• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காதல் 24

Administrator
Staff member
Messages
459
Reaction score
785
Points
93
காதல் 24:

குருவால் சில நிமிடங்கள் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.

எல்லா விடயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு என்று மகிழ் கூறியதை மனது நினைத்து பார்த்தது.

அத்தனை உறுதியுடன் தமையன் மீது நம்பிக்கை வைத்து அழுகையிலும் தெளிவாக பேசியவளது முகம் மனக்கண்ணில் தோன்றியது.

முதல் முறையாக வாழ்வில் தவறிவிட்டான் குரு பிரசாத்.

மகிச் சிறந்த தொழிலதிபர் குரு பிரசாத் குடும்ப விடயத்தில் தவறி இருந்தான். நியாயம் யார் பக்கம் உள்ளது என்று கோபத்தில் சிந்தித்து பார்ப்பதில் பிழை புரிந்து இருந்தான்.

கோபம் அறிவுக் கண்ணை மறைத்துவிட்டது. தங்கையை அப்படி ஒரு கோலத்தில் கண்டவனது புத்தி சற்று சறுக்கியிருந்தது.

எது தவறு யார் மீது தவறு என்று சீர் தூக்கிப் பார்க்க தவறி இருந்தான். இதுநாள் வரை நான் எதிலும் தவறியதில்லை என்று இறுமாப்புடன் இருந்தவனது கர்வத்தில் அடி விழுந்திருந்தது.

அழுகையில் முகம் சிவந்து, 'போதும் ப்ளீஸ்' என்ற கெஞ்சி மடிந்து அமர்ந்தவளது வதனம் நினைவில் நிழலாடியது.

தான் பேசிய வார்த்தைகள் மனதிற்குள் ஓடியது. கோபத்தில் நிதானத்தை இழந்துவிட்டோம் என்று புரிந்தது.

தவறிழைக்காமல் தண்டனையை அனுபவிப்பது எவ்வளவு கொடுமை என்று அவனுக்கு தெரியும்.

முற்றிலுமாக நிதானமற்று தான் இழைத்த தவறை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை.

நடந்தவற்றை கூறிவிட்டு முகம் முழுவதும் பயத்துடன் தன்னையே பார்த்திருக்கும் தமக்கையை கண்டவன்,

"நான் பாத்துக்கிறேன். நீ போய் தூங்கு" என்று உணர்வுகளற்ற குரலில் மொழிய,

"சாரிண்ணா என்னை மன்னிச்சிடுங்க" என்று அழுகையும் தேம்பலுமாக வர்ஷினி கூற,

"ப்ச் அழாத அம்மு. போ எந்த பிராப்ளமும் வராம நான் பாத்துக்கிறேன். என்கிட்ட சொன்னதை யார்கிட்டேயும் சொல்லாத" என்று குரு இயம்ப,

"ஹ்ம்ம்…" என்று தலையசைத்தவள் எழுந்து சென்றாள்.

போகும் வர்ஷினியையே பார்த்திருந்த குருவிற்கு தன் மீதே கோபம் எழுந்தது.

தந்தைக்கு கொடுத்த வாக்கை தன்னால் நிறைவேற்ற இயலவில்லை. குடும்பத்தினரை நன்றாக பார்த்து கொள்கிறேன் என்று கூறியவனால் அதனை காக்க முடியவில்லை.

தான் சரியாக வர்ஷினியை கவனிக்கவில்லை. அப்படி செய்திருந்தால் இவள் இத்தனை தூரம் சென்றிருக்கமாட்டாள். தான் துவக்கத்திலே இதனை கண்டித்திருக்கலாம்.

அல்லது வேறு ஏதாவது செய்திருக்கலாம். தொழில் தொழில் என்று இதன் பின்னே ஓடி குடும்பத்தினரை கவனிக்க தவறிவிட்டோம் என்று உள்ளம் கூறியது.

இதை எல்லாம் தாண்டி சினத்தின் உச்சியில் ஏதுமறியா பெண்ணை வார்த்தைகளால் குத்தி குதறிவிட்டோமே அதனை எப்படி சரி செய்வது என்று தான் சிந்தித்தபடி இருந்தவன்,

"ப்ச்…" என்று நெற்றியை பெருவிரலால் தேய்த்தான்.

தான் கொஞ்சம் நிதானமாக சிந்தித்திருக்கலாம். தன்னுடைய விரல் தெரியாது கூட படக்கூடாது என்று அத்தனை கவனமாக இருப்பாளே அவளை தான் தான் சொல் எனும் விஷத்தால் கொன்றுவிட்டோம் என்று மனசாட்சி உரைத்தது.

இந்த ஒரு வருடத்தில் ஒரு இடத்தில் கூட அவளது செய்கையில் இப்படி ஒரு குறையை தான் கண்டதில்லையே. உறங்கும் போது கூட போர்வையை கழுத்து வரை இழுத்து சிறிதும் விலகிவிடாதவாறு உறங்குவாளே…?

இவை யாவிற்கும் மேல் தன்னை கண்டவுடன் முகம் முழுவதும் கள்ளமற்ற சிரிப்புடன்,

"அப்பா…" என்று தாவி அணைத்து கொள்ளும் இளையவர்களை கோபத்தில் திட்டிவிட்டோம்.

இருவரும் தன்னை கண்டு பயந்து நடுங்கி அழ தயாரான முகத்துடன் நின்றிருந்த காட்சி நிழலாட இவனுக்கு தன்பால் இருந்த கோபம் அதிகரித்தது.

சிறியவர்களிடம் தான் அப்படி நடந்திருக்க கூடாது இனி எப்படி அவர்கள் தன்னிடம் வருவார்கள். தன்னிடம் வரவே நிச்சயமாக அஞ்சுவார்கள் நடந்த கலவரத்தில் அவர்கள் உண்டனரா என்று தெரியவில்லை.

மகிழ் இருந்த மனநிலைக்கு அவர்களுக்கு உணவை கொடுத்திருப்பாளா? வாய்ப்பில்லை என்று எண்ணியவன் அறையில் இருந்து வெளியேறி அவர்களை காண சென்றான்.

தான் கூறிய வார்த்தைகளால் தான் மகிழ் அறைக்கு வரவில்லை என்று புரிந்திருந்தது குருவிற்கு.

இங்கு அறைக்குள்ளே வாழ்க்கையை வெறுத்த நிலையில் அமர்ந்திருந்த மகிழுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை.

மனதிற்குள் குரு பேசிய வார்த்தைகளை நினைத்து நினைத்து வேதனையில் கலங்கி தவித்து மீண்டும் மீண்டும் ஆயிரம் பாகங்களாக சிதறி போனாள்.

எவ்வளவு பெரிய வார்த்தைகள் பணம் இல்லாதவர்கள் எல்லாம் பணத்திற்கு ஆசைப்பட்டு கண்டிப்பாக தவறு தான் செய்ய வேண்டும் என்று கட்டாயம் எதாவது ஒன்று இருக்கிறதா…?

பணம் இல்லை என்றால் தங்களிடம் நல்ல குணமும் எண்ணமும் இருக்காதா? பணத்திற்கும் குணத்திற்கும் என்ன தொடர்பு.

பணத்தை வைத்து தான் ஆட்களை எல்லோரும் எடை போடுவார்களா?

யார் மீது தவறு என்று ஒரு வார்த்தை கூட தங்களது தரப்பை கேட்காது அவரே ஒரு முடிவை எடுத்துவிட்டு எத்தனை கடும் சொற்களால் என்னை தாக்கிவிட்டார்.

உனக்கு உதவி புரிந்தான். இத்தனை நாட்களாக நீ சுமந்த இந்த பொறுப்புகளை சிறிது காலம் வாங்கி கொண்டு உனக்கு தோள் சாய ஆள் கிடைத்தது என்று தானே அவன் மீது நேசத்தை ஏதோ ஒரு புள்ளியில் வளர்த்து கொண்டாய்.

ஆனால் இவை எல்லாம் வெறும் மாயை தான்.‌ நிஜம் என்ன இந்த நினைவுகள் கூட உனது மனதில் நெருஞ்சியாய் தான் இனி குத்தும்.

தவறே இழைக்காத ஒன்றிற்காகவே இத்தனை துன்பங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறாயே…? அவன்பால் நீ கொண்ட நேசத்தை அறிந்தால் என்ன நடக்கும் நினைத்து பார்.

அவன் கூறியது அனைத்தும் அப்பட்டமான உண்மை என்று உறுதியாகிவிடும்.

இல்லை இல்லை நான் கொண்ட நேசம் இந்த வளமான வாழ்விற்கு ஆசைப்பட்டு இல்லை என்று தனக்கு தானே கூறி கொண்டவள் தன்னுடைய நேசத்தை அந்த விநாடியே மரிக்க செய்திருந்தாள்.

விழிகளில் நீர் தானாக வடிய சடுதியில் தமையனின் நினைவு வர கடிகாரத்தை கண்டாள்.

நேரம் நள்ளிரவை நெருங்கியிருந்தது. அகிலன் நிச்சயமாக வீட்டில் இருக்க மாட்டான் என்று உறுதியாக தெரிந்தவள் அலைபேசியை தேடி எடுத்து தமையனுக்கு அழைப்பு விடுத்தாள்.

இங்கே திரையில் புன்னகையுடன் இளையவர்களை தூக்கி கொண்டு நின்றிருந்த மகிழினியின் முகத்தினையே வெறித்த அகில் அழைப்பின் இறுதி நொடியில் ஏற்றிருந்தான்.

மறு முனையில் மகிழ்,

"அகி எங்க இருக்க…?" என்று வினவ,

அகிலனிடம் மௌனம்.

"அகி உன்னை தான் கேக்குறேன்" என்று அழுத்தமாக வினவ,

"இங்க பக்கத்துல தான் இருக்கேன் கா" என்று அகிலன் பதில் மொழிய,

"பக்கத்துலனா எங்க…?"

"வீட்ல இருந்து த்ரீ கிலோ மீட்டர் தூரத்தில மெயின் ரோட்ல இருக்கேன்"

"சரி கிளம்பி வா" என்று மகிழ் மொழிய,

மீண்டும் மௌனம் கோலோச்சியது.

"உன்கிட்ட தான் சொல்றேன் கிளம்பி வா இப்போ" என்று மறுபடியும் கூற,

"இல்லை நான் வரலைக்கா அங்க. நான் வந்தா திரும்ப பிரச்சனை ஆகும்…"

"எந்த பிரச்சனையும் ஆகாது. என் பேச்சை நீ மதிச்சேனா இப்போ கிளம்பி வர்ற" என்றவள் அழைப்பை துண்டித்துவிட,

இங்கு ஒரு நிமிடம் வானத்தை வெறித்த அகிலன் மனமின்றி மகிழினியை காண குரு பிரசாத்தின் வீட்டை நோக்கி நடை போட்டான்.

இங்கு மகிழோ அறையின் கதவை லேசாக திறந்து வைத்தபடி கூடத்தில் உள்ள நீள்விருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

சரியாக அரை மணி நேரத்தில் வீட்டினுள் நுழைந்தான் அகிலன்.

வாசல் வரை வந்துவிட்டவனுக்கு உள்ளே வர முடியவில்லை‌. இங்கு அகிலனது அரவத்தை உணர்ந்த மகிழ் எழுந்து சென்று,

"உள்ள வா அகி" என்று மொழிய,

அகிலன் அசையாது தமக்கையை கண்டான்.

"தப்பு பண்ணவங்க தான் அகி பயப்படணும்.‌ எந்த தப்பும் பண்ணாம நீ ஏன் தயங்கி நிக்கிற வா" என்றவள் அகிலனது கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றாள்.

சரியாக அதே நேரம் அறையை விட்டு வெளியே வந்த குரு இவர்களது பேச்சை கேட்டு படிகட்டின் விளிம்பிலே நின்று கொண்டான்.

இருட்டாக இருந்ததால் மகிக்கும் அகிலனுக்கும் குரு நிற்பது தெரியவில்லை.

உள்ளே நுழைந்ததும் தமக்கையை இறுக்கமாக அணைத்து கொண்ட அகிலனது விழிகளில் இருந்து இரண்டு சொட்டு நீர் மகியின் தோளை நனைத்தது.

அதனை உணர்ந்த மகிழ்,

"அகி அழறியா?" என்று அதிர்ந்து வினவ,

"சாரிக்கா…" என்று மொழிந்தான் அகிலன்.

தமக்கையின் கண்ணீரில் தனக்கும் விழிநீர் வழிய,

"நீ ஏன்டா மன்னிப்பு கேக்கற… நான் தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்.‌ உன் மேல தப்பு இருக்காதுனு தெரிஞ்சும் நான் உன்னை அடிச்சிருக்க கூடாது. அப்போ எனக்கு அத்தையோட கோபத்தை குறைக்க வேற வழி தெரியலைடா. நீ அவங்க கண் முன்னாடி நின்னா அவங்க கோபம் அதிகமாகி உடம்புக்கு எதாவது வந்திடுமோன்னு பயந்து தான் அப்படி பண்ணேன்" என்றவள் அழுகையுடன் தம்பியை இறுக்கி கொள்ள,

இங்கு குருவிற்கு உள்ளே ஒன்று நழுவியது…

"எனக்கு தெரியும் கா உன்னை பத்தி. நீ எந்த விளக்கமும் எனக்கு கொடுக்க தேவையில்லை. நீ என்னை எப்பவுமே தப்பா நினைக்க மாட்டேன்னு எனக்கு தெரியும்" என்று அகிலன் மொழிந்தான்.

சில பல நிமிடங்களில் இருவரும் தங்களை மீட்டு கொள்ள நீள்விருக்கையில் அமர்ந்த மகிழ் தமையனையும் அருகில் இருத்தி கொண்டவள்,

"அகி என்ன நடந்துச்சு சொல்லு?" என்று வினவ,

"க்கா…" என்ற அகிலனது குரலில் ஏகமாய் தயக்கம்.

"என்கிட்ட சொல்ல உனக்கு என்ன தயக்கம். சொல்லு" என்று மீண்டும் வினா தொடுத்தாள்.

"அது அக்கா…" என்று தொடங்கியவன் நடந்தவற்றை கூறி முடிக்க,

அதனை கேட்டிருந்த மகியினது முகத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. அவள் ஏற்கனவே இது போல தான் நடந்திருக்க வேண்டும் என்று யூகித்திருந்தாள்.

"இதை நீ என்கிட்ட முன்னாடியே சொல்லி இருந்தா இவ்ளோ தூரம் வர விட்டிருக்க மாட்டேன். வர்ஷினியை கூப்பிடு நானே பேசியிருப்பேன்" என்று மகிழ் மொழிய,

"இல்லலக்கா வர்ஷினி ஏதோ தெரியாம இந்த வயசுல வர்ற இன்பாக்சுவேஷனால பண்றா. போக போக அவளே சரியாகிடுவான்னு நினைச்சேன் கா. ஆனால் இது இவ்ளோ தூரம் வந்து நிக்கும்னு நான் நினைக்கலை. என் மேல தான் தப்பு ஸ்டார்ட்டிங்கலயே உன்கிட்ட சொல்லி இருக்கணும்"

"..."

"எங்க நான் சொல்லி அந்த விஷயம் பெரியவங்க வரை வந்துட்டா அவளுக்கு தானே கெட்ட பேருன்னு நினைச்சேன் கா. நான் அன்னைக்கு நைட் அங்க போயிருக்க கூடாது. போகாம இருந்தா இவ்ளோ ப்ராப்ளம் வந்திருக்காது. சாரிக்கா" என்று மீண்டும் வருந்த,

"விடு அகி. என்ன நடக்கணும்னு இருக்கோ அது தான் நடக்கும்" என்று ஆறுதல் மொழிய,

"அன்னைக்கு நைட் அவ கையை கட் பண்ணிக்குவேன்னு சொன்னதும் எனக்கு பதட்டத்துல என்ன பண்றதுன்னு தெரியலை அதான் அங்க ஓடி போனேன்" என்று மீண்டும் அதையே கூறினான்.

"போதும் அகி. விட்ரு இதுக்கு மேல இதை பேச வேண்டாம்" என்று மகிழ் இயம்ப,

"க்கா என்னால தான் உனக்கு இவ்ளோ பிராப்ளம். மாமா உன்னை எதாவது சொல்லிட்டாங்களாக்கா‌" என்று சற்று அஞ்சிய குரலில் கேட்க,

"சே சே அதெல்லாம் இல்லை. உனக்கு உங்க மாமாவ பத்தி தெரியாதா? அவரு எப்பவும் எதையும் நிதானமா விசாரிச்சு யார் மேல தப்பு இருக்குன்னு பாத்திட்டு தான் ஒரு முடிவுக்கு வருவாரு. இப்போ வரைக்கும் அவர் இதை பத்தி ஒரு வார்த்தை கூட என்கிட்ட கேக்கலை" என்றவள் வேதனையை விழுங்கினாள்.

"அப்புறம் ஏன் கா பசங்க இந்த ரூம்ல தூங்குறாங்க?" என்று திறந்து இருந்த அறையை காண்பித்து வினவ,

"அது உங்க மாமா நடந்த விஷயத்தினால ரொம்ப அப்செட்டா இருக்காங்க. இவங்களுக்கு அது புரியாது. வழக்கம் போல அவர்கிட்ட விளையாட்டாக்கு எதாவது பண்ணி அவர் டென்சன் அதிகமாகிடும் அதான் இங்க தூங்க வைக்கிறேன். அவர்கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். அவர் இந்த பிராப்ளமா எப்படி சால்வ் பண்றதுன்னு தான் பாத்திட்டு இருப்பாரு" என்றிட

இங்கு இதை கேட்டு கொண்டிருந்த குரு தான் படியின் கைப்பிடியை இறுக்கினான்.

மகிழின் வார்த்தையை கேட்ட பிறகு தான் அகிலின் முகத்தில் நிம்மதி பிறந்தது.

தமையனது முகத்தையே பார்த்திருந்தவள்,

"அகி எனக்காக ஒன்னு செய்வியா?" என்று வினா எழுப்ப,

"சொல்லுக்கா. உனக்காக நான் என்னவேனா செய்வேன்" என்று பதில் அளிக்க,

"இது இந்த விஷயம் ஐ மீன் நடந்த உண்மை யாருக்கும் தெரிய வேண்டாம்டா. யார்க்கிட்டயும் சொல்லாதடா. வர்ஷினி ரொம்ப சின்ன பொண்ணு. செல்லமா வளர்ந்திட்டதால நல்லது கெட்டது தெரியாம வயசு கோளாறுல இப்படி பண்ணிட்டா. இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா கண்டிப்பா அவளுக்கு தான் கெட்ட பேரு"

"..."

"என்ன இருந்தாலும் நாளைக்கு வேற வீட்ல போய் வாழ போற பொண்ணு. அவ வாழ்க்கை நல்லா இருக்கணும். எல்லாத்துக்கும் மேல கோதை அத்தை. அவங்க நமக்கு இன்னொரு அம்மா. இது தெரிஞ்சா கண்டிப்பா அவங்க உடைஞ்சு போய்டுவாங்க. ஏற்கனவே உடம்பு சரியில்லாதவங்க. எதாவது ஹெல்த் ப்ராப்ளம் வந்திட்டா என்ன பண்றது. எனக்காக இதை இப்படியே விட்டுட்றியாடா?" என்று தயக்கமாக தமையனை காண,

"க்கா இதை நீ என்கிட்ட சொல்லணுமா…? நானே இந்த முடிவுல தான் இருந்தேன் கா. வர்ஷினி ரொம்ப நல்ல பொண்ணு. அவ உலகம் தெரியாத குழந்தை கா. ஏதோ சேர கூடாத ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து இப்படி பண்ணிட்டா‌. மத்தபடி அவ நல்ல கேரக்டர் தான் கா. யாருக்கும் மனசால கூட கெடுதல் நினைக்க தெரியாதவ கா. அவ வாழ்க்கை கண்டிப்பா நல்லா இருக்கணும்"

"..."

"என்னால கண்டிப்பா அவ வாழ்க்கையில எந்த பிரச்சனையும் வராது கா. இது சத்தியம். இந்த விஷயம் நம்மளோடவே முடிஞ்சு போச்சு அவ்ளோ தான். என்னை நாலு பேர் என்னை தப்பா பேசுவாங்க அவ்ளோ தான. பேசிட்டு போகட்டும் நாளை வேற விஷயம் கிடைச்சா அதை பேச போயிடுவாங்க. பிறைசூடன் தாத்தா நம்ம கஷ்டத்துல இருந்தப்போ எவ்ளோ உதவி செஞ்சு இருக்காங்க. குரு மாமா எவ்ளோ நல்லவரு."

"..."

"அவரோட இடத்தில வேற யாராவது இருந்திருந்தா பணத்தை வச்சு ஆள ஜட்ஜ் பண்ணி நமக்கு அவுட் ஹவுஸ கூட தந்திருக்க மாட்டாங்க. ஆனால் அவங்க‌ அம்மா மாதிரி பாத்துக்கிற மாமியார் அன்பான தாத்தான்னு அநாதையா இருந்த நமக்கு எவ்ளோ அழகான குடும்பத்தை கொடுத்திருக்காங்க. அதுவுமில்லாம என்னை இவ்ளோ செலவு பண்ணி படிக்க வைக்கிறாங்க. கூட பிறந்தவங்களுக்கே கணக்கு பாக்குற இந்த காலத்துல யார் இவ்வளவு பெரிய உதவி எல்லாம் செய்வா. ஆனால் மாமா பண்ணி இருக்காரு."

"..."

"உனக்கு கல்யாணம் ஆகுமா ஆகாதா? எங்களுகாக பாத்து நீ கல்யாணமே பண்ணாம விட்ருவியோ…? அப்படியே பண்ணாலும் எங்களையும் யார் சேர்த்து ஏத்துப்பா கண்டிப்பா சுமையா தான் நினைப்பாங்கன்னு நான் நிறைய நாள் கவலைப்பட்டு இருக்கேன். ஆனால் குரு மாமா ரொம்ப ரொம்ப நல்லவரு கா. இந்த காலத்துல இப்படிபட்ட நல்லவங்களை பாக்குறது எல்லாம் ரொம்ப அபூர்வம் கா. ஆனால் அம்மா அப்பா நமக்கு கொடுத்திருக்காங்க. எழிலையும் கவினையும் சொந்த பிள்ளைங்க மாதிரி பாத்துக்குறாங்க."

"..."

"சொல்ல போனா குரு மாமா எனக்கு கடவுள் மாதிரி கா. அவருக்காக என்ன வேணா செய்வேன் கா. இந்த சின்ன விஷயத்தை செய்ய மாட்டேனா? கண்டிப்பா செய்றேன் கா. இது சம்மந்தமா யார் கேட்டாலும் தப்பு என் மேல தான். வர்ஷினி எந்த தப்பும் பண்ணலைன்னு சொல்லிட்றேன் கா" என்ற நீளமாக பேசிய தம்பியின் மன முதிர்ச்சியை கண்டு மனம் நெகிழ்ந்தவள் அவனை அணைத்து கொண்டாள்.

"உன்னை பாக்கும் போது அப்பாவ பாக்குற மாதிரி இருக்கு டா. அப்பா இருந்திருந்தா கண்டிப்பா இந்த முடிவை தான் டா எடுத்திருப்பாரு" என்றவள்,

"அகில் அப்புறம் இன்னொரு விஷயம் இதை நான் சொல்றதால என்னை செல்பிஷ்னு நினைச்சிடாதடா" என்றவள் பிறகு தயங்கி,

"நீ ஹாஸ்டல்லயே இருந்துக்கோ டா. உன்னை பார்த்தா எல்லாருக்கும் சங்கட சூழ்நிலை தான். எப்படியும் அவரு வர்ஷினிய வேற காலேஜ்க்கு மாத்திடுவாரு. முடிஞ்சவரை வர்ஷினியை சந்திக்கிறதை அவாய்ட் பண்ணிடு. உன்னை பாக்கணும் போல இருந்தா நானே கிளம்பி வர்றேன்" என்று கூற,

"க்கா இதை சொல்றதுக்கு ஏன் இவ்ளோ தயக்கம். நானே உன்கிட்ட இதை சொல்லலாமானு திங்க் பண்ணேன். எங்க நீ கோவிச்சுப்பியோன்னு தான் நான் சொல்லலைகா. நான் இனி இங்க வரலை கா. எனக்கு உன்னை பாக்கணும் போல இருந்தா நானே கால் பண்ணி கூப்பிட்றேன் கா. அப்படி வர முடியலைனா வீடியோ கால்ல பாத்துக்கலாம் கா. நீங்க எல்லாரும் சந்தோஷமா இருந்தாலே எனக்கு போதும்" என்று முடித்திட,

மகிக்கு தான் விழிகள் கலங்கியது. தமையனை பார்க்க வராதே என்று தானே கூறும் படி இந்த விதி என்னை சிந்தித்துவிட்டதே என்று உள்ளுக்குள் மறுகினாள்.

அகிலனது கையை பிடித்து கொண்டவள்,

"அகி கடைசியா ஒன்னு கேக்கணும். எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. இருந்தும் எல்லா நேரமும் சூழ்நிலை ஒரே மாதிரி இருக்கது இல்லைல. உனக்கு எதாவது வர்ஷினி மேல எண்ணம்" என்று பேசுகையிலே இடை நுழைந்தவன்,

"சே சே அப்படி எதுவுமே இல்லை கா. நான் இருக்க நிலைமைக்கு படிப்பு எவ்ளோ முக்கியம். என்னை நம்பி இவ்வளவு செலவு பண்ணி மாமா படிக்க வைக்கிறாரு. அவருக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டு நான் எப்படி இதெல்லாம் பண்ணுவேன். அவர் எனக்கு கடவுள் கா. அவருக்கு துரோகம் பண்ண நான் கனவுல கூட நினைக்க மாட்டேன். எல்லாத்துக்கும் மேல வர்ஷினி ரொம்ப நல்ல பொண்ணு கா. அவ வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கணும். எப்படி பிறந்து வளர்ந்த பொண்ணு அவ வாழ்க்கை என்னோடலாம் எப்பவுமே சரி வராது"

"..."

"அத்தைக்கு தாத்தாக்கு எல்லாம் அவளை ஒரு நல்ல அவங்க தகுதிக்கு ஏத்த மாதிரி ஒரு இடத்தில கல்யாணம் பண்ணி கொடுத்து அவ சந்தோஷமா வாழ்றதை பாக்கணும் ஆசை நிறையா இருக்கும்கா. குரு மாமாக்கே தங்கச்சியை எப்படி எப்படியோ வாழ வைக்கணும் ஆசை இருக்கு. நான் அதை எப்படிக்கா கெடுப்பேன். எந்த காலத்திலும் இந்த மாதிரி ஒரு எண்ணம் எனக்கு வராது. ஏன் என் தகுதி என்னன்னு எனக்கு தெரியும். நீ பயப்படாதக்கா."


"..."

"அப்புறம் நீ இதைன்னு இல்லை வேற எதை கேட்டு இருந்தாலும் ஏன் இந்த விஷயத்துல நான் தான் தப்பு பண்ணி இருப்பேன்னு நினைச்சு இருந்தாலும் நான் உன்னை தப்பா நினைக்க மாட்டேன். ஏன் நீ எனக்கு இன்னொரு அம்மா மாமா அப்பா மாதிரி. அம்மா அப்பாவ எந்த பிள்ளையும் தப்பா நினைக்க மாட்டாங்க" என்றுவிட, மகிழுக்கு விழி நீர் கன்னம் தாண்டி இருந்தது.

கடவுள் பெற்றோரை என்னிடமிருந்து பிரித்தாலும் அவர்களை எல்லாம் சேர்த்து வைத்தது போல ஒரு தமையனை கொடுத்து இருக்கிறார். இவன் இருக்கையில் இது என்ன இதையும் விட பெரிய பிரச்சினைகளை கூட நான் சுலபமாக கடந்து வந்துவிடுவேன் என்று எண்ணி கொண்டாள்.

இங்கு குருவோ அதற்கு மேல் கேட்க இயலாது அறைக்குள் நுழைந்து விட்டான்.

அந்த நொடி மனது என்ன உணர்கிறது என்று அவனுக்கே தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு புத்தியில் உரைத்தது பணத்தையும் தாண்டிய அதற்கு அப்பாற்பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள்.

அதற்கு தான் கண்முன்னே பார்த்த இருவரே சாட்சியாக இருந்தனர்.

தமக்கையிடம் பேசிவிட்ட அகிலன் அவளை உறங்க கூறிவிட்டு தான் முன்பு குடியிருந்த வீட்டில் உறங்குவதாக மொழிந்துவிட்டு அவளறியாது குருவை காண சென்றான்.

இங்கு குருவோ இன்னதென பிரித்தரிய முடியாத நிலையில் இருக்க வாசலில் நிழலாடியது.

நிமிர்ந்து பார்க்க வாசலில் தயக்கமான பாவனையுடன் நின்று இருந்த அகிலன்,

"உள்ள வரலாமா மாமா?" என்று வெகுவாக தயங்கி தயங்கி வினா தொடுத்தான்.

"ஹ்ம்ம்…" என்று குரு தலையசைக்கவும் குருவின் அருகில் வந்தவன் சில நொடிகள் மௌனம் காத்தான்.

குருவும் எதையும் பேசவில்லை. வந்தவனே பேசட்டும் என்று அமைதி காத்தான்.

"என்னை மன்னிச்சிடுங்க மாமா. நடந்த எதையும் இந்த மன்னிப்பு சரி செய்யாதுனு எனக்கு தெரியும் ஆனால் இதை தவிர என்ன சொல்றதுனு தெரியலை மாமா‌. உங்களுக்கு என் மேல கோபம் இருக்கும்னு எனக்கு தெரியும் மாமா. உங்க கோபம் தீர அடிக்கிறதுனா கூட அடிச்சுக்கோங்க மாமா. வர்ஷினி உங்க தங்கச்சி மேல எந்த தப்பும் இல்லை என் மேல தான் தப்பு. இதுக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏதுக்கிறேன் மாமா" என்றவன் பிறகு ஒரு விநாடி நிறுத்திவிட்டு,

"என் அக்காக்கு இதுல எந்த சம்பந்தமும் இல்லை. அவளை எதுவும் சொல்லிடாதிங்க மாமா.‌ என்னால அவளுக்கு எந்த பிரச்சனையும் வந்திட கூடாது. இனிமே நான் உங்க‌ கண்முன்னாடி கூட வர மாட்டேன்" என்றவனது குரல் தழுதழுக்க குருவினது கரத்தை பிடித்து கொண்டான்.

நொடிகள் கடந்த பிறகு, "செய்யாத தப்புக்கு நீ ஏன் மன்னிப்பு கேட்குற அகில்" என்ற குருவின் குரல் அழுத்தமாக ஒலித்தது‌…





























 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Akka thambi pasam ❤️❤️ayoo emotional semma 🥺🥺 Guru ippo feel panni onum aaga porathu illa pesuna aathaiyum aaliga mudiyathu 😏😏😏
 
New member
Messages
12
Reaction score
5
Points
3
Next episode aa podunka akka.
Rompa naal akitu
 
Top