• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காதல் 31

Administrator
Staff member
Messages
459
Reaction score
785
Points
93
காதல் 31:

முழுதாக உள்ளுக்குள் இறங்கிய அதிர்ச்சியை உள்வாங்க இயலாதள்,

"எ… என்ன என்ன சொல்றிங்க சார்…" என்று திக்கி திணறி வினவ,

"ஆமா‌ என்கூட திரும்ப வந்திடு. ஊட்டிக்கு வந்திடு" என்று மீண்டும் அழுத்தமாக மொழிந்தான்.

"எனக்கு நீங்க சொல்றது புரியலை" என்று இன்னும் தடதடத்தது கொண்டிருந்த இதயத்துடன் வினா தொடுத்தாள்.

ஒரு விநாடி மௌனம் காத்தவன் பின்னர் ஒரு பெருமூச்சை விட்டு,

"நாம நம்ம அக்ரிமெண்ட்டை லைஃப் லாங் போட்டுக்கலாம். நீ எப்படியும் கல்யாணம் பண்ணிக்க போறது இல்லை. நீ பழைய படி என் கூட எனக்கு வொய்ஃபாவே இருந்திடு. பசங்களை இனி எப்பவுமே நானே பாத்துக்கிறேன். படிக்க வைக்கிறேன். என்ன வந்திட்றியா…?" என்று முகத்தை நோக்கியவனது வார்த்தைகளில் என்னவோ உள்ளே வெடித்து சிதறியது.

ஆழி பேரலையாய் ஏமாற்றமா வருத்தமா எதுவென்று பிரித்தரிய முடியாத வகையில் உள்ளுக்குள் ஜனித்தது.

"ஏன் என்ன திடீர்னு இந்த முடிவு…?" என்றவள் உணர்வு துடைக்கப்பட்ட குரலில் வினவ,

"என்னால என் அம்மாக்கிட்ட தாத்தாக்கிட்ட‌ உண்மையை சொல்ல முடியலை. அவங்க என் மேல வச்சிருக்க நம்பிக்கையை என்னால் உடைக்க முடியலை. ஸோ சொன்ன பொய்யை அப்படியே மெயின்டைன் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என்றவனிடம்,

"ஓ…" என்று பதில் மொழிந்தவளுக்கு ஏமாற்றம் அலையலையாய் பரவியது.

"அப்போ ஹனிகா மேடம். உங்க லவ்" என்று வினா தொடுத்தவளுக்கு இதயத்தின் ஓரம் மெலிதான வலி.

"இல்லை இனி அவ என் வாழ்க்கையில இல்லை" என்றவனது குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை உடைய செய்ய,

"உங்களுக்கு ஆட்சேபணை இல்லைனா நா நான் வந்து வீட்ல பேசவா..? எல்லாத்தையும் எடுத்து சொன்னா கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க. முதல்ல கோபப்பட்டாலும் உங்க விருப்பத்துக்கு கண்டிப்பா மதிப்பு கொடுப்பாங்க" என்று இயம்பிட,

'வேணாம்' எனும் விதமாக தலை அசைந்தது.

"இல்லை ஹனிகா மேடம் உங்க லவ் இதெல்லாம் எப்படி உங்களால விட முடியும்…?" என்று வினவியவளுக்கு காதல் கைக்கூடாததன் வலி தெளிவாக தெரிந்து இருந்ததே…

"இல்லை அது சரி வராது" என்று மீண்டும் கூற,

அவனுக்காகவது ஆசைப்பட்ட வாழ்க்கை அமைய வேண்டும் என்று எண்ணியவள்,

"எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தர்றீங்களா நான் நிச்சயமாக எல்லாத்தையும் சரி பண்ணி உங்களுக்கு ஹனிகா மேமை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என்று கெஞ்சலுடன் தன் முகம் பார்த்தவளை ஒரு நொடி விழியகலாது பார்த்தவன்,

"மகி ப்ளீஸ் இதை பத்தி பேச வேண்டாம்" என்றவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை அமைதியாயிருக்க செய்தது.

அதுவும் அவன் கூறிய, 'ப்ளீஸ்' என்ற வார்த்தை அவளை ஒரு விநாடி சிந்திக்க வைத்தது.

முதன் முதலாக குருவின் வாயில் இருந்து 'ப்ளிஸ்' என்ற வார்த்தையை கெஞ்சும் தொனியில் கேட்கிறாள்.

குரு பிரசாத்திற்கு தான் தான் எல்லாவற்றிலும் மேல் முதன்மை என்றெல்லாம் எண்ணம் உண்டு என்று அவளுக்கு தெரியும்.

அப்படி தன்னியல்பை தன்னுடைய இடத்தில் இருந்து இறங்கி வரும் அளவிற்கு இவருக்கு என்ன ஆயிற்று என்று தான் யோசனை ஓடியது.

இருவரும் பேசி கொண்டு இருக்க விளையாடி கொண்டு இருந்த எழில் வந்து,

"ப்பா இங்க ஒரு தீம் பார்க் இருக்கு. அங்க அழைச்சிட்டு போறீங்களா…?" என்று வினவ,

கவினும், "ஆமாப்பா அங்க பெரிய மிக்கிமௌஸ் இருக்குப்பா" என்று விழிகளை விரித்து கூறினான்.

இளையவர்கள் பாவனை அவனை கொள்ளை கொள்ள,

"கண்டிப்பா அழைச்சிட்டு போறேன்" என்று சிரிப்புடன் கூறி அவர்களிடம் சில நிமிடங்கள் பேசியவன் மகியிடம்,

"மகி நீ யோசிச்சு ஒரு முடிவை சொல்லு. அவசரம் இல்லை நாளைக்கு வர்றேன். அப்புறம் நான் கேட்டதுக்கு ஒத்துக்கிட்டு தான் ஆகணும்னு கம்பல்ஷன் எதுவும் இல்லை" என்றவனுக்கு என்ன பதில் மொழிவது என்று அறியாது மௌனமாய் தலை அசைத்து வைத்தாள்.

"சரி நான் கிளம்புறேன்" என்று எழுந்து கொள்ள,

இளையவர்கள்,

"ப்பா எங்க கிளம்புறிங்க. இங்கேயே இருங்க" என்று அவனது காலை கட்டி கொள்ள,

மகி அதிர்ந்து போனாள்.

குரு, "அப்பாவுக்கு ஒரு வொர்க் இருக்கு அதை முடிச்சிட்டு வந்திட்றேன்" என்று இயம்ப,

"ம்ஹூம் வேணாம். இங்கயே இருங்க" என்றிட,

"சொன்னா கேக்கணும் ரெண்டு பேரும் நல்ல பசங்க தான…?" என்று குரு பொறுமையாக மொழிந்தான்.

"நோ நீங்க அன்னைக்கு கூட இப்படி தான் எங்களை பஸ்ல விட்டுவிட்டு போய்ட்டிங்க. அப்புறம் இப்போ தான் வர்றீங்க. நாள் ரொம்ப நாளாக நீங்க எப்போ வருவீங்கன்னு கேட்டுட்டே இருந்தேன் அம்மாட்ட.‌ இப்பவும் எங்களை விட்டுட்டு கிளம்புறிங்க" என்றிட,

"ஆமப்பா. எனக்கு இந்த ஹவுஸ் பிடிக்கவே இல்லை. இங்க விளையாட இடமே இல்லை. அங்க பெரிய வீடு இருக்குல தாத்தா பாட்டி எல்லாம் இருக்காங்களே அங்க என்னை அழைச்சிட்டு போறீங்களா…?" என்று ஏக்கமும் ஆசையுமாக கேட்க,

மகிழ் தான் தந்தை பாசத்திற்காக ஏங்கி தவிக்கும் அந்த பிஞ்சுகளை கண்டு கலங்கி நின்றாள்.

குருவும் அவர்களுடைய வார்த்தையில் உருகிவிட்டவன் அவர்களது உயரத்திற்கு குனிந்து,

"கண்டிப்பா நான் நாளைக்கு வருவேன்" என்று மொழிந்திட,

"ப்ராமிஸ்ஸா…?" என்று கவின் தனது கரத்தை நீட்ட,

அந்த பிஞ்சு கரத்தின் மீது தன்னுடைய கரத்தை வைத்தவன்,

"ப்ராமிஸ்ஸா நான் நாளைக்கு வருவேன்" என்றதும் தான் அவர்களுடைய முகம் தெளிந்தது.

இருவரையும் சமாதானம் செய்தவன் நிமிர்ந்து பார்க்க உடையவளும் கலங்கி தான் நின்று இருந்தாள.

அவளிடம் இது போல ஏதும் சமாதானங்கள் கூற இயலாதே…

அமைதியாக தலையசைத்துவிட்டு வெளியே வந்தவன் மகிழுந்தை எடுத்து கொண்டு இலக்கில்லாது சுற்றினான்.

நடு இரவில் யாருமற்ற சாலையில் மகிழுந்தை நிறுத்தியவன் ஸ்டியரிங்கில் சாய்ந்து கொண்டான்.

இங்கு மகிழினியும் நடந்துவிட்ட நிகழ்வுகளில் இருந்து வெளியே வர இயலாது இரவு முழுவதும் விழித்து தான் இருந்தாள்.

விழிகளை மூடி சாய்ந்திருந்த குருவிற்கு இந்த மூன்று மாதம் நினைவில் நிழலாடியது…

மகியை பேருந்து நிலையத்தில் விட்டு வந்தவன் வீட்டை நோக்கி சென்றான்.

மகிழுந்தை நிறுத்திவிட்டு வீட்டு கதவை திறந்தவன் முகத்தில் ஒரு வெறுமை அறைந்தது.

எப்போதும் கதவை திறந்ததும் அப்பா என்று சிரிப்புடன் ஓடி வந்து காலை கட்டி கொள்ளும் குழந்தைகள் நினைவிற்கு வந்தனர்.

இத்தனை நாட்கள் உடனிருந்த குழந்தைகள் திடீரென சென்றுவிட்டால் மனது கண்டிப்பாக அவர்களை தேடத்தானே செய்யும் போக போக பழகிவிடும் என்று எண்ணி உள்ளே நுழைந்து மின்விளக்கை போட்டான்.

அறையெங்கும் வெளிச்சம் பரவியது. ஆனால் அவனது மனது முழுவதும் இருளில் மூழ்கடிப்பட்டு இருப்பதை அவன் அறியவில்லை.

நீள்விருக்கையில் ஓய்வாக அமர்ந்தவனுக்கு சூடாக தேநீர் அருந்தினால் தேவலாம் என்று தோன்ற சடுதியில் மனக்கண்ணில் மகியின் முகம் மின்னி மறைந்தது.

இந்நேரம் மகி இருந்திருநதால் தான் வந்தவுடன் கேட்காமலே சுட சுட தேநீரை கொண்டு வந்து கொடுத்திருப்பாள் என்று சிந்தை பிறந்தது.

'ச்சு இதென்ன வேலைக்கு ஆள் வைத்தால் அவர்களும் வந்தவுடன் என்ன வருவதற்கு முன்பே எல்லாவற்றையும் செய்து வைப்பார்கள்.‌ தேநீருக்காக அவளை ஏன் எதிர்பார்க்க வேண்டும்'

'ஏதும் இல்லை என்றால் ஊரில் ஆயிரம் கடைகள் இருக்கிறது வேண்டும் என்றால் போய் குடித்துவிட்டு வரலாம் அல்லது ஆர்டர் போட்டால் பத்து நிமிடத்தில் வீட்டிலே கொண்டு வந்து கொடுப்பார்கள்'

உடனே அலைபேசியை எடுத்து இரவுணவு மற்றும் தேநீரை ஆர்டர் போட்டவன் எழுந்து குளித்து உடை மாற்ற சென்றான்.

குளித்துவிட்டு தலையை துவட்டியபடி வெளியே வர காவலாளியிடமிருந்து அழைப்பு வந்தது.

உணவு தான் வந்துவிட்டது போலும் என எண்ணியவன் அழைப்பை ஏற்று அதனை வாங்கி வர கூறியவன் எழுந்து வெளியே சென்றான்.

உணவை கொண்டு வந்த காவலாளி கொடுத்துவிட்டு செல்ல அதனை வாங்கிவிட்டு வந்தவன் தேநீரை அருந்த குவளை எடுக்க சமையலறை சென்றான்.

உள்ளே அனைத்தும் துடைத்து வைக்கப்பட்டது போல அத்தனை நேர்த்தியாக இருந்தது. இதுவரை ஓரிரு முறை சமையலறை பக்கம் வந்திருக்கிறான்.

இத்தனை நேர்த்தியை கண்டதாக நினைவில் இல்லை‌.

'இதை தான் நேற்று அவ்வளவு நேரம் செய்து கொண்டு இருந்தாளா..? ஹ்ம்ம் குட் வொர்க்' என்று மனது பாராட்டியது.

குவளையை எடுத்து வந்து தேநீரை அருந்தியவன் இரவுணவை அப்பபோதே முடித்துவிட்டு அறைக்கு சென்றுவிட்டான்.

அலைபேசியில் எதாவது முக்கிய செய்தி மின்னஞ்சல் வந்துள்ளதா என்று சிறிது நேரம் அளவளாவியவனது மனதிற்குள் மகியை அனுப்பியாயிற்று அடுத்து எப்படி தாயிடம் பேச வேண்டும் ஹனியின் வீட்டில் பேச வேண்டும் என்று சிந்தனை ஓடியது.

முதலில் தனது வீட்டில் பேச வேண்டும் தனக்கும் மகிழினிக்கும் விவாகரத்து ஆகிவிட்டதை கூற வேண்டும்.

கண்டிப்பாக கோபப்படுவார்கள் திட்டுவார்கள் ஏன் சண்டை கூட வரலாம்.

தாயின் உடல்நிலையை கருதி தாத்தாவிடம் முதல் கூறி பிறகு அவரை வைத்தே எடுத்து கூற வேண்டும்.

நடந்த நிகழ்வுகளை அவர்கள் ஏற்று கொள்ள சில நாட்கள் ஆகலாம். அதுவரை பொறுமையாக இருந்து பின் ஹனியை பற்றி கூறலாம்.

மகி விடயத்தை முடித்துவிடலாம் ஹனியை பற்றி என்ன கூறுவது எவ்வாறு எல்லாவற்றையும் செய்து முடிப்பது என்று கேள்வி ஓடி கொண்டு இருந்தது.

சரியாக அதே சமயம் தாயிடமிருந்து அழைப்பு வந்தது. ஊருக்கு சென்றதில் இருந்து இரவு மட்டும் அழைத்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார் கோதை.

அழைப்பை ஏற்றவன் பால்கனியில் சென்று நின்று கொண்டான்.

மறுமுனையில் கோதை,

"பிரசாத்…" என்று அழைக்க,

"சொல்லுங்கம்மா" என்று பதில் மொழிந்தான்.

"சாப்பிட்டியாப்பா…?" என்று பாசமாக குரல் வந்தது.

"ஹ்ம்ம் சாப்பிட்டேன்மா. நீங்க"

"ஆச்சுப்பா‌ உங்க அத்தை சிவப்பரிசி புட்டு செஞ்சிருந்தாங்க. மகி பசங்க எல்லாம் சாப்பிட்டாங்களாப்பா…?" என்று வினவியதும்,

குருவின் விழிகள் ஒரு முறை அறை பக்கம் சென்று திரும்பியது.

"ஹ்ம்ம் எல்லாரும் சாப்பிட்டாச்சும்மா…" என்று பதில் இயம்பினான்.

"மகிக்கு போன் போட்டேன். கால் போகலை" என்று வினவ,

குருவிற்கு தான் தன்னுடைய குடும்ப நபர்களின் எண்ணை கருப்பி விட கூறியது நினைவிற்கு வந்தது.

"அவ போன் சிக்னல் இல்லை போல" என்று குரு கூற,

"ஓ… பசங்க என்ன பண்றாங்கப்பா. போனை கொடுக்கிறியா…?" என்று வினவ,

"தூங்குறாங்கம்மா" என்று குரு சமாளித்தான்.

"அதுக்குள்ள தூங்கிட்டாங்களா…?" என்று கோதை ஆச்சர்யமாக வினவ,

"ஆமாம்மா. இன்னைக்கு வெளிய போய்ட்டு வந்தோம் அந்த டையரட்ல வந்ததும் சாப்பிட்டு தூங்கிட்டாங்க" என்று பொய்யுரைத்தான்.

"ஓ சரிப்பா. பசங்க ரெண்டு பேரும் கண்ணுக்குள்ளயே நிக்கிறாங்க அதான் பேசலாம்னு கூப்பிட்டேன். அவங்களையும் சேர்த்து அழைச்சிட்டு வந்திருக்கலாம்" என்று கோதை வருந்த,

குருவிற்கு முதன் முதலாக எப்படி தாயிடம் உண்மையை கூற போகிறோம் என்ற வினா மனதில் எழுந்தது.

"எக்ஸாம் வந்திருச்சும்மா இல்லைனா நானே அனுப்பி வச்சிருப்பேன்" என்று மொழிய,

"அதுவும் சரிதான்பா படிப்பு முக்கியம்ல. பத்து நாள் தான நேர்ல வந்து பேசிக்கிறேன். இல்லைனா நாளைக்கு வீடியோ கால் போட்றேன்" என்றிட,

"சரிம்மா" என்றவன் வேறு ஏதும் கூறவில்லை.

"சரிப்பா வேலை வேலைன்னு ஓடாம சீக்கிரமா தூங்கி எழு. மகி இருக்கும் போது நான் இதை சொல்ல அவசியம் இல்லை தான் இருந்தாலும் நேரத்துக்கு சாப்பிடு" என்று கூற,

"ஹ்ம்ம்‌‌…" என்று பதில் உரைத்தவனது மனதில் ஏதோ ஒரு உணர்வு.

"குட்நைட் பிரசாத்" என்று கோதை அழைப்பை துண்டிக்க தானும் இரவு வணக்கத்தை கூறி வைத்துவிட்டு வானத்தை வெறித்தான்.

இரவின் அழகில் பேரழகியாக தெரிந்த நிலவை விழிகயகற்றாது பார்த்தான். மனதில் செய்ய எண்ணியவற்றை யாரையும் காயப்படுத்தாது எப்படி செய்து முடிக்க போகிறோம் என்று பெரிய வினா தொக்கி நின்றது.

தொழிலில் யாவையும் அசால்ட்டாக கையாளும் தொழிலதிபன் குரு பிரசாத்திற்கு குடும்பம் என்று வரும் போது அனைத்தும் சிக்கலாக தெரிந்தது.

இந்த சிக்கலை எவ்வாறு தீர்க்க போகிறேன் ஹனியையும் சரி குடும்பத்தினரையும் சரி சிறிதும் வருத்தம் கொள்ளாதவாறு சேர்த்து வைக்க போகிறேன் என்று எண்ணம் வர ஒரு பெருமூச்சு எழுந்தது.

மேலும் யோசனையுடன் சிறிது நேரம் நின்றவனது விழியில் மகிழ் தங்கி இருந்த வீடு தென்பட்டது.

இருளில் விளக்கு கூட போடப்படாது மிகவும் மங்கலாக தெரிந்தது. மகி இருந்தால் தினமும் மாலை விளக்கை போட்டுவிட்டு வருவாள்.

என்னதான் பெரிய வீட்டிற்கு வந்துவிட்டாலும் மகிக்கு அந்த வீட்டின் மேல தனி பிடிப்பு இருந்தது. அது குருவிற்கும் தெரியும்.

இதோ இதே போல ஒரு இரவில் தானே அவளை பார்த்து அவளை வைத்து திருமண சிக்கலை தீர்க்கலாம் என்று சிந்தனை பிறந்தது.

இப்போது தான் தாயிடம் இவளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியது போல இருக்கிறது அதற்குள் வருடங்கள் கடந்து விவாகரத்தும் வாங்கியாயிற்று.

மனத்திரையில் திருமணத்திற்கு மகியிடம் கேட்டு அவள் அதிர்ந்து நின்றது முதல் இன்று பேருந்தில் தலையசைத்து தனக்கு விடை கொடுததது வரை நிழலாடியது.

மகிழினி மிகவும் நல்ல பெண் குணத்திலும் சரி செய்கையிலும் சரி. இதுவே வேறு யாராவது அவனிடத்தில் இருந்திருந்தால் தனக்கு இந்த இரண்டு வருடம் இத்தனை அமைதியாக சென்று இருக்குமா…? என்பது சந்தேகம் தான்.

என்னதான் ஒப்பந்த திருமணம் என்றாலும் எல்லோரும் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது இல்லையே…? வேறு யாராவது அவள் இடத்தில் இருந்திருந்தால் இந்த வளமையான வாழ்விற்கு ஆசைப்பட்டு குடும்பத்தில் எதாவது பிரச்சனையை ஏற்படுத்தி இருக்க வாய்ப்புகள் இருக்கிறது.

ஆனால் மகிழினி தான் இப்போது கொடுத்த பணத்தை கூட மறுத்துவிட்டு சென்றுவிட்டாள்.

உலகில் பணத்தையும் தாண்டி மனிதனை மனிதனாக மதிக்கும் மனம் படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று இவனுக்கு உணர்த்தியவர்கள் மகியும் அகிலனும் தான் என்று எண்ணம் வர சடுதியில் அகிலனது முகம் நினைவிற்கு வந்தது.

அகிலன் தன்னை அவன் ஒரு நாயகன் அளவிற்கு பார்க்கிறான். தன் மேல் நிறைய மதிப்பு வைத்திருக்கிறான்.

அவன் தன்னிடம் வந்து எதாவது கூறினால் தான் என்ன பதில் கூறுவது என்று யோசனை வர அடுத்த நொடியே மகிழினி நிச்சயமாக அப்படி ஒரு சூழ்நிலையில் தன்னை விட மாட்டாள்.

கண்டிப்பாக அகிலனிடம் எதாவது கூறி சமாளித்துவிடுவாள் என்று ஒருவகையில் அழுத்தமான எண்ணம் இருந்தது. அவள் மேல் தனக்கு ஏன் இப்படியான நம்பிக்கை இருக்கிறது என்று அவனுக்கு தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிந்தது மகிழினி அவளால் எந்த பிரச்சனையும் தனக்கு வர விடமாட்டாள் என்று.

நேரம் போவது தெரியாமல் சிந்தனையில் இருந்தவன் அலைபேசியில் செய்தி வந்த ஒலியில் நினைவிற்கு வந்து அறைக்குள் சென்றான்.

நுழைந்த கணம் ஒரு ஆழ்ந்த அமைதி வந்து மோதியது. என்னவோ இந்த அமைதி பிடிக்கவில்லை மனதிற்கு.

தினமும் இரவு 'ஒரு பெரிய காடு இருந்துச்சாம்…' என்று தொடங்கி இளையவர்ளை உறங்க வைக்க கதையை கூறும் மகிழினியின் அமைதியான குரல் காதிற்குள் ஒலித்தது.

கதையின் நடுவே ஆயிரம் கேள்விளை கேட்கும் இளையவர்களின் குரலும் செவியில் மோதியது.

வழக்கமாக கேட்டு பழகிய ஒன்று திடீரென நின்றுவிட்டதில் மனது அதனை எதிர்பார்க்கிறது என்று அவனுக்கு தோன்றியது.

அமைதியாக வந்து தன்னிடத்தில் படுத்தவனுக்கு அந்த பெரிய மெத்தையில் தான் மட்டும் படுத்திருப்பது என்னவோ சொல்ல முடியாத உண்ர்வை தோற்றுவித்தது.

'ப்ச் தனக்கும் திருமணம் மனைவி குழந்தைகள் என்று வாழ ஆசை வந்துவிட்டது போலும் விரைவில் ஹனியை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பெற்று கொள்ள வெண்டும்' என்று அலுத்து கொண்டு நினைத்தபடி விழிகளை மூடியவனது இமைகளை நிறைத்தாள் முகம் முழுவதும் புன்னகையுடன் நின்றிருந்த மகிழினி.

சடுதியில் கோடி மின்னல் தாக்கிட அதிர்வுடன் எழுந்து அமர்ந்துவிட்டான் குரு பிரசாத்

இல்லை அவளும்
என்றே உணரும்…
நொடியில் இதயம் இருளும்…
அவள் பாத சுவடில்…
கண்ணீர் மலர்கள் உதிரும்…





 
Active member
Messages
341
Reaction score
229
Points
43
Guru ku enga parthalum magi oda niyabagam than aanalum avan magi kita sonna karanathuku kaga than aval ah kootitu poga vandhu irupan nu thonala oru vela ivanuku love vandha piragum.situation ivanuku favour ah illama irukum.polayae athu na la than apadi solli irupano nu thonuthu
 
Active member
Messages
132
Reaction score
29
Points
28
புள்ளைய பஸ் ஏத்திட்டு பீலிங் 🤧😤
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Aii guru unmaiya sollu unaku mahi ya pidikum la avala illama iruka mudiyama thaana vanthu iruka
Kutties appa va romba miss Pani irukaga varuvan Kandipa guru prashanth
Mahi unnoda decision enna
Honey anga poeda Evan enn ipadi irukan solluga
 
Top