• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காதல் 27

Administrator
Staff member
Messages
459
Reaction score
785
Points
93
காதல் 27:

"பிரசாத் அந்த விளக்கை நீயே ஏத்துப்பா" என்ற கோதையின் குரலுக்கு மறுப்பேதும் கூறாதவன் அயைதியாக நிர்மலான முகத்துடன் தந்தை புகைப்படத்தின் முன்பிருந்த விளக்கை ஏற்றி வைத்து விழிகளை மூடினான்.

அவனை தொடர்ந்து அங்கே நின்றிருந்த கோதை, மகிழ், பிறைசூடன் மற்றும் வர்ஷினியும் விழிகளை மூடி பிராத்தினர்.

இளையவர்கள் கூட பெரியவர்களை போலவே தானும் செய்ய முயற்சித்து கொண்டிருந்தனர்.

படையல் வைத்து கடவுளை வணங்கிய பிறகு,

கோதை, "மகி பிள்ளைங்களை அழைச்சிட்டு வந்து சாப்பிட வைம்மா" என்றிட,

"சரிங்கத்தை" என்று தலையசைத்தவள் பின்னர்,

"நீங்களும் சாப்பிட வாங்கத்தை" என்று அழைக்க,

"இல்லைம்மா நானும் பிரசாத்தும் காலையில விரதம்"என்றிட,

"அத்தை அவர் ஓகே ஆனால் நீங்க எப்படி சாப்பிடாம இருப்பிங்க. டேப்லெட் போடணுமே…" என்றவள் இழுக்க,

"ஒரு நாள் டேப்லெட் போடலைன்னா ஒண்ணும் ஆகாது" என்றவர் முகத்தில் வருத்தத்தின் சாயல் இருந்தாலும் ஓரத்தில் நிம்மதி தெரிந்தது.

அதன் காரணம் குரு தான். வழக்கமாக இந்த நாளில் அறைக்குள்ளே முடங்கி கொள்பவன் இந்த வருடம் குளித்து வெளியே வந்துள்ளான்.‌ அதுவும் தாய் கூறியதை மறுக்காது கேட்டு விளக்கை ஏற்றி வணங்கியது என யாவிலும் அவருக்கு ஒரு வகையான நிம்மதி பிறந்தது.

எல்லாம் மருமகள் வந்த நேரம் தான். விரைவில் இறுக்கம் எல்லாம் குறைந்து பழையபடி மாறி விடுவான் மகன் என்று நம்பிக்கை பிறந்தது.

என்னவோ சிறு வயதில் தந்தையுடன் சிரித்து பேசி தன் பின்னோடு சுற்றி வந்த மகனை காண மனம் அத்தனை அவா கொண்டது.

கணவரது இழப்பு தன்னைவிட மகனை தான் வெகுவாக பாதித்துள்ளது என்று அவருக்கு புரிந்திருந்தது. ஆனாலும் இத்தனை வருடங்களில் தன்னால் செய்ய இயலாததை மருமகள் செய்துவிட்டாள் என்பதில் உள்ளே மகிழ்ச்சி பொங்கியது.

மகிழ்,. "அத்தை டேப்லெட் சாப்பிடாம இருந்தா பிரஷர் அதிகமாகிடும்" என்று கவலைபட,

"ஒன்றும் ஆகாதும்மா நீ போய் குழந்தைங்களுக்கு சாப்பாடு கொடு" என்றிட,

"கோதைம்மா எப்படி சாப்பிடாம இருப்ப. கொஞ்சமா சாப்டுக்கோ" என்று பிறைசூடனும் மொழிந்தார்.

"விரதம் இருக்கும் போது கொஞ்சமா சாப்டாலும் விரல் கலைஞ்சிடும். வேணாம்பா" என்று மறுத்துவிட்டார்.

இவையனைத்தையும் கேட்டபடி மாடியேற சென்ற குரு திரும்பி,

"ம்மா நீங்க சாப்பிடுங்க அதான் நான் பாஸ்ட்டிங் இருக்கேன்ல அதுவே போதும்" என்று தாயிடம் இயம்ப,

"இல்லைப்பா…" என்று கோதை பேசுகையில் இடை நுழைந்தவன்,

"சாப்பிடாம இருந்தா ஹெல்த் ஸ்பாயில் ஆகிடும். டாட் அதை எப்பவுமே விரும்ப மாட்டார். போய் சாப்பிடுங்க" என்றவன் அறையை நோக்கி சென்றான்.

கோதையும் மகனின் வார்த்தைக்கிணங்கி சாப்பிட வந்தார்.

மகிழ் தான் மனதிற்குள் எத்தனை கஷ்டங்களை வைத்திருந்தாலும் மற்றவர்கள் அதாவது குடும்பத்தினர் மீது அவன் காட்டும் அக்கறை ஒரு நொடி அவனை திரும்பி பார்க்க வைத்தது.

அதுவும் நொடி நேரம் தான் பின்னர் வந்தவள் இளையவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உணவை பரிமாறினாள்.

அவளுக்கு என்னவோ உண்ண பிடிக்கவில்லை. காரணம் அவனா என்று கேட்டால் அவளிடம் பதில் இல்லை.

கோதை வற்புறுத்தியும் உண்ண மறுத்துவிட்டவள் மதியம் குரு விரதத்தை முடிக்க வேண்டியிருப்பதால் உணவை தயாரிக்க கோதையுடன் சமையலறை சென்றுவிட்டாள்.

இங்கு அறைக்குள்ளே வந்த குரு சுவற்றை வெறிக்க நினைவு நேற்றைய இரவிற்கு சென்றது.

என்ன முயன்றும் நினைவுகளில் நேற்றைய நிகழ்வு நழுவுவதை தவிர்க்க இயலவில்லை. இதோ இதை தடுப்பதற்காக தான் அறையில் தனியாக இருப்பதை தவிர்த்து வெளியே வந்திருந்தான்.

இப்போது மீண்டும் தான் மறுக்க மறக்க நினைவலைகள் மகிழினியிடம் சென்று நின்றது.

ஒரு கணம் அவன் அணைப்பில் அதிர்ந்தவள் விலக பார்க்க,

"மகி ப்ளீஸ்‌…" என்றவனது குரலில் இருந்த ஏதோ ஒன்றில் உறைந்துவிட்டாள்.

அதுவும் அந்த "மகி" என்ற அழைப்பு தந்தையை நினைவுபடுத்தியது.

நொடிகள் நிமிடங்களாக கடக்க அப்படியே அவளை அசைவின்றி இறுக அணைத்து இருந்தான் குரு பிரசாத்.

இவள் தான் சிலை போல நின்றிருந்தாள் என்னவோ அசைய முடியவில்லை. அவனிடமிருந்து விலக மனமும் இல்லை.

நிமிடங்கள் கடக்க ஒரு மணி நேரம் அசையாது நின்று இருந்தவளுக்கு கால் கடுக்க துவங்க லேசாக அசைந்தாள்.

அதனை உணர்ந்தவன் சட்டென்று அவளைவிட்டு விலகி,

"நீ போ ரூம்க்கு" என்க,

அமைதியாக அவன் முகம் கண்டாள். அந்த இருளில் சிவந்திருந்த கண்கள் அவளை அச்சமூட்டியது. இருந்தும் இமைக்காது அவனை தான் கண்டாள்.

அந்த பார்வை இவனுக்குள் ஏதோ செய்ய,

"உன்னை போக சொன்னேன்" என்று மீண்டும் அழுத்தி கூற,

"இல்லை உங்களை நீங்க…" என்றவளுக்கு என்ன கூறி அவனை உறங்க அழைப்பது என்று சிறிதான தடுமாற்றம்.

ஆதரவற்ற குழந்தை போலிருந்தவனை விட்டு செல்ல மனம் வரவில்லை மகிழுக்கு‌.

"ஸ்டே யுவர் லிமிட்ஸ்…" என்றவனது அழுத்தமான குரலில் சடுதியில் இவளுக்கு என்னவோ போலாகிவிட்டது.

உள்ளே ஒன்று மெல்லிய இழையால் இறுகுவதை உணர்ந்தவள் வெளியேற துவங்கிய கணம்,

லேசான சத்தத்துடன் இரும துவங்கினான் குரு பிரசாத்.

அதில் ஒரு கணம் நடை தடைபட மீண்டும் நடந்தவளை அவனது அதீத இருமல் சத்தம் பின்தொடர தன்னை மீறி ஒன்று உள்ளுக்குள் இளகிட திரும்பி நீர எங்காவது இருக்கிறதா என்று பார்த்தாள்.

'ம்ஹும்' எங்கும் தென்படவில்லை‌. சமையலறைக்கு தன்னை மறந்து ஓடியவள் நீரை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.

அவனும் கண நேரம் தயக்கத்திற்கு பிறகு வாங்கி பருக இவளது கை இயல்பாக அவனது தலையில் லேசாக தட்டியது‌.

நீரை முழுதாக பருகி முடித்த பிறகு தான் அவனது இருமல் நின்றது. இரவு நேரத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து இவனும் பனிக்கூழை உண்டிருக்கிறான் போலும் என்று எண்ணியவளுக்கு அவன் கூறிய 'எல்லையில் நின்று கொள்' என்ற வார்த்தை நினைவு வர திரும்பி செல்ல போனாள்.

ஆனால் போக முடியவில்லை. காரணம் அவளது கரம் குருவிடம் சிக்கி இருந்தது.

திரும்பியவள் கேள்வியாக பார்க்க,

"இங்க கொஞ்சம் நேரம் இருந்துட்டு போ…" என்றவனுக்கு என்ன பதில் அளிப்பது என்று தெரியாது பேதை விழித்தாள்.

நிமிடங்கள் கடக்க அவளிடம் பதிலில்லாது போக பட்டென்று அவளது கையை விட்டவன் மீண்டும் சாரளத்தை வெறிக்க துவங்கிவிட்டான்.

இவள் தான் கண நேரம் அவனது பார்வையில் வந்து போன ஏக்கத்தை ஒதுக்க இயலாது அவன் முன்னர் கூறிய வார்த்தைகளை ஒதுக்கிவிட்டு அவனருகே இருந்த இடத்தில் அமர்ந்துவிட்டாள்‌.

மூளை நீ இங்கிருப்பது சரியல்ல என்று கூறினாலும் குருவின் மீதிருந்த அதீத நம்பிக்கையால் அமர்ந்திருந்தாள்‌.

அவளரவம் அருகே உணர்ந்தும் குரு திரும்பவில்லை. மகிழ் தான் என்ன செய்வதென தெரியாது அப்படியே அமர்ந்து இருந்தாள்.

அவன் எதற்காக இங்கு அமருமாறு கூறினான் என்று தெரியவில்லை தான் எந்த நினைப்பில் இங்கு அமர்ந்தோம் என்றும் தெரியவில்லை.

சிறிது நேரம் பொறுத்து பார்த்தவள் தானே,

"இழப்பு எல்லார் வாழ்க்கையிலும் வர தான் செய்யும் நாம தான் அதை கடந்து வரணும். எல்லாரும் கடைசி வரை நம்ப கூட இருக்க போறது இல்லை…" என்று மெதுவாக அவனிடம் கூற,

"சரிதான் அவங்களோட இழப்பை யாராலயும் ஈடு செய்ய முடியாதுன்ற பட்சத்துல நம்மளால எப்படி கடந்து வர முடியும்" என்றவன் திரும்பாது பதில் அளித்தான்.

"ஈடு செய்ய முடிஞ்சாதான் நம்மளால கடந்து வர முடியும்னா யாராலாயும் யார் இறப்பையும் கடந்து வர முடியாது. ஈஸியா மத்தவங்க ஈடு செய்ய முடியிற அளவுக்காக உங்களுக்கு உங்க அப்பாவுக்குமான உறவு இருந்துச்சு…?" என்றவளது வினாவிற்கு அவனிடம் மொழியில்லை. அமைதி அங்கே கோலோச்சியது.

"மோர் ஓவர் யாரோட இடத்தையும் யாராலயும் பில் பண்ண முடியாது. ஏன் நம்ம லைஃப்ல ஒவ்வொருத்தவருக்கும் ஒரு இடம் இருக்கும் அதை யாராலயும் ரீப்ளேஸ் பண்ண முடியாது. நாம தான் எல்லாத்தையும் அக்சப்ட் பண்ணி மூவ் ஆகணும்" என்று தொடர,

"சரிதான் ஆனால் எல்லாமே பேசுறதுக்கு ஈஸிதான். யார் வேணாலும் அட்வைஸ் பண்ணலாம் பட் அந்த சுட்சுவேஷன்ல இருக்கவங்களுக்கு தான் புரியும்" என்றவனது பதிலில் இவள் அமைதியாகி போனாள்.

அவன் கூற்றில் உள்ள உண்மை உணர்ந்தவளுக்கு என்ன பதில் அளிப்பது என தெரியவில்லை. தான் குடும்பத்தினரை எண்ணி வருந்திய போது யார் ஆறுதல் கூறினாலும் அதிலிருந்து தன்னால் மீள இயலவில்லையே என்று எண்ணம் வர,

"நீங்க சொல்றதும் சரி தான். நான் கூட என் அம்மா அப்பா அண்ணா அண்ணி எல்லாரையும் இழந்திட்டு நின்னப்போ நிறைய பேர் ஆறுதல் சொன்னாங்க ஆனால் அந்த ஆறுதல் எதுவும் என்னை சரி செய்யலை நானா தான் என்னை சார்ந்தவங்களுக்காக தேறி வந்தேன்" என்றவளது குரல் கடந்து வந்த பாதையை எண்ணி கரகரக்க இப்போது ஆதரவாக அவனது கரம் நீண்டு மகியின் கையை பிடித்தது.

மகியும் ஆதரவிற்காக நீண்ட கையை கெட்டியாக பிடித்து கொண்டாள்.

இந்த மனித மனம்
ஏதோ ஒரு புள்ளியில்
யாரிடமோ ஆறுதலை
யாசித்து நிற்கவே
விருப்பம் கொள்கிறது…

குருவிற்கு அந்த கணம் வரை மகிழ் மீது ஒரு வித பிரம்மிப்பு இருந்தது. எப்படி இந்த பெண் இந்த வயதில் இவ்வளவை கடந்து வந்தாள் என்று.

அறையில் மாட்டியிருந்த அவர்களது குடும்ப புகைப்படத்தில் கண்கள் மின்ன தந்தையின் அருகில் நின்றிருந்த குருவையே பார்த்தபடி இருந்தவள்,

"உங்களுக்கு உங்க அப்பாவ ரொம்ப பிடிக்குமா‌…?" என்று வினவ,

"ஹ்ம்ம்…" என்றவன்,

"யாருக்கு தான் அவங்க அப்பாவ பிடிக்காது…? எனக்கு எங்க அப்பாவ சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும். அவர் என்னோட ஹீரோ. நிறைய விஷயத்துல அவரை நான் பிரம்மிச்சு பாத்திருக்கேன்" என்று விழிகள் மின்ன தந்தையை பற்றி கூறிய குருவின் முகத்தில் இருந்த குழந்தை தனத்தை இமைக்காது நோக்கியவளுக்கு அந்த கணம் அவன் வளர்ந்த குழந்தையாக தான் தெரிந்தான்.

"நானும் என் அப்பாவும் சின்ன வயசுல இருந்தே ரொம்ப க்ளோஸ் அவருக்கு தெரியாம நான் எதுவுமே செஞ்சது இல்லை. எனக்கு யூ எஸ் போய் படிக்க ஆசை இருந்தாலும் அப்பாவ விட்டு போக மனசில்லாம போக வேண்டாம்ன்ற ஐடியாவுக்கு வந்துட்டேன். பட் என் அப்பா என்னை கன்வின்ஸ் பண்ணி அனுப்பி வச்சாரு. நான் எவ்ளோ தூரம் போனாலும் எங்க பாண்டிங் அப்படியே தான் இருந்துச்சு. பொதுவா பசங்க அம்மாவோட தான் க்ளோஸா இருப்பாங்க. ஆனால் எனக்கு என் அப்பாவோட தான் ஒரு பிரிக்கமுடியாத பாண்டிங் இருந்துச்சு…"

"..."

"என் அம்மா கூட நிறைய டைம்ஸ் கேட்பாங்க. ஆனால் என்கிட்ட ஆன்ஸர் இருக்காது. அதுக்குனு அம்மாக்கிட்ட பாசம் இல்லைனு சொல்ல முடியாது.‌ அவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் பட் என் அப்பா அவர் தான் எல்லாத்துக்கும் மேல என் லைஃப்ல இருந்தாரு. அவரோட ஆசைக்காக தான் யூஜி முடிச்சிட்டு பிஸ்னஸை எடுத்து நடத்துறதுக்காக எம்.பி.ஏ பண்ணேன். பட் நான் படிச்சு முடிச்சிட்டு வர்றதுக்கு முன்னாடியே அவர் இந்த உலகத்தை விட்டு என்னைவிட்டு போய்ட்டாரு. அவர் என்னை விட்டு போனதை இப்போ வரை என்னால ஏத்துக்க முடியலை" என்றவனது குரல் அவனையும் மீறி மாறுபட்டு ஒலித்தது.

இப்போது மகிழ் அவனது கையில் ஆதரவாக அழுத்தத்தை கொடுத்தாள்.

குருவால் தொடர இயலவில்லை.‌ தன் தந்தையை உயிரற்ற உடலாக பார்த்த நிகழ்வு நினைவு வந்து அப்போதும் அவனை இறுக செய்தது.

"என்ன என்ன ஆச்சு உங்க அப்பாவுக்கு.‌ எதுவும் ஹெல்த் இஸ்யூஸா…?" என்றவள் தயங்கி வினவ,

"ஆமா ஹார்ட் அட்டாக். பிஸ்னஸ்ல கொஞ்சம் லாஸ். அதை சரி செய்ய போக திரும்பவும் லாஸ். யாருக்கிட்டயும் சொல்லாம அவரே சரி செய்யலாம்னு ட்ரை பண்ணி இருக்காரு. பட் ஸ்ட்ரெஸ் அதிகமாகி…" என்றவன் சிறிய இடைவெளிக்கு பிறகு,

"என் மேலயே எனக்கு நிறைய கோவம். நான் ஏன் இதை முன்னாடியே தெரிஞ்சுக்காம போனேன்.‌ எனக்கு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா அப்பாவுக்கு இப்படி ஆகியிருக்க விட்ருக்கமாட்டேன். அவர் என்னோட சின்ன அசைவுலயே என்னை புரிஞ்சுப்பாரு. ஆனால் நான் எப்படி அவரை கவனிக்காம போனேன்னு ரொம்ப கோவம் இப்போ வரைக்குமே அந்த கோவம் போகலை"

"..."

"அதுவுமில்லாம அப்பா இறந்தது பிஸ்னஸ் லாஸ் இதெல்லாம் சேர்ந்து நாங்க அகெய்ன் பழைய மாதிரி திரும்ப வர மாட்டோம் அப்படியில்லைனா எதாவது ஹெல்ப் கேட்ருவோம்னோனு நினைச்சு எல்லா ரிலேடிவ்ஸ்ம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ண ஆரம்பிச்சாங்க. அப்போ அம்மாவும் தாத்தாவும் ரொம்ப உடைஞ்சு போய்ட்டாங்க. அப்போ எங்களோட இருந்தது மாமா குடும்பம் மட்டும் தான். அப்பாவோட ஆசை கனவு எல்லாமே சாக்லேட் பேக்டரிய நல்ல பெரிய லெவெல்க்கு கொண்டு வரணும்னு தான். அவருக்காக தூங்காம கூட இருந்து பிஸ்னெஸ்ஸ நல்லபடியாக நடத்தி முன்னைவிட நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தேன். நிறைய பிரான்ஞ் எக்ஸ்போர்ட் என்னோட சாஃப்ட் வேர் இன்டஸ்ட்ரீஸ் ஸ்டார்ட் பண்ணேன்"

"..."

"விட்டுட்டு போன ரிலேடிவ்ஸ் எல்லாம் திரும்ப ஜாயின்ட் பண்ண ட்ரை பண்ணப்போ நான் யாரையும் நெருங்க விடலை. அம்மாவும் தாத்தாவும் கூட நாளைக்கு சொந்தக்காரங்க வேணும்னு சொன்னாங்க. பட் நான் யாரையும் பக்கத்துல சேர்க்கலை. பணம் இருந்தாதான் சொந்தம்னா அந்த சொந்தம் எனக்கு வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். பணம் தான் மத்தவங்க நம்மள மதிக்க வைக்கிற ஒன்னுனு புரிஞ்ச பிறகு நிறைய நிறைய சம்பாதிச்சேன். எல்லாமே அம்மா தாத்தா எங்களோட ஸ்டேட்டஸ் எல்லாமே பழைய நிலைமைக்கு வந்திடுச்சு. ஆனால் நான் மட்டும் என் அப்பா விட்டு போன இடத்துலயே நிக்கிறேன்"

"..."

"நான் ஏன் எதையும் தெரிஞ்சுக்காம போனேன். என் டாடிய காப்பாத்தாம போனேன்னு எனக்குள்ள ஒரு குற்றவுணர்வு ஓடிட்டே இருக்கும். அதுதான் என்னை பழைய மாதிரி நார்மலா இருக்கவிடலை. எப்பவும் ஒரு இறுக்கமான மனநிலையிலே இருக்கிறதுக்கு அது தான் காரணம்…" என்று நீளமாக பேசி முடித்திட, அங்கு பெரும் அமைதி சூழ்ந்தது.

"எல்லாரும் எல்லா நேரத்திலையும் நூறு சதவீதம் சரியா இருக்க முடியாது. நாம ஒன்னும் கடவுள் இல்லை எல்லா நேரத்துலயும் சரியாவே இருக்க. அற்பமான மனித பிறவி. நாமளும் சில இடங்கள்ல தவறுவோம். முடிஞ்ச அளவுக்கு அந்த தவறை நம்மளால சரி செய்ய முடியும் அவ்வளவு தான். மத்தபடி அந்த தப்பை நடக்காம விட்ருக்கலாமேன்னு குற்றவுணர்வோட இருந்தா வாழ்க்கை முழுசும் அது நம்மள தொடர தான் செய்யும். முதல்ல மனசுல இருக்க குற்றவுணர்வை விட்டு தள்ளுங்க"

"..."

"ஏன் உங்களுக்கு தெரிய கூடாது தெரிஞ்சா வருத்தப்படுவிங்கன்னு உங்க அப்பாவே எல்லாத்தையும் மறைச்சு வச்சிருக்கலாம். இன்டன்ஷனோட மறைச்சு வைக்கும் போது எதார்த்தமா கூட நமக்கு தெரிய வர வாய்ப்பில்லை. ஸோ குற்றவுணர்வை விட்டுடுங்க."

"..."

"இதுக்கும் மேல சொல்லணும்னா நான் கூட அன்னைக்கு பசங்களோட வெளிய போகாம இருந்திருக்கலாம். கேஸ் சரியா ஆஃப் பண்ணலயான்னு நான் கவனமா பாத்திருக்கலாமேன்னு நான் வருத்தப்பட்டா வாழ்க்கை முழுக்க வருத்தப்படணும். உங்களுக்கு உங்க அப்பா மட்டும் தான். ஆனால் எனக்கு அம்மா அப்பா அண்ணா அண்ணி நாலு பேர். எல்லாரும் அவங்கவங்களுக்கான நேரம் வந்ததும் கிளம்பிட்றாங்க. நமக்கான வாழ்க்கையை நாம தான் வாழணும்" என்றவளின் பேச்சில் இருந்த உண்மை குருவிற்கு புரியாது இல்லை.

ஆனால் சில விடயங்கள் புத்திக்கு உரைத்தாலும் மனதிற்கு புரிவதில்லை. தலையசைத்தவன் அப்படியே அவள் மடியில் தலை வைத்தபடி படுத்துவிட்டான் விழிகளை மூடி.

அவனது செயலில் ஒரு நொடி திடுக்கிட்டு விழித்தவள் அவனது முகத்தை காண அவனோ நிர்மலான முகத்துடன் இருந்தான்‌. எந்தவித மாறுதலும் இல்லை. அந்த நொடி தாயின் அரவணைப்பை தேடும் குழந்தையின் சாயல் அவனிடம் தெரிய கரங்கள் தானாக அவனது சிகையை கோதியது.

மனதின் பாரத்தை இத்தனை வருடங்களில் யாரிடமும் கூறாவன் இவளிடம் கொட்டிவிட்டதாலோ என்னவோ நிம்மதியான உறகத்தை தழுவினான் குரு பிரசாத்…

என்னருகில் நீ
என்பதை தவிர
இந்த வாழ்வின்
பெரிதான தேவை
இருந்துவிட போகிறது
எனக்கு…?




 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Ahh ahh guru ne epadi irutha matum appa feel panna matagala move on panni poedu iru mahi sollarathu crt yaroda place yarum replace panna mudiyathu tha
But 2 payrum ungaloda feeling ya share panni irukiga ini nimathiya irugadum
 
Top