• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காதல் 25

Administrator
Staff member
Messages
459
Reaction score
785
Points
93
காதல் 25:

"போய்ட்டு வர்றேன் கா…" என்ற அகிலனுக்கு சம்மதாக தலையசைப்பை கொடுத்த மகிக்கு விழிகள் கலங்கியது.

'என்னையும் உன்னுடன் அழைத்து சென்றுவிடேன்…' என்று மனது அடித்து கொண்டது.

"என்னக்கா இன்னும் ஏன் உன் முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு. அதான் மாமா எல்லாத்தையும் சரி பண்ணிட்டாரே அப்புறம் என்ன‌. இனி எந்த பிரச்சனையும் இல்லை" அகில் மொழிய,

சடுதியில் தன்னை மீட்டவள்,

"ப்ச் ஒன்னுமில்லை டா. நடந்ததை நினைச்சு பார்த்தேன். நான் நல்லா தான் இருக்கேன். நீ பாத்து போ. ரீச் ஆனதும் மெசேஜ் போடு" என்றிட,

"சரிக்கா. நீயும் எதையும் நினைச்சு மனசை குழப்பிக்காத" என்று முடிக்கும் தருவாயில்,

சென்னைக்கு செல்லும் தொடர்வண்டி புறப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட அகில் மீண்டும் ஒரு தலையசைப்புடன் உள்ளே ஏறி தன்னுடைய இருக்கையில் அமர்ந்தான்.

வண்டி மெதுவாக தண்டவாளத்தில் நகர துவங்க அது புள்ளியாகி பார்வையில் இருந்து விலகும் வரை இமை சிமிட்டாது பார்த்தபடி இருந்தவளது விழிகளில் இருந்து இரண்டு சொட்டு நீர் வழிந்தது.

கையில் இருந்த கைக்குட்டையால் விழி நீரை துடைத்து கொண்டவள் கனத்த மனதுடன் வெளியேறினாள்.

வெளியே வரிசையாக நின்றிருந்த வாகனங்களில் இறுதியாக மகிழ் வந்த மகிழுந்து நின்றிருந்தது.

அருகில் இருந்த தேநீர் விடுதியில் நின்று தேநீரை அருந்தி கொண்டு இருந்த ஓட்டுநர் இவளை கண்டதும் வேகமாக மகிழுந்தின் அருகில் வந்து,

"கிளம்பலாமா மேடம்…?" என்றிட,

"ஹ்ம்ம்…" என்று தலையசைத்தவள் அமைதியாக அந்த சொகுசான மகிழுந்தில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

என்னவோ அந்த பஞ்சாலான இருக்கை கூட இவளுக்கு முள்ளாய் தோன்றியது‌.

மீண்டும் கலங்கிய விழிகளை சிரமப்பட்டு கட்டுப்படுத்தியவள் இருக்கையில் விழி மூடி சாய்ந்து கொண்டாள்.

அகில் கூறியது போல எல்லாம் சரியாகிவிட்டது. குரு பிரசாத் என்ற சிறந்த தொழிலதிபர் எல்லாவற்றையும் சரி செய்துவிட்டான்.

அந்த காணொளியை ஒன்னுமிலலாது செய்திருந்தான். ஏன் குழந்தைகளை கூட இனிப்பு வாங்கி கொடுத்து அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு அழைத்துச் சென்று சமாதானம் செய்து விட்டான்.

எழிலும் கவினும் குழந்தைகள் குரு பேசிய‌ எதையும் அவர்கள் மனதில் பெரிதாக வைத்து கொள்ள மாட்டார்கள். எளிதில் மறந்துவிடுவார்கள்.

ஆனால் மகிழினி அவள் அப்படியா…? ரத்தமும் சதையும் உள்ள ஒரு அற்புதமான மனித பிறவி…?

உணர்வுகள் யாவும் நிறைந்த வளர்ந்த பெண்.‌ அவளுடைய வயதிற்கும் அதிகமான பொறுப்புகளை சுமந்து மனமுதிர்ச்சி உடையவள்.

அத்தகைய பெண்ணவளால் வார்த்தை என்னும் வாள் கொண்டு தன்னை கூறு போட்டவனையும் அவனுடைய வார்த்தையையும் எளிதில் மறக்க முடியவில்லை.

ஏன் இன்றளவுமே அவன் கூறிய வார்த்தைகளின் அதிர்ச்சி இவளுக்கு குறையவில்லை.

இத்தனை நாளும் இத்தகைய எண்ணத்தில் தான் இவன் என்னை கண்டானா…?

குரு பிரசாத் பணத்தை கொண்டு யாவையும் மதிப்பிடுபவன் என்று தெரியும்.

இருந்தும் அந்த பணத்தை வைத்தே தன்னுடைய ஒழுக்கத்தையும் குறைத்து மதிப்பிடுவான் என்று அவள் எள்ளளவும் எண்ணவில்லை.

ஆதலால் தான் இத்தனை தூரம் அதிர்ச்சி வந்திருந்தது. ஆனால் நேரம் போக போக மகியும் சிறிது தன்னிலை அடைந்திருந்தாள்.

அவளுக்கு அவனை தான் திருமணம் செய்த காரணம் நினைவிற்கு வந்தது.

பணத்திற்காக தன்னை இரண்டு வருடங்கள் ஒப்பந்த திருமணம் செய்ய ஒப்பு கொண்டவள் அதே பணத்தை வாழ்நாள் முழுவதும் அனுபவிப்பதற்காக இத்தனை கீழாய் இறங்க கூடும் என்று அவன் எண்ணியதில் தவறென்ன இருக்கிறது.

தான் வெறும் பணத்திற்காக தானே நடிக்க வந்தோம். அவனுக்கு அற்பமாய் போன பணம் தனக்கு மட்டும் சூழ்நிலையின் காரணமாக அற்புதமானதாய் அல்லவா இருந்திருக்கிறது.

பணத்திற்காக தன் கையால் தாலி வாங்கி கொண்டவள் அதே பணத்திற்காக இன்னும் சிறிது தூரம் இறங்கி அதற்கு மேல் அவளால் தன்னை பற்றி நினைக்க இயலவில்லை.

ஆனால் அவன் நினைத்திருக்கிறானே குரு பிரசாத் பல தொழிற்சாலைகளை வெற்றிக்கரமாக நடத்தி வரும் தொழிலதிபர் குரு பிரசாத் நினைத்து இருக்கிறாரே என்று எண்ணி எண்ணி அழுகை பிறந்தது.

ஆனால் அவர் நினைத்ததும் ஒரு வகையில் தவறில்லை. அவருக்கு வேறு ஒரு பெண்ணை பிடித்துள்ளது. நேசத்தை இதயத்தை ஏன் வருங்காலத்தில் வாழ்க்கையை கூட பகிர்ந்து கொள்ள திட்டமிட்டு உள்ளாரே இத்தனை உண்மை அறிந்தும் அவரை நீ விரும்பியிருக்கிறாய்.

அதுவும் உன்னுடைய ஒன்றுமில்லாத நிலை அறிந்திருந்தும் அவர் மீது ஆசை கொண்டிருக்கிறாய்.

அப்படியானால் நீ அவருடைய பணத்திற்கு தான் ஆசைபட்டு தானே அவர் மீது நேசம் கொண்டுள்ளாய்.

அவர் உன்னை காப்பாற்றியது அகிலை படிக்க வைப்பது கவினை காப்பாற்றியது என்று இவை யாவையும் செய்யவில்லை என்றால் நீ அவர் மீது நேசம் கொண்டு இருப்பாயா…?

உனக்கும் இந்த வளமான வாழ்வு தேவைப்பட்டது போலும். உன்னுடைய பொறுப்புகளை ஏற்று கொள்ள ஒருவர் வந்ததும் இது தான் வாய்ப்பென்று நீயும் அவரை பற்றி கொண்டாய்.

ஆக உன்னுடைய நேசம் ஒருவகையில் பொய்யானது தான் என்று தன்னை தானே மிகவும் காய்ப்படுத்தி கொண்டாள்.

அவன் பேசிய வார்த்தைகளின் விளைவாக மொத்தமாக காயப்பட்டு நின்றவள் தன்னை மேலும் மேலும் காயப்படுத்தி கொண்டாள்.

குருவின் வார்த்தைகளை கேட்ட பிறகு அவனுடைய வீட்டில் அறையில் இருப்பது அத்தனை கஷ்டமாக இருந்தது.

ஏதோ அந்நிய தேசத்தில் தான் மட்டும் தனித்து விடப்பட்ட உணர்வில் தத்தளித்தாள்.

ஒரு வாய் உணவு கூட இறங்க மறுத்தது. தொண்டைக்குள் இறங்கும் உணவு முள்ளாய் குத்தியது.

அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் மனது நெருப்பாய் தகித்தது. இதயத்தின் ஓரம் ஒரு வலி விரவிக் கொண்டே இருந்தது.

'பேசாமல் இங்கிலாந்து சென்றுவிடலாமா?' என்று கூட எண்ணம் வந்தது.

ஆனால் கை நீட்டி வாங்கிவிட்ட பணமும் கையெழுத்திட்ட‌ ஒப்பந்தமும் அவளை ஒடுங்க செய்தது.

இத்தனை நடந்த பிறகு அவனுடையவற்றை உபயோகப்படுத்த கடுகளவும் விருப்பமில்லை.

ஆனால் செய்தாக வேண்டிய கட்டாயம். இப்போது கூட இதோ இந்த மகிழுந்தில் பயணம் செய்ய துளியும் விருப்பம் இல்லை.

ஆனால் குரு பிரசாத்தின் மனைவி மகிழுந்தை தவிர எதிலும் செல்ல கூடாது என்ற ஒன்று அவளை தடுத்திருந்தது.

நாய் வேடம் போட்டால் குரைத்து தான் ஆக வேண்டும்.

போட்டு கொண்ட வேடத்தின் படி இங்கிருந்து செல்லும் வரை நடந்து கொள்வோம் என்று எண்ணியவள் மிகவும் அமைதியாகி போனாள்.

மெல்ல சிறிது சிறிதாக தன்னுடைய இறக்கையை விரித்து தனக்கான கூட்டில் இருந்து வெளியேறி வானத்தில் பறக்க விரும்பிய பறவையின் சிறகை உடைத்து ஓரத்தில் அமர வைத்துவிட்டோம் என்று குருவிற்கு சிறிதும் தெரியவில்லை.

இங்கு காயப்பட்டவளோ வெகுவாய் தனக்குள்ளே முடங்கி மிகவும் அமைதியாகி போனாள்.

முன்பிருந்த மகிழினியில் இரண்டு மடங்கான அமைதியாகி போனாள்.

முடிந்தளவு இங்கிருந்து விரைவாக சென்றுவிட வேண்டும். இவர் கண்களில் இருந்து என்னையே நானே மனதிற்குள் வார்த்தைகளால் குத்தி குதறும் இந்த பேரிரைச்சலில் இருந்து வெளியேறி எங்காவது கண் காணாத தேசத்திற்கு ஓடிவிட வேண்டும் என்று உள்ளம் கூக்குரலிட்டது.

மனதின் இரைச்சலை கருத்தில் கொள்ளாது ஏதோ ஒரு பொம்மை போல அங்கு நடமாடினாள்.

குருவினுடைய எதையும் அவளால் ஏற்க இயலவில்லை. இதோ இப்போது கூட அகிலனுக்கு தான் சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த பணத்தில் தொடர்வண்டியில் இருக்கையை பதிவு செய்து தந்திருந்தாள்.

இங்கு தடதடவென்ற சத்தத்துடன் நகர்ந்து கொண்டிருந்த தொடர்வண்டியின் சாரளத்தினோர இருக்கையில் அமர்ந்து வெளியே வெறித்தபடி இருந்த அகிலனது நினைவுகள் நிகழ்வு நடந்த இரவிற்கு சென்றது.

குருவினது வார்த்தையில் அகிலன் அதிர்ந்து பார்க்க,

"செய்யாத தப்புக்கு நீ ஏன் அகில் மன்னிப்பு கேட்குற‌…" என்று மீண்டும் குரு அழுத்தி கேட்க,

அகிலன், "மாமா அது நான் வர்ஷினி…" என்று திக்கி திணறியவன்,

"அவ உங்க தங்கச்சி மேல எந்த தப்பும் இல்லை. நான் தான் ஏதோ புத்தி கெட்டு தெரியாம" என்று பேசுகையிலே இடை நுழைந்த குரு,

"போதும் அகில்.‌ வர்ஷினி எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டா. யாருக்காகவும் நீ பழிய உன் மேல தூக்கி போட்டுக்க தேவையில்லை" என்று குரு முடித்துவிட்டான்.

அகிலன் மேலும் அதிர்ந்தவன்,

"மாமா இந்த விஷயம் அத்தைக்கு தாத்தாவுக்கு தெரிய வேண்டாம் மாமா. வர்ஷினி சின்ன பொண்ணு ஏதோ தெரியாம இன்பாக்சுவேஷன்ல பண்ணிட்டா மாமா. நீங்க கோபப்பட்டு எதுவும் அவளை திட்டிடாதிங்க மாமா. அவ தெரியாம தான் இதை பண்ணிட்டா" என்றவன்,

"அப்படி அவளை பனிஷ் பண்ணனும்னா நீங்க என்னையும் தண்டிக்கணும். நான் அந்த இடத்துக்கு போனதாலதான் இவ்ளோ பிராப்ளமும். நான் போயிருக்க கூடாது" என்று குருவை நோக்கிட,

இவனுக்கு வர்ஷினிக்கும் ஒரே வயது தான் ஆனால் மனமுதிர்ச்சியில் இருவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு என்று தான் குருவிற்கு அந்த கணம் தோன்றியது.

"அகில் அவ என்னோட தங்கச்சி" என்றதும் அகிலிடம் பதில் இல்லை.

குரு கூறியதும் சரி தானே. வர்ஷினி குருவின் தங்கை தானே. அவருக்கு இல்லாத அக்கறையா தனக்கு இருந்துவிட போகிறது என்று எண்ணியவன்,

"சரி தான் மாமா. வர்ஷினி உங்க தங்கை தான். இருந்தாலும் அவ செஞ்சதை மறந்திடுங்க. ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டா. இனிமேல் அவ இது மாதிரி பண்ண மாட்டா. இப்போவே அவளுக்கு எல்லாமே புரிஞ்சிருக்கும். தெரியாம செஞ்ச தப்புக்கு அவ வாழ்க்கை முழுக்க கஷ்டப்பட வேண்டாம். இந்த ஒரு தடவை மன்னிச்சு அவளுக்கான வாழ்க்கைய அவளை சுதந்திரமா வாழ விடுங்க‌..‌." என்று அப்போதும் வர்ஷினிக்காக பேசியவனை கண்டு குருவிற்கு சிறிது ஆயாசமாக கூட வந்தது.

"அகில் நான் பாத்துக்கிறேன். நீ இதை பத்தி கவலைப்படாத. இதை எப்படி சரி செய்யணும்னு எனக்கு தெரியும்" என்று குரு முடித்துவிட,

சரியென்பதாய் தலை அசைத்தவன் வெளியேறும் முன்,

"மாமா ப்ளீஸ் இந்த விஷயம் தாத்தாவுக்கும் அத்தைக்கும் தெரிய வேண்டாம். அவங்க பார்வையில நானே குற்றவாளியா இருந்திட்டு போறேன்" என்றுவிட்டு செல்ல,

குரு தான் போகும் அவனையோ வெறித்தான்.

நொடிக்கு நொடி பணத்திற்கும் அப்பாற்பட்ட சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர் என்று மகிழினியும் அகிலனும் குருவை உணர வைத்தனர்.

அடுத்த நாள் ஒருவித அமைதியுடன் விடிய குரு முந்தைய இரவே பிரச்சனையை தீர்ப்பதற்கான வழியை கண்டறிந்து இருந்தான்.

அந்த காணொளியை சமூக வலைதளத்தில் பதிவிட்டது யார் என்று இரவு தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அறிந்திருந்தான்.

அகிலனுடன் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் தான் இதனை செய்திருந்தான்.

அவனை காவல்துறை உதவியுடன் தேடி பிடித்து அவன் மூலமாகவே இதெல்லாம் அவனாக தவறாக சித்தரித்த காணொளி என்று ஒப்புக்கொள்ள வைத்திருந்தான்.

அடுத்த கணமே 'மருத்துவ கல்லூரியில் உடன் பயிலும் மாணவன் மீதிருந்த பழிவெறியால் அவனை தன் வகுப்பில் உள்ள மற்றொரு பெண்ணுடன் தவறாக காணொளியை சித்தரித்த மாணவன் என்று செய்தி பரவியது‌.

அந்த காணொளியை விடுத்து வேறு ஒன்று கிடைத்திட எல்லோருடைய கவனமும் அதன் புறம் திரும்பி இருந்தது.

உறவினர்கள் எல்லோருமே அந்த காணொளி சித்தரிக்கப்பட்டது என்று நம்பும்படியாக குரு அனைத்தையும் கட்சிதமாக முடித்திருந்தான் இந்த சிறந்த தொழிலளிபன்.

ஆனால் வாழ்க்கையில் தான் சறுக்கிவிட்டதை என்று இவன் அறியானோ…?

பிறைசூடன் மற்றும் கோதை கூட சற்று தெளிந்திருந்தனர். அவர்களை கூட குரு நடந்தவை எவற்றிற்கும் வர்ஷினிக்கும் அகிலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நம்ப வைத்திருந்தானே…

கோதை இதனை அறிந்த பிறகு தான் தான் பெற்ற பிள்ளையை தவறாக நினைத்துவிட்டோமே என்று வருந்தினார்.

வர்ஷினியிடம் கூட மன்னிப்பை வேண்டினார்.‌ வர்ஷி தான் குற்றவுணர்வில் எதுவும் கூறாது அமைதியாக இருந்தாள்.

இத்தனை தூரம் நடந்த பிறகும் தன்னை இவ்வளவு நம்புகின்றனரே என்று உள்ளுக்குள் குற்றவுணர்வு வாட்டியது.

இருந்தும் குருவிடம் நடந்தவற்றை யாரிடமும் கூற மாட்டேன் என்று கூறிவிட்டதால் அமைதியாக இருந்தாள். அவளிடம் முன்பிருந்த துறுதுறுப்பு காணமல் போயிருந்தது.

கோதை அகிலனிடம் கூட மன்னிப்பை கேட்டிருந்தார்.‌ எல்லாம் இந்த‌ ஒரு வாரத்தில் சரியாகியிருந்தது. குரு பிரசாத் சரி செய்திருந்தான்.

அம்முவை ஊட்டியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரிக்கு மாற்றியிருந்தான். வர்ஷினியும் செய்த தவறுக்காக வருந்தி குரு கூறிய அனைத்தையும் மறு பேச்சின்றி கேட்டாள்.

இளையவர்களை கூட குரு சமாதானம் செய்துவிட்டிருந்தான்.

ஆனால் இங்கு மனம் முழுவதும் ரணத்துடன் சுற்றி திரிந்தது மகிழினி மட்டுமே.

அவள் இதில் பெரிதாக பாதிக்கப்படவில்லை என்று எண்ணி பெரியவர்களும் எதுவும் கேட்டு கொள்ளவில்லை.

ஆனால் அவளை வார்த்தையால் கொன்றுவிட்டவனுக்கு மட்டும் தானே தெரியும் பேசிய வார்த்தைகளின் வீரியம்.

நிகழ்வு நடந்த மறுநாளே குரு மகிழினியை தன்னுடைய அறையிலே தங்கும் படி கூறிவிட்டிருந்தான்.

வழக்கம் போல இரவுணவை முடித்துவிட்டு அறைக்குள் காலடி எடுத்து வைத்தவளுக்கு உள்ளுக்குள் பெரும் இரைச்சல்.

இதயத்தின் ரணம் இன்னுமின்னும் அதிகரித்தது. இத்தனை தூரம் பேசியவனது அறைக்கே தான் மீண்டும் வர வேண்டி உள்ளதே என்று வாழ்வில் முதல் முறையாக தனது வறுமையை வெறுத்தாள்.

தனக்கு மட்டும் வறுமையும் பண கஷ்டமும் ஏற்படாது இருந்திருந்தால் தான் இந்நேரம் இந்த ஒப்பந்த திருமணத்தை செய்திருக்க மாட்டேனே…

இதோ இவரிடம் பணத்தை வைத்து ஆட்களை மதிப்பிடும் இவரிடம் அருவருத்த பார்வையுடன் கேட்க கூடாத வார்த்தைகளை கேட்க நேர்ந்திருக்காது.

இளையவர்களை வைத்து கொண்டு என்ன செய்வது என்று கூட தெரியாது நின்ற போது கூட பெற்றவர்கள் வளர்த்திருந்த விதத்தில் அத்தனை தன்னம்பிக்கையையும் தைரிரத்துடனும் இருந்தாலே‌…

ஆனால் இந்த நேசம் இல்லை ஏதோ ஒரு வகையில் ஏற்ப்பட்ட நன்றியுணர்சி பாசம் ஏதோ ஒன்றால் மொத்தமாக உடைந்து நிற்கிறேனே என்று தன்னை தானே ஆயிரமாவது முறையாக வெறுத்தவள் நிர்மலான முகத்துடன் உள்ளே நுழைந்தாள்.

குரு பிரசாத் நீள்விருக்கையில் தான் இவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

இவள் அவனது முகத்தை கூட பார்க்காது உள்ளே நுழைந்து இளையவர்களை உறங்க வைத்துவிட்டு தானும் போர்வையை போர்த்தி கொண்டு உறங்க முயற்சித்தாள்.

ஆனால் முடியவில்லை பஞ்சு மெத்தை குருவினுடையது என்ற காரணத்தால் முள் மெத்தையானது‌.

குருவும் அமைதியாக யோசித்திருந்தான். தவறிழைக்காத ஒருவரின் மீது பழியை சுமத்தி கோபப்பட்டு சற்று அதிகமாக பேசிவிட்டோமே. அதுவும் இத்தனை நடந்த பிறகும் தனது குடும்பத்திற்காக பார்த்து சிந்தித்து பேசுபவளை காயப்படுத்திவிட்டோமே என்ன கூறி சாமாதானத்திற்கு வருவது என்று வெகுநேரமாக யோசித்து அமர்ந்திருந்தான்.

ஒரு முடிவிற்கு வந்தவனாய்,

"மகிழினி…" என்று அழைத்துவிட்டான்.

ஆனால் மகிழ் தான் அசையவில்லை. காதுகளை இறுக மூடி கொண்டாள்.

"மகிழ் உன்னை தான் கூப்பிட்றேன். நீ தூங்கலைன்னு எனக்கு தெரியும்" என்று மீண்டும் அழுத்தமாக அழைத்திட,

அந்த குரல் அவளை திரும்பி பார்க்க வைத்தது.

எழுந்து அமைதியாக அமர்ந்து,

"சொல்லுங்க சார்" என்றவளது குரல் எதுவுமே நடவாத பாவனையில் அத்தனை நிர்மலாக இருந்தது.

அவளது பாவனையில் இவனுக்கு தான் முதன் முதலில் தடுமாற்றம் பிறந்தது.

இருந்தும் அதனை வளரவிட்டால் அவன் குரு பிரசாத் இல்லையே… அடுத்த நொடியே தன்னை சமன் செய்தவன்,

"நான் நடந்த விஷயத்துல கொஞ்சம் டென்ஷனாகி என்ன ஏதுன்னு விசாரிக்காம கத்திட்டேன். உன்கிட்ட அப்படி பேசியிருக்க கூடாது. அகில் சொன்ன பின்னாடி தான் எனக்கு உண்மை தெரிஞ்சது…" என்று தன்னிலை விளக்கம் கொடுக்கையிலே இடை நுழைந்தவள்,

"நான் எதுவும் நினைக்கல சார். உங்க இடத்தில யாரா இருந்தாலும் இப்படி தான் பேசி இருப்பாங்க. காசுக்காக பொண்டாட்டியா நடிக்க வந்தவ அதே காசுக்காக அதுக்கு மேலயும் போவான்னு நீங்க நினைச்சதுல எந்த தப்பும் இல்லை. நாம‌ எல்லாம் ஆஃப்டர் ஆல் ஹுயூமன் பீயிங்க்ஸ். யாருக்கும் மனசு எந்த நேரத்தில மாறும்னு யாராலயும் கணிக்க முடியாது. மே பீ என் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா அவங்களுக்கு கூட இந்த மாதிரி தாட்ஸ் வந்து இருக்கலாம். ஏன் எனக்கு இதுவரைக்கும் வரலைன்றதுக்காக இனி வராதுனு என்ன நிச்சயம்…?"

"..."


"இனி வர்ற நாள்ல இந்த சொகுசான வாழ்க்கை என் மனசை மாத்தலாம். நானே கூட இங்க பெர்மனென்டா இருக்க ஆசை படலாம்‌. இப்படியிருக்கும் போது நீங்க என்னை சந்தேகப்பட்டதுல எந்த தப்பும் இருக்க மாதிரி எனக்கு தெரியலை. இதுக்காக உங்க இடத்துல இருந்து இறங்கி வந்து என்கிட்டலாம் நீங்க விளக்கம் கொடுக்கணும்னு அவசியமில்லை சார். நான் இதை மறந்துட்டேன். உங்களுக்கு இருக்க ஆயிரம் வேலையில இது ஞாபகத்துல இருக்காதுனு நினைக்கிறேன்…" என்றவள் அவன் பதிலை எதிர்பாராது திரும்பி படுத்து கொண்டாள்.

இங்கு குரு தான் அவளது கூற்றில் பேச்சற்று போனான்…














 
Active member
Messages
341
Reaction score
229
Points
43
Magi ah hurt pannitu guru sollura endha vilakkam um ava kayathuku marundhu agathu la ellathaiyum guru na ra business man seri pannidalaam aana ivan varthai ah la norungi odanchi pona mazhil ah eppudi ivan ah la seri panna mudiyum first of all ava epudi endha nilamai la iruka ah na aachum.ivan care pannuvan ah
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Guru ennatha ella problem solve pannalum mazhilini oru manasu matum ne sari panna mudiyathu💔💔 enna la pesuna ippo vanthu kovathula pesitan sonna sari aguma koja nall feel panni realise panni paru mahi oda kastama puriyum Ava epadi pesunathum shock reaction la kudugatha ne pandratha Ava sollura 😐😐
 
Top