• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காதல் 28

Administrator
Staff member
Messages
459
Reaction score
785
Points
93
காதல் 28:


"இதுல சைன் பண்ணுங்க மா" என்று எதிரில் இருந்தவர் மொழிய,

சம்மதமாக தலையசைத்தவள் அவர் கொடுத்த எழுதுகோலை வாங்கி கையெப்பமிட்டவளது முகம் வெகு நிச்சலமாக இருந்தது.

கையெழுத்தை இட்டவள் நிமிர்ந்து எதிரில் இருந்தவரை அவ்வளவு தானா…? என்ற விதத்தில் பார்க்க,

"இன்னும் ஒரு சைன் இதோ இந்த பேஜ்ல போடணும்" என்று காகிதத்தை திருப்பி காண்பித்தார்.
அதிலும் தனது கையெழுத்தை இட்டாள்.

மகிழ் முடித்ததும், "சார் நீங்க வந்து போடுங்க…" என்று குரு அழைக்கப்பட குருவும் எழுந்து வந்து தனது கையெழுத்தை போட்டவன்,

"அவ்வளவு தானா…? வொர்க் ஓவரா சார்…?" என்று வினா எழுப்ப,

"இன்னும் கொஞ்சம் ப்ரொசிஜர் இருக்கு சார்" என்று பதில் வந்தது.

சம்மதமாக தலையசைத்தவன்,

"மகி நீ கார்ல வெயிட் பண்ணு. நான் வர்றேன்" என்று மகியிடம் மொழிந்தான்.

அமைதியாக தலையசைத்தவள் மெதுவாக நடந்து வெளியே வந்தாள்.

சுற்றி இருந்த சலசலப்பு அவளை கடந்து சென்ற மனிதர்கள் என எதுவும் அவளது கருத்தில் பதியவில்லை.

ஏதோ சாவி கொடுத்த பொம்மை போல நடந்தவள் மகிழுந்தின் அருகே வந்து கதவை திறந்து ஏறி அமர்ந்து கொண்டாள்.

விழிகள் தனக்கு நேர் எதிராக இருந்த கட்டிடத்தையும் அதில் பெரியதாக எழுதப்பட்டிருந்த குடும்ப நீதி மன்றம் என்ற பெயர்பலகையினை வெறித்தது.

இதோ இந்த கட்டிடமும் இதில் உள்ள மனிதர்களும் எனக்கும் இவனுக்குமான‌ உறவை சிறிய கையெழுத்தில் உடைத்துவிட்டது.

இதோ இந்த நொடி முதல் இவனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏன் நாளை முதல் முதலாளி தொழிலாளி என்ற உறவு கூட கிடையாது.

இந்த இரண்டு வருட வாழ்க்கை என் வாழ்வில் வெறும் கனவு போல தான். நிஜம் போல என்னை உணர வைத்த நிழலுறவு‌.

விழியோரம் கசிந்த நீரை சுண்டிவிட்டவள் அப்படியே சாய்ந்து கொள்ள மனது சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்தை பற்றிய பேச்சை துவங்கிய நிகழ்வு நினைவிற்கு வந்தது.

"ம்மா கார் ரேஸ் கதை சொல்லும்மா…" என்று எழில் மொழிய,

"அம்மாவுக்கு இன்னைக்கு கொஞ்சம் டையர்டா இருக்கு. நாளைக்கு சொல்றேன்.‌ ரெண்டு பேரும் நல்ல பிள்ளைங்களா தூங்குவிங்களாம்" என்று மகிழ் மொழிய,

இருவரும் அதிசயமாக, "சரிம்மா. நாளைக்கு கண்டிப்பா சொல்லணும் என்ன?" என்றுவிட,

இவளுக்கு ஆச்சரியம் தான். சொன்னதும் கேட்டுவிட்டார்களே என்று.

"ஹ்ம்ம் கண்டிப்பா சொல்றேன்" என்றிட,

"நாளைக்கு ரெண்டு ஸ்டோரி" என்று கவின் இரண்டு கைகளையும் உயர்த்தி காண்பிக்க, இவளுக்கு புன்னகை அரும்பியது.

"சொல்றேன்" என்று மொழிய,

"ப்ராமிஸ்ஸா?" என்றவனை சிரிப்புடன் முறைத்தவள்,

"ப்ராமிஸ்ஸா" என்று அவனது குட்டி கரத்தில் தன் கையை பதித்தாள்.

பின்னர் தான் இருவரும் உறங்க சென்றனர். படுத்ததும் சில நிமிடங்களிலே இருவரும் உறங்கிவிட மகிழ் குரு தனக்கு கொடுத்த வேலையை செய்வதற்காக மடிக்கணினியை எடுத்து கொண்டு அமர்ந்தாள்.

பால்கனியில் அலைபேசி பேசிவிட்டு உள்ளே வந்தவன்,

"மகிழ் வந்து இந்த பேப்பர்ஸ்ல சைன் பண்ணு" என்றிட,

"ஹான்…" என்றவள் கவனம் சிதறியதில் விழிக்க,

"என்ன பாக்குற வந்து இதுல சைன் போடு" என்றிட்டான்.

அவனருகே வந்தவள்,

"என்ன பேப்பர்ஸ்?" என்று வினவிட,

"டிவோர்ஸ் பேப்பர்ஸ்" என்றவனது பதிலில் ஒரு நொடி எதுவும் புரியவில்லை.

பேரிடியாய் வந்துவிழுந்த அதிர்ச்சியில் இவளுக்கு இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை.

உள்ளுக்குள் மொத்தமாக ஒன்று உடைந்து நொருங்கிட,

"டிவோர்ஸ் பேப்பரா? ஆனால் பாண்ட் முடிய இன்னும் நாலு மாசம் இருக்கே…?" என்றவளது தொண்டையை ஏதோ அடைத்தது.

"ஆமா போர் மந்த்ஸ் இருக்கு‌. ஹனிக்கு காலேஜ் கம்ப்ளீட் ஆக போகுது. தென் இப்போவே அப்ளை பண்ணாதான் கரெக்டா கிடைக்கும்" என்றவனது வார்த்தைக்கு பதில் கூற இயலாதவள்,

"ஹ்ம்ம்‌…" என்று மட்டும் தலையசைத்துவிட்டு அந்த காகிதத்தை வாங்கி கையெழுத்திட முற்பட்டாள்.

கைகள் ஏனோ நடுங்கியது. முயன்று சமன் செய்தவள் கையெழுத்தை இட்டு அவனிடம் நீட்டினாள்.

அதை பெற்று கொண்டவன்,

"இந்த வீக் நாம லாயர பாக்க போகணும். நான் கூப்பிடும் போது ரெடியா இரு" என்று இயம்ப,

அதற்கும்,

"ஹ்ம்ம்…" என்ற தலையசைப்பை பதிலாக கொடுத்தவள் பின்னிய கால்களை சிரமப்பட்டு நகர்த்தி குளியலறைக்குள் நுழைந்தான்.

நுழைந்த கணம் குப்பென்று குருவினுடைய நறுமணம் நாசியை நிறைக்க விழிகளை நீர் நிறைத்தது.

கையால் வாயை மூடி கொண்டவளுக்கு அப்படி ஒரு அழுகை பெருகியது.

இன்னும் நான்கு மாதங்கள் வெறும் நூற்றி இருபது நாட்கள் முடிய போகிறது எல்லாம் முடிய போகிறது.

அவனுடன் தானிருக்கும் நேரம் காலம் இதோ இந்த அறை யாவும் தன்னை விட்டு விலக போகிறது. இல்லையில்லை தான் இவை யாவிற்கும் துளியும் தொடர்பில்லாதவளாக ஆக போகிறோம்.

இனி எதுவும முன்பிருந்தது போல பெயருக்கு கூட தனக்கானவை அல்ல.

குரு பிரசாத் இத்தனை நாட்களாக காலை எழுந்ததில் இருந்து இரவு உறங்கும் வரை அவளின் இயல்பு போல கண்முன்னே நடமாடியவன் இனி கண்ணால் கூட காண இயலாது.

ஏன் இன்னும் சிறிது காலத்தில் ஹனிகாவை திருமணம் செய்த பிறகு மனதால் நினைத்தால் கூட மிகப்பெரிய பாவம்.

கரங்கள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த மாங்கல்யத்தை பிடித்தது.

ஒப்பந்த திருமணம் ஆகினும் ஊரை கூட்டி புரோகிதர் வந்து மந்திரங்கள் கூறி ஏழு முறை அக்னியை வலம் வந்து வாங்கி கொண்டதாயிற்றே.

இதனை வாங்கும் போது என்ன மனநிலையோ ஆனால் இதோ இந்த கணம் ஏதோ ஒரு புள்ளியில் தன்னுடைய உணர்வுகளுடன் பிணைந்துவிட்டானே…?

விவாகரத்து வாங்கிவிட்டு இந்த வீடு இந்த உறவுகள் யாவையும் பிரிந்து ஏதும் இல்லை என்று சென்றுவிடலாம் ஆனால் உயிருக்குள் உயிராக புதைந்து போன நேசத்தை இவனுடன் இருந்த நினைவுகளை என்ன செய்வேன்…?

நினைவால் கூட தன்னால் தொட முடியாத இடத்திற்கு தன்னை அனுப்ப போகிறான். இனி இந்த நினைவுகள் கூட தனக்கு அந்நியமானவை.

தன் வாழ்வில் ஏனிந்த காதல் என்று தெரியவில்லை. அந்த கணம் ஏன் இவன் தன் வாழ்வில் நுழைந்தான்.

தனக்கு அனைத்தையும் செய்தான். தன்னுடைய பொறுப்புகளை சிறிது காலத்திற்கு பெற்று கொண்டான் என்று உள்ளம் கலங்கியது.

தானும் உயிரும் உணர்வுகள் உள்ள மனித பிறவி தானே. தனக்கும் உணர்வுகள் எல்லாம் இருக்கும் தானே…?

தான் உண்டு தன் வாழ்க்கை உண்டு இருந்த வழியில் ஏன் இவன் குறுக்கீடு செய்தான். வாழ்வில் மட்டுமல்ல மனதிலும் அமர்ந்துவிட்டானே…?

இப்படி எதுவுமே எனக்கு சொந்தமாக போவதில்லை என்று அறிந்த பிறகும் ஏன் என் வாழ்வில் இத்தனை சோதனைகள்…?

இதோ இந்த ஒரு கையெழுத்தில் எனக்கும் இவனுக்குமான பந்தம் அறுந்துவிட போகிறது.

இனி வாழ்வு முழுவதும் நினைவுகள் கூட நெருஞ்சி முள்ளாய் குத்தி கொண்டே இருக்கும்.

எனக்கு அழகில்லை படிப்பில்லை. எந்த தகுதியும் இல்லை என்ற போது ஏன் இந்த நேசத்தை மட்டும் கடவுள் எனக்குள் விதைத்தார்.

என்ன தான் அவன் வார்த்தைகளால் தன்னை குத்தி கிழித்துவிட்ட போதும் இனி ஒரு போதும் தெரிந்தவன் என்ற முறையில் ஒரு வார்த்தை கூட இவனிடம் பேச முடியாத தூரத்திற்கு செல்ல போகிறோம் என்று அறிந்த பிறகு உள்ளத்தில் பெரிதாய் ஓரு போராட்டம்.

இத்தனை நாட்கள் உள்ளுக்குள் புதைந்து கிடந்த நேசம் சட்டென்று ஆழியாய் பொங்கி வர நேசம் கொண்டவள் உணர்வுகளின் பிடியில் தவித்து போனாள்.

தனக்கு சொந்தமில்லாத ஒன்று என்று அறிந்த பிறகும் அருகிலாவது இருக்கிறோமே என்ற ஆறுதலையும் பறித்து கொள்ளும் நேரம் உள்ளத்தை கூறு போட்ட உணர்வு.

தன்னை இவனுடன் பிணைத்து வைத்திருந்த இந்த கயிறை அறுத்து போடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று புத்திக்கு உரைத்தது.

நிமிடங்கள் கடக்க தன்னை மீறி பெருமழையாய் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டவளுக்கு இதயக்கூடு லேசானது.

தன்னை மிகவும் முயன்று உணர்வுகளை கட்டுப்படுத்தியவளது மனசாட்சி நீ இத்தனை தூரம் அழுது கரையும் அளவிற்கு இது ஒன்றும் உண்மையான‌ உறவில்லையே…?

இது தொடங்கும் முன்பே இப்படித்தான் முடியும் அறிந்த தானே இதில் நுழைந்தாய் பிறகென்ன உனக்கு அழுகை.

அதுவும் அவன் வேறொருத்திக்கு சொந்தமானவன். ஹனிகா எவ்வளவு அழகு எத்தனை பெரிய குடும்ப பின்புலம் வெளிநாட்டில் பெரிய படிப்பு என இத்தனையும் கொண்டுள்ளவள்.

ஆனால் நீ இது எதிலாவது அவளுடன் போட்டி போட முடியுமா…? அதற்கு உனக்கு தகுதியாவது இருக்கிறதா…?

நாளை உனக்கு எதாவது ஆகிவிட்டால் கூட உனது தமையனையும் பிள்ளைகளையும் பார்க்க யாருமில்லை. இப்படி இருக்கையில் உனக்கு இந்த ஆசை எல்லாம் தேவை தானா…?

இவை எல்லாவற்றுக்கும் மேலாக குரு பிரசாத்தின் நேசம் ஹனிகாவிற்கு மட்டும் தான். அவனுக்கு மிகவும் சரியான பொருத்தம் ஹனிகா மட்டும் தான்.

அழகு அறிவு படிப்பு என‌ எதிலுமே சிறிது கூட தகுதியில்லாத நீ குருவின் மேல் ஆசை படுவது மிகவும் தவறு.

ஒருவேளை குரு பிரசாத் முன்பு கூறியது போல உனக்கு இந்த சொகுசான வாழ்க்கை மேல பிடித்தம் வந்துவிட்டதோ…? என்று மனசாட்சி கேள்வி எழுப்ப,

'நோ இல்லை எப்பவும் எனக்கு அப்படி ஒரு எண்ணம் வராது' என்று உடனடியாக மனது பதில் மொழிந்தது.

நடக்காத ஒன்றிற்காக ஏங்கி தவித்து வருந்துவதை விட உனக்கான கடமைகளை பார். அவனை ரசிக்கும் தூரத்தில் மட்டும் தான் இருக்கிறாய். உன்னுடைய எல்லை அது தான். அத்துடன் நீ நின்று கொள்.

இல்லையேல் அவன் அன்று உன்னை பேசியது யாவும் உண்மையாகிவிடும்.

அவனது பார்வையில் மிகவும் தரம் தாழ்ந்து கீழே போய்விடுவாய். உன்னை நம்பி அறை வரை அனுமதித்தவருக்கு எந்த காலத்திலும் துரோகம் செய்திடாதே.

அவர் உனக்கு செய்த உதவிகளை நினைத்து பார். இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல இன்னும் நாலு ஜென்மத்திற்கு நீ நன்றிக்கடன் பட்டிருக்கிறாய்.

எப்படியோ இருக்க வேண்டிய உனக்கு ஒரு பாதுகாப்பான வேலையை கொடுத்து பாதுகாப்பான இடத்தையும் கொடுத்திருக்கிறாய்.

இவ்வளவு உதவிகளை செய்தவருக்கு பதிலுக்கு எதுவும் நல்லது செய்யவில்லை எனினும் எதுவும் உபத்திரவம் செய்திடாதே என்று மனசாட்சி இயம்ப, விழிகளை அழுந்த துடைத்தவள் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினாள்.

நீரோடு சேர்ந்து நினைவுகளும் போய்விட்டால் எத்தனை நன்றாக இருக்கும் என்று மனது எண்ணாமல் இல்லை.

அருகில் இருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்துவிட்டு கண்ணாடியில் பார்க்க அழுததில் முகம் சற்று வீங்கி கண்கள் இரண்டும் தக்காளி பழம் போல சிவந்து அழுததை காட்டி கொடுத்தது.

ஆழ்ந்த மூச்சை சில முறை இழுத்துவிட்டவள் ஓரளவு தன்னியல்பிற்கு திரும்பி இருந்தாள்.

வெளியே வந்தவள் அவனுக்கு முகம் காட்டாது கணினியை அணைத்துவிட்டு படுக்கையில் படுத்துவிட்டாள்.

நன்றாக போர்வையை இழுத்து மூடியவளது கண்ணீரும் நேசமும் அவளுடனே முடிந்து போனது.

 
Administrator
Staff member
Messages
459
Reaction score
785
Points
93
அந்த இரவு கண்ணீருக்கு இரையாகி போக மகிழ் தான் மிக மோசமாக உள்ளுக்குள் உடைந்து கொண்டிருந்தாள்.

நாள் செல்ல செல்ல கண்ணீரும் வற்றி போக தனக்குள்ளே உணர்வுகளற்ற ஜடம் போல இறுகி போனாள்.

மாதங்களும் கடந்துவிட நீதிமன்றத்திற்கு சில பல முறை வந்து இப்போது இருவருக்கும் இடையே இருந்த உறவு பாலம் சுக்கு நூறாக உடைக்கப்பட்டது‌.

விழி மூடி இருந்தவளுக்கு அருகே அரவம் கேட்க விழிகளை திறந்தாள்.

அருகில் குரு பிரசாத் அமர்ந்து இருந்தான். இவள் விழித்ததை கண்டு,

"எல்லா ப்ரொசிஜரும் ஓவர். இனி நாம கோர்ட்க்கு வர தேவையில்லை. அஃபீசியலா டிவோர்ஸ் வாங்கியாச்சு" என்று கூற,

"ஹ்ம்ம்" என்று மற்றும் தலையசைத்தாள்.

குரு மகிழுந்தை இயக்கி கொண்டே,

"மகி நான் என் ப்ரெண்ட் கௌதம்கிட்ட பேசிட்டேன். அவன் உனக்கு ஜாப் அண்ட் அக்கமடேஷன் எல்லாம் ரெடி பண்ணிட்டான். நீ போனதும் ஜாயின்ட் பண்ணிக்கலாம்" என்று மொழிய,

அதற்கும், "ஹ்ம்ம்" என்று சம்மதமாக தலையசைத்தாள்.

"கௌதம் என்னோட க்ளோஸ் ப்ரெண்ட் அவன் நம்ம கல்யாணத்துக்கு கூட வந்து இருந்தான். அவனுக்கு நம்ம அக்ரிமெண்ட் பத்தி தெரியும். அவனோட அவுட் ஹவுஸை தான் உனக்கு ஸ்டே பண்ண ரெடி பண்ணி இருக்கேன். அது ரொம்ப சேஃபான இடம் தான். நீ பயப்பட தேவையில்லை. அவன் வீட்ல அவனும் அவன் வொய்ஃப்பும் தான் இருக்காங்க" என்று நீளமாக பேச,

"சரிங்க சார்" என்று வாய் திறந்து மொழிந்தாள்.

மேலும் குரு அவளுடைய வேலை சம்பளம் இளையவர்களுக்கு பள்ளி என அனைத்தையும் ஏற்பாடு செய்திருப்பதை கூறி கொண்டே வர சம்மதமாக தலை அசைத்தபடி வந்தவளுக்கு எதுவுமே ஏறவில்லை.

மனது அவனிடமிருந்து தான் விலகி செல்ல போகும் கணத்தை பற்றி தான் சிந்தித்தபடி வந்தது.

அரை மணி நேரத்தில் வீட்டை அடைய இருவரும் வீட்டினுள் நுழைந்ததும்,

"அப்பா…" என்று முகம் முழுவதும் புன்னகையுடன் ஓடி வந்து குருவின் காலை கட்டி கொண்டனர் கவினும் எழிலும்.

குரு சிரிப்புடன் அவர்கள் இருவரையும் கையில் வாரியபடி உள்ளே செல்ல அதனை கண்டவளுக்கு தான் மனதில் பெரும் பாரம் ஏறியது.

இவனிடம் இத்தனை அன்பாய் பாசமாய் இருக்கும் இந்த குழந்தைகள் நாளை இவனை கேட்டால் தான் என்ன பதில் கூறுவது என்று தான் உள்ளே அலைப்புறுதல்.

இத்தனை நேரம் குழந்தைகளின் துணைக்கு இருந்த பணி பெண்ணை கிளம்ப கூறியவள் அமைதியாக இருந்த அறையை சுற்றி பார்த்தாள்.

கோதை, பிறைசூடன் மற்றும் வர்ஷினி மூவரும் காசிநாதன் ஊரில் திருவிழா என்று இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கிளம்பியிருந்தனர்.

திருவிழா பத்து நாட்கள் நடக்கும். வர்ஷினிக்கும் கல்லூரியில் விடுமுறை என்பதால் போய் பதினைந்து நாட்கள் தங்கிவிட்டு வரலாம் என்று சென்றிருந்தனர்.

நீதிமன்றத்திற்கு குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்று குரு தான் வீட்டில் விட்டு சென்றிருந்தான்

குருவும் மகிழும் சிறிது நாட்கள் தனியாக இருக்கட்டும் என்று எண்ணி கோதை தான் குரு வேலையின் காரணமாக வர முடியாது என்று கூறிய போது இளையவர்களோடு மகியையும் இங்கே விட்டு சென்றனர்‌.

குருவும் இதனை எதிர்பார்த்து தான் அவ்வாறு கூறி இருந்தான். இந்த வாரத்தில் விவாகரத்து கிடைத்துவிடும் அவர்கள் வீட்டில் இல்லாத போதே மகியையும் இங்கிருந்து கிளம்ப கூறலாம் என்று எண்ணி வைத்திருந்தான்.

எல்லாம் அவனது எண்ணப்படியே நடந்து கொண்டிருந்தது‌.

உடை மாற்றி வந்தவள் வீட்டில் இருந்த வேலைகளை முடித்துவிட்டு இரவுணவை தயார் செய்ய துவங்கினாள். இது தான் இந்த வீட்டில் இவனோடு உனக்கு இறுதி இரவு என்று மனது கூச்சலிட அதை பொருட்படுத்தாது குருவிற்கு மிகவும் பிடித்த கேழ்வரகு புட்டை செய்து முடித்தவள் சிறிது காரமாக சாப்பிட பூரியும் உருளை கிழங்கையும் செய்து முடித்தாள்.

இரவு உணவு நேரம் நெருங்கி இருக்க மூவரையும் அழைப்பதற்காக அறைக்கு செல்ல விழைந்தவளை மூவரது சிரிப்பு சத்தமும் தான் வர வாயிலில் கண்ட காட்சியும் அப்படியே நிறுத்திவிட்டது.

குருவை மெத்தையின் மேல் தள்ளி இருவரும் அவன் மீது அமர்ந்து அடித்து கொண்டிருக்க குருவும் சிரிப்புடன் அதனை தடுத்து கொண்டிருக்க அவர்களது சிரிப்பு சத்தம் அறையை நிறைத்தது‌.

ஒரு கணம் விழிகள் இமைக்க மறந்திட அப்படியே நின்றுவிட்டாள் குருவின் தன்னை மறந்த புன்னகையில்.

இறுதியாக தான் காணும் அவனது புன்னகை என்று மூளை எடுத்துரைக்க மனது வேகமாக அதை சேமித்து கொண்டது.

நொடிகள் கடக்க குரு தான் அவளது அரவத்தில் திரும்பி பார்த்து விழிகளை உயர்த்தினான்.

இதழோரத்தில் இன்னும் சிரிப்பின் மீதம் இருந்தது.

அதனை கவனித்தபடி,

"சாப்பாடு செஞ்சிட்டேன்…" என்று மொழிய,

சுவர் கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவன்,

"இதோ வர்றோம் பைவ் மினிட்ஸ்" என்றவன் மீண்டும் விளையாட்டில் மும்முரமாகிவிட்டான்.

இவள் வந்து உணவு மேஜையில் அனைத்தையும் எடுத்துவிட்டு காத்திருக்க பத்து நிமிடங்கள் கழித்து தான் மூவரும் இறங்கி வந்தனர்.

குருவின் இரண்டு பக்க தோளில் இருவரும் தொங்கி கொண்டு தான் வந்தனர்.

மகிழ் அமைதியாக உண்ண இளையவர்கள் தான் குருவுடன் கலாட்டா செய்து உணவை உண்டனர்.

பிறகு அனைத்தையும் கழுவி துடைத்து நன்றாக சுத்தம் செய்து வைத்தாள்.

இவள் அறைக்குள் நுழையும் நேரம் இளையவர்கள் உறங்கி இருந்தனர். இன்று முழுவதும் ஓடியாடி விளையாண்டதில் ஏற்பட்ட களைப்பினால் படுத்ததுமே உறங்கி இருந்தனர்.

குரு வழக்கம் போல அலைபேசியை பார்த்து கொண்டிருக்க மகிழ் குரு தனக்கு கொடுத்திருந்த அலமாரியில் இருந்து துணிகளை பையில் அடுக்கி வைத்தாள்.

அவளிடம் அதிகமாக துணிகள் எதுவும் இல்லை. அவள் வரும் போது கொண்டு வந்த உடைகளையும் தான் சம்பாதியத்தில் வாங்கியதையும் மட்டும் அடுக்கினாள்.

கோதை வாங்கி கொடுத்திருந்த விலை உயர்ந்த புடவைகள் எதையும் அவள் தொடக்கூட இல்லை. அதை அப்படியே மடித்து அடுக்கி வைத்திருந்தாள்.

இளையவர்களுடைய உடையையும் எடுத்து அடுக்கி முடித்தவள் இரண்டு பைகளையும் ஓரமாக எடுத்து வைத்தாள்.

அவ்வளவு தான் இதனை தவிர அந்த வீட்டில் அவளுக்கு சொந்தமான எதுவும் இல்லை.

தன்னுடைய கையில் இருந்த தங்க வளையல் காதில் இருந்தது கழுத்தில் இருந்தது அது போக கோதை வாங்கி கொடுத்திருந்த விலை உயர்ந்த நகைகள் எல்லாவற்றையும் எடுத்து பெட்டியில் வைத்து பிரோவில் வைத்தாள். தாய் தந்தையர் இருந்த போது வாங்கி கொடுத்திருந்த சிறிய காதணியை மட்டுமே அணிந்து கொண்டாள்‌.

இடையில் குருவிற்கு அலைபேசியில் அழைப்பு வர எழுந்து பால்கனிக்கு சென்று இருந்தான். மகிக்கு அது கருத்தில் பதியவில்லை.

இந்த வீட்டில் அவளுக்காக வாங்கி கொடுக்கப்பட்ட அனைத்தையும் சிறு பரிசு பொருட்கள் முதல் கொண்டு அனைத்தையும் வைத்து பூட்டியவள் சாவியை எடுத்து கொண்டு குருவை தேடினாள்.

அவன் பால்கனியில் இருப்பதை கண்டு நீள்விருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

குரு நுழைந்ததும் அவன் விழிகளில் பட்டது கையில் ஏதுமின்றி காதில் சிறிய தோடு கழுத்தில் தாலி கொடியை தவிர பார்த்ததும் தோற்ற வேறுபாட்டை கணித்துவிடும் விதத்தில் அமர்ந்து இருந்தவள் தான்.

அதில் குருவின் நெற்றியில் சிந்தனை கோடுகள் பிறக்க அவளை நோக்கினான்.

அவன் வந்ததும் எழுந்து நின்றவள்,

"இது இந்த கப்போர்டோட சாவி. இதுல அத்…" என்று ஆரம்பித்தவள் சட்டென்று மாற்றி,

"உங்க அம்மா எனக்காக வாங்கி கொடுத்த நகை மற்ற திங்க்ஸ் எல்லாமே இருக்கு" என்று நீட்ட,

"இதெல்லாம் எதுக்கு என்கிட்ட கொடுக்குற. அது அம்மா உனக்கு வாங்கி கொடுத்தது" என்றிட்டான் குரு பிரசாத்.

"இல்லை எனக்கு இல்லை. அது அவங்க உண்மையான மருமகள் நான்னு நினைச்சு வாங்கி கொடுத்தது.‌ இதெல்லாம் உங்க வருங்கால மனைவி ஹனிகா மேடம்க்கு சேர வேண்டியது" என்றவள் நீட்டிய சாவியை பார்த்தாள்.

குருவிற்கும் அவள் கூறுவது சரியென பட்டாலும் இதெல்லாம் இவள் உபயோகம் செய்தது ஹனி இதனை தொட்டு கூட பார்க்க மாட்டாள் என்று எண்ணம் வர,

"நீ சொல்றது சரி தான். பட் ஹனி யார் யூஸ் பண்ணதையும் யூஸ் பண்ண மாட்டா. வேஸ்டா போறதுக்கு நீயே எடுத்திட்டு போய்டு" என்றிட,

இவளுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று நொறுங்கியது.

"இல்லை வேணாம். எனக்கு எதுவும் வேணாம். நான் வரும்போது கொண்டு வந்த ட்ரெஸ் திங்க்ஸ் மட்டும் என் பேக்ல எடுத்து வச்சிருக்கேன் அதுவே எனக்கு போதும்" என்றிட,

"குழந்தைகங்களோடதையும் வச்சிட்டு போறீயா…?" என்றவனது கேள்வியில் லேசான சூடு இருந்தது.

அதனை உணர்ந்தவள்,

"ஆமா அது எதுவும் அவங்களுக்கானது இல்லை. நான் வாங்கி கொடுத்தது மட்டும் தான் அவங்களோடது" என குரலில் உறுதியுடன் இயம்ப,

குருவிற்கு புரிந்தது. மகிழ் இன்னும் தான் கோபத்தில் பேசியது எதையும்
மறக்கவில்லை என்று.

எதுவும் கூறாது பெற்று கொண்டவன்,

"எல்லாத்தையும் திருப்பி கொடுத்திட்டியா‌…?" என்று அவளது கழுத்தில் பார்வையை பதித்தான்.

அதில் இவளுக்கு உள்ளுக்குள் இதயம் மத்தளம் கொட்ட துவங்கியது. முகத்தில் முத்து முத்தாய் வியர்வை துளிகள் அரும்ப துவங்கியது.

தாலியை அகற்றவதை நினைத்த கணம் உலகம் நின்று இயங்கியது. அருகில் இருந்த கம்பியை இறுக பிடித்து கொண்டாள்.

உள்ளங்கை எல்லாம் வியர்வையில் பிசுபிசுக்க,

"அது வந்து இதை இதை மட்டும் நான் வச்சிருக்கிறேன். ப்ளீஸ் கேட்காதிங்க…" என்று திக்கி திணறி உயிரை கையில் பிடித்தபடி கூறிட,

இங்கு குருவின் விழிகள் இடுங்கியது.

அதில் மேலும் பதறியவள்,

"அது இனி லைஃப் புல்லா தனியா தான் இருக்க போறேன். கல்யாணம் ஆனவன்னா எல்லாரும் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுவாங்க. இல்லைனா தப்பா அப்ரோச் பண்ண ட்ரை பண்ணுவாங்க. இதுவரை ஒரு சேஃப்டியான இடத்தில இருந்துட்டேன். இனி அப்படி இல்லை. என்னோட சேஃப்டிய நான் தான் பாத்துக்கணும். அதுக்கு அதுக்காக தான் இதை நான் கழட்டாம நானே வச்சிக்கிறேன்னு சொன்னேன்" என்று அஞ்சி திணறி கூறி முடித்தவளது முகம் முழுவதும் ஏகமாய் தவிப்பு குடி கொண்டிருந்தது.

முன்பே குருவிடம் இந்த காரணத்தை கூற வேண்டும் என்று எண்ணி வைத்திருந்தாள்.

இத்தனை நேரம் நொடிக்கு ஒரு தரம் அச்சத்தில் மாறி மாறி வந்த உணர்வுகளுடன் தன்னிலையை விளக்கியவளை அமைதியாக கண்டவனுக்கு அவள் கூறுவதன் நியாயம் புரிந்தது.

ஒரு பெண்ணை அதுவும் தனித்து இருக்கும் ஒரு பெண்ணை இந்த சமுகத்தில் உள்ளவர்கள் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. இத்தனை நாள் பாதுகாப்பான இடத்தில் இருந்துவிட்டு இப்போது புது ஊர் புது மொழி என்று எல்லாம் புதிதான இடத்திற்கு செல்பவளுடைய பயம் மிகவும் நியாயமானது தான் என்று புரிந்தது.

இருந்தும் அவளுக்கு ஒரு நல்ல வேலை நல்ல இடம் பார்த்து தருவதாக தான் பொறுப்பேற்று கூறியிருக்க இவள் ஏன் அச்சம் கொள்கிறாள் என்று எண்ணியவன்,

அவள் கூறியது புரிந்தது எனும் விதமாக தலையசைத்துவிட்டு,

"நான் உனக்கு ஒரு நல்ல சேஃபான ப்ளேஸ் தான் அரேன்ஜ் பண்ணி இருக்கேன். உனக்கு கண்டிப்பா அந்த மாதிரி எந்த ப்ராப்ளமும் வராது. இன்கேஸ் பை சான்ஸ் வந்தாலும் நீ கௌதம்கிட்ட சொல்லு. அவன் பார்த்துப்பான். அதர்வைஸ் நீ என்னை கண்டாக்ட் பண்ணு நான் பாத்துக்கிறேன்" என்று மொழிய,

ஒப்பந்த பத்திரத்தில் திருமணம் முடிந்த பிறகு எந்த காரணத்தை கொண்டும் தான் குருவை தொடர்பு கொள்ளவோ சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவோ கூடாது என்று எழுதியிருந்த நிபந்தனை நினைவு வர அமைதியாக தலை அசைத்தவள்,

"நான் நாளைக்கு மார்னிங் இங்க இருந்து கிளம்புறேன்" என்றிட,

"என்ன அவசரம் டூ டேஸ் கழிச்சு கிளம்பலாம். நான் கரண்கிட்ட சொல்லி வெட்னஸ்டே ப்ளைட் டிக்கெட் புக் பண்ண சொல்றேன்" என்று பதில் மொழிய,

"இல்லை வேணாம் நான் பஸ்லயே போய்க்கிறேன்" என்று உடனடியாக இயம்பினாள்.

"பஸ்ல கம்போர்ட்டபிளா இருக்காது. ப்ளைட்னா ஈஸியா ரீச் ஆகிடலாம்" என்று குரு கூற,

"வேணாம் ப்ளைட் வேண்டாம். இவங்களுக்கு இனிமே இது தான் நம்ம லைப்னு புரியணும். இனி என்னோட தகுதிக்கு ஏத்த மாதிரி லைப் ஸ்டைல் இது தான்னு அவங்களுக்கு புரியணும். நீங்க கொடுத்த இந்த சொபஸ்டிகேடட் லைஃப்ப என்னால எந்த காலத்திலயும் கொடுக்க முடியாது‌‌. அவங்க இனிமே எனக்கு மட்டும் தான் அவங்க பசங்க" என்றவள் எந்தவித முக மாறுதலும் இன்றி முடித்துவிட,

குருவால் ஏதும் பதில் கூற முடியாது போக,

"நான் கரண்கிட்ட பஸ் டிக்கெட் புக் பண்ண சொல்றேன்" என்று ஒருவித இறுகிய குரலில் மொழிய,

மகியும் ஏதும் பதில் கூறாது சென்று படுத்துக் கொண்டாள்.

மறுநாள் குருவிற்கு முன்பாகவே எழுந்து குளித்து தயாராகி கொண்டு இருந்தாள் மகிழினி.

குருவும் எழுந்து அமைதியாக குளித்து தயாராகினான். இளையவர்கள் சற்று தாமதமாக எழ அவர்களையும் தயார் செய்தாள்.

எழில், "ம்மா நாம அவுட்டிங் போறோமா…?" என்று வினவ,

மகிழ் ஒரு நொடி வெறித்துவிட்டு,

"ஹ்ம்ம்…" என்று தலையசைக்க,

"ஐ ஜாலி ஜாலி எங்க போறோம்மா?" என்றவன் அவள் பதில் கூறும் முன்,

"அப்பா என்னை ஃபைடர்மேன் பார்க்க கூட்டிட்டு போங்க" என்றவாறு குருவை நோக்கி ஓடியிருந்தான்.

மகிழ் எந்த எதிர்வினையும் இன்றி கவினை தயார் செய்தான்.

குரு என்ன பதில் கூறினானோ எழில் மிகுந்த மகிழ்ச்சியுடன் வலம் வந்தான்.

எல்லாவற்றையும் எடுத்து வைத்து கிளம்பும் நொடியில் குரு,

"மகிழ் இதை செலவுக்கு வச்சுக்கோ" என்று ஒரு பணக்கட்டை நீட்ட இவளுக்கு இதழ்களில் பிரித்தறிய முடியா புன்னகை ஒன்று பிறக்க,

"இல்லை நீங்க சேலரியா கொடுத்த பணமே அக்கவுண்ட்ல இருக்கு. அதுவே ஒன் இயர்க்கு வரும். தேங்க்ஸ் பார் யுவர் கன்சர்ன்" என்று மறுத்துவிட்டாள்.

பின்னர் காலை உணவை வெளியில் முடித்துவிட்டு அமைதியாக பேருந்து நிலையத்தை நோக்கி சென்றனர்.

அது பள்ளி விடுமுறை நாள் என்பதால் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது.

குரு முன்பே ஒரு உயர்ரக குளிர்சாதனப் பேருந்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்து இருந்ததால் நிலையத்தை அடைந்து பேருந்தை கண்டறிந்து அவர்களுடைய உடமைகளை எடுத்து மேல வைத்தான்.

மூவரும் நன்றாக படுத்து செல்லும்படியான வசதியான பேருந்தையே பதிவு செய்திருந்திருந்தான்.

பொருட்களை வைத்ததும் எழில்,

"அப்பா எனக்கு அந்த கார் பொம்மை வாங்கி தாங்கப்பா" என்றிட,

கவின், "எனக்கும் எனக்கும்" என்று குதித்தான்.

குரு, "எந்த பொம்மை…?" என்று வினவிட,

"அதோ அந்த கடைல இருக்கு" என்று கையை காண்பித்தான்.

குரு, "வா வாங்கிட்டு வரலாம்" என்று இருவரது கையையும் பிடித்து கொண்டவன் மகியை காண,

அவள், "நான் வரலை நீங்க போய்ட்டு வாங்க" என்றுவிட்டாள்.

மூவரும் இறங்கி வெளியே சென்று கடைக்கு சென்று அவர்கள் கேட்ட பொம்மையை வாங்கி கொண்டு இருக்க இங்கு சாரளத்தின் வழியாக குருவை கண்டவளுக்கு ஒரு பேரழுகை தொண்டையை அடைக்க கையால் வாயை மூடி கொண்டாள்.

கண்ணீர் தன்னை மீறி கன்னத்தினை நனைக்க அழுகையை அடக்க முயற்சித்து கொண்டிருந்தாள்.

முடியவில்லை முகத்தை தோளில் புதைத்தவளுக்கு கேவல் பிறக்க சட்டென்று பேருந்தில் இருந்து வெளியே இறங்கியவள் அழுகையை தனக்குள் புதைத்து தண்ணீர் பொத்தலை எடுத்து முகத்தில் நன்றாக விசிறியடித்தாள்.

ஓரளவிற்கு மனது சமன்பட பேருந்தினுள் ஏறி அமர்ந்தாள். அவள் பின்னோடே கை நிறைய பொம்மைகளுடன் இளையவர்கள் குருவுடன் வர,

"இவ்ளோ பொம்மை எதுக்கு…?" என்று சிறு அதிர்வுடன் வினவினாள்.

பின்ன‌ இருவரும் கடையில் இருந்த பாதியை ஒரு நெகிழி பையில் அடக்கி இருந்தனரே‌.

"நான் தான் வாங்கி கொடுத்தேன் அவங்களை எதுவும் சொல்லாத" என்று குரு பதில் மொழிந்திட,
மகிழ் அமைதியாகி போனாள்.

சிறுவர்களை இருக்கையில் தூக்கி அமர வைத்தவன்,

"ஓகே நான் கிளம்புறேன். பஸ் மூவ் ஆக போகுது. நீ ரீச் ஆகிட்டு ஒரு மெசேஜ் போடு" என்று குரு மொழிய,

சம்மதமாக தலை அசைத்தவளுக்கு பேச நா எழவில்லை.

குரு கீழே இறங்கியதும் சாரளத்தின் வழியே அவனை வெறித்தவள் உயிர், ஆன்மா என யாவையும் அவனிடத்தில் விட்டுவிட்டு வெறும் கூடாக கேரளாவை நோக்கி பயணிக்க துவங்கினாள்…
















 
Active member
Messages
289
Reaction score
191
Points
43
பாவம் சிஸ்டர் மகிழ் சீக்கீரம எதாவது பண்ணி இரண்டு பேரையும் சேர்த்து வைச்சிருங்க😟😟😟😟😟
 
Active member
Messages
341
Reaction score
229
Points
43
Pavam mazhil erkanavae kastathula than irundha ah ippo iruku ah konjam nanjam nimathi ah yum motham ah tholachitu anga irundhu pora
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Divorce pannidana guru ne pannura ellam sari ya unnoda selfish kaga mahi ya marriage panni ippo divorce panni Kerala ku anupura💔💔💔
Ezhil Kavin ini appa va theyduvagala mahi epadi samalika pora 😔😔
Mahi life la evaluyu kastatha anupavikura ippo intha guru kuda ava manasu muthal ellam vittu tha pora 💔💔
Entha pirivu guru va yosika vaikanum mahi ya oru oru things Avan theydanum 😬😬
Sikirama varuvan guru unaya pakka mahi 🥺🥺💗
 
Top