னை மட்டும் அகத்தில் பிரதிபலித்து கொண்டிருந்தவள் மீது கல்லெறிந்து சுக்குநூறாக உடைத்து விட்டோம். பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்தவளது சிறகுகளை உடைத்துவிட்டோம் என்று உணர்ந்த கணம் உள்ளே ஒன்று இறுக இனியும் இங்கிருந்து அவள் உடைந்து சிதறுவதை காணுமளவு கல்மனது தனக்கில்லை என்று உணர்ந்து எழுந்து கொண்டான்.

நொடியில் மனக்கண்ணில் பதின்ம வயதில் கண்களில் மின்னும் ஆர்வத்துடன் தன்னை சுற்றி வந்த ஹனிகா நினைவு வர மனது கண நேரத்தில் பரிமாணத்தை மாற்றியவளோடு ஒப்பிட்டு நூறு வேறுபாடுகளை கண்டறிய முயல விறுவிறுவென வெளியேற முயற்சித்தான்.

வாயிலை அடையும் இறுதி நொடி, பொழுதில்,

"குரு…" என்றவளது ஹனியின் குரல் அவனை தடை செய்தது.

குரு திரும்பி பார்க்க,

"அவங்களுக்காவது உண்மையா இருங்க…" என்றுவிட,

இவனுக்கு தான் தன்னுடைய தவறை எண்ணி மொத்தமாக உள்ளம் இறுகியது.

அமைதியாக விறுவிறுவென நடந்து வந்துவிட்டான்.

இங்கு ஹனி அவன் சென்ற பிறகு கதவை அடைத்துவிட்டு அப்படியே அமர்ந்துவிட்டாள்.

உள்ளம் ஊமையாக கதறியது. முகத்தை தோளில் புதைத்து கொண்டாள்.

என்னதான் அவன் முன் தைரியமாக பேசிவிட்டாலும் மொத்தமாக சிதறி சில்லு சில்லாகியிருந்தாள்.

கண்ணீரோடு சேர்த்து கொண்டவனின் மீதிருந்த காதலையும் கரைத்து கொண்டிருந்தாள்.

குருவோ ஒரு பெண்ணின் மனதை உடைத்து சிதைத்து அவளை முழுதாக மாற்றிவிட்டதை எண்ணி தனக்குள்ளே இறுகி போனான்.

பிறகு கோதை மற்றும் பிறைசூடனது தொடர் விசாரிப்புகளால் மகியை தேடி சென்று இருந்தான்.

என்னதான் அவர்களை காரணமாக கூறி கொண்டு சென்றிருந்தாலும் மனது அவளை தேடியது என்னவோ உண்மை தான்.

நடந்தவற்றை நினைத்தவாறு இரவை கடத்தியிருந்தவன் காலை எழுந்து குளித்து மகியை காண அவளது முடிவை அறிய சென்றான்.

அவள் வரவில்லை என்று கூறிவிட்டால் என்ன செய்வது என்று மனது பலவாறு சிந்தித்தபடி இருந்தது.

தான் செய்த பாவங்கள் எல்லாம் சேர்ந்து அவளை தன்னுடன் சேர இயலாது செய்துவிடுமோ என்றெல்லாம் கூட எண்ணம் தோன்றி வைத்தது.

யாவையும் ஒதுக்கி வைத்துவிட்டு அமைதியாக அவளது வீட்டின் முன் சென்று அழைப்பு மணியை அழுத்தினான்.

"ஹான் இதோ வர்றேன்…" என்றவள் முன்பதிவு செய்த சமையல் எரிவாயு சிலிண்டர் தான் வந்துவிட்டது என்று கையில் பணத்துடன் வந்து கதவை திறந்தவள் குருவை கண்டு சிறிது அதிர்ந்து தான் விட்டாள்.

காலையில் வருகிறேன் என்று கூறியிருந்தவன் இப்படி அதிகாலையே வந்து நிற்பான் என்று எதிர்பார்க்கவில்லை.

குருவோ தன்னை கண்டு சிறிதான அதிர்ச்சியை வெளிப்படுத்தியவளை முகத்தில் எந்தவி பாவனையும் காட்டாது பார்த்திருந்தான்.

மனதிற்குள் மட்டும் அவளின் முடிவை அறியும் ஆவல் குருவிற்கு சாதகமான முடிவை தருவாளா அவனது மகிழினி …?




 
Active member
Messages
341
Reaction score
229
Points
43
Guru unna situation ipadi round katti adikum nu solli irundha appo nambi iruku ah matan aana ippo nallavae atha face panni irukan
 
Well-known member
Messages
854
Reaction score
626
Points
93
Maghizhini enna pathil solla poralo theriyalaye

Honey um paavam thaan
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Honey ya epadi pakka kastama iruku 🥺🥺Ava onum pannala Guru unaku ippotha mahi oda Situation puriyuthu poola honey don't feel you have a better life
Mahi enna solla pora theriyala 🤔🤔🤔
 
Top